Thottal Thodarum

Nov 28, 2008

"வயாக்ரா” பயன்படுத்தும் இரண்டு வயது சிறுவன்.


ஆம் உண்மை தான். உலகிலேயே மிக சிறிய வயதில் வயாக்ரா பயன்படுத்தும் சிறுவனின் பெயர் கெல்வின் முட்டுஸா. பிறந்த மூன்று மாதங்களிலிருந்தே மிகவும் அரிதான ஓரு மூச்சு பிரச்சனை காரணமாய் வயாகராவை உட்கொண்டு வருகிறான். ஓரு நாளைக்கு ஆறு வேளை வீதம் அவன் கடந்த முப்பது மாதங்களாய் வயாக்ராவை பயன் படுத்தி வருகிறான்.

”பெல்மோனரி ஆர்டிரியல் ஹைபர்டென்ஷன்” என்கிற அரிதான் வியாதியுடன் அவன் பிறந்ததிலிருந்தே போராடி வருகிறான். அதாவது மிக ஆபத்தான ரத்த கொதிப்பு காரணமாய் அவனுடய இதயம் அவனுடய சுவாசப்பைக்கு அனுப்ப வேண்டிய ரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் கஷ்டபடுகிறது. இதனால் அவனுடய இதயம் நான்கு மடங்கு வேலை செய்ய வேண்டியாதாக இருந்தது.

கெல்வின் பிறப்பதற்கு முன்பே அவன் பிறக்கும் போதே பவுல் மற்றும் கிட்னி பிரச்சனையுடன் தான் பிறப்பான் என்று டாக்டர்கள் அவனின் தாயிடம் தெரிவித்திருக்கிறார்கள். பிறந்து ஓரே நாளில் அதை கரெக்ட் செய்ய சர்ஜரி நடந்திருக்கிறது அவனுக்கு. கருவிலேயே அவனுடய் குறையை கண்டுபிடித்த டாக்டர்களால் அவனுடய் சுவாசப்பை பிரச்சனையை கண்டு பிடிக்க முடியவில்லை.

ஓரு நாள் நான் அவனுக்கு பால் கொடுக்க எழுந்து பார்த்த போது கெல்வின் கண்களில் எந்த அசைவு மற்றும் பேச்சு மூச்சின்றி கிடந்தான். டாக்டர்கள் அவனுடய ஆக்ஸிசன் லெவல் மிகவும் மோசமாய் இருப்பதாய் தெரிவித்தார்கள். ஓவ்வொரு முறை அவன் மூச்சுக்காக, சிரமப்படும்போது அவன் இறந்து விடுவானோ.. என்ற அச்சம் என்னை துரத்தும். ஆனால் டாக்டர்கள் அவனுக்கு மிக மோசமான பிரச்சனை உள்ளது என்றவுடன் என்ன செய்வதென்றே புரியவில்லை. ஓரு நாள் டாக்டர்கள் என் மகனுக்கு ‘வயாகராவை” கொடுத்த போது.. என்ன கொடுமை இது ? பிறந்து மூன்று மாதமே ஆன ஓரு குழைந்தைக்கு ‘வயாக்ரா’வா..? என்று நினைத்து பயந்தேன். ஆனால் அது செய்த ஆதிசயத்தை கண்டு என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்கிறார் கெல்வினின் தாய் மவுரின்.

அது சரி எப்படி கெல்வினுக்கு ‘வயாக்ரா’ வேலை செய்கிற்து என்று கேட்கிறீர்களா..?

ரத்தத்திலிருக்கும் ஆக்ஸிசன் கிடைக்காமல் மூச்சுவிட கஷ்டப்படும் போது ‘வயாக்ரா’ அவனுடய் பல்மொனரி ஆர்டிரரியை இலகுவாக்கி சுவாசப்பைக்கு ரத்தத்தை பம்ப் செய்கிறது அதனால் அவனுடய இதயம் கஷ்டப்படாமல் இலகுவாய் இயங்குவதாய் டாக்டர்கள் சொல்கிறார்கள்..

எது எப்படியோ ‘வயாக்ரா’ முடியாதவர்களை மட்டும் ’எழுப்பவில்லை’. இந்த சிறுவனை எழுந்து ஆடி ஓடி விளையாட வைத்திருக்கிறதே..

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும் கட்டாயம் குத்தவும்..

சிறுகதைளை படிக்க
முத்தம்

நீங்க இந்த மாதிரி பண்ணதேயில்லையா சார்..?
கமான்..கமான்..
மீனாட்சி..சாமான் நிக்காலோ..
ரமேஷூம்..ஸ்கூட்டி பெண்ணும்..
Post a Comment

11 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஐயா,
அந்த ம்ருந்து கண்டுபிடிக்க பட்டதே இதுபோன்ற தேவைகளூக்கு தான்.


மற்றதெல்லாம் தெவையில்லாத பக்க விளைவுகள்.

ஆனால் பக்க விளைவு முக்கிய விளைவாக திரிக்கப் பட்டுவிட்டது

Cable சங்கர் said...

//ஆனால் பக்க விளைவு முக்கிய விளைவாக திரிக்கப் பட்டுவிட்டது//

உலகம் பூராவுமே.. அப்படித்தானே.. நல்லது அவ்வளவு சீக்கிரமா வெளிவராது.. நன்றி சுரேஷ்.

யூர்கன் க்ருகியர் said...

வலது பக்க ஓர இன்றைய புகைப்படத்த பார்த்தால் வயாகரா-வே தேவ இல்லை!
வளர்க்க சேவை!

Cable சங்கர் said...

//வலது பக்க ஓர இன்றைய புகைப்படத்த பார்த்தால் வயாகரா-வே தேவ இல்லை!
வளர்க்க சேவை!//

வயாக்ரா விலை ஜாஸ்தினாலே .. லோக்கல் வயாக்ரா ஜூர்கேன்.

Ganesan said...

இந்த மாதிரி படங்கள் போட்டு நல்ல கலைசேவை

செய்ய வாழ்த்துக்கள்.


காவேரி கணேஷ்

Cable சங்கர் said...

//இந்த மாதிரி படங்கள் போட்டு நல்ல கலைசேவை

செய்ய வாழ்த்துக்கள்.//

என் கலை சேவையை புரிந்து கொண்டமைக்கு நன்றி காவேரி கணேஷ்.

Anonymous said...

Your story telling way is so nice. I have recently read your Muttam story and it was so nice.

Anonymous said...

எத்தன நாள் இப்படி?
இதற்கு மாற்று என்ன?..

Anonymous said...

//ஜுர்கேன் க்ருகேர் said...

வலது பக்க ஓர இன்றைய புகைப்படத்த பார்த்தால் வயாகரா-வே தேவ இல்லை!
வளர்க்க சேவை!///

;-)

Cable சங்கர் said...

//Your story telling way is so nice. I have recently read your Muttam story and it was so nice.//

நன்றி சில்லி வில்லேஜ் கேர்ள்..

Cable சங்கர் said...

//எத்தன நாள் இப்படி?
இதற்கு மாற்று என்ன?..//

தெரியலை பாலசந்தர். அதுக்குன்னு ஒரு மருந்து கண்டுபிடிகாமயா போயிருவாங்க..