கொத்து பரோட்டா -16/12/13
தொட்டால் தொடரும்
வெள்ளியன்று இணையத்தில் முதல் முறையாய் “தொட்டால் தொடரும்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைனை அறிமுகப்படுத்தினோம். திரையுலக நண்பர்கள், விமர்சகர்கள, பதிவர்கள், வாசக நண்பர்கள் என அனைவராலும் பெரும் வரவேற்பை பெற்றது. கல்யாண சமையல் சாதம் தயாரிப்பாளர், அருண் வைத்தியநாதன், சி.வி.குமார், ரவீந்தர் சந்திரசேகரர், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், அழைத்து பாராட்டி வாழ்த்தினார்கள். எல்லோருக்கும் இப்படத்தின் மீது ஒர் எதிர்பார்ப்பு இருப்பதை நினைத்து ஒர் பக்கம் சந்தோஷமாய் இருந்தாலும், இன்னொரு பக்கம் பொறுப்பு அதிகமாகவது நினைத்து லேசாய் மிக லேசாய் நடுக்கம் வரத்தான் செய்கிறது. எனினும் உங்களின் மேலான ஆதரவில் வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கையோடு உங்களின் பார்வைக்கு.. ஒர் வேண்டுகோள். பதிவுலக நண்பர்கள் அவரவர் வலைப்பூக்களில் “தொட்டால் தொடரும்” டிசைனை போட்டு உங்கள் ஆதரவை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஃபேஸ்புக், டிவிட்டர் தொடர்புக்கு https://www.facebook.com/ThottalThodarum , https://twitter.com/thottalthodarum
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கே.ஆர்.பி. மெட்ராஸ் பவன் சிவகுமார், கிருஷ்ணப்பிரபு ஆகியோருடன் சேர்ந்து www.jillmore.com எனும் சினிமா இணைய தளத்தை துவக்கியிருக்கிறார், உங்கள் ஆதரவை வேண்டி..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நான் எழுதிய லெமன் ட்ரீயும், ரெண்டு ஷாட் டக்கீலாவும், மீண்டும் ஒரு காதல் கதை, சினிமா என் சினிமா, தெர்மக்கோல் தேவதைகள், கொத்து பரோட்டா, கேபிளின் கதை ஆகிய புத்தகங்களை மொத்தமாய் வாங்குகிறவர்களுக்கு இந்த இணைய தளம் டிஸ்கவுண்ட் வழங்குகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
என் டெபிட் கார்டு மூலமா ஒரு நாளைக்கு 1.5 லட்சம்தான் செலவு பண்ணனும்னு ஆர்.பி.ஐ சொல்லியிருக்காம்.150 ரூபாய்க்கே வழியக்காணோம்.வந்துட்டானுங்க
- Friends who don't know the limit of taking me granted are all irritating.
எனக்கென்னவோ குமுதம் சிண்டு முடிந்துவிட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. பாவம் ரஹ்மான்.
நம்பிக்கையோடு சுதந்தரத்தை கொடுத்தவர்களின் மேல் உள்ள இரண்டும் போகாத வண்ணம் நடந்து கொள்வதுதான் நட்புக்கு அழகு.
- என்னத்தைத்தான் சாப்பிடறது..? இந்த குமுதம் இரா.மணிகண்டன் தொல்லை தாங்கலைப்பா
நாம் வியந்து பார்ப்பவர்களை மிக அருகில் பார்க்காமல் இருப்பது நம் வியப்பிற்கு உசிதம் #அவதானிப்பூஊஊஊ
- கேபிள் சங்கர்
Comments
நீங்கள் தொட்டால் தொடர்வது மட்டுமல்ல, துலங்கும் என்பதே உண்மை! வெற்றி உறுதி! புலவன் வாக்கு பொய்யாகாது!
இந்த வருடம் : திரும்பி பார்க்கிறேன் (தொடர்பதிவு )
www.writerkarthikeyan.blogspot.in
புதிய பதிவர்
https://writerkarthikeyan.blogspot.in