Thottal Thodarum

Sep 9, 2012

மன்னாரு

பல பேருக்கு நல்ல ஆர்டிஸ்ட் கிடைப்பார்கள். ஆனால் நல்ல கதையோ, அல்லது திரைக்கதையோ அமையாது. சில பேருக்கு நல்ல கதை அமையும். நல்ல ஹீரோ அமைய மாட்டார்கள். இன்னும் சில பேருக்கு நல்ல கதை அமையும் ஓரளவுக்கு கதைக்கு ஓகேவான ஹீரோவும் கிடைப்பார்கள் ஆனால் திரைக்கதையில் சொதப்பிவிடுவார்கள். இதில் மூன்றாவது வகைதான் மன்னாரு.

ஹீரோ மன்னாரு லாரியில் லோடடிப்பவன். வழக்கமாய் ஷகீலா படம் பார்த்துவிட்டு நண்பன் ரூமில் படுத்துவிட்டு போகிறவன். அன்றைக்கும் அதே போல் படுக்க போக, அடுத்த நாள் நண்பன் தன் திருட்டுக் கல்யாணத்திற்கு சாட்சிக் கையெழுத்துப் போட கூட்டிப் போகிறான். திருமணமும் நடக்கிறது. அவர்களை வழியனுப்ப மன்னாரும் பஸ்ஸ்டாண்டுக்கு போக, மணப்பெண்ணின் தந்தையும், அவளை கட்ட தயாராய் இருந்த எம்.எல்.ஏ பையனும் ஆள் படையுடன் வர,  வேறு வழியில்லாமல் நண்பனுடன் காதல் மனைவியை அனுப்பி வைத்துவிட்டு, தான் பின்னால் வருவதாய் சொல்லி வில்லன் கும்பலிடமிருந்து தப்பிக்க நினைக்கிறான் காதலன். நண்பனின் காதலியை கூட்டிக் கொண்டு போய் தங்க ஹோட்டலில் ரூம் கேட்கப் போக, எசகுபிசகாய் மன்னாரு தன் அண்ணனிடம் மாட்டிக் கொள்ள, ஊரே இவன் அந்தப் பொண்ணை திருமணம் செய்து கொண்டு வந்துவிட்டிருக்கிறான் என்று நம்புகிறது. அந்தப் பெண்ணும் வாய்மூடி இருக்க, இதைக் கேட்டு மன்னாருவின் காதலி மல்லிகா மனமொடைகிறாள். பின்பு என்ன நடந்தது என்பது தான் கதை.
மன்னாருவாய் அப்புக்குட்டி. அவருக்கு ஏற்ற கேரக்டர். ஆனால் அவரின் கேரக்டர் மேல் பரிதாபம் வர வேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கெட்டிருக்க, வேஸ்டாய் போய்விட்டது. ஓப்பனிங் காட்சியில் ரஜினியின் பாடலோடு இவருக்கு வரும் ஓப்பனிங் கொஞ்சம் ஓவர் தான். சரி காமெடியாய் எடுத்துக் கொள்வோம். பட்.மன்னாருவின் அப்பாவே அந்தாத்தண்டி உள்ள பிள்ளையை கட்டி வைத்து அடிப்பார் என்பதெல்லாம் படு ஓவர். நடிப்பென்று பார்த்தால் ஒன்றும் பெரிதாக சொல்ல முடியாது.

சுவாதிக்கு பொருத்தமான கேரக்டர்தான். அவருக்கு டப்பிங் கொடுத்தவர் தான் சொதப்பியிருக்கிறார். அவருக்கும் பெரிதாய் நடிக்க ஏதுமில்லாத கேரக்டர். மன்னாருவின் காதலியாய் வரும் மல்லிகாவின் நடிப்பு ஓகே. தம்பி ராமையா நடித்திருக்கிறார். வரும் காட்சிகளில் எல்லாம் பேசிக் கொண்டேயிருக்கிறார். அவர்தான் வசனகர்த்தா. இன்னும் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். அதில் மன்னாருவின் அப்பாவாக வருபவர் கொஞ்சம் கவனிக்கத்தக்கவராய் இருக்கிறார்.
கொடைக்கானலனில் தட்பவெப்பத்தை அழகாய் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அகு அஜ்மல். பாடல்களில் ரெண்டொரு பாடல்கள் ஓகேதான். என்றாலும் அதை படமாக்கிய விதத்தில் அரத பழசாய் இருப்பதால் இம்ப்ரசிவாக இல்லை.

எழுதி இயக்கியவர் ஜெய்சங்கர். நல்லதொரு கதையை வைத்துக் கொண்டு, அதை சிறப்பான திரைககதையாக்க தவறியிருக்கிறார். அதுவும் பல காட்சிகளில் லீனியராய் இல்லாமல் ஒவ்வொரு முறையும் ப்ளாஷ்பேக் போய் வருவது ஏதோ ஒரு முறை சுவாரஸ்யம் தட்டும். ஆனால் தொடர்ந்து அதே முறையை பயன்படுத்தியிருப்பது கொட்டாவியை வரவழைத்துவிடுகிறது. அதே போல மேக்கிங்கிலும் நிறைய நாடகத்தனம். நல்ல முடிச்சு.ஆங்காங்கே சில காட்சிகள் நன்றாக இருந்ததைத் தவிர பெரிதாய் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

மட்டை ஊறுகாய் said...

http://mattaioorukai.blogspot.com/2012/09/blog-post.html
இம்ப்ரசிவாக இல்லை

rajamelaiyur said...

எனக்கு அப்புகுட்டியின் நடிப்பு நன்றாக இருந்ததாக தோன்றுகிறது

rajamelaiyur said...

Facebook இல் Account வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்
ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html