புத்தகக் கண்காட்சி –7 ஆம் நாள்
மாலையில் கிளம்பலாம் என்றால் சரி மழை பெய்தது. விடாமல் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் அடித்த மழை சட்டென ஓய, உடன் கிளம்பினேன். மழையினால் வழியெங்கும் ட்ராபிக் ஜாம். ஒரு வழியாய் ஆறு மணிக்கு கிளம்பியவன் ஏழு மணிக்கு போய்ச் சேர்ந்தேன். பத்திரிக்கையாளர் பாலா போன் செய்தார். அவரை நான் 334 டிஸ்கவரியில் சந்திப்பதாய் சொல்லிவிட்டு, நேற்று ரவுண்ட் அடித்த எதிர்பக்கத்திலிருந்து ஆரம்பித்தேன். மழையின் காரணமாய் கூட்டம் மிகக் குறைவாகவேயிருந்தது. ஒவ்வொரு கடையாய் பார்த்து வரும் போது இந்திராபார்த்தசாரதியின் மூன்று குறுநாவலை வாங்கலாம் என்று யோசித்து பர்சை எடுத்தால் பணமேயில்லை. வெறும் நூறு ரூபாய் மட்டுமே இருந்தது. க்ரெடிட் கார்டும் அக்செப்டட் இல்லை என்பதால் திரும்பக் கொடுத்துவிட்டு, மெல்ல நடந்தேன். வழியில் இன்னொரு நண்பர் கந்தாவை சந்தித்தேன். உதவி கேமராமேன். நான் இணை இயக்குனராய் பணி செய்த படத்தில் அவரும் வேலை செய்தார். இனிமையானவர். சூட்டிங் ஏதுமில்லாததால் இங்கு நண்பருக்கு உதவி செய்வதற்காக வந்திருப்பதாய் சொன்னார். சிறிது நேரம் பேசி கொண்டிருந்தோம். அந்த ஸ்டால் முழுக்க, கம்யூனிசமாகவோ, அல்லது அணு உலை வேண்டாம் என்ற...