ஹைதராபாதி பிரியாணியும், பதிவர் சந்திப்பும்..
கடந்த முறை ஹைதராபாத் சென்ற போது வேலை பிஸியாய் இருந்ததால் லஞ்ச் டைம் தாண்டி சாப்பாடுக்காக அலைந்த போது திடீரென்று பிரியாணி ஞாபகம் வர, உடனிருந்த நண்பர் ஹைதராபாத்தில் இரண்டு மூன்று இடங்களை சொன்னார். பாரடைஸ், பாவார்சி, ஹைதராபாதி பிரியாணி, என்று பல இடங்களை சொன்ன்னார். எனக்கிருந்த பசியில் அவ்வளவு தூரம் போக முடியாது என்று சொல்லி இங்கேயே செகந்தராபத்தில் நல்ல கடை இல்லையா..? என்றதும் ஸ்டேஷன் எதிரில் உள்ள ஓரு கடைக்கு அழைத்து போன போது மணி நாலு இருக்கும். கடையின் பெயர் மறந்துவிட்டது. நானும் என் நண்பரும் ஆளுக்கொரு பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தோம். ஓரு பெரிய பவுல் நிறைய வந்த பிரியாணியின் விலை 90 ரூபாய்தான். நான் இதுவரை இதுமாதிரியான சுவையான பிரியாணி சுவைத்ததேயில்லை. அதிலும் அந்த பிரியாணி அரிசியும், அந்த மசாலா கலவைகளும், எண்னையில்லாமல் சும்ம்மா சூப்பரப்பு..என் பக்கத்து டேபிளிலில் நாகேஷ் மாதிரி இருந்த ஓருவர் பக்கதில் ஓரு தம்ஸ் அப் வைத்து கொண்டு முழு ப்ளேட்டையும் காலி செய்தார். அவர் மாதிரி நாமும் செய்வோம் என்று தம்ஸ் அப்பை ஓரே அப்பில் குடித்ததில் வயிரு நிறம்பியதுதான் மிச்சம்.அப்புறம் தான் பார...