வீரம்னா என்னனு தெரியுமா..?
சட்டக் கல்லூரியில் நடந்த கொடுமையான் காட்சி எல்லோருடய மனதையும் பாதித்தித்துவிட்ட்து. அதை பார்த்த அதிர்ச்சியில் எதையும் உணர்சிவசப்பட்டு எழுத வேண்டாம் என்று தான் எழுதவில்லை. இந்த பிரச்சனைக்கான பிண்ணனி என்னவென்று பார்த்தால் சட்ட கல்லூரியில் இருக்கும் இரு ஜாதி பிரிவினருக்கிடையே நடந்த சண்டை என்றே தெரிகிறது.. சமீபத்தில் நடந்த ---வ்ர் ஜெயந்தி அன்று மாலை போட்டுவிட்டு அதற்கான போஸ்டரில் டாக்டர் அம்பேத்கார் சட்டகல்லூரி பெயர் போடாமல் விட்டுவிட்டதால் ஆரம்பித்தது பிரச்சனை.. --வர் ஜெயந்தி விழாவிற்கு அடித்த போஸ்டரில், தாழ்த்தப்பட்டவருக்க்காக போராடிய ஓருவரின் பெயரை எதற்காக போடவேண்டுமென்பது இவர்களின் வாதம். அதெல்லாம் ஓண்ணுமில்ல அவங்களுக்கு எப்பவுமே நம்மள கண்டா இளப்பம்தான் என்கிறார்கள்.. வழக்கமாகவே ---வர் இனத்தை சேர்தவர்களுக்கு எப்போதுமே..தாழ்த்தபட்ட இனத்தவர்களை கண்டால் ஆகாது.. தென் மாவட்டங்களில் இது கண்கூடாக தெரிந்த உண்மை.. அதே அடக்குமுறை இங்கேயும் தொடர்கிறார்கள்.இல்லை என்று எந்த --வர் இனத்தை சார்தவர்கள் நெஞ்சை தொட்டு சொல்லட்டும். இப்போது அது திரும்பி அவர்கள் முறையாயிருக்கிறது.. அடிபட்டவர்களும் ஓன்றும் ...