Thottal Thodarum

Sep 19, 2012

Barfi

ஃபர்பி. இதன் ட்ரெயிலரை பார்த்த எவரும் படம் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அவ்வளவு க்யூட்டான விஷுவல்களோடு நம்மை ஆகர்ஷித்தது அந்த சின்ன டீசர். அந்த டீசர் கொடுத்த உணர்வை படம் கொடுத்ததா? என்று கேட்டீர்கள் என்றால்  கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.வழக்கமாய்  ஊனமுற்றவர்களின் வாழ்க்கையை வைத்து உருவாகும் படங்கள் எல்லாம் எப்படியாவது நம்மை அழவைத்துப் பார்ப்பதிலேயே குறியாய் இருப்பார்கள். ஏதாவது ஒரு கட்டத்தில் அவர்களின் இயலாமையை நம்மேல் திணித்து உணர்ச்சிவயப்பட்டு கண் கலங்க வைக்காமல் தியேட்டரை விட்டு அனுப்ப மாட்டார்கள். ஆனால் இப்படம் அதற்கு விதிவிலக்கு. வாய் பேச முடியாத, காது கேளாத ஒர் இளைஞனுக்கும், ஆட்டிஸத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணுக்குமிடையேயான காதலை, அன்பை, சந்தோஷமாய், குதூகலமாய் சிரிக்க, சிரிக்க, ரசிக்கும் படியாய் ஒரு சாதாரணனின் வாழ்க்கையைப் போல நம் கண் முன்னே விரித்திருக்கிறார்கள்.
பிறவி ஊமைச் செவிடான ஃபர்பியின் பெயர் காரணமே ஒரு காமெடியான விஷயம்தான். மர்பி ரோடியோ இந்தியாவெங்கும் பிரபலமாக  இருந்த நேரத்தில் அவனின் பெற்றோர்கள் கர்பத்திலேயே தங்கள் குழந்தைக்கு அந்த மர்பி குழந்தை பெயரை வைக்க ஆசைப்பட்டு வைக்க, குறைபாட்டோடு பிறந்து தன் பெயரை மர்பி என்றும் சொல்ல முயலும் போது அது ஃபர்பியாய் ஒலித்ததினால் மர்பி, ஃபர்பியான கதையே ஒரு சுவாரஸ்யம்தான். ஃபர்பியின் தாய் அதே ரேடியோவை போடும் போது ஷாக்கடித்து சாவதைக் கூட சாப்ளின் படங்களில் வருவது போல காட்டி அதை சோக காட்சியாய் மாற்றாமல் கொஞ்சம் சர்காஸ்டிக் நகைச்சுவையாய் சொல்லியிருப்பதிலேயே இயக்குனர் அனுராக் பாஸு எப்படி இப்படத்தை கொடுக்க விழைகிறார் என்பதை தெளிவாக புரிகிறது.
இப்படத்தின் பெயருக்கான காரணக் காட்சியை திரையில் பார்த்ததும் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. ஏனென்றால் மூன்றாவது மாடி தேவிபாரடைஸுக்கு லிப்டில் போகும் போது லிப்ட் ஆப்பரேட்டர் கேட்டார் ‘பர்பின்னா என்ன அர்த்தம்ங்க?” என்று. நான் படம் பார்க்காமல் படத்தைப் பற்றி ஏதுவும் சொல்ல மாட்டேன் அதனால் அமைதியாய் இருந்தேன் பக்கத்தில் இருந்தவர் அவரும் படம் பார்க்க வந்தவர் தான் “பர்பின்னு ஸ்வீட் இல்லைங்க அதான்” என்றார். படம் பார்த்தவுடன் அவருக்கு அந்தப் பெயரின் காரணம் தெரியும் போது தான் சொன்னதை நினைத்து வெட்கப்பட்டிருப்பார்.

தன் குறை ஏதும் தெரியாமல் மிக சந்தோஷமாய் வாழும் ஃபர்பி. பெற்றோர்களின் புரிதல், ஆதரவு இல்லாமல் தவிக்கும் ஆட்டிஸப் பெண் கில்மில். இவர்கள் இருவரும் இணையும் காட்சியே க்யூட்டான ஒன்று. திருமண நிச்சயம் செய்யப்பட்ட இலியானாவை பார்த்த மாத்திரத்திலேயே காதலிக்க ஆரம்பிக்கும் ஃப்ர்பி. தான் நிச்சயிக்கப்பட்டப் பெண் என்று சொல்லி அவனை அவாய்ட் பண்ணும் போதும், பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் அவனின் மேல் நாட்டம் கொள்வதும், ஃபர்பியின் குறைபாடு, காரணமாய் அவரின் காதல் கனவு தகர்க்கப் பட்டு பிரிந்து விட்டு, மீண்டும் ஒரு கட்டத்தில ஃபர்பிக்காக கணவனை விட்டுப் பிரிந்து அவனுக்கு துணையாய் நிற்கும் காட்சிகளில் ஃபர்பிக்கும், இலியானாவுக்கு இடையே இருக்கும் காதல் ஒரு மெல்லிய பூத்தடவல் என்றால். கில்மில்லுக்கும், ஃபர்பிக்குமிடையே இருக்கும் காதல் ஒரு க்யூட் தாலாட்டு.

ரன்பீர் ஃபர்பியாகவே வாழ்ந்திருக்கிறார். கண்களில் தெரியும் துள்ளலும், கில்மில்லுக்காக தேடியலையும் போது தெரியும் சோகமும், துக்கமும், அப்பாவின் தொப்பை மேல் படுத்தபடி பரிதாபமாய் பார்க்கும் காட்சிகளில் எல்லாம் அட்ட்காசம். இவரால் பேச முடியாது என்பதை நாம் உணரவே முடியாத அளவிற்கான நடிப்பு. அதே போல் ப்ரியங்காவின் கேரக்டர். அருமை.. அருமை.. அவருக்கும் ரன்பீருக்கும் இடையே வரும் நட்பும், அதனால் வரும் நம்பிக்கையும், காதலும், அந்த காதலினால் வரும் பொறாமையினால் இலியானாவிடம் ஃபர்பியை விட்டுப் பிரிந்துப் போகுமிடமும், பின்பு மீண்டும் க்ளைமாக்ஸில் இலியானாவை பார்த்ததும் இவன் என்னவன் என்ற ஒரு தற்காப்பு உணர்ச்சியோடு, ஃப்ர்பியை மறைத்துக் கொண்டு நிற்கும் காட்சி என்று சின்னச் சின்னதாய் சொல்லிக் கொண்டே போகலாம். இலியானா இளைமையான காலங்களை விட கல்யாணம் ஆன பெங்காலிப் பெண்ணாய் வரும் போது இம்ப்ரசிவ். சூரப் சுக்லா, ஆஷிஷ் வித்யார்த்தி என்று வரும் நடிகர்கள் அத்துனைப் பேரும் தங்களது பங்களிப்பை அருமையாய் தந்திருக்கிறார்கள்.
படத்திற்கு மிகப்பெரிய பலமே ரவிவர்மனின் ஓவியம் போன்ற ஒளிப்பதிவு. எழுபதுகளின் டார்ஜிலிங்கையும், கலர்புல் பின்னணியையும் ஒரு விதமான மைல்ட் டோனோடு நம்மை அங்கேயே கூட்டிச் சென்றுவிடுகிறார். சில ஷாட்களின் காம்போஷிஷன்கள் அட்டகாசம். உதாரணத்திற்கு மாடியில் படுத்திருக்கும் ரன்பீரின் வழியாய் டாப் ஆங்கிளில் கீழே அவனின் அப்பா உடல்நலமில்லாமல் கீழே விழும் காட்சி போன்றவைகளும, போலீஸ், ரன்பீர் சேஸிங் காட்சிகளில் கூடவே துள்ளியோடும் வேகமும், காதல் காட்சிகளில் கேரக்டர்களோடு பயணிக்கும் அழ்கும், நம்மை அவர்களுடனேயே இருந்து ரசிக்கும் அளவிற்கு கொண்டு போய் விடுகிறது. அதே போல் பீரீதமின் இசையில் வரும் பாடல்களும் பின்னணியிசையும். அற்புதமான பின்னணியிசை என்று சொல்ல வேண்டும். ஃபர்பி சொல்ல நினைக்கும் அல்லது அக்காட்சியில் கன்வே செய்ய நினைத்த விஷயங்களை எல்லாம் இசையால் நிறைய இடங்களில் நிரப்பியிருக்கிறார்கள். பல இடங்களில் சாப்ளின் பாணி இசை பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது.

இயக்குனர் அனுராக் பாஸு. ஹாட் ஆர்டிஸ்டை வைத்துக் கொண்டு ஈஸியாய் ஒர் ரொமாண்டிக் படம் பண்ணாமல் மிக அழகான ஒரு கவிதையை கொடுத்திருக்கிறார். படம் முழுக்க நான்லீனியர் முறையில் கதை சொல்லப் படுகிறது. அது ஒரு சில நேரங்களில் சுவாரஸ்யமாய் இருந்தாலும் தேவையில்லையோ என்றே தோன்றுகிறது. இக்கதையை கொஞ்சம் நேராக சொல்லியிருந்தால் இன்னும் கொஞ்சம் ஃபர்பி, கில்மில்லுக்குமிடையே ஆன உறவின் நெருக்கம் நன்றாக நமக்குள் ஏறியிருக்கும் என்றே தோன்றுகிறது.   கொஞ்சம் மெனக்கெட்டு குறையாய் சொல்ல வேண்டுமென்றால் சற்றே இழுவையான முதல் பாதியும், நான் லீனயர் விஷயம் மட்டுமே. இவரைப் பற்றி பாராட்டி எழுத ஆரம்பித்தால் பல சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படுத்தியதாய் அமைந்துவிடக்கூடிய ஆபத்திருப்பதால் ப்ளீஸ்... படம் பார்த்து உற்சாகமாகுங்கள். நன்றி அனுராக் பாஸு. இது போன்ற ஒரு அருமையான படத்தை அளித்ததற்கு.
கேபிள் சங்கர்
டிஸ்கி: இந்தியில் மட்டும் இம்மாதிரியான புதிய முயற்சிகளுக்கு கை கொடுக்கும் யூடிவி ஏன் தமிழில் மட்டும் இத்துப்போன படங்களூக்கே ஆதரவு கரம் நீட்டுகிறார்கள் என்று புரியவேயில்லை.

Post a Comment

17 comments:

Unknown said...

Thanks sankarji for the review...I had the similar feeling when I watched this....

குரங்குபெடல் said...

"இந்தியில் மட்டும் இம்மாதிரியான புதிய முயற்சிகளுக்கு கை கொடுக்கும் யூடிவி ஏன் தமிழில் மட்டும் இத்துப்போன படங்களூக்கே ஆதரவு கரம் நீட்டுகிறார்கள் என்று புரியவேயில்லை. "


அண்ணே . . .

கலகலப்பை பத்தி தப்பா சொல்லாதீங்க அண்ணே . . .

கார்த்திக் சரவணன் said...

இந்தி தெரியாது... படம் பார்க்க முடியாது..

Annamalai Swamy said...

யு டிவி தமிழிலும் சில படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள். உதாரணம் தெய்வத்திருமகள், வழக்கு என்.

Cable சங்கர் said...

தெய்வத்திருமகள் கமர்ஷியலி ஃபெயிலியர். வழக்கு எண் படத்திலிருந்து கடைசி காலத்தில் அவர்கள் விலகி விட்டார்கள்

arul said...

thanks for posting the review

gajan said...

"தெய்வத்திருமகள் கமர்ஷியலி ஃபெயிலியர்"

enna annae solla vaareenga? commercial padam pannalaenna allathu nall padam pannalaenna?

@"இயலாமையை நம்மேல் திணித்து உணர்ச்சிவயப்பட்டு கண் கலங்க வைக்காமல் தியேட்டரை விட்டு அனுப்ப மாட்டார்கள். ஆனால் இப்படம் அதற்கு விதிவிலக்கு"

mozhilyum ippidi thaan irunthathaa gnabakam. illayenraal mannichchikkunga baasu

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யூடிவி ஏன் தமிழில் மட்டும் இத்துப்போன படங்களூக்கே ஆதரவு கரம் நீட்டுகிறார்கள் //

Kalakalappu?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

குரங்குபெடல் said...

"இந்தியில் மட்டும் இம்மாதிரியான புதிய முயற்சிகளுக்கு கை கொடுக்கும் யூடிவி ஏன் தமிழில் மட்டும் இத்துப்போன படங்களூக்கே ஆதரவு கரம் நீட்டுகிறார்கள் என்று புரியவேயில்லை. "


அண்ணே . . .

கலகலப்பை பத்தி தப்பா சொல்லாதீங்க அண்ணே //

:))))))))))

sathish said...

if your are gonna be multi faced, at least make one of them pretty...

kanavuthirutan said...

மிகச் சிறப்பான பதிவு...

Cable சங்கர் said...

மிஸ்டர்.சில்லி.பிடிக்காமத்தான் நெதம் படிக்க வர்ரீங்களாக்கும். பிடிக்கிற இடத்துக்கு வர்றவன் மனுஷன். பிடிக்காத இடத்துக்கு தெனம் வர்றவன்.. சரி.. விடுங்க.

Anonymous said...

cable,
pls have a look at the following link.
Even the trailer of this movie is a copy paste from english movies :)

http://tanqeed.com/forum/barfi-scenes-inspiredcopied-from-the-notebook-charlie-chaplin-and-other-movies/

Cable சங்கர் said...

seetheavatar இதை பார்க்கும் முன்னமே எனக்கு தெரியும். பட் அதையெல்லாம் விட.. அடிப்படை கதையும், மேக்கிங்கும்.. அட்டகாசம்.

Unknown said...

எனக்கும், மிகவும் பிடித்த நிறைவான படம். மூன்று பேரின் நடிப்பும் அற்புதம். ரன்பீர் கபூரின் தீவிர ரசிகனாயிட்டேன். நானும் ஒரு கட்டுரை எழுதலாம் என்றிருந்தேன். நீங்கள் சொல்லியதைத்தான் நானும் எழுத வேண்டியதாகிருக்கும். அதனால் அதை தவிர்க்கிறேன். உங்கள் விமர்சனம் எனக்கு முழு சம்மதம்.. மொழி புரியாவிட்டாலும் இந்தப்படத்தை பார்க்கலாம் என்பதையும் சொல்லிடுங்க.

Vijay said...

http://en.wikipedia.org/wiki/Barfi!

Controversy
Barfi was criticized by several viewers on social networking websites, such as Twitter, Facebookand YouTube for copying scenes from several world movies including Charlie Chaplin's movies. Some movies the scenes were allegedly copied from Singin' in the Rain, Kikujiro, Benny & Joon, Korean film Oasis, Lovers' Concerto, Chaplin's The Adventurer, City Lights, Mr Bean's Holiday, Jackie Chan's Project A, Buster Keaton's Cops, The Notebook, Tommy Boy, Mr. Nobody, Black Cat, White Cat, The Goonies and Fried Green Tomatoes. The makers of the film defended the copying as a form of inspiration. However, it was alleged that the makers of the movie made no attempts to credit the original sources for the scenes. They were also heavily criticized for reproducing the same scenes rather than taking "inspiration" for the theme. A few days after the release, several videos were uploaded on YouTube showing side by side comparisons allegedly showing the copying of scenes. Additionally, it was also revealed that the background score for the movie, composed by Pritam was borrowed from the highly acclaimed soundtrack of the French filmAmélie. [32]

Unknown said...

Annay mathavainga rasanaiya kuraichi pesadhinga, rasanai yenbadhu avaravar viruppam