Posts

Showing posts with the label Dindugal sarathy..

திண்டுக்கல் சாரதி - திரை விமர்சனம்

Image
தாழ்வுமனப்பான்மையுள்ள ஒருவனை பற்றிய கதை. தான் கருப்பாக இருப்பதால் பல பெண்களால் நிராகரிகப்பட்ட சாரதிக்கு திடீரென சிகப்பான ஒரு தேவதை போன்ற வசந்தா மனைவியாகிறார். தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை வைத்து கொண்டாடமுடியாமல், தன் தாழ்வு மனப்பான்மையால், அவளை சந்தேகித்து, மனநிலை பாதிக்கப்பட்டு அவதிபட்டு பின்பு மருத்துவத்தினால் சரியாகி சந்தோசமாக வாழ்கிறான் சாரதி. கதை இவ்வளவுதான், ஆனால் அதை சொல்வதற்கு ரொம்ப நேரம் எடுத்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே மளையாளத்தில் சீனிவாசன் நடித்து சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் வந்த ‘வடக்கு நோக்கி எந்திரம்’ படத்தின் தமிழாக்கம் தான். அதை அப்படியே எடுத்திருப்பதனால் இந்த படமும் ஒரு பத்து வருடம் பின்னோக்கியே இருக்கிறது. காட்சியமைப்புகளில், வசனங்களில், நடிப்பில் என்று எல்லா விஷயங்களிலும். பல காட்சிகள் காமெடி என்கிற பெயரில் எரிச்சலூட்டிகிறது. அதிலும் ஆரம்ப காட்சியில் கருணாசை யானை தூக்கி கொண்டு போவது, மிகவும் நீளமான போர் காட்சி, அதே போல் அவர் தன் மனைவியை எப்போது தன் தம்பியுடன் சந்தேகித்தாரோ.. எப்போது நடிகர் அஜித்குமார் தன் மனைவியுடன் தொடர்பு வைத்து கொண்டிருக்கிறார் என்று போலீ...