Posts

Showing posts with the label நண்டு

நண்டு

Image
“உங்க கூட யாராவது முக்கியமானவங்க இருக்காளா..? இருந்தா வரச்சொல்லுங்கோ.. கொஞச்ம் பேசணும்” என்ற டாக்டர் வரதராஜனுக்கு சுமார் அறுபது வயதிருக்கும், குழந்தை போலிருந்தது அவரின் பேச்சும், முகமும், அதற்கு சற்றும் பொருந்தாத மீசை வைத்திருந்தார். “அவருக்கு அண்ணா ஒருத்தர் இருக்கார். ஹைதாராபாத்ல.. ஏன் அவருக்கு என்ன..? ஏதாவது சீரியஸா..? ப்ளட் ஏத்தினா ஹீமோக்ளோபின் ஏறிடும்னு சொன்னேளே..? பெருமாளே.. அவருக்கு ஏதுமில்லைதானே..? என்று அடுக்கடுக்காய் பதட்டத்தோடு, கேள்வி கேட்ட கமலாவின் நெற்றி முழுவதும் ஊரில் உள்ள அத்தனை கோயில் குங்குமம், வீபூதி அப்பியிருக்க, அந்த ஏசி ரூமில் வேர்த்திருந்தாள். “அப்ப சரி.. அவர் வரவரைக்கும் எல்லாம் வெயிட் பண்ணவேணாம்.. கொஞ்சம் நிதானமா நான் சொல்றத கேளும்மா.. மிஸ்டர்.. ரகுவுக்கு, வந்திருக்கிறது ‘அக்யூட் லூக்கேமியா’ அதாவது ப்ளட் கேன்சர்” என்றதும், கமலாவின் அடிவயிற்றிலிருந்து “அய்யோ.. பெருமாளே...” என்று அலறி அழ ஆரம்பிக்க, வரதராஜன் காத்திருந்தார். ஒரு அழகான பேரிளம் பெண், எதிரே ஒருவர் உட்கார்ந்திருப்பது கூட உணரமுடியாமல், விக்கி, விக்கி அழுவதை பார்த்து எந்தவிதமான உணர்வுமில்லாமல்...