Posts

Showing posts with the label Terminator

கொத்து பரோட்டா -06/07/15

Image
பாபநாசம் த்ரிஷ்யம் படம் பார்த்துவிட்டு மிரண்டு போய் அதன் பிறகு தெலுங்கு, கன்னடம் திரிஷ்யங்களையும் பார்த்தாயிற்று. எல்லாமே அந்தந்த ஊர்களில் ஹிட். தமிழில் கமல்ஹாசன் என்றதும் அவ்வளவுதான் கமல் படத்த காலி பண்ணிடுவாரு. நடிச்சி, தலையிட்டு கெடுத்துருவாரு என்றெல்லாம் ஒரு பக்கம் பேச்சிருந்தது. அதற்கேற்ப ஒட்டு மீசையுடன் வந்த ட்ரைலரைப் பார்த்ததும், இன்னும் பேச்சு அதிகமானது. நெகட்டிவ் பேச்சுக்கள் அத்தனையும் ஒரு சேர சுழட்டி அடித்திருக்கிறது கமல்ஹாசனின் பாபநாசம். பத்திரிக்கையாள நண்பர் ஒருவர்.. தின்னவேலி பாஷை புரியாது. கமல் படத்துக்கு இப்பல்லாம் ஓப்பனிங் இல்லை. கிறிஸ்டியன் பேமிலியை வேணும்னே இந்துவா மாத்தியிருக்காரு கமலு. எல்லாத்துலேயும் தலையிட்டு கெடுத்திருக்காராம் என்று படம் பார்ப்பதற்கு முன்பே சொல்லிக் கொண்டிருந்தார். இப்படியான எல்லாவிதமான எதிர்புகளையும், எதிர்பார்ப்புகளையும், கமலும், ஜீத்து ஜோசப்பும் உடைத்தெறிந்திருக்கிறார்கள். மோகன்லால் நல்ல நடிகரா? கமல் சொதப்பிட்டாரா? என்றெல்லாம் பேசுகிறவர்கள் மோகன்லாலின் எத்தனை மொக்கை படங்களை பார்த்திருக்கிறார்கள் என்று கேட்டால் அது தெரியாது. இருவரும் அவரவர் ...