மதராசபட்டினம்
வெள்ளைக்கார பெண், இந்திய ஏழை ஆண் இவர்கள் இருவருக்குமிடையே காதல், சுதந்திர இந்தியா காலத்தின் பின்னணியில் பெரிதாய் என்ன இருந்திருக்க முடியும் என்ற ஒரு எதிர்பார்ப்பும், அவர்களது நிஜமாகவே புத்திசாலித்தனமான டீஸ்ர்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டிருந்தது. இந்தியாவின் சுதந்திர தினத்தன்று ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டம். ஆரம்ப காட்சிகளில் டைட்டானிக்கை ஞாபகப்படுத்தினாலும், மெல்ல, மெல்ல, பழம் பெரும் சென்னையை கண் முன்னே விரித்து, அதில் வரும் கேரக்டர்களில் ஒருவராய் நம்மை படத்தினுள் நுழைத்துவிடுகிறார்கள். தற்காலத்தில் லண்டனில் ஏமியிடமிருந்து ஆரம்பிக்கிறது கதை. மெல்ல அன்போல்ட் ஆகி 1947 வாழ்ந்த, காதலித்த பரிதியை தேடி, அவன் கொடுத்த தாலியை அவனிடம் சேர்ப்பதற்காக, என்றோ ஒரு காலத்தில் தலையில் அடிப்பட்டதன் விளைவாய் ப்ளட் க்ளாட் ஆகி உயிருக்கு ஆபத்தான ஆபரேஷனுக்கு முன் பரிதியை சந்திப்பதற்காக இந்தியா வருகிறாள் ஏமி. அவளின் தேடலை, முன்னும், பின்னும் போகும் திரைக்கதையில் சொல்லி அசத்தியிருக்கிறார்கள். படத்தின் முதல் பாகம் சுமார் 1.40 நிம...