Thottal Thodarum

Sep 17, 2012

கொத்து பரோட்டா - 17/09/12

டீசல், பெட்ரோல், கேஸ் விலையேற்றம், கேஸ் கட்டுப்பாடு போன்றவைகளுக்கான காரணங்களை இன்றைய தினசரிகளில் இந்திய பெட்ரோலியத்துறை வரிசைப் படுத்தியிருக்கிறது.  அவர்கள் பக்க நியாயத்தை சொல்லிவிட்டு, இதற்கு மாற்றாக விலையேற்றத்தைப் பற்றி விமர்சிக்காமல், மாற்று ஐடியாக்களை கொடுத்தால் வரவேற்கிறார்களாம். நிச்சயம் இது ஒரு சவால்தான். அவர்களுடய சவாலை ஏற்று ஏன் நாம் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கக்கூடாது?. காந்திய மக்கள் இயக்கம் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பல போராட்டங்களை செய்துவருகிறது. அவர்கள் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார்கள். அரசுக்கு மதுக்கடைகளால் கிடைக்கும் வருமானத்தை மதுக்கடையில்லாமல் வருமானத்தை எப்படி கொண்டு வர முடியும் என்று மாற்று ஐடியாக்களை கொடுத்திருந்தார்கள். அதைப் போல மக்களிடமே அரசு கேட்டிருக்கிறது. நாம் கொடுக்க முயற்சிக்கலாமே?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@டீசல் விலை ஏற்றியது சரிதான் என்று சொல்லியிருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங். ஆனால் காங்கிரஸ் கட்சியோ விலையேற்றத்தில் மகிழ்ச்சியில்லை என்று சொல்லியிருக்கிறது. பிரதமர் காங்கிரஸுல இல்லையோ?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
டீசல் விலையேற்றம். அந்நிய முதலீடுக்கான அனுமதி என்று எல்லாவற்றிலுமே மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தன் போக்கிற்கு சட்டமாக்கும் மத்திய அரசுக்கு ஏன் இவ்வளவு எதிர்கட்சிகளும் வெறும் போராட்டம், அது இதுவென சீன் போடாமல் ஆட்சிக்கு கொடுத்திருக்கும் ஆதரவை வாபஸ் பெறச் செய்யக்கூடாது?  அப்படி ஆதரவை வாபஸ் செய்தால் மீண்டும் தேர்தலில் நிற்க வேண்டியிருக்கும். அதில் அவரவர்களின் கட்சி ஜெயிக்காமலும் போகலாம். அப்படி ஒரு வேளை தோற்றுப் போவோம் என்கிற பட்சத்தில் இன்னும் ஒரு வருடம் வரவிருந்த வருமானத்தை இழக்க விரும்பாமல் தான் எல்லா ஆதரவுக் கட்சியும் சும்மா சீன் போடுகிறதோ என்று தோன்றுகிறது. இவனுங்களை நம்பினா நம்மள நட்டாத்துல கூட இல்ல, நடு பாலைவனத்திலத்தான் விடுவானுங்க போலருக்கு.
@@@@@@@@@@@@@@@@@@
Innocense of Muslims என்கிற படத்தை எதிர்த்து உலகமெங்கும் முஸ்லிம்களின் போராட்டம் வலுப்பெற்றிருக்கிறது. இஸ்ரேலிலும், லிபியாவிலும் அமெரிக்க எம்பஸிக்கள் மீதான தாக்குதலுக்கான காரணம் இந்தப்படம் தான் என்று சொன்னார்கள். நேற்று முன் தினம் சென்னையில் அமெரிக்க எம்பஸியில் கலவரம் ஏற்பட்டது. அதற்கு அடுத்த நாள் மீண்டும் அமெரிக்க எம்பஸி நோக்கி பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். ஒரே ட்ராபிக் ஜாம். படத்தின் வீடியோக்களை தேடிய போது இப்படத்தின் கிளிப்பிங்க்சை பார்க்க நேர்ந்தது. அமெரிக்க படங்களை பொறுத்தவரை, மதங்களையோ, அரசியல்வாதிகளையோ வகை தொகையில்லாமல் கிண்டலடித்து படமெடுக்கவோ, அல்லது எழுதவோ யோசிக்காதவர்கள். ஆனால் இப்படம் அந்த வகையை சார்ந்ததாகவோ, ஏதோ ஓரிரு காட்சிகளில் மட்டுமே தவறான புரிதல் காரணமாகவோ எடுக்கப்பட்ட படமாய் தெரியவில்லை.. வேண்டுமென்றே முஸ்லிம்களையும், அவர்களின் தூதரான முஹம்மத்தை   படு கேவலமாய் சித்தரித்து அவர்கள் மீதான வெறுப்பை வெளிக்காட்ட எடுத்த படமாய் தெரிகிறது. அமெரிக்கர்களுக்கும், அமெரிக்க கிறிஸ்துவர்களுக்கு முஸ்லிம்கள் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் படமாகவே   உருவாக்கியிருக்கிறார்கள். இத்திரைப்படத்தை உடனடியாய் அமெரிக்க அரசு தடை விதிக்க வேண்டும். இப்படத்தை எதிர்த்து போராடும் சகோதரர்களுக்கு ஒர் வேண்டுகோள். போராடுங்கள் அமைதியாய், வன்முறையை கையில் எடுக்காமல். அப்படி வன்முறையை கையில் எடுக்கும் பட்சத்தில் உங்களது நடவடிக்கை எதிர்ப்பாய் புரியாமல் வன்முறையாளனாகவும்,  மத உணர்வாளர்களாகவுமே  பார்க்கப்பட்டு விடுவீர்கள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மெட்ரோ நாவல் என்ற புதிய மாத நாவல் ஒன்று வெளிவர ஆரம்பித்திருக்கிறது. வித்யாசமான கான்செப்டில் நாவல்களை வெளியிட இருக்கிறார்கள். அதாவது உலக சினிமாவில் பிரபலமான காதல் படங்களின்  திரைக்கதையை ஒற்றி புதியதாய் எழுதப்பட்ட காதல் நாவல்களை தொடர்ந்து வெளியிட இருக்கிறார்கள். எழுதியிருப்பவர் தி.குலசேகர்.  முதல் நாவலாய் லோலா+எபி= உயிர்க்காதல் என்ற தலைப்பில் பிரபல ரன் லோலா ரன் படத்தின் திரைக்கதையை ஒட்டி எழுதப்பட்ட நாவல். படத்தைப் போலவே நாவலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பறக்கிறது. நல்ல லேஅவுட்டில் 20 ரூபாய்க்கு நல்ல தரமான நாவலை அளித்திருக்கிறார்கள். இந்நூலை வெளியிட்டு விழாவில் வாழ்த்துரை வழங்க என்னை அழைத்திருந்தார்கள்  ஆழியின் வெளியீடாக வந்திருக்கிறது இப்புத்தகம்.நல்ல காதல் கதைகளை அவர்கள் வரவேற்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பேஸ்புக்கினால் காதல் - உல்லாசம் - கர்ப்பம்- போலீஸ் - கைது. இந்த வார்தைகளுக்கிடையே ஆன கதைகளை நீங்களே பில்லப் செய்து கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு இக்கதைகள் பழக்கமாகியிருக்கும். இக்கதை கொஞ்சம் பாஸ்ட். பேஸ்புக்கில் பழக ஆரம்பித்தார்களாம். ரெண்டாவது நாளே போன் நம்பர் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த வாரங்களில் போன் பேச்சிலேயே காதல் மலர்ந்திருக்கிறது. அடுத்தது சந்திப்பு. முதல் சந்திப்பிலேயே இருவரும் உல்லாசமாய் இருந்திருக்கிறார்கள். அடுத்து இரண்டு முறை உல்லாசம். கருக்கலைப்பு. மிரட்டல் காதலன் கைது. இப்பெண் ஏன் அவரை காதலிக்க ஆரம்பித்தாள் என்பதற்காக சொன்ன காரணம் தான் இதை எழுதத் தூண்டியது. இருவரும் ஒரே ஜாதி, மதம் என்பதால் தானாம். நேற்றைய விழாவில் ஆழி செந்தில்நாதன் இப்போதெல்லாம் ஜாதியைப் பற்றிக் கேட்டுவிட்டு தான் காதலிக்கவே ஆர்மபிக்கிறார்கள் என்று பேசியபோது ஒரு நண்பர் அது தவறான பதிவு, அதை இலக்கிய தரவுகளில் பதியக்கூடாது என்று சிறிது நேரம் வாதிட்டார். அவருக்கு இச்செய்தியை சமர்ப்பிக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
டாஸ்மாக் பார்காரர்களின் அட்டூழியம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இவர்களது கடைகளுக்கு பக்கத்தில் உள்ள எந்தக் கடையிலும், ப்ளாஸ்டிக் க்ளாஸுகளோ, அல்லது வாட்டர் பாக்கெட்டோ, விற்கக்கூடாது என்று ஒரு எழுதப்படாத சட்டமே இருக்கிறது. ஒரு வாட்டர் பாக்கெட் மூன்று ரூபாய்க்கும், க்ளாஸ் நான்கு ரூபாய்க்கும் விற்று இவர்கள் அடிக்கும் கொள்ளையை வெளியே யாரும் சீப்பாக வாங்கி விடக்கூடாது என்பதை தடுக்க இந்நடவடிக்கை. மீறி விற்றால் கடை தூக்கப்படுமாம். சில கடைகளில் பார் மூடிய பிறகு தான் இதையெல்லாம் விற்கிறார்கள். ஏன் என்று கேட்டால் லட்சக்கணக்குல காசு கொடுத்து பார் நடத்துறவங்களை எதுத்துக்க முடியுமா? என்று புலம்புகிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நேற்று ஜெயாடிவியில் “நீதானே என் பொன்வசந்தம்” பட பாடல் வெளியீட்டு விழாவை ஒளிபரப்பினார்கள். வந்திருந்த பல முன்னாள் இயக்குனர்கள் ராஜாவுடனான அனுபவத்தை சொன்னார்கள். எப்படி அவர்களுடய படங்களுக்கான ஹிட் பாடல்கள் அமைந்தது என்பதைப் பற்றி சொன்னார்கள். பாரதிராஜா  மட்டும் தனக்கும் ராஜாவுக்குமான உறவை மேலும் மேலும் எம்பஸைஸ் செய்து கொள்ளும் விதத்தில் அவனும் நானும் அப்படி அலைந்தோம் இப்படி அலைந்தோம், அவன் அப்புறம் வந்து கிளாசிக்கல் கத்துக்கிட்டான், வெஸ்டர்ன் கத்துக்கிட்டான் என்றெல்லாம் சொல்லிவிட்டு, அவனை பெரிய உயரத்துக்கு கொண்டு போய் வச்சிட்டே என்று கெளதமை பாராட்டினார். உன் படத்தில மண்வாசனையோட பாட்டு வந்தாத்தான் எனக்கு திருப்தி என்றார். அதற்கு கவுதம் “என் படத்தில அப்படி ஒரு பாட்டு இலலாவிட்டால் என்ன? உங்க மண்வாசனையிலேர்ந்து ஒரு பாட்ட பாடிருவோம்” என்று சொன்னது ஸ்மார்ட்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
உண்மையான நண்பர்களால் உன் பிரச்சனையை சரி செய்ய முடியாது. உன் ப்ரச்சனைகளை நீ தனியாக சந்திக்க விடாமல் வேண்டுமானால் பார்த்துக் கொள்வார்கள்

நாட்டின் நலனுக்கு டீசல், கேஸ் ப்ரச்சனைகளுக்கு எடுத்த முடிவுகள் வருத்தத்துடனே எடுக்கப்பட்டதாம். ங்கொய்யால இவனுங்க அடிச்ச பணமெல்லாம் நம்மளது

சமயங்களில் லூசுத்தனமாய் தெரிகிறது காதலுக்காக நாம் செய்யும் விஷயங்களும், காதல் நம்மை செய்யச் சொல்லும் விஷயங்களை நினைத்து.

வெற்றிக்காக தயாராவதை விட அதனை காதலித்தால் வெற்றி நிச்சயம்.

சமயங்களில் லூசுத்தனமாய் தெரிகிறது காதலுக்காக நாம் செய்யும் விஷயங்களும், காதல் நம்மை செய்யச் சொல்லும் விஷயங்களை நினைத்து.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
நேற்று பாரதிராஜாவின் பேச்சைக் கேட்டதிலிருந்து, முக்கியமாய் தன் படத்தில் இளையராஜாவின் இசையைப் பற்றி சொன்னதை நினைத்து அவர் ஞாபகமாகவே இருந்தது. அப்படி யோசித்துக் கொண்டிருந்த போது சட்டென ஞாபகம் வந்த படம் பாரதிராஜா நடித்து இயக்கிய  “கல்லுக்குள் ஈரம்’ படம். அவரது நடிப்பைத்தவிர, முழுக்க முழுக்க மாண்டேஜுகளால் காட்டப்பட்ட பாடல். நிறைய ஷாட்கள் திரும்பத்திரும்ப வந்தாலும், அன்றைய காலகட்டத்தில் இது ஒரு புதிய முறை. ஒரு காட்சியில் வெட்கப்படுவதை பாரதிராஜா வெண்ணிறாடை நிர்மலாவுக்கு சொல்லித்தர, அவர் நடித்துக் காட்ட, அது திருப்தியில்லாமல் பாரதிராஜா பார்க்க, அதை அருணா தனியாக செய்த் பார்க்கும் காட்சி க்யூட். பாடலில் வரும்  இளம் இளையராஜாவின் குரல் அதை விட க்யூட்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A girl realised that she had grown hair between her legs. She got worried and asked her mom about that hair. Her mom calmly said- "that part where hair has grown is called Monkey, be proud that your monkey has grown
hair" 
. . . . the girl smiled.  At dinner, she told her sister - "my monkey has grown hair" Her sister smiled and said - "that's nothing, mine is already eating bananas".
கேபிள் சங்கர்

Post a Comment

21 comments:

குரங்குபெடல் said...

"டாஸ்மாக் பார்காரர்களின் அட்டூழியம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இவர்களது கடைகளுக்கு பக்கத்தில் உள்ள எந்தக் கடையிலும், ப்ளாஸ்டிக் க்ளாஸுகளோ, அல்லது வாட்டர் பாக்கெட்டோ, விற்கக்கூடாது என்று ஒரு எழுதப்படாத சட்டமே இருக்கிறது. ஒரு வாட்டர் பாக்கெட் மூன்று ரூபாய்க்கும், க்ளாஸ் நான்கு ரூபாய்க்கும் விற்று இவர்கள் அடிக்கும் கொள்ளையை வெளியே யாரும் சீப்பாக வாங்கி விடக்கூடாது என்பதை தடுக்க இந்நடவடிக்கை. மீறி விற்றால் கடை தூக்கப்படுமாம். "

அண்ணே கேட்டால் கிடைக்கும் சார்பாக . . .


எதுனா . . .

Cable சங்கர் said...

அதுக்குத்தான் இங்க கேட்க ஆரம்பித்திருக்கிறேன் குரங்கு.

Cable சங்கர் said...

இதுக்கு முன்னாடி இன்னொரு முக்கியமான விஷயத்துக்கு ஐடியா கேட்டிருக்கேனே.. அதுக்கு ஏதாவது உருப்படியா செய்யத்தோணுதா.. என்ன செய்யறது கந்தனுக்கு கவனம் கவட்டையிலேன்னு சொல்றது சரிதான் போலருக்கு. குரங்கு.

குரங்குபெடல் said...

"Cable சங்கர் said...

இதுக்கு முன்னாடி இன்னொரு முக்கியமான விஷயத்துக்கு ஐடியா கேட்டிருக்கேனே.. அதுக்கு ஏதாவது உருப்படியா செய்யத்தோணுதா.. என்ன செய்யறது கந்தனுக்கு கவனம் கவட்டையிலேன்னு சொல்றது சரிதான் போலருக்கு. குரங்கு. "அண்ணே காலையிலேயே . . ஏன் இப்டி . . .

இந்த குரங்கு ஒரு ஐடியா சொல்லி

அதை மண்னுமோகன் . . கவர்மெண்டு . .

அண்ணே போங்கண்ணே .. .

காமெடி பண்ணிக்கிட்டு . . .

? said...

//முஸ்லிம்களையும், அவர்களின் தூதரான மொகமட்டையும்//

"மொகமட்டை"

:-)

நம்பள்கி said...

இந்தியா உலகத்தில் பெரிய ஜனநாயக நாடு. ஜனநாயக் நாட்டில் இதெல்லாம் சகஜம். பள்ளிப் படிப்புக்கு காசு கொடுத்து குழந்தைகளைப் படிக்க வைக்கும் முட்டாள் ஜனங்களுக்கு இது ஒரு சுண்டைகா!

நியாமனாதிற்கே போராடத மக்களுக்கு, இதைப் பத்தி ஏன் கவலை? இதற்க்கு ஏன் புலம்பல்?


[[டாஸ்மாக் பார்காரர்களின் அட்டூழியம் கொஞ்சம் நஞ்சம் அல்ல..... லட்சக்கணக்குல காசு கொடுத்து பார் நடத்துறவங்களை எதுத்துக்க முடியுமா? என்று புலம்புகிறார்கள்.]]

Philosophy Prabhakaran said...

ஏண்ணே... இந்த உல்லாசம், உல்லாசம்'ன்னு சொல்றாங்களே... அப்படின்னா என்னணே...???

ஆண்களோ, பெண்களோ இப்போதெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ மதம், சாதி, சம்பளம், குடும்ப சூழ்நிலை இன்னும் பல இத்யாதிகளை தெரிந்துக்கொண்டு தான் முடிவெடுக்கிறார்கள்... ரொம்ப வெவரமா இருக்காங்க... இது நான் அனுபவப்பூர்வமாக கண்டறிந்த உண்மை :)

rajamelaiyur said...

//பிரதமர் காங்கிரஸுல இல்லையோ?
//

அவர் பிரதமரே இல்லை .. ஒரு தலையாட்டி பொம்மை ...

rajamelaiyur said...

இன்று

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?

love you all_af said...

//அவர்களின் தூதரான மொகமட்டையும்// spell not is correct?
Muhammad/ முஹம்மத் / முஹம்மது.
also our suggest please remove the link for that Movie!

_http://en.wikipedia.org/wiki/Muhammad
_http://ta.wikipedia.org/wiki/முகம்மது_நபியின்_இறுதிப்_பேருரை
_http://ta.wikipedia.org/wiki/முஹம்மது

_Ashraf (one of the fans for your blogs).

love you all_af said...

//அவர்களின் தூதரான மொகமட்டையும்// spell not is correct?
Muhammad/ முஹம்மத் / முஹம்மது.
also our suggest please remove the link for that Movie!

_http://en.wikipedia.org/wiki/Muhammad
_http://ta.wikipedia.org/wiki/முகம்மது_நபியின்_இறுதிப்_பேருரை
_http://ta.wikipedia.org/wiki/முஹம்மது

_Ashraf (one of the fans for your blogs).

சிராஜ் said...

அண்ணே...

// போராடுங்கள் அமைதியாய், வன்முறையை கையில் எடுக்காமல். //

சரியாத்தான் சொல்லி இருக்கீங்க....இது சம்பந்தமா அண்னன் சுவனப்பிரியன் மற்றும் நண்பர் சிவா பிளாக்கில் சில கமெண்ட்ஸ் காப்பி பேஸ்ட் பன்ணி இருக்கேன்...

Mazeeh said...
This comment has been removed by the author.
Rasheed said...

//..மொகமட்டையும்..//..

தவறு. தயவு செய்து " முஹம்மது " (ஸல்) என்று திருத்தவும்.

அன்புடன்
ரஷீது

ஹையோ ஹையோ said...

//தவறு. தயவு செய்து " முஹம்மது " (ஸல்) என்று திருத்தவும்.////

அப்படியே இனிமேல் கேபிள் ஒவ்வொரு பதிவிலும் –சாந்தியும் சமாதானமும் உண்டாகுக-என்றே முடிக்க வேண்டுகிறேன். கேபிள் சங்கரே திருந்துக!

ஹையோ ஹையோ said...

எகிப்தில் இந்த லிங்கை தன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
http://www.thedailybeast.com/articles/2012/09/15/egypt-s-coptic-christians-worry-they-ll-be-targeted.html

அதனால் கேபிள் சார் இந்த லிங்க்கை எடுத்துவிடவும்…

Mazeeh said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

கேபிள்ஜி,


கேபிள்ஜி,

டாஸ்மாக் பத்தி முன்னர் நான் சொன்னத்துக்கு ,நீங்களும் ,மாயவரத்தானும், எங்கக்கிட்டே சரியான விலைக்கு விற்கிறாங்க சொன்னீங்க, இப்போ உங்க கிட்டேவும் கொள்ளை அடிச்சிட்டாங்களா? :-))

//இதுக்கு முன்னாடி இன்னொரு முக்கியமான விஷயத்துக்கு ஐடியா கேட்டிருக்கேனே.. அதுக்கு ஏதாவது உருப்படியா செய்யத்தோணுதா.. என்ன செய்யறது கந்தனுக்கு கவனம் கவட்டையிலேன்னு சொல்றது சரிதான் போலருக்கு. //

மாற்று எரிபொருள் பற்றி ஊரில் நிறைய பேரு சொல்லிட்டாங்க, அதெல்லாம் அரசுக்கு தெரியாம போனது ஆச்சரியமே.

மன்னுமோகனின் நட்பு நாடான அமெரிக்க அரசு எத்தனை முயற்சி செய்யுதுன்னு மன்னுக்கு தெரியாதா?

ஒரு பேச்சுக்கு வழி சொல்லுன்னு சொல்லி சமாளிச்சா... கேட்கிறாஙகள் இல்ல சொல்லுங்கன்னு சொல்றிங்களே :-))

நீங்க மற்றவர்கள் பதிவை படிச்சாலும் இப்படி சொல்லி இருக்க மாட்டீங்க, நிறைய பேரு தமிழிலும் எழுதி இருக்காங்க,

என்னால் முடிந்த சிலவற்றை தொடராக எழுதினேன் , இன்னும் முடிக்கவில்லை,எத்தனால் கலந்த பெட்ரோலின் முழு சாத்தியங்கள் பற்றி ஒருப்பதிவு பாதியில் இருக்கு விரைவில் வரும்.

இப்போ இந்த சுட்டிகளை நேரம் இருந்தா பாருங்க, பெட்ரோல்,டீசலுக்கு மாற்று சக்தி பற்றியவை.

மாற்று எரிபொருள்:

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: மாற்று எரிபொருள்-பயோ டீசல்(bio diesel)

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பயோடீசல்-2: புங்க எண்ணை(Pongamia pinnatta oil)

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: குப்பைக்கு குட்பை- மாற்று எரிபொருள் பயோமாஸ் எத்தனால்( cellulose ethanol)

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: மாற்று எரிபொருள்: GOBAR GAS PLANT CONSTRUCTION.

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பெட்ரோல் விலை ரகசியம்!

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: FALLING RUPEE:IMPACT ON INDIAN ECONOMY

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: ஏற்றிய பெட்ரோல் விலையை குறைக்குமா அரசு?

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: ஜம்பிங்க்,பம்பிங்க்,பெட்ரோல் பங்க்!

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பெட்ரோல் விலை குறைப்பெனும் நாடகம்!

Rasheed said...

"முஹம்மது" (ஸல்) என்று திருத்தியமைக்கு நன்றி.

அன்புடன்
ரஷீது.

kailash said...

How can govt. be made responsible for a movie made by an individual ? Its not released anywhere , it was nt certified . Some crack who had funding made a movie and he put trailer in youtube.

Shajahan.S. said...

திரைப்படங்களின் விமர்சனம் என்றாலே உங்களது விமர்சனத்தை தான் படித்து பின்பு அந்த திரைப்படத்தை பார்க்க முடிவு எடுக்கும் பலரில் நானும் ஒருவன். அந்த கேவலமான அமெரிக்க படத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை (.....வேண்டுமென்றே முஸ்லிம்களையும், அவர்களின் தூதரான முஹம்மத்தை படு கேவலமாய் சித்தரித்து அவர்கள் மீதான வெறுப்பை வெளிக்காட்ட எடுத்த படமாய் தெரிகிறது...)நம் இந்திய திரைத்துறையின் கருத்தாகவே எண்ணி நான் மதிக்கிறேன்.உங்களின் கருத்துக்கு நன்றி. பொருளாதார சரிவினாலும்,ஆப்கான், ஈராக்... என்று அனைத்து இடத்திலும் அமெரிக்கர்களின் உயிர்ப்பலிகள், இந்த நேரத்தில் அதிபர் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் அமெரிக்கா இது போல அரசியல் நாடகம் நடத்துவது புதிதல்ல....