Thottal Thodarum

Aug 10, 2015

கொத்து பரோட்டா -11/08/15

www.yummydrives.com
சாப்பாட்டுக்கடை எழுத ஆரம்பித்ததிலிருந்து நிதம் ஒரு போன் காலாவது கடை பற்றியும், வழி கேட்டும் வரும் விசாரணை வராத நாளில்லை. எவ்வளவு பிஸியாய் இருந்தாலும் நான் வழி சொல்வேன். நண்பர் பதிவர் சுரேஷ்குமார். என்னை குருவாய் ஏற்றுக் கொண்டு அவர் தன் பங்குக்கு சாப்பாட்டுக்கடை விஷயங்களை எழுத , ஒரு நாள் ஏன் நாம் இதை ஒரு ஆங்கில சைட்டாய் கொண்டு வரக் கூடாது என்றார். அப்போது நான் தொட்டால் தொடரும் படப்பிடிப்பில் இருந்த நேரம். அதனால் என்னால் முழுதாய் அதில் ஏதும் ஈடுபட முடியவில்லை. ஆனால் மனுஷன் அஞ்சாமல் தனியே வேலை பார்த்து டெக்னிக்கல் சைட் எல்லா வேலையும் முடித்து வைத்துவிட்டு, எப்படி இருக்குன்னு கேட்டார்.. நான் வழக்கம் போல அது நொள்ளை இது நொட்டை என்று விமர்சனம் செய்து அதில் சில மாறுதல்கள் எல்லாம் சொல்லி, ஏன் இதை ஒரு ஆண்ட்ராய்ட் ஆப்பாகவும் கொண்டு வரக்கூடாது என்று கேட்டேன். அதும் ரெடியாயிட்டிருக்கு சார் என்றார். இப்போது வருகிற வெள்ளியன்று அதாவது 14 தேதி, நான், சுரேஷ்குமார், கோவை நேரம் ஜீவா ஆகியோரின் முனைப்பில் yummydrives.com தளமும், ஆஃப்பும் லாஞ்ச் செய்கிறோம்.  இதில் வசதி என்னவென்றால் ஆஃப் மூலமாய் நீங்க விரும்பும் ஹோட்டல் பற்றிய தகவல்கள், அதற்கான விமர்சனங்கள், மற்றும், படங்கள், வீடியோக்கள் இருந்தால் அதுவும் லிங்காய் கொடுக்கப்பட்டிருக்கும். அது தவிர நீங்களும் இதில் பங்கு பெறலாம். நீங்க சாப்பிட்ட உணவகங்களைப் பற்றிய கருத்துக்கள், அல்லது விமர்சனங்களை போஸ்ட் செய்யலாம். ஸோ.. அனைவரும் வரும் வெள்ளிக்கிழமை 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு, நம்ம டிஸ்கவரி புக் பேலஸுக்கு வந்திருங்க.. நடிகர் தமன்குமார் சிறப்பு அழைப்பாளராய் வருகிறார். மேலும் சில பிரபல புள்ளிகள் வரவிருக்கிறார்கள்.  லாஞ்ச் அன்று ஆஃப்பை டவுன்லோட் செய்பவர்களுக்கு 10 சதவிகித கழிவுக் கூப்பன் ஒர் பிரபல உணவகத்திலிருந்து தரவிருக்கிறார்கள். வாருங்கள் www.yummydrives.com எங்களால் ஆன உங்களுக்கான சைட். உங்க ஆதரவை நோக்கி. 
@@@@@@@@@@@@@@@@@@@@
Mission Impossible - Rogue Nation
ட்ரைலரிலேயே சீட்டு நுனிக்கு கொண்டு வந்திருந்தார்கள். படத்தின் முதல் காட்சியிலேயே அட்ரிலினை பம்ப் செய்துவிட, கேட்க வேண்டுமா? சும்மா ஆக்‌ஷன் அதகளம் தான். ஹண்ட் ப்ரச்சனையில் மாட்டிக் கொள்வது, அவனுக்கு உதவியாய் அவனது நண்பர்கள், உடன் இருக்கும் பெண், உதவவும் செய்வாள், உபத்ரவமும் செய்வாள், எக்ஸாட்டிக் சீட்டு நுனி ப்ளாக், அதில் கடைசி நேரத்தில் தோல்வி, எதிர்பாராத இடத்தில் மாஸ்க் மாட்டி கொடுக்கும் ட்விஸ்ட். என ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு என்னன்ன டெம்ப்ளேட்டுகள் உண்டோ அத்தனையும் இதிலும் உண்டு. பட்.. இண்ட்ரஸ்டிங்.. அண்ட் எங்கேஜிங்.. 
@@@@@@@@@@@@@@@@@@@
SRIMANDHUDU
தெலுங்கு பட உலகில் சூப்பர் ஸ்டார்கள் அனைவரும் வில்லன்களை மட்டும் தூக்கி பந்தாட விரும்பவில்லை அதற்கு மாறாக கொஞ்சம் பேமிலி வேல்யூ, அத்துடன் நாடு, ஊர், நேர்மை, ஒழுக்கத்தையெல்லாம் விதைக்க ஆரம்பித்திருப்பது நல்ல மாற்றம். சூப்பர் ஸ்டார் இமேஜோடு, ஒரு ஃபீல் குட், டெம்ப்ளேட் மசாலாவையும் ஒருங்கே சேர்த்து, ஸ்டைலிஷான 5 ஸ்டார் ப்ரசண்டேசனோடு கொடுத்தால் பக்கா மாஸ் ஹிட்டாகிவிடும் என்ற கணக்கு வெற்றி பெற்றிருக்கிறது. அமைதியாய் இருந்து வெடிக்கும் கேரக்டர் மகேஷுக்கு கை வந்த கலை. இதில் பி.ஹெச்.டி பண்ணியிருக்கிறார். ஸ்கீரின் ப்ரெசென்ஸில் மனுஷன் நம்மை கேள்வி கேட்கவே விடுவதில்லை. சின்னச் சின்ன ரியாக்‌ஷனில் எல்லாம் ஆம்பளைங்க நமக்கே பிடிக்குது. பொண்ணுங்கள கேட்கவா வேணும். பெப்பி மியூசிக். அட்டகாசமான பளிச்சென்ற முகத்தில் அடித்தார்ப் போல கலர் காம்பினேஷனில் பிரம்மாண்டத்தை காட்டும் தெலுங்கு பட ஒளிப்பதிவிலிருந்து, ஸாப்ட், பட் கலர்புல், மூவிங் அண்ட் இன்ஸ்பையரிங்கான மதியின் வீஷுவல்கள் பெரிய பலம். ஸ்ரீமந்துடு ஃபீல்குட், மசாலா, அன்கன்வன்ஷனல் மாஸ் ஹீரோ படம். இருந்தாலும் மகேஷ்பாபுவிடம் ஒரு கோரிக்கை. இறுக்கமாய், என்னவோ இருக்கு இவர்கிட்டங்கிறமாதிரியான கேரக்டர் இல்லாம, நல்லா வாய் நிறைய சிரிச்சு சந்தோஷப்படுறாப் போல ஒரு படம் நடிங்களேன். கொஞ்சம் போரடிக்க ஆரம்பிச்சிருச்சு :)
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
Other than Maheshbabu..Cinematography by Madhie excels in‪#‎Srimanthudu‬
He wants to be diff. But had a doubt on while. Back to formula ‪#‎Srimanthudu‬
Banned Maggi and Porn. Basically government is against anything which gives you pleasure in 2 minutes. 
😜😂 whatsup
எல்லாருக்கும் தெரியும் உடனடியா முடியாதுன்னு ஆனா பேசுறாய்ங்க.. ம்ம்ம்..
போற போக்கப் பார்த்தா அமல்படுத்தினீங்கன்னா அவ்வளவுதான்னு டவர் மேல ஏறப் போறாங்க
அது என்னாடா இன்னைக்கு மட்டும் கொண்டாடுறது.. ஒவ்வொரு நாளும் நம் நாளே ‪#‎HappyFriendshipday‬
அப்துகாலம் இறந்துட்டாரு பாவம். யாருடா அவரு? தேசியன். ப்ரீ கேஜி பையன் ஒருத்தனோட பதில்
@@@@@@@@@@@@@@@@@@@@
ஆளாளுக்கு பூரண மதுவிலக்கு வேண்டும் என போராடுவதும், கடைய உடைப்பதும், வாசலில் நின்று சாணத்தை கரைத்து ஊற்றுவதும் திடீரென மக்களிடம் போராட்டம் புரட்சி, நம்பிகை என கல்யாண் ஜுவல்லர் விளம்பரம் போல தூண்டிவிடப்பட்டதாகவே தெரிகிறது. இதனால் ஜெயலலிதா அரசுக்கு ஏதோ பெரிய நிர்பந்தத்தை கொடுத்து, அது நல்லாட்சியில்லை என்ற பிம்பத்தை கொடுக்கும் படியாய் அமைக்க இப்படியொரு முயற்சி என்று ஆளும் கட்சிகாரர்கள் சொல்லிக் கொண்டிருக்க, இப்படி போராடுர அரசியல் கட்சிக்காரர்கள் யாரும் கடந்த நாலு வருஷமா போராடலை. கேட்டா நான் பொறந்ததிலேர்ந்து போராடுறேன்னு ஒருத்தர் அறிக்கை விட்டா, இன்னொருத்தர் அன்னைக்கே நான் வருத்தப்பட்டேனு சொல்லிட்டிருக்காரு.. சரி விடுங்க.. மதுவையும், அதன் ஆளுமையையும் அவ்வளவு சீக்கிரம் ஒர் அரசால் விலக்கு என்று சொல்லி கொண்டு வந்துவிட வேண்டுமென்று தோன்றவில்லை. இன்னும் கொஞ்சம் சீரியஸாய் போனால் தெருவுக்கு தெரு, தற்கொலைகளும், கொலைகளும், வன்முறையும் நடக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாய்தான் அவன் வருவான். அது வரைக்கும் பொறுமையாய் கட்டமைத்து அமைதி காக்கும்படி மற்ற கட்சிக்காரர்களை கேட்டுக் கொள்கிறேன். மாணவர்கள் குடிக்கிறார்கள். சிறுவர்களுக்கு ஊற்றிக் கொடுக்கிறார்கள். பொண்ணுங்க ரோட்டுல குடிச்சிட்டு சல்ம்புதுங்க சமூகம் கெட்டுப் போச்சுன்னு கவலைப் படுறவங்களை, இவங்களுக்கு எல்லாம் சரக்கு குடுக்கிறவங்களை பிடிச்சு உள்ள போட முடியாத அரசை கேள்வி கேட்குற, 50 பைசா பாக்கெட்டை 10 ருபாய்க்கு விற்கும் அராஜகத்தை, கொடுக்குற காசுக்கு மரியாதை தராத கஸ்டமர் சர்வீசை, கவர்மெண்டே எடுத்து நடத்தியும், குவாலிட்டி சரக்க கொடுக்க முடியாததை கண்டிக்கிறவனையும்,அநியாயமா எம்.ஆர்.பிக்கு அதிகமா விக்கிறவனைப் பத்தியும், கேள்வி கேக்குறவனை வரவேற்கிறேன். ஆதரிக்கிறேன். இதுல ஒரு கட்சி பாண்டிச்சேரியிலேயும் மதுவிலக்கு கொண்டு வரணும்னுங்குது. டாய்.. பக்கத்து இலைக்கு பாயசம் கேட்டு பாத்திருக்கேன். இது என்னாங்கடா..? நல்ல குவாலிட்டி சரக்கை நியாயமான விலையில் பக்கத்து மாநிலங்களில் கொடுக்குறாங்களே அன்னைக்கு சொல்லியிருக்கியா அதே போல நல்ல தரமான சரக்கத் தான்னு.. யாரும் நல்லாயிருந்திரக்கூடாதுன்னு எவ்வளவு ப்ளான். இப்படி சீரியசா மதுவிலக்கைப் பத்தி நானும் கே.ஆர்.பியும் பேசிட்டிருந்தோம். அப்ப அவரு ” தலைவரே.. மதுவிலக்கு தான் சரின்னாரு. “ ஆச்ச்ர்யமா போயிருச்சு. ஏங்கிறாமாதிரி பார்த்தேன். “பின்ன கொடுக்குற காசுக்கு ஒர்த்தா ஒண்ணை கொடுக்காத ஒண்ணு இருந்தா என்ன முடினா என்ன? நாம வழக்கப்படி வெளியூருக்கு போயிருவோம்” என்ரார். அவர் கோபமும்  சரி தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிவப்புக்கல் மூக்குத்தி
இயக்குனர் ஜே.எஸ்.நந்தினியின்  புதிய அவதாரம். கிராபிக்ஸ் நாவல். சூப்பர் ஹீரோக்கள் எல்லோரும் கார்ட்டூனிலிருந்து தான் திரைக்கு வந்தவர்கள். அது போல.. தமிழில் நேரடியாய் காமிக்ஸ்கள் மிகக் குறைவு என்று நினைக்கிறேன். அதை “இந்த சிவப்புக்கல் மூக்குத்தி “ மூலம் ஜே.எஸ்.நந்தினி ஜனரஞ்சகப்படுத்த வந்திருக்கிறார். காதல், சோகம், திரில், பேய், பேண்டஸி, சயின்ஸ் பிக்‌ஷன் என கலந்துகட்டப்பட்ட கதையமைப்பு, அழகான கேரக்டர் வடிவமைப்பு. கலர்புல் கண்டெண்ட். எல்லாம் சேர்ந்து விறு விறு, தட, தட, படக்கதை உங்களிடம். தொடர்ந்து நாம் கொடுக்கும் ஆதரவு மேலும் இம்மாதிரியான முயற்சிகளுக்கு ஊக்கமும், நம்மூர் சக்திமான் போல புதிய புதிய கேரக்டர்களை வைத்து வித்யாச முயற்சிகளுக்கு வித்திடும். ஆன்லைனில் தமிழ் மற்றும் ஆங்கில வர்ஷன் வெளிவந்திருக்கிறது.  
@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு வயது வந்த ஆணும் பெண்ணும் ஓட்டலில் அறை எடுத்து தங்குவது என்பது நம் நாட்டில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட விஷயமே. ஆனால் மாரல் போலீஸிங்க் என்கிற பெயரால் அதை நடை முறை படுத்தாமல் இருப்பது நம் நாட்டில் தான். சென்ற வாரம் மும்பைக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் சுமார் 40 ஜோடிகள், கணவன், மனைவி அல்லாதவர்கள், நண்பர்கள், கூட்டமாய் சுற்றுலா சென்றவர்கள், விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ஜோடிகள் என அனைவரையும் போலீஸார். ஏதோ விபசார கேஸ் போல பிடித்து, சுமார் 5 மணி நேரம் காக்க வைத்தும், 1200 ரூபாய் பைன் போட்டும் அனுப்பியுள்ளனர். இத்தனைக்கும் பெரும்பாலானவர்கள் தங்களது ஒரிஜினல் பெயர், அடையாளத்தோடுதான் அறை எடுத்துள்ளனர். வயது வந்த ஆணும் பெண்ணும் தனியாய் தங்குவதற்கு அனுமதிக்கபட்ட நாட்டில் இம்மாதிரியான மாரல் போலீஸிங் சரியானதாய் தெரியவில்லை. நிஜமாகவே விபசாரம் செய்யும் இடத்தில் மாமூல் வாங்கிக் கொண்டு விட்டுவிட்டு, தேவையில்லாமல், பொது மக்களை தொந்திரவு செய்கிறார்கள். புருஷன் பொண்டாட்டி இல்லாம தனி ரூம்ல என்னடா வேலைன்னு கேட்டால் அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். அது செக்ஸுக்காக மட்டுமே இல்லை என்பதை புரிந்து கொள்ள கொஞ்சம் வாழ்க்கை தெரிந்திருக்க வேண்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
How do you make your girlfriend cry while having sex?
Phone her! 


கேபிள் சங்கர்Post a Comment

No comments: