Posts

Showing posts with the label சிவப்பு கல் மூக்குத்தி

கொத்து பரோட்டா -11/08/15

Image
www.yummydrives.com சாப்பாட்டுக்கடை எழுத ஆரம்பித்ததிலிருந்து நிதம் ஒரு போன் காலாவது கடை பற்றியும், வழி கேட்டும் வரும் விசாரணை வராத நாளில்லை. எவ்வளவு பிஸியாய் இருந்தாலும் நான் வழி சொல்வேன். நண்பர் பதிவர் சுரேஷ்குமார். என்னை குருவாய் ஏற்றுக் கொண்டு அவர் தன் பங்குக்கு சாப்பாட்டுக்கடை விஷயங்களை எழுத , ஒரு நாள் ஏன் நாம் இதை ஒரு ஆங்கில சைட்டாய் கொண்டு வரக் கூடாது என்றார். அப்போது நான் தொட்டால் தொடரும் படப்பிடிப்பில் இருந்த நேரம். அதனால் என்னால் முழுதாய் அதில் ஏதும் ஈடுபட முடியவில்லை. ஆனால் மனுஷன் அஞ்சாமல் தனியே வேலை பார்த்து டெக்னிக்கல் சைட் எல்லா வேலையும் முடித்து வைத்துவிட்டு, எப்படி இருக்குன்னு கேட்டார்.. நான் வழக்கம் போல அது நொள்ளை இது நொட்டை என்று விமர்சனம் செய்து அதில் சில மாறுதல்கள் எல்லாம் சொல்லி, ஏன் இதை ஒரு ஆண்ட்ராய்ட் ஆப்பாகவும் கொண்டு வரக்கூடாது என்று கேட்டேன். அதும் ரெடியாயிட்டிருக்கு சார் என்றார். இப்போது வருகிற வெள்ளியன்று அதாவது 14 தேதி, நான், சுரேஷ்குமார், கோவை நேரம் ஜீவா ஆகியோரின் முனைப்பில் yummydrives.com தளமும், ஆஃப்பும் லாஞ்ச் செய்கிறோம்.  இதில் வசதி என்னவென்றால்...