சாப்பாட்டுக்கடை - தூத்துக்குடி சிம்னி
சென்னையில் பரோட்டா கிடைக்குமிடங்கள் எது என்று கேட்டால் முக்குக்கு முக்கு கிடைக்குமென்ற டேட்டா கிடைக்கும். அதில் நல்ல தரமான பரோட்டா என்று கேட்டால் கொஞ்சம் யோசித்துத்தான் பதில் வரும். நிலைமை அப்படியிருக்க, விருதுநகர் சைட் போடப்படும் பொரித்த பரோட்டா சென்னையில் கிடைக்குமிடம் பற்றிக் கேட்டால் நிச்சயம் அதற்கான பதில் உடன் கிடைப்பதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தாலும், பெரும்பாலும் அங்கே நல்ல தரமான பரோட்டாவாக இருப்பதில்லை. பரோட்டாவே உடம்புக்கு கேடு, இதுல எண்ணெயில பொரிச்சதா? என்று அலறியடித்துக் கொண்டு ஓடுகிறவர்கள் அதிகமிருக்க, அதை ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்தேன்.
ஈரோடு குப்பண்ணாவில் கட் ரோட்டி என்கிற பெயரில் கிட்டதட்ட நல்ல தரமான பொரித்த பரோட்டா, கிடைக்கும்.எண்ணெய் ஒழுகாமல், நன்றாக வடிக்கப்பட்டு அதன் மேல அவர்கள் தரும் கிரேவிக்களை ஊற்றி, கொஞ்சம் மூழ்கடித்து ஊறியதை வாயில் எடுத்துப் போட்டால் அஹா..
அப்படியான ஒரு பரோட்டாவை தேடி அலையும் போதுதான் தம்பி பத்திரிக்கையாளர் ஜெய் கிருஷ்ணா.. நம்ம சாப்பாட்டுக்கடை ரசிகன். அவன் சொன்னான் தூத்துக்குடிப் பக்கம் வாங்க சார்.. பரோட்டான்னா என்னான்னு காட்டுறேன். என்றவன். இங்கேயே விருதுநகர் புரோட்டா கிடைக்குது என்றான். அட்ரஸை வாங்கிக் கொண்டு சென்றேன். நெல்சன் மாணிக்கம் ரோட்டில் தூத்துக்குடி சிம்னி என்கிற சிறிய கடையில் தான் கிடைக்கிறது என்றான். லயோலாவிலிருந்து வந்தால் சோபன் பாபு சிலையைத் தாண்டி, வலது பக்கத்தில் இருக்கிறது. ஸ்கை வாக்கிலிருந்து வந்தால் இடது புறம் சோபன் பாபு சிலைக்கு முன்னாலேயே வந்துவிடும்.
தந்தூரி, கிரில், போன்றவைகள் முன்னணியில் வைக்கப்பட்டிருக்க, கூட்டம் அவ்வளவாக இல்லை. பரோட்டா இருக்கா என்று கேட்டேன். இருக்குது. என்று மெனு கார்டை வைத்தார்கள். நான் அதைப் பார்க்காமல் பரோட்டா ஒரு ப்ளேட் என்றேன். உடன் மட்டன் சுக்கா வேண்டுமா? சிக்கன் சுக்கா வேண்டுமா? என்றான். மட்டன் என்றேன். சிறிது நேரத்தில் பிய்த்துப் போடப்பட்ட பொரித்த பரோட்டாவின் மீது மட்டன் சுக்கா கிரேவியோடு ஊற்றப்பட்டு வந்தது. சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஊற வேண்டுமல்லவா? பின்பு முதல் வாயை எடுத்து போட்டேன். சூடு இல்லாத பரோட்டாவாக இருந்தது. ஆனாலும் கிரிஸ்பியாய் இருக்க, மட்டன் சுக்கா நல்ல காரத்தோடும், மணத்தோடுமிருந்தது. சுவையாகவும் இருந்தது. பரோட்டா ஆஹா என்று சொல்ல முடியாவிட்டாலும் மோசமில்லை என்றே சொல்ல வேண்டும். கிடைக்காத விருதுநகர் பொரித்த பரோட்டா வேண்டுகிறவர்கள் நிச்சயம் ஒரு முறை ட்ரை செய்யலாம். என்ன விலை தான் கொஞ்சம் அதிகம். ரெண்டு பரோட்டா, மட்டன் சுக்கா 200 ரூபாய்.
கேபிள் சங்கர்
Thoothukudi Chimney
- 12:30 – 3:30 pm
- 6:30 – 11:00 pm
Though Thoothukudi chimney serves you grill, thandori, and shawarma they are very much known for virudhunagar fried parotta. which is not easily available in chennai. very few people serves you that poricha parotta, in junior kuppanna, they serve as Cut Roti. In this restaurent they serve this parotta with chicken, mutton, chops. two pieces of parotta, with gravy based chukka. thought parotta served to me is not that much hot. gravy is hot enough to. Not that much crispy.but they serve good quality of parotta.. but cost u little bit higher.. two parotta and mutton chukka.. 200 rs.
Comments
மீண்டும் வரும்போது தெரிவியுங்கள். இன்னும் சில சிறப்புகள் உள்ளன. ஜமாய்த்து விடலாம்!