Posts

Showing posts with the label telugufilm

Sasirekhaa Parinayam- Telugu Film Review

Image
Technorati Tags: Sasirekhaa Parinayam , telugu film review வழக்கமாய் கிருஷ்ணவம்சி படமென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். சாதாரண கதையை மேக்கிங்கில் அசத்துவார்.  அதிலும் ஜெனிலியா என்றவுடன் ஏகப்பட்ட ஆர்வத்துடன் பார்த்தேன். கண்டிப்புக்கும், முட்டாள்தனமான கோபத்துக்கும் சொந்தக்காரரான சசிரேகாவின் தந்தை அவருக்கு திடீர் என்று திருமணம் ஏற்பாடு செய்ய, அமெரிக்க மாப்பிள்ளையின் தந்தை வரதட்சணை, அது இது என்று பிரச்சனை செய்ய திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார், வழியில் ஆனந்தை சந்திக்கிறார்.  அவர்கள் இருவருக்கும் நடக்கும் சம்பவஙக்ள தான் கதை.. இறுதியில் அவர்க்ளூக்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்பதை ஒரு சின்ன சஸ்பென்ஸையும் வைத்து முடித்து இருக்கிறார்கள். படம் முழுக்க ஜெனிலியா, அழுகிறார், சிரிக்கிறார், குதிக்கிறார், குதூகலிக்கிறார். அவருடன் நாம் அதே உணர்வுகலை உணர்கிறோம்.  சசிரேகாவாக வாழ்ந்திருக்கிறார் ஜெனிலியா. ஆனந்தாக தருண், படம் முழுவதும் வியாபித்திருக்கும் ஜெனிலியாவுடன் ஈக்குவலாய் போட்டி போடுகிறார். விஜயவாடா பற்றி கேவலமாய் ஜெனிலியா பேசுமிடத்தில், அதன் பெருமைகளை...

"யுவதா"

Image
லாஜிக் பார்காமல் விறுவிறுப்பான காமெடி கலந்த ஓரு திரில்லரை பார்க்க வேண்டுமா.? அதற்கு ரெடி என்றால் இதோ “யுவதா”. ஹாப்பி டேஸில் நடித்த பலபேர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.. நண்பர்கள் என்றால் உயிராய் நினைக்கும் வீரபாபு..என்கிற பாபு.. அமெரிக்கா ஓன்றையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் அஜய்.. போலீஸ் வேலைக்கு தன்னை தயார் படுத்தி கொண்டு செக்யூரிடியாய் வேலை பார்க்கும் கிரண்.. தெலுங்கு சினிமாவை புரட்டி போட்டே தீருவேன் என்ற சபதத்துடன் இயக்குனரகும் கனவுடன் சுப்பு. ராஜ் காதலிக்கும் அவர்களின் வீட்டு ஓனரின் மக்ள்.. என்று துள்ளும் இளமை பட்டாளம். பாபுவுக்கும் விசாலாட்சிக்கும் காதல் மலருகிறது. எப்படி மலருகிறது என்றெல்லாம் கேட்க கூடாது.. அஜயின் காதலியும் விசாலாட்சியும் மருத்துவ கல்லூரி மாணவர்கள்.. இப்படியாய் கதை போக..உதவி இயக்குனர் சுப்புவுக்கு ஹீரோவுக்கும், வில்லனுக்கும் நடந்த சண்டையின் போது மண்டையில் அடிபட, ஐந்து லட்ச்ம் இருந்தால் தான் பிழைபார் என்றதும் வேறு வழியில்லாம்ல் ஓரு கந்து வட்டி காரனிடம் கடன் வாங்குகிறார்கள்.. கடனை திரும்ப குடுக்க முடியாமல் அவர்கள் திண்டாட.. இரண்டு நாட்களில் கொடுக்கவில்லையென்ற...