Thottal Thodarum

Jul 6, 2015

கொத்து பரோட்டா -06/07/15

பாபநாசம்
த்ரிஷ்யம் படம் பார்த்துவிட்டு மிரண்டு போய் அதன் பிறகு தெலுங்கு, கன்னடம் திரிஷ்யங்களையும் பார்த்தாயிற்று. எல்லாமே அந்தந்த ஊர்களில் ஹிட். தமிழில் கமல்ஹாசன் என்றதும் அவ்வளவுதான் கமல் படத்த காலி பண்ணிடுவாரு. நடிச்சி, தலையிட்டு கெடுத்துருவாரு என்றெல்லாம் ஒரு பக்கம் பேச்சிருந்தது. அதற்கேற்ப ஒட்டு மீசையுடன் வந்த ட்ரைலரைப் பார்த்ததும், இன்னும் பேச்சு அதிகமானது. நெகட்டிவ் பேச்சுக்கள் அத்தனையும் ஒரு சேர சுழட்டி அடித்திருக்கிறது கமல்ஹாசனின் பாபநாசம். பத்திரிக்கையாள நண்பர் ஒருவர்.. தின்னவேலி பாஷை புரியாது. கமல் படத்துக்கு இப்பல்லாம் ஓப்பனிங் இல்லை. கிறிஸ்டியன் பேமிலியை வேணும்னே இந்துவா மாத்தியிருக்காரு கமலு. எல்லாத்துலேயும் தலையிட்டு கெடுத்திருக்காராம் என்று படம் பார்ப்பதற்கு முன்பே சொல்லிக் கொண்டிருந்தார். இப்படியான எல்லாவிதமான எதிர்புகளையும், எதிர்பார்ப்புகளையும், கமலும், ஜீத்து ஜோசப்பும் உடைத்தெறிந்திருக்கிறார்கள். மோகன்லால் நல்ல நடிகரா? கமல் சொதப்பிட்டாரா? என்றெல்லாம் பேசுகிறவர்கள் மோகன்லாலின் எத்தனை மொக்கை படங்களை பார்த்திருக்கிறார்கள் என்று கேட்டால் அது தெரியாது. இருவரும் அவரவர் திறமைகளில் சிறந்தவர்கள். அதை கமல் தான் சிறந்தவரென அவர் டர்ன் வரும் போது நிருபித்திருக்கிறார். முக்கியமாய் க்ளைமேக்ஸ் காட்சியில் கமல் கொடுக்கும் ரியாக்‌ஷன்களில் டபுள் சிக்ஸர் அடித்திருக்கிறார்.  திருஷ்யம் படத்தில் மிகவும் பிடித்த ஒரு விஷயம் இதில் மிஸ்ஸிங் . அது என்னவென்றால் மீனா, மோகன்லாலின் ரொமான்ஸ்..அது மட்டுமே. பாபநாசம். அட்டகாசம்.

டிஸ்கி: ஆல்ரெடி. இப்படத்தின் பட்ஜெட்டுக்கு சாட்டிலைட், எப்.எம்.எஸ். கடந்த மூன்று நாள் கலெக்‌ஷனெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சர்பிளஸ்ஸில் தான் இருக்கிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Terminater Genysis
என்ன சொல்வது. இம்மாதிரியான ப்ரான்சீஸ் படங்களின் மேலிருக்கும் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டே வருகிறது. இதில் கொஞ்சம் டைம் மிஷின், முன்னோக்கி, பின்னோக்கி, நடுவாந்திரத்தை நோக்கி என்று பயணப்பட்டிருக்கிறார்கள். அம்மாவும் பையனும் சந்திப்பது, போன்ற சில சுவாரஸ்யங்களைத் தவிர, நிறைய கொட்டாவிகள் நிறைந்த படமாய் அமைந்துவிட்டது. I am old but not obsulute என்று அடிக்கடி ஆர்னால்ட் சொல்லும் பஞ்ச் டையலாக். அதுவே படத்துக்கும் 
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டதில் பிடித்தது.
கேட்ட மாத்திரத்தில் பிடிக்க ஆரம்பித்து இது வரை பல முறை கேட்டுவிட்டேன். முக்கியமாய் பாடலின் ஆரம்பத்திலும், பிஜியெம்மிலும் வரும் கிட்டத்தட்ட நாதஸ்வர பீல் இசை. வாவ்.. தமிழில் விரைவில் வந்திரும்.
@@@@@@@@@@@@@@@@@@@@
பேபி
பேய்ப்பட சீசனில் வந்திருக்கும் இன்னொரு பேய்ப்படமாக இருக்குமோ என்று யோசித்திருந்தேன். கொஞ்சமே கொஞ்சம் விதயாசமான பேய் படம்தான். இறந்து போன தாய் தன் குழந்தையைத் தேடி வரும் கதை. கதை படத்தின் மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவு. வித்யாசமான ஆங்கிள்களில் ஷாட்கள் அமைத்ததும், அதற்கேற்றார்ப் போல பின்னணியிசையும் கச்சிதம். பேயினால் பாதிக்கப்படும் இரண்டு குழந்தைகளின் நடிப்பும் நன்று. ஆனால் கதை சொன்னதில் தான் ப்ரச்சனை. தன் குழந்தையை அன்பாய் வளர்த்துக் கொண்டிருக்கும் தம்பதிகளிடம் ஏன் பேய் பிரச்சனை செய்ய வேண்டும். தன் குழந்தைக்காக குடும்பமே பிரிந்து இருக்க, ஏன் அம்மா பேய் தன் குழந்தையுடன் சேர அலைய வேண்டும்? என்பது போன்ற கேள்விகளால் எமோஷன் குறைவான படமாய் போனது பேபி. அதனால் தான் க்ளைமேக்ஸ் பாதிக்கவேயில்லை. பட வழக்கமான கோர, காமெடி, பேய்களை விட வித்யாசமாய் யோசித்தற்காக வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@
Sleepless Night -தூங்காவனம்
தமிழில் இப்படத்தின் ரைட்ஸை வாங்கி கமல் படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஒரு போதை மருந்து கும்பலுக்கும், அந்த டீமிலிருந்து போதை மருந்தை பிடித்த போலீஸ்காரர்கள். அதை தங்களுடயதாக்கிக் கொள்ள, அதனால் போதை மருந்து டீம் தலைவன் ஹீரோவின் பையனை கடத்திக் கொண்டு போகிறான். தன் பையனை மீட்பதற்காக வேறு வழியில்லாமல் மருந்தை ஒப்படைக்க அவன் நடத்தும் ப்ப்பில் சந்திக்கிறான். அவனை பாலோ செய்யும் இன்னொரு போலீஸ் டீம் அந்த மருந்தை அபேஸ் செய்ய, இல்லாத மருந்தை கொண்டு பையனை மீட்க முயற்சிக்கிறான் நாயகன். அதன் பின்னணியில் வில்லன் அவனிடமிருந்து சரக்கு வாங்கும் கும்பல், நேர்மையான பெண் போலீஸ் அதிகாரி, அவளுடய தில்லாலங்கடி மேலதிகாரி, உடன் துரோகம் செய்யும் நண்பன் என களேபரக்கூட்டாய் அதிரிபுதிரி திரைக்கதைக்கான கேரக்டர்கள். முழுக்க முழுக்க ஒரு பப்பில் நடைபெறும் காட்சிகள். மிகச் சிறந்த ஒளிப்பதிவு. அற்புதமாய் அமைக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் என பரபரக்கிறது படம். நிச்சயம் தமிழில் ஒர் பரபர ஆக்‌ஷன் திரில்லரை கமல் மூலம் எதிர்பார்க்கலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
மெட்ரோ ரயில் ஆரம்பித்து ரெண்டாவது நாள் இரவு அரும்பாக்கத்திலிருந்து ஆலந்தூர். ஆலந்தூர் டு அரும்பாக்கம்.  கொஞ்சம் காலியாகவே இருந்தது ஸ்டேஷன். சுத்தமாய் இருந்தது. பெங்களூர் மெட்ரோவில் போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை. இங்கே எடுக்கக்கூடாதுன்னுதான் சொன்னாங்க.. எத்தனை பேரை சொல்லி நிறுத்த முடியுமென்று அங்கலாயித்தார் காவலர். மஞ்சள் கோட்டுக்கு பின் நிற்கச் சொல்லி விசிலடித்துக் கொண்டேயிருந்தார்கள். சில ஒழுக்கங்கள் தொடர்ந்து செயல்படுத்த, படுத்தத்தான் வரும். வரணும். சுத்தமாய் இருந்தது ஸ்டேஷன்கள். ஆலந்தூர் கொஞ்சம் பெருசாய். ரோகிணி, ஜோதி, உதயமிற்கு போகணுமென்றால் வாசலிலேயே போய் நிற்கலாம். ஆங்காங்கே வழி சொல்ல ஆள் வைத்திருந்தார்கள். பார்த்ததில் மோசமாய் இருந்தது கழிவறைகள் தான். மிக சின்னதாய், தண்ணீர் தேங்கி, ஆலந்தூரில் இருந்த மாதிரியில்லாமல் அரும்பாக்கத்தில் கொஞ்சம் தேட வேண்டியிருந்தது. டிக்கெட் விலை கொஞ்சம் அதிகம் தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
எவனோ ஒருத்தன்/ர்/ அனுப்புன ஸ்பேமினால என்னால மூணு நாளைக்கு ஆரோடும் லைக் போட்டு புழங்க முடியாதுன்னு எப்.பி ஓனர் சொல்லிட்டாரு. நியாயமாரே.. இத கேட்க ஆருமில்லையா?

வாட்ஸப்பில் வரும் ஹெல்மெட் தேவையில்லை என்ற முதல்வர் அறிவிப்பை நாம் நம்புவது கூட ஓகே நேற்று ஒரு பத்திரிக்கையாளர் நம்பி சொன்னாரு.

வாவ்... நோ.. கம்பேரிசன். க்ளைமேக்ஸ் காட்சி ஒன்று போதும் அட்டகாசம் ‪#‎பாபநாசம்‬

முன் முடிவோடு பேசுகிறவர்கள். ஒத்துக் கொள்ள விழைகிறவர்கள், மறுக்கிறவர்களை காயப்படுத்த முயற்சிக்கிறார்கள்.அது முடியாது என்று புரியாமலேயே

எம்.ஆர்.பில எல்மெட் விக்கலைன்னா புகார் தர நம்பர் தந்திருக்காங்கலாம். இவங்க கடைடாஸ்மாக்லேயே எம்.ஆர்.பில கொடுக்குற்தில்லை.போனை எடுத்திட்டாலும்

இந்த வருஷம் ஹெல்மெட் வேண்டியிருக்கும்னு போன வருஷமே யோசிச்சு, விலையில்லா ஹெல்மெட்டை எனக்கு அன்பளித்தற்கும், அநியாய புது ஹெல்மெட் கொள்ளையிலிருந்து தப்ப வைத்ததற்கும் அண்ணன் Venkat Subha விற்கு என் அன்பும் நன்றியும். :))

நல்ல பெயரெடுத்தால் காசு வருவதில்லை. காசு வந்தால் நல்ல பெயரெடுக்க முடியவில்லை

தீபாவளி பட்டாசு போல குவியலாய் போடப்பட்டிருக்கிறது ஹெல்மெட்டுகள். பக்கத்திலேயே போலீஸ் செக் போஸ்ட் வேறு யாருக்கும் பில் இல்லை. கேட்க ஆளில்லை
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Whats 72? 
69 with three people watching. 

கேபிள் சங்கர்


Post a Comment

2 comments:

'பரிவை' சே.குமார் said...

கொத்துப் புரோட்டா சுவையாய்...

Ram S Rathinam said...

Think it is sax. Not nathaswaram.