பொதுவாகவே இந்திய ஹாரர் படங்களை அவ்வளவு விரும்பி பார்த்தவனில்லை. பல சமயங்களில் ஹாலிவுட், அல்லது கொரிய ஹாரர் படங்களை அப்படியே சுட்டு நம்மை இம்சை படுத்துவார்கள். அதனால் Raaz படத்தின் முந்தைய இரண்டு பகுதிகளை நான் பார்த்ததில்லை. என்னவோ தெரியவில்லை பிபாபாஷாவினால் இந்த படத்தை பார்கக் வேண்டுமென்று தோன்றியது. எண்ணம் தோன்றியது வேஸ்டாகவில்லை என்றே சொல்ல வேண்டும்.
சூப்பர் ஸ்டாரிணியாக வலம் வந்து கொண்டிருந்த பிபாஷாவின் திரை வாழ்வில் புதிதாய் வரும் இஷாவால் தோல்வி ஆரம்பிக்கிறது. நன்றாக இருக்கும் வரை கடவுளையும் ஜோசியரையும் நம்பும் பிபாஷா தோல்வியடைய ஆரம்பித்தவுடன் தவறான வழிகாட்டுதலால் தீய வழியை நாடுகிறார். அதாவது ப்ளாக் மேஜிக் என அழைக்கப்படும் பில்லி சூனிய மந்திர தந்திர வழிகளை மேற்கொள்ள ஆரம்பிக்கிறார். அதை செயல் படுத்த பிபாஷாவால் அறிமுகப்படுத்தபபட்டு, பிரபலமாய் இருக்கும் இயக்குனர் இம்ரானை வழிக்கு கொண்டு வர தன்னையே கொடுத்து, இஷா குடிக்கும், சாப்பிடும் விஷயங்களில் மந்திரித்த தண்ணீரை கலக்கச் சொல்கிறார். இம்ரானும் வேறு வழியில்லாமல் பாதி மனதுடன் அதை செய்ய, ஒரு கட்டத்தில் இஷாவின் கஷ்டங்களை பார்த்து அவள் மேல் பரிதாபம் கொள்ள, அது அவர்களிடையே காதலாய் மாறுகிறது. கெட்ட சக்திகளை வைத்து தன்னை உயர்த்திக் கொள்ளும் பிபாஷாவின் செயல்களினால் இஷாவிற்கு நடந்தது என்ன? அவளை இம்ரான் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.
படத்தின் பேக்போன் என்று சொல்ல வேண்டுமென்றால் அது பிபாஷாதான். தன் மார்கெட் போய்க் கொண்டிருப்பதை தாங்க முடியாமல் மன சஞ்சலம் அடையுமிடமாகட்டும், தனக்காக மந்தரித்த தண்ணீரை இஷாவுக்கு கொடுக்கச் சொல்ல, இம்ரானுடன் உறவு கொள்ளும் காட்சியாகட்டும், உட்சபட்சமாய் பாம்பும், தேளும் உடலுக்குள் நரம்பாய் ஓடும் கெட்ட ஆவியுடன் உறவு கொண்டு அந்த ஆவியையே தனக்குள் புகுத்திக் கொண்டு வெறியுடன் அலையுடமாகட்டும் பாராட்ட வேண்டிய நடிப்பு. இவரது கேரக்டர் சொதப்பியிருந்தால் படமும் சொதப்பியிருக்கும்.
இன்னொரு கதாநாயகியாய் இஷா. பிபாஷாவுக்கு எதிர் போல உடலமைப்பு. அறிமுகக் காட்சிகளில் பார்க்கும் போது இவளெல்லாம் பிபாஷாவுக்கு போட்டியா என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. ஆனால் போகப் போக, அவரது கேரக்டரின் மேல் ஏற்படும் பரிதாப உணர்ச்சி, அவரை பிடிக்க அரம்பித்துவிடுகிறது.
இம்ரான் வழக்கம் போல நடிக்காமல் இரண்டு ஹீரோயின்களுடனும் நெருக்கமாய் கிஸ்ஸடித்து, மேட்டர் செய்து சந்தோஷமாய் இருந்திருக்கிறார். பார்க்கிற நமக்குத்தான் காண்டாக இருக்கிறது. ம்ஹும். எல்லாத்துக்கும் கொடுத்து வச்சிருக்கணும்.
3டியில் ஓரிரு காட்சிகள் நம்மை பயமுறுத்தவும், பல காட்சிகள் ரசிக்க வைக்கவும் செய்கிறது. முக்கியமாய் எடுப்பான பிபாஷாவின் மார்பகங்களை 3டியில் பார்க்கும் போது..ஹி..ஹி.. ஒளிப்பதிவும், பின்னணியிசையும் படத்தின் விறுவிறுப்புக்கு பக்க பலமாய் இருந்திருக்கிறது. ஆனால் ஆங்காங்கே வரும் பாடல்கள் படத்தின் போக்கிற்கு தடையாய் அமைந்திருப்பதை தவிர்த்திருக்கலாம். இம்மாதிரியான கதைகளுக்கு பாடல்களே தேவையில்லை என்பது என் கருத்து. இஷா தனியாய் பாத்ரூமில் இருக்க, அங்கேயிருக்கும் வாஷ்பேசினிலிருந்து கொத்துக் கொத்தாய் கரப்பான்பூச்சிகள் பீய்ச்சி அடித்து, உடலெல்லாம் மேய, அசூயை தாங்க முடியாமல் எல்லா உடைகளை களைந்து விட்டு, நிர்வாணமாய் பத்திரிக்கையாளர்கள் நடுவில் இஷா நிற்கும் காட்சியில் சிஜி நன்றாக இருக்கிறது. நான் சொல்ல வந்தது கரப்பான்பூச்சிகளின் சிஜியை.
இயக்கியவர் விக்ரம் பட். வெறும் த்ரில், மற்றும் 3டி போன்ற டெக்னாலஜிகள் மட்டுமே இம்மாதிரி படங்களை வெற்றியடைய செய்வதில்லை. சுவாரஸ்யமான திரைக்கதை, நடிப்பு போன்றவைகள் தேவை என்பதை உணர்ந்து, கவர்ச்சி, நடிப்பு இரண்டுக்கும் தோதான பிபாஷாவை தெரிந்தெடுத்ததும், பிபாஷாவுக்கும், இஷாவுக்குமிடையே ஆன பழிவாங்கும் கோபத்தின் காரணம் இருவரும் ஸ்டெப் சிஸ்டர்ஸ் என்று வைத்ததும் சுவாரஸ்யம். பழிவாங்கும் எண்ணத்தின் உட்சபட்சமாய் அகோர ஆவியுடன் உடலுறவு கொள்ள தயாராவது, இஷாவின் ஆத்மாவை காப்பாற்ற அவருடன் கைகளை கட்டிக் கொண்டு, அந்த உலகிற்கு போய் சஞ்சரித்து போராடி, சண்டைப் போடுவது நம் பழைய இதிகாச கூடுவிட்டு கூடு தாவும் முறையை பயன்படுத்தி சொன்ன உத்தி எல்லாம் படத்தின் விறுவிறுப்புக்கு உத்திரவாதம் அளிக்கிறது. என்ன லாஜிக் என்ற வஸ்துவை மட்டும் தேடக்கூடாது. தேடினால் படம் சுவாரஸ்யமாய் இருக்காது.

Comments
:)
Billa 2 was also given good collection @ open for atleast 10 days it made 75+ cr but u told it is flop movie
is it hit and flop based on collection or .....?!!
thanks
பிபாஷாவுக்கும், இஷாவுக்குமிடையே ஆன பழிவாங்கும் கோபத்தின் காரணம் இருவரும் ஸ்டெப் சிஸ்டர்ஸ் என்று வைத்ததும் சுவாரஸ்யம்
//
கேபிள்ஜி, உங்க பிரச்சனையே இது தான் சார். படத்தில் உள்ள இம்மாதிரி சுவாரசியங்களை ஏன் வெளியில் சொல்கிறீர்கள். இது போலவே தோனி பட விமர்சனத்தில் படத்தின் நாயகி ஒரு விலை மாது என்று கூறினீர்கள்.
உங்களை போன்ற சிறந்த திரைப்பட விமர்சகர்கள் இம்மாதிரி தவறுகளை செய்யலாமா? தயவு செய்து சிறிது எச்சரிக்கையாக இருக்கலாமே.
http://www.funtamilvideos.com/