Thottal Thodarum

Nov 17, 2008

ஹைதராபாதி பிரியாணியும், பதிவர் சந்திப்பும்..கடந்த முறை ஹைதராபாத் சென்ற போது வேலை பிஸியாய் இருந்ததால் லஞ்ச் டைம் தாண்டி சாப்பாடுக்காக அலைந்த போது திடீரென்று பிரியாணி ஞாபகம் வர, உடனிருந்த நண்பர் ஹைதராபாத்தில் இரண்டு மூன்று இடங்களை சொன்னார். பாரடைஸ், பாவார்சி, ஹைதராபாதி பிரியாணி, என்று பல இடங்களை சொன்ன்னார்.

எனக்கிருந்த பசியில் அவ்வளவு தூரம் போக முடியாது என்று சொல்லி இங்கேயே செகந்தராபத்தில் நல்ல கடை இல்லையா..? என்றதும் ஸ்டேஷன் எதிரில் உள்ள ஓரு கடைக்கு அழைத்து போன போது மணி நாலு இருக்கும். கடையின் பெயர் மறந்துவிட்டது. நானும் என் நண்பரும் ஆளுக்கொரு பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தோம். ஓரு பெரிய பவுல் நிறைய வந்த பிரியாணியின் விலை 90 ரூபாய்தான். நான் இதுவரை இதுமாதிரியான சுவையான பிரியாணி சுவைத்ததேயில்லை. அதிலும் அந்த பிரியாணி அரிசியும், அந்த மசாலா கலவைகளும், எண்னையில்லாமல் சும்ம்மா சூப்பரப்பு..என் பக்கத்து டேபிளிலில் நாகேஷ் மாதிரி இருந்த ஓருவர் பக்கதில் ஓரு தம்ஸ் அப் வைத்து கொண்டு முழு ப்ளேட்டையும் காலி செய்தார். அவர் மாதிரி நாமும் செய்வோம் என்று தம்ஸ் அப்பை ஓரே அப்பில் குடித்ததில் வயிரு நிறம்பியதுதான் மிச்சம்.அப்புறம் தான் பார்த்தேன் அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை தம்ஸ அப்பை கொஞ்ம் கொஞ்சமாய் குடித்து மிச்சம் வைத்திருந்தார். நாங்கள் தான் சாப்பிடமுடியாமல் பாதிக்கு மேல் பார்சல் செய்து கொண்டு ராத்திரி சாப்பிட்டோம்.

இந்த முறை தெளிவாய் காலை டிபனை தவிர்த்து விட்டு ஜூப்ளி ஹில்ஸுக்கு போகும் வழியில் உள்ள ஹைதராபாத் பிரியாணி பாயிண்டில் 120 ரூபாய் கொடுத்து ஓரு பிரியாணியை முழுவதுமாய் ஓரு பிடி பிடித்ததும் தான் என் பிரியாணி மசக்கை தீர்ந்தது


நம்ம ஊருல தர்றத போல நீர்த்து போன தயிர் வெங்காயத்தையும், ஓரு கிரேவியையும் தருவதில்லை. ஓரு கத்திரிக்காய் சட்னி தர்றான் பாருங்க..ம்ம்ம்..சும்மா..பின்னி பெடலெடுக்கும், அப்படியே வயிறு கொஞ்சம் திம்முன்னு ஆகும் போது ஓரு ரெண்டு ஸ்பூன் தயிர் வெங்காயத்தை போட்டு ஓரு ரெண்டு பிடி பிரியாணியை உள்ள தள்ளினா.. சுப்பர்.
என்ன சொல்லுங்க.. ஹைதராபாத் பிரியாணி..கிட்ட நம்ம பிரியாணியெல்லாம் சும்மா ஜூஜூபி..தான்.


பதிவர் சந்திப்பு.

கிளம்பலாம்ன்னு நினைச்சிகிட்டிருந்தப்போ.. ஓரு முக்கியமான மீட்டிங்கில் மாட்டிக் கொண்டேன்.மழை வேறு தூறிக் கொண்டிருந்தது. நான் மீட்டிங் முடித்து வெளியே வந்தபோது மணி 7.00 இருக்கும் என்று நினைக்கிறேன். லக்கி பேசினப்போ அவர்கள் மழையின் காரணமாய் சிறிது நேரத்தில் கிளம்ப போவதாய் தெரிவித்தார். பரிசல் வந்திருபதாய் சொன்னார். சே இந்த முறையும் சந்திப்பை நழுவ விடவேண்டியது தானா என்று யோசித்தபோது.. மணி 7.30 ஆகிவிட்டது. மழை கொஞ்சம் விட்ட மாதிரி இருக்க, பரிசலுக்கு போன் செய்து கிளம்பிட்டீங்களா..? இல்லேன்னா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஓரு பதினைஞ்சு நிமிசத்துல வந்திர்ரேன். உங்களை நான் சந்திக்கணும் என்றேன். கண்டிப்பாய் வெயிட் பண்ணுவதாய் சொன்னார்.

பாதி தூரம் போகையிலேயே மழை பிடித்து கொள்ள, நினைந்து கொண்டே காந்தி சிலை போய் போன் செய்தால் ஆல் இண்டியா ரேடியோ எதிரில் உள்ள டீக்கடையி இருப்பதாய் சொன்னார். அங்கே போனால் அங்காங்கே குழுவாய் மழைக்கு இதமாய் டீயும், தம்மையும் அடித்து கொண்டிருந்தார்கள். அங்கு போய் லக்கி, அதிஷா ஆகியோரை முதல் முறையாய் சந்தித்தேன். நான் அவர்களுக்கு டீ வாங்க போகும் போது “அதெல்லாம் அடுத்த வாட்டி ஆட்டைய போட்டுகுறோம்..முதல் வாட்டியில்ல அதனால நாங்கதான்..என்றார் அதிஷா.

லக்கி அவர் எழுதும் தொணியிலேயே பேசினார். அதிஷாவும் அதே போல். இருவரும் மிக இன்ட்ரஸ்டிங்கான நபர்கள். பரிசலை சந்தித்தேன்..மிக குறுகிய சந்திப்பு, பழகுவதற்கு இனிய நண்பர். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மழையில் நர்சிமோடு காரில் போய்விட்டார். எல்லோரும் சொல்லும் அந்த அழகான நர்சி்மை பார்க வேண்டும் என்று நினைத்த போது கிளம்பிவிட்டார். அவரை ஹீரோவாக போட்டு படமெடுக்க நினைப்பதால் என்னை தொடர்பு கொள்ளவும்.

பிறகு அத்திரி, டோண்டுசார், முரளிகண்ணன், டாக்டர் புருனோ, வினோத், மற்றும் பலரை சந்தித்தேன். டோண்டுசார் என் சினிமா பிண்ணனி பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். தாமிரா கூட வந்திருந்ததாய் சொன்னார்கள்.. அடுத்த முறை ட்ரை பண்ணறேன் பேர் விட்டு போனவர்கள் மன்னிக்கவும், குறுகிய இடத்தில், மழையில் சந்தித்ததால் மறந்திருக்கலாம்.. தயவு செய்து விட்டிருந்தால் சொல்லவும் பதிவில் சேர்த்துவிடுகிறேன். மற்றபடி எல்லோரும் கிளம்பிவிட, நான்,லக்கி,அதிஷா, புருனோ ஆகிய நால்வர் ம்ட்டும் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருக்க, மழைவிட்ட பாடு இல்லை. 10 மணிகிட்டே ஆகிவிட்டதால் மழையை பொருட்படுத்தாமல் கிளம்ப வேண்டியாகிவிட்டது.. அதிஷா.. ராத்திரி எல்லாம் நல்லா நடந்திச்சா..?

டிஸ்கி.

மழையில் பாதியில் போய் சேர்ந்ததால் பதிவர் சந்திப்பில் என்ன நடந்தது என்று தெரியாமல் எழுத கூடாது என்பதால், மழையில் நினைந்துவிட்டு வரும்போது லேசாய் பசிக்க ஆரம்பிக்கும் போது எதையாவது சூடாய் சாப்பிடலாம்னு தோணும். அப்படி தோணின போது தான் பிரியாணி ஞாபகம் வந்தது. அதான்...ஹி..ஹீ..
Post a Comment

14 comments:

அத்திரி said...

முடியும் போது வந்தாலும் பதிவு நல்லா இருக்கு.

ஹைதராபாத் பிரியாணி பற்றி இதோட ஒரு பத்து பதிவாவது வந்திருக்கும்.

தெனாவட்டு லேட்டஸ்ட் டிரெய்லர் பாத்தீங்களா?

Cable சங்கர் said...

//முடியும் போது வந்தாலும் பதிவு நல்லா இருக்கு.//

நன்றி அத்திரி.. சாரி..உங்களுடன் பேச முடியவில்லை.. நீஙக்ள் கிளம்பிவிட்டதால் கண்டிப்பாய் மீண்டும் சந்திப்போம்

//ஹைதராபாத் பிரியாணி பற்றி இதோட ஒரு பத்து பதிவாவது வந்திருக்கும்.//

பத்தோடு பதினொன்னா இருக்கா..? அண்ணே..


//தெனாவட்டு லேட்டஸ்ட் டிரெய்லர் பாத்தீங்களா?//

பாக்கல தலைவா.. பாத்திர்றேன்.

Raj said...

//.. அதிஷா.. ராத்திரி எல்லாம் நல்லா நடந்திச்சா..?//


ஆஹா.....இதின்னாபா மேட்டர்!

Cable சங்கர் said...

//ஆஹா.....இதின்னாபா மேட்டர்!//

ஹை.. அத நான் சொல்ல மாட்டேனே..?

Athisha said...

ஹிஹி ஹி

என்ன கொடுமை சங்கர் இது...

Cable சங்கர் said...

//ஹிஹி ஹி

என்ன கொடுமை சங்கர் இது...//

சும்மா எதாச்சும் மசாலா வேணாமா? அதுக்காத்தான்.

அக்னி பார்வை said...

//நான்,லக்கி,அதிஷா, புருனோ ஆகிய நால்வர் ம்ட்டும் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருக்க, மழைவிட்ட பாடு இல்லை. ///

சரியா போச்சு... உங்களோட ஐந்தவது நபராக, 98 கிலொவில், இருந்த என்னை சுத்தமாக பார்க்கவே இல்லையா??

இரண்டு மணி நேரம் பேசியும் மறந்துவிட்டிர்கள்... உஙகளுய்ம் அனுப்பிவிட்டு, புருனோவையும் அனுப்பிவிட்டு கடசியாக செல்லும்ம் பொழுது மணி 11.30 ..

போங சங்கர் சார் ..எனக்கு அழுவ, அழுவையா வருது...

:(

விஜய்கோபால்சாமி said...

///
சும்மா எதாச்சும் மசாலா வேணாமா? அதுக்காத்தான்.
///

எவ்வளவோ பண்ணிட்டாரு, ஷங்கர் அண்ணே இதப் பண்ண மாட்டாரா....

Cable சங்கர் said...

//இரண்டு மணி நேரம் பேசியும் மறந்துவிட்டிர்கள்... உஙகளுய்ம் அனுப்பிவிட்டு, புருனோவையும் அனுப்பிவிட்டு கடசியாக செல்லும்ம் பொழுது மணி 11.30 ..//

சாரி அக்னிபார்வை.. உஙக்ள் பெயரை வினோத் என்று போட்டிருக்கிறேன். நான்கு பேர் என்பதற்கு பதிலாய் ஐந்து பேர் என்று வந்திருக்க வேண்டும்.. சரி பண்ணிடலாம்.. அழப்படாது.. ம்..என்ன.. அழப்படாது..சரியா...

Cable சங்கர் said...

//
எவ்வளவோ பண்ணிட்டாரு, ஷங்கர் அண்ணே இதப் பண்ண மாட்டாரா....//

அதென்னவோ சரிதான்..

narsim said...

//அழகான நர்சி்மை பார்க வேண்டும் என்று நினைத்த போது கிளம்பிவிட்டார். அவரை ஹீரோவாக போட்டு படமெடுக்க நினைப்பதால் என்னை தொடர்பு கொள்ளவும்.
//

தலைவா.. காமெடி கீமெடி பண்ணலயே!!!

நர்சிம்

Rafiq Raja said...

யோவ் கேபிளு, ஹைதரபாத் பிரியாணி பற்றி ஒரு தனி பதிவே போடணும்... இப்படி பாதி இடம் ஓடுகியதற்கு முதலில் ஒரு குட்டு. ஒரு வருடம் நான் அங்கு தங்கி இருந்த பொது வாரத்திற்கு ஒரு ஹோட்டல் என்று, இருக்கும் அதனை கடைகளிலும் பிரியாணி வேட்டையாடியது இன்றுன் நினைவு இருக்கிறது. அதன் சுவையே தனி. கிலோ கணக்கில் பிரியாணி வ்யபராம் பண்ணும் ஒரே வூரு அதுவாக மட்டும் தான் இருக்க முடியும்.

அட இந்த பின்னோட்டம் இடும் போதே, நாக்கில் எச்சில் வூர ஆரம்பித்து விட்டதே..... ஹிஹி...

ரஃபிக் ராஜா
காமிக்கியல்
- "ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்"

Cable சங்கர் said...

//தலைவா.. காமெடி கீமெடி பண்ணலயே!!!
////

சே.சே... நிசமாத்தான் சொல்றேன்.

Cable சங்கர் said...

//யோவ் கேபிளு, ஹைதரபாத் பிரியாணி பற்றி ஒரு தனி பதிவே போடணும்... இப்படி பாதி இடம் ஓடுகியதற்கு முதலில் ஒரு குட்டு.//

பாதி எழுதி கொண்டிருக்கும்போதே நாக்கில் எச்சில் ஊறியதால் பக்கத்தில் உள்ள லோக்கல் ஆற்காடு பிரியாணிக்கு போக வேண்டியிருந்ததால் நிறுத்திபுட்டேன் தல. மன்னிச்சுக்கங்க..