கொத்து பரோட்டா -21/09/15
வேளச்சேரி லூக்ஸ் சத்யமிடமிருந்து வேளச்சேரி லூக்ஸ் ஜாஸ் சினிமாஸின் வசம் போய் விட்டது. ஆன்லைன் புக்கிங்கில் புக் செய்து அரை மணி நேரம் கழித்து எஸ்.எம்.எஸ் வந்தது. எல்லாருக்கும் வயலட் கலரில் யூனிபார்ம் கொடுத்திருந்தார்கள். வழக்கமான சத்யம் சினிமாஸின் விளம்பரங்கள் இல்லை. அதே பட்டர் பாப்கார்னுடன், டாப் அப் செய்யும் பவுடர்கள் வைத்திருந்தது பல சத்யம் ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்தது. நிர்வாகம் கை மாறியிருப்பதை உணர முடியாத வகையில் சமாளிக்கிறார்கள். முன்பெல்லாம் சத்யமிடம் இருந்த வகையில் பத்து ரூபாய் டிக்கெட்டை கொடுக்க மாட்டார்கள் அல்லது காலையிலேயே கொடுப்பார்கள் என்று சொல்வார்கள். இவர்கள் அந்த வரிசையையும் 120 ரூபாய்க்கே ஆன்லைனிலேயே விற்கிறார்கள்.காரணம் எப்படி என்று சொல்லியா தெரிய வேண்டும். ஆல்ரெடி மாயாஜாலில் பத்து ருபாய் டிக்கெட்டை 120 ரூபாய்க்குத்தான் விற்கிறார்கள்.