Posts

Showing posts with the label Mannaru

மன்னாரு

Image
பல பேருக்கு நல்ல ஆர்டிஸ்ட் கிடைப்பார்கள். ஆனால் நல்ல கதையோ, அல்லது திரைக்கதையோ அமையாது. சில பேருக்கு நல்ல கதை அமையும். நல்ல ஹீரோ அமைய மாட்டார்கள். இன்னும் சில பேருக்கு நல்ல கதை அமையும் ஓரளவுக்கு கதைக்கு ஓகேவான ஹீரோவும் கிடைப்பார்கள் ஆனால் திரைக்கதையில் சொதப்பிவிடுவார்கள். இதில் மூன்றாவது வகைதான் மன்னாரு. ஹீரோ மன்னாரு லாரியில் லோடடிப்பவன். வழக்கமாய் ஷகீலா படம் பார்த்துவிட்டு நண்பன் ரூமில் படுத்துவிட்டு போகிறவன். அன்றைக்கும் அதே போல் படுக்க போக, அடுத்த நாள் நண்பன் தன் திருட்டுக் கல்யாணத்திற்கு சாட்சிக் கையெழுத்துப் போட கூட்டிப் போகிறான். திருமணமும் நடக்கிறது. அவர்களை வழியனுப்ப மன்னாரும் பஸ்ஸ்டாண்டுக்கு போக, மணப்பெண்ணின் தந்தையும், அவளை கட்ட தயாராய் இருந்த எம்.எல்.ஏ பையனும் ஆள் படையுடன் வர,  வேறு வழியில்லாமல் நண்பனுடன் காதல் மனைவியை அனுப்பி வைத்துவிட்டு, தான் பின்னால் வருவதாய் சொல்லி வில்லன் கும்பலிடமிருந்து தப்பிக்க நினைக்கிறான் காதலன். நண்பனின் காதலியை கூட்டிக் கொண்டு போய் தங்க ஹோட்டலில் ரூம் கேட்கப் போக, எசகுபிசகாய் மன்னாரு தன் அண்ணனிடம் மாட்டிக் கொள்ள, ஊரே இவன் அந்தப் பொண்...