வைகை - திரைவிமர்சனம்
புதிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் சிறிய முதலீட்டு படங்களை, தேடி சென்று படம் பார்ப்பேன். 90% சொதப்பியிருப்பார்க்ள். இயக்குனரோ, அல்லது நடித்த நடிகர், நடிகைகளோ.. மேலும் சொதப்பி ஏண்டா பார்த்தோம்னு ஆக்கிருவாங்க.. இதே எதிர்பார்போடு போன இந்த படம் ஒரு அழகான ஆச்சர்யம். வழக்கமான் கிராமத்து பெரிய மனுஷன் பையன், எதிர்வீட்டு தபால்காரர் பொண்ணு, அப்பா சாப்டான ஆனா ஆளையே போட்டு தள்ளுற வில்லன். தன் காதல் விஷயம் தெரிஞ்சு தன் காதலியை போட்டு தள்ளிருவாரோன்னு பயந்து அவளை கூட்டிட்டி ஓடி போய், இரண்டு பேரும் விஷம் குடிச்சிட்டு, ஒருத்தர் சாவை இன்னொருத்தர் பார்க்க கூடாதுன்னு, எதிர், எதிர் ரயிலில் போய் விடுகிறார்கள். ஹீரோவின் ஆட்கள் அவரை ஆபத்தான கட்டத்தில் காப்பாற்றிவிட.. ஹிரோயினுக்கு என்ன ஆச்சு? அதற்கப்புறமான கதையை இண்ட்ரஸ்டாக சொல்லியிருக்கிறார்கள். பாலா +2 பைல் ஆகி ஊரை சுற்றி திரியும் வளரும் இளைஞன். விசாகா ,பாலா இருவருக்குமான காதல் காட்சிகள் புதுசாய் இல்லாவிட்டாலும், போரடிக்கவில்லை. என்ன ரஜினிகாந்த படத்தில் அவரை இளமையாய் காட்ட அவரை விட “இளமையான” ஆட்களை அவர் நண்பர்களாய் வருவதை போல், கொஞ்சம் பெர...