Thottal Thodarum

Sep 13, 2012

Free Fall

மூன்று மணி இருக்கும் வெய்யில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. காலையிலிருந்து சரியான அலைச்சல். சமிபத்தில் படம் பிடித்ததை வெட்டி, ஒட்டும் வேலை ஓடிக் கொண்டிருந்தது. அவசரமாய் வேறொரு ஸ்கிரிப்டை என் லேப்டாப்பிலிருந்து மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று வீட்டிற்கு போய்க் கொண்டிருந்தேன். டிராபிக் கண் முழி பிதுங்கியது. ஒரு பெட்டிக் கடையில் வாட்டர் பாட்டில் வாங்கி மெதுவாய் குடிக்க ஆரம்பித்தேன். ரெண்டு வாய் அண்ணாந்து வேடிக்கைப் பார்த்தபடி குடித்துக் கொண்டிருந்த போது ஷீனமாய் ஒரு அலறலோடு, எதிரே இருந்த மூன்று மாடி ப்ளாட்டிலிருந்து ஒரு உருவம் கீழே வந்து கொண்டிருந்தது. படிகளிலிருந்து அல்ல அந்தரத்திலிருந்து.


ஒரு கணம் தொண்டைக்குள் போன தண்ணீர் எதுக்களித்து புரைக்கேறி என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் “தட்” என்ற பெரும் சத்தத்தோடு, அந்த உருவம் தரையில் மோதி சுமார் அரையடி தரையிலிருந்து எழும்பி விழ, ”அய்யோ.. யாரோ ஒருத்தர் மாடியிலேர்ந்து விழுந்துட்டாரு” என்று இரண்டு பேர் கத்த, என்னால் கத்த முடியவில்லை. அதிர்ச்சியோடு அந்த ப்ளாட்டிற்குள் ஓடினேன்.  தரையெல்லாம் ரத்தம் சிதறி தலை, முகம், வாயிலிருந்து குபுகுபுவென ரத்தம் வெளிவந்து கொண்டிருக்க, தூக்கலாம் என்று நினைத்து எத்தனித்த போது, வாயிலிருந்து ஒரு பெரும் மூச்சு வெளிவந்ததோடு அவன் இறந்து போனான்.  

சாவு ஒன்றும் எனக்கு புதிதல்ல, ஓடுகிற ரயிலின் முன் சடாரென பாய்ந்து சடுதியில் கூழாய்ப் போனவனை, பஸ்சின் பின் சக்கரம் காலில் ஏறி, வலியின் உச்சத்தில் திரும்பிக் கிடக்கும் காலை பார்த்தபடி அழுது கொண்டிருந்தவனை, ரத்தமும் சதையுமாய் பேசிக் கொண்டிருந்த தோழி ஒருத்தி அடுத்த நாள் உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் நெருப்பில் எரிந்து கருகிப் போனதை,  எப்படியும் செத்துருவார்.. சும்மா ஒரு பார்மாலிட்டிக்குத்தான் வெண்டிலேட்டர் வச்சிருக்கோம். என்று டாக்டர் சொல்லிவிட்டுப் போக, வெண்டிலேட்டர் வைக்கும் போது கடைசியாய் ஒரு நம்பிக்கையில்லா பார்வையோடு இறந்த  என் சித்தப்பாவின் சாவை எல்லாம் கூடவே இருந்து பார்த்தவன் தான் என்றாலும், கண் முன் ஒர் உயிர் தரையில் மோதி மண்டை உடைந்து உயிர் காற்றாய் பிரிந்து இறந்ததை பார்த்தது கொஞ்சம் படபடவெனத்தான் இருந்தது. 

அதற்குள் கூட்டம் கூடிவிட, யார் இவரு? உங்களுக்கு யாராவது தெரியுமா? என்றெல்லாம் ஆளாளுக்கு கேள்வி கேட்டபடி ப்ளாட்டிலிருந்தும், தெருவில் போனவர்கள் எல்லாம் உள்ளே வந்து பார்க்க ஆரம்பிக்க,  வண்டிகள் எல்லாம் நிறுத்தி என்னவென பார்த்துவிட்டு போக ஆரம்பித்திருந்தார்கள். ட்ராபிக் இன்னும் ப்ரச்சனையாகி, ஹாரன் சப்த வெள்ளமாய் இருந்தது. ப்ளாட் ஆட்கள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திணறிக் கொண்டிருக்க, 

”போலீஸுக்கு போன் பண்ணுங்கப்பா”.

‘மொதல்ல 108க்கு பண்ணுங்க”

“போலீஸ் கேஸுங்க.. அதெல்லாம் சட்டுனு முடிக்க மாட்டாங்க”
“உசிரு இருக்கப் போவுதுங்க” 

“அதெல்லாம் போயிருச்சு. விழுந்த தேசாலமே’ 

“அங்க என்னய்யா வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க? அதான் செத்துட்டான் இல்லை கிளம்புங்க வண்டிய எடுங்க, எங்களுக்கு வேலை இருக்குல்ல? வேணும்னா வண்டிய ஓரமா வச்சிட்டு வேடிக்க பாரு, இல்லாட்டி நீயும் அவன மாதிரி குதிச்சு சாவு எங்களை சாவடிக்காதே.” என்று ட்ராபிக்கில் மாட்டிக் கொண்ட ஒருவர் சத்தமாய் கத்திக் கொண்டிருந்தார்.

ஒருவர் போலீஸுக்கும், இன்னொருவர் ஆம்புலன்ஸுக்கும் போன் செய்ய, ஒரு என்பது வயது கிழவர் கையில் போனை வைத்து அதில் நம்பர் போடக்கூட முடியாத நிலையில் விழுந்தவனையும், போனையும் மாறி மாறிப் பார்த்தபடி,  “யார் இது? என்ன இப்படிப் பண்ணிட்டான்?” என்று பதட்டமாய் புலம்பியபடி பாடியின் பக்கத்தில் போய் மண்டியிட்டு குனிந்து, இறந்தவனின் முகத்தை மிக நெருக்கமாய் பாத்து தீடீரென கதறிக் கதறி அழ ஆரம்பித்தார். அவர் பேண்டெல்லாம் இறந்தவனின் ரத்தம் ஒட்டிக் கொண்டது. அவரை சில பேர் தூக்கி கீழே இருந்த சேரில் உட்கார வைக்க ‘உங்களுக்கு அவர் யாருன்னு தெரியுமா?” என்று கேட்டேன். 

‘யாரா இருந்தா என்னப்பா ஒரு உசுரு இப்படி பட்டுனு போயிருச்சே” என்றார்.
கேபிள் சங்கர்

Post a Comment

23 comments:

cheena (சீனா) said...

அன்பின் கேபிள் சங்கர் - இறுதியில் 80 வயது முதியவர் அழௌத்தது தான் மனதை உருக்குகிறது- யாரோ இறந்ததர்கு அழுகிறாரே - ...... நிகழ்வு விவரிக்கப் பட்ட விதம் நன்று - நல்வாழ்த்துகள் - ந்ட்புடன் சீனா

IlayaDhasan said...

உங்க ஆரம்ப கால குரும்படத்துல ஹிரோயின் சொல்லுவாளே 'I am not a virgin', அது மாதிரி சப்புன்னு இருக்கு முடிவு!

M a H i said...

Enna cable ji feel panna vaichuteengalae

M a H i said...

Enna cable ji feel panna vaichuteengalae

ராஜ் said...

Good One... :(

shortfilmindia.com said...

ilayadhasan நிஜ வாழ்க்கை நிகழ்வுகள் எப்போதும் திருப்பங்களுடனோ, பரபரப்புடனோ இருப்பதில்லை..

Suresh V Raghav said...

aen indha thalaipu.... free fall... Matrunga cable

ranjjan said...

definitely good writing ...have u added some fiction..?

Nondavan said...

மிகவும் வருந்துகிறேன்....மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு, கேபிள்

Unknown said...

உணர்வுபூர்வமான பதிவு !

Rekha raghavan said...

அந்த கிழவர் மனதில் நிற்கிறார்.


ரேகா ராகவன்.

Unknown said...


இறந்தவன் யாரோ? ஆனால் அனுதா
பம் பெற்றவர் கிழவர் தங்கள் எழுத்தின் வன்மையால்! அருமை!

Jayadev Das said...
This comment has been removed by the author.
”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு கதை! மனிதம் இறக்கவில்லை என்பதை அந்த கிழவர் நிருபித்து விட்டார்!

இன்று என் தளத்தில்
ஓல்டு ஜோக்ஸ் 2
http://thalirssb.blogspot.in/2012/09/2.html

Unknown said...

Nalla irukku boss :)
Traffic-la mathavanga peasuradha kamichadhu dhan konjam cinema thanama theriudhu..
solla mudiyadhu, ippadi peasinalum peasuvanga :)

அஜீம்பாஷா said...

‘யாரா இருந்தா என்னப்பா ஒரு உசுரு இப்படி பட்டுனு போயிருச்சே” என்றார்~

இப்போதும் இப்படிப்பட்ட இளகிய மனமுள்ளவர்கள் சென்னையில் வாழ்கிறார்களா?.

sathish said...

Please dont tell me, you have added some fiction to this.

you are practicing to write a story? why you do this kind of thing? whats the need of it? whats ur means of blogging?

you are doing it for earning?
a day a post!!! worthy?....

I believe u have a job other than blogging...

All you need is HITS.. thats why you removed the comments moderation... remember? u enabled it for sometime...

you like the ppl to fight over on something in ur post... getting famous of it

For that you will write any crap...just like tamil directors...

besides all, the only good thing which you are doing is, "Kettaal kidaikkum."

I am asking you to write good post...But I am not getting it...please help me.. you want me to post it in ur fb page?

You are a famous blogger for writing crap posts...and you are using other crap bloggers to make it popular...representing them too..

you are the mentor for other bloggers?

Your "kothu parottaa" is just a compose of a local street news (with ur very little saying on that matter), your opposite view on something, your scrappy tweets, very known repeated short film, some bullshit song(and ur comments too), and lastly an adult joke (that is 10000 years old), etc...

it looks like ppl having internet connection cant see any other site, but can only see ur blog.

even made a book of it... who is the publisher?

I think u can be a good politician...you r doing it right...try it really...start ur own kalagam or party... or join dmk....

when u r doing wrong thing, dont complain abt others which ur doing it all the time...

you say something... "panmugam"? or funface?

show ur onemugam...or twomugam...

take one good short film... or write one good story...

My advise to you is, do one thing or two thing what you are good at...

சார்வாகன் said...

அருமை சகோ,

மனிதன் சாகாமல் இருப்பதை அற்புதமாக எழுதியமைக்கு பாராட்டுகள்!!!

பெரியவருக்கு நம் வாழ்த்துக்கள்

நன்றி!!!

Cable சங்கர் said...

thanks milakai.. :))))))))))))))))

emkayindia1 said...
This comment has been removed by the author.
Raj said...

Ellam Sari! Antha mothal moonu line mattum puriyala!

Unknown said...

உருக்கமான பதிவு கேபிள் அன்னே.மனசை தொட்டது

D. Chandramouli said...

Very touching. Comforting to know that there are people like the old man in our society.