Thottal Thodarum

Sep 11, 2012

சாப்பாட்டுக்கடை -One MB


என்னடா சாப்பாட்டுக்கடைக்கு பெயர் ஒன் எம்.பியா? என்று யோசிக்கத்தான் செய்வீர்கள். அதே சந்தேகம் எனக்கு வந்து அவர்களிடம் கேட்டதற்கு இங்கு அளிக்கப்படும் உணவுகள் பெரும்பாலும் சேட் மற்றும் லைட் டிபன் வகைகள் மட்டுமே என்பதால் இந்த உணவகத்திற்கு இம்மாதிரியான பெயர் வைத்திருப்பதாய் சொன்னார்கள்.


மிக அருமையான ஆம்பியன்ஸோடு கொஞ்சம் அழகான செட் போல அமைந்திருக்கிறது இந்த உணவகம். பேல்பூரி, பானிப்பூரி, மசாலா பூரி, சென்னா, சமோசா, கட்லட்,கச்சோடி, சாண்ட்விச், பாவ்பாஜி,தைபூரி, மும்பை ஸ்பெஷல் வடா பாவ் என்று சாட் வகைகளில் உள்ள பல அயிட்டங்களோடு, கொஞ்சம் ஹெவியான அயிட்டம் என்றால் சோளாப்பூரியும் தருகிறார்கள். சில லைட் ஸ்வீட் அயிட்டங்களோடு லஸ்ஸி, ஜூஸ்,  குல்பியென லிஸ்டில் உள்ள அயிட்டம் எல்லாமே சாட் உணவு பிரியர்களின் டேஸ்ட்பட்டை தூண்டிவிடும் கேட்டலிஸ்டாய் தான் அமைந்திருக்கிறது.
 மும்பை வடா பாவையும், சோளாப்பூரியையும் ஆர்டர் செய்தேன். வழக்கமாய் வடாபாவ் எனும் அயிட்டம் பாவ்பாஜிக்கு உபயோகிக்கும் பன்னைப் போலவே வட்டமாய் இருக்கும் பன்னின் நடுவில உருளைக்கிழங்கு மசாலாவை கட்லெட் போல செய்து, பன்னின் இரண்டு பக்கமும் லேசாய் வெண்ணெயைத் தடவி சூடான வடாவை வைத்து தருவார்கள். ஒரு பைட் எடுத்தால் பன்னின் மென்மையும், நடுவே க்ரிஸ்பியான வடாவின் காரம், மற்றும் உருளை மசாலாவின் சுவையோடு சும்மா அதிரிப் போகும். ஆனால் இவர்களின் வடாபாவ் கொஞ்சம் வித்யாசமாய் இருக்கிறது. வெறும் பன்னை வைக்காமல் அதை க்ரில்லில் வாட்டி, அதன் நடுவில் மசாலா வடாவை வைத்துத் தருகிறார்கள். மேலுள்ள பன்னும் கிரிஸ்பியாய் வாட்டப்பட்டிருப்பதால் வடா பாவின் சுவை மேலும் மெருகேறுகிறது. இம்மாதிரியான புதிய முயற்சிகள் தான் உணவின் மீதான சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துகிறது.

சோளாபூரி எண்ணையில்லாமல் நன்றாக வடித்து கொடுத்தார்கள். சோளாப்பூரியில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும், உடன் கொடுத்த சென்னா அட்டகாசம். லேசான காரமும், கொஞ்சம் புளிப்புமாய் நன்றாக வெந்த சென்னாவுடன் பூரியை தோய்த்து சாப்பிடும் போது நாவில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. அதை உணர்ந்தால் தான் புரியும். லைட் ஈட் சாப்பிட விரும்புகிறவர்கள், கடலைப் போட விரும்பும் இளைஞர் பட்டாளங்கள், நண்பர்கள் குழுமி அரட்டை அடித்தபடி உண்ண ஏற்ற இடம். இந்த உணவகம் நடிகர் ஜீவாவின் மனைவியால் நடத்தப்படுகிறது.  உணவகம் அமைந்திருக்கும் இடம்
One mb
Habibullah road

Post a Comment

17 comments:

குறையொன்றுமில்லை. said...

நீங்க நல்ல சாப்பாட்டு ரசிகர்தான் மும்பை வாங்க

Cable சங்கர் said...

லஷ்மி மேடம் நிச்சயம் வர்றேன்.

THANdiya said...

they introduce westen food item in heart of tamilnadu(chennai) atleast they might used Tamil name what is the oneMB (all busineess tricks) to cover the fools/peoples

யுவகிருஷ்ணா said...

நெஜமாவே நீங்க நம்ம மோகன் குமாருக்கு பலமான போட்டிதான் :-)

Unknown said...

நெஜமாவே சாப்பிடனும் போலவே இருக்கின்றது கேபிள்!

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு உணவகம் அறிமுகம்! சுவைத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

இன்று என் தளத்தில்!
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html

maxo said...

Nice new joint it seems - time to try.

Heard Salem Managalam Military hotel and Vairamaligai - Chennai branches have been closed :-(

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .

Cable சங்கர் said...

yes maxo

Cable சங்கர் said...

nandri nandu :)

அஜீம்பாஷா said...

நல்லா சாப்பிட்டு சந்தோஷமா இருங்க.
(இப்படிக்கு. சவுதியில் மலையாளி மெஸ்ஸில் இன்று செவ்வாய் கிழமை நெய் சோறு- (ஹூம் அதுல நெய் எங்கே இருக்குன்னு தேடனும்)சாப்பிட்டு ஏமாந்தவன்.

உங்கள் படித்தவுடன் வயிறு நிறைந்தது போலிருந்தது. ஆவ் (ஏப்பம்)

அஜீம்பாஷா said...

நல்லா சாப்பிட்டு சந்தோஷமா இருங்க.
(இப்படிக்கு. சவுதியில் மலையாளி மெஸ்ஸில் இன்று செவ்வாய் கிழமை நெய் சோறு- (ஹூம் அதுல நெய் எங்கே இருக்குன்னு தேடனும்)சாப்பிட்டு ஏமாந்தவன்.

உங்கள் பதிவு படித்தவுடன் வயிறு நிறைந்தது போலிருந்தது. ஆவ் (ஏப்பம்)

Anonymous said...

i will give it a try,when i go around that place.

மாதேவி said...

இந்தியாவுக்கு வர வைத்துவிடுவீர்கள் போலும்.:))

தணல் said...

//டேஸ்ட்பட்டை தூண்டிவிடும் கேட்டலிஸ்டாய் தான் அமைந்திருக்கிறது//

உங்களது ஆங்கிலச் சொல்லாற்றல் புல்லரிக்க வைக்கிது ஜி.

உங்கள் சினிமா விமர்சனத்தில் வரும் ஆங்கில வார்த்தைகள் உறுத்தியதில்லை, சில டெக்னிகல் வார்த்தைகளை பயன்படுத்தும் விதத்தில் அப்படியே எழுதுவது தான் உங்களுக்கும் எளிதாக இருக்கும். ஆனால் இது போன்ற போலியான அதுவும் தவறான ஆங்கிலப் பிரயோகம் துருத்திக் கொண்டு நிற்கிறது.

சார்வாகன் said...

வண்க்கம் சகோ
/வெறும் பன்னை வைக்காமல் அதை க்ரில்லில் வாட்டி, அதன் நடுவில் மசாலா வடாவை வைத்துத் தருகிறார்கள். மேலுள்ள பன்னும் கிரிஸ்பியாய் வாட்டப்பட்டிருப்பதால் வடா பாவின் சுவை மேலும் மெருகேறுகிறது. இம்மாதிரியான புதிய முயற்சிகள் தான் உணவின் மீதான சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துகிறது.//

சாப்பிட்டது போல் ஒரு உணர்வு!!!

வடாபாவ் இரசிகர் மன்றத்தின் சார்பில் வடாபாவின் சுவை கூட்டும் சமையல் பரிசோதனையின் ஆய்வு முடிவை பகிந்ததற்கு வாழ்த்துகள்.

இது போல் புதிய முயற்சிகள் தொடர‌வும்,அதை நீங்கள் கண்டு எங்களுக்கு சொல்வதும் நன்று.நன்றி!!!!!!!

shan said...

Is this one is owned by Actor Jiiva?????