Thottal Thodarum

Nov 26, 2008

STAR MAKER - ITALIAN FILM


1995ஆம் ஆண்டு வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் நாமினேஷன் பெற்ற படம். “சினிமா பாரடைசோ” திரைப்பட இயக்குனர் குசுப்பே டோர்னடோரே இயக்கிய படம்.

1954 இத்தாலிய கிராமங்களில் டிவிகூட அவ்வளவாக நுழையாத காலம், ஜோமொரிலி என்னும் ஓருவன் ஓரு பழைய லாரி போன்ற வாகனத்தில் ஊர் ஊராக சுற்றி தான் ரோமில் இருக்கும், கொலப்பியா பிக்சர்ஸின் ஆள் என்றும், சினிமாவில் நடிக்க ஆட்களை தேர்வு செய்வதற்காக வந்திருப்பதாகவும், உங்களில் யார் வேண்டுமானாலும், திரைப்படங்களில் நடிக்க முடியும், அதற்கான ஸ்கிரின் டெஸ்ட் எடுப்பதற்கு ஆயிரம் லியர் வரை வாங்கி கொண்டு, அவன் திருடி கொண்டுவந்த கேமராவும், எக்ஸ்பயரி ஆகிய பிலிம் ரோலை வைத்து, எல்லா கிராமங்களுக்கும் போய், டேரா போட்டு, பணத்தை வசூலிக்கிறான். இந்த படம்பிடிக்கும் எல்லாருடைய காட்சிகளையும் போட்டு பார்த்துவிட்டு அவர்க்ளில் ஒருவரை கொலம்பியா பிக்சர்ஸ் தேர்தெடுக்கும் என்று நம்பிகையை சொல்லி ஏமாற்றுகிறான்.

அப்போது ஓரு கிராமத்தில் பியாட்டா என்னும் பேரழகியை சந்திக்கிறான். யாருடய ஆதரவில்லாமல் வீடுகளையும், அலுவலகங்களையும், சுத்தம் செய்து,ஓரு தேவாலயத்தில் தங்கியிருக்கிறாள். தன்னை எப்படியாவது கதாநாயகி ஆக்கிவிட வேண்டுமென்று அவனிடம் மன்றாடுகிறாள். அவளிடம் அவன் கேட்குமளவுக்கு பணம் இல்லை.ஓரு கட்டத்தில் அவளின் அழகு அவனை இறங்கி வர செய்கிறது. அவளுக்காக அரை பணத்தில் எடுத்து கொடுப்பதாய் பணத்தை வாங்கி படப்பிடிப்பு முடித்துவிட்டு வேறு ஓரு ஊருக்கு புறபடுகிறான். சினிமாவில் சேர அவள் டெஸ்ட் சூட் எடுத்ததால் அவளை தேவாலயத்திலிருந்து வெளியேற, அவளுக்கு எங்கே போவது என்று தெரியாமல் அவனுக்கு தெரியாமலே அவனுடய வண்டியில் ஏறி பயணிக்கிறாள். அவர்கள் இருவருக்கும் ஓரு புரிதல் ஆரம்பிக்க, அப்போது அவனை இத்தாலிய போலீஸார் கைது செய்கிறார்கள்.

சில மாத சிறை தண்டனைக்கு பிறகு வெளிவரும் அவன் பியாட்டா அவனுடய வண்டியிலேயே தங்கியிருந்தாக தெரிய வர, அவளை தேடி அலைகிறான். பிறகு ஓரு நாள் அவளை ஓரு அசைலத்தில் பார்க்கிறான். தன முடியெல்லாம் இழந்து மொட்டை அடிக்க பட்டு, ஓரு அடிபட்ட பறவையாய் சுய சிந்தனை இழந்து, தன் அருகிலிருப்பவன் தன்னுடய் காதலன் என்பதை கூட உணர முடியாமல்.. ஜோமொரிலி வருவான் தன்னை இத்தாலியில் உச்ச நாயகியாய் ஆக்குவான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

சினிமாவின் தாக்கம், சினிமாவில் நடிக்கும் ஆர்வம் சிறுவர்கள் முதல் கிழவர்கள் வரை, ஏன் செவிடு, ஊமைகள் கூட ஆசைபடுவதை பார்க்கும் போது அந்த மீடியத்தின்ஆளுமை நம்மை மட்டுமல்ல உலகில் உள்ள எல்லாருடய மனதிலும் அந்த ஆர்வமும்,பாதிப்பும் இருக்கிறது என்பதை காட்டுகிறது. அதிலும் ஓரு பெண் தன்னுடய 15 வய்து மகளை எப்படியாவது கதாநாயகி ஆக்க தன்னையே கொடுப்பதாகட்டும், அவளுடன் புணரும் போது அவள் ஓயாமல் தன்னால் ஓரு கதாநாயகியாய் வரமுடியாமல் போனதை பற்றியே புலம்பிக் கொண்டிருப்பதும், போன்ற காட்சிகள் நம் மனதை பிசையத்தான் செய்யும்..

பியட்டா.. அசத்துகிற் அழகி.. அவருடய இன்னொசென்ஸும், அழகும், நம்மை கட்டி போடாமல் இருக்காது. அதிலும் பியட்டாவும், ஜோமொரிலியும் அந்த மலைக் குகையில் இணையும் காட்சியில் ஓளிப்பதிவு சூப்பர்.

சீரான திரைக்கதை, இயல்பான் வசனங்கள், அற்புதமான் ஓளிப்பதிவு, சிறந்த இயக்கம், என்று எல்லா விதத்திலும் நம்மை கவரும் இந்த ”ஸ்டார் மேக்கர்”.

உஙகள் கருத்துகளை பின்னூட்டமிட்டும், தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் ஓரு ஓட்டை குத்திட்டு போங்க தல..
Post a Comment

2 comments:

Anonymous said...

//உஙகள் கருத்துகளை பின்னூட்டமிட்டும், தமிலிஷிலேயும், தமிழ்மந்த்திலேயும் ஓரு ஓட்டை குத்திட்டு போங்க தல.. //

நைட்டு கொஞ்சம் ஓவரா சாபிட்டுடீன்களோ :)

Cable சங்கர் said...

நன்றி அனானி.. கொஞ்சம் கலக்கத்துல எழுதிட்டேன். நன்ரீரீரீ