Thottal Thodarum

Sep 20, 2012

சாப்பாட்டுக்கடை - Siddique Kabab Centre

Kebab  என்று சொல்லப்படும் உணவு வகைகள் பெரும்பாலும் வட இந்தியாவில் புகழ் பெற்ற ஒன்றாகும். ஆனால் இதன் ஆர்ஜின் என்று பார்த்தால் அது அரேபிய, துருக்கிய மண்ணிலிருந்து என்று வரலாறு சொல்கிறது. மாமிச வகைகளை எண்ணையில் போட்டு பொரிக்காமல் மாமிசங்களின் மேல் மசாலாவை போட்டுப் பிரட்டி, அதை தணலில் வாட்டி காரம், மணம் குணத்தோடு, ரொட்டி போன்ற அயிட்டங்களை வைத்துக் கொண்டு மாமிசத்தை மெயின் டிஷ்ஷாக வைத்துக் கொண்டு சாப்பிடுவது ஒரு கலாச்சாரம். 


சென்னையில் பார்பக்யூ நேஷன் என்றொரு உணவகத்தில் வெஜிட்டேரியன், மற்றும் நான் வெஜிட்டேரியன் அயிட்டங்களை நமது டேபிளிலேயே குமுட்டி அடுப்பு வைத்து நாமே வாட்டிச் சாப்பிடும் முறை இருக்கிறது. ஆனால் கபாப்களின் சுவையே நல்ல இளசான மாமிசமும், அதன் மேல் பூசப்படுகிற மசாலாவும்தான். மசாலாவில் மாமிசத்தை நன்றாக பிரட்டி ஊற்ப் போட்டு, மசாலா நன்றாக உள் இறங்கியிருக்கும் நிலையில் அதை தணலிலோ, அல்லது தந்தூரி அடுப்பிலோ, கிரில்லிலோ வாட்டி கூட ஒரு ருமாலி ரொட்டியை வைத்து சாப்பிட்டால் அட..அட..அட.. தேவாமிர்தம்தான். டிவைனின் தமிழ் பதம்.
கபாப்களுக்கு ஹைதராபாத்திலும், பெங்களூரிலும் புகழ் பெற்ற சித்திக் கபாப் செண்டர் சென்னையில் தன் கிளையை ஆரம்பித்திருக்கிறது. சென்னையில் ஸ்பர்டாங்க் ரோடில்  அமைந்திருக்கிறது இவர்களது புதிய கிளை. நான் சென்றிருந்த நேரம் நல்ல மழை. கிட்டத்தட்ட எல்லா அயிட்டங்களும் காலியாகியிருந்த நேரத்தில், தந்தூரி, மற்றும் க்ரில் சிக்கன், ரொட்டி இவை மட்டுமே இருப்பதாக சொன்னார்கள். மற்ற அயிட்டங்கள் எல்லாம் காலியாகிவிட்டனவாம். சரியென ஒரு தந்தூரி சிக்கனையும், இரண்டு ருமாலி ரோட்டியையும் ஆர்டர் செய்தோம். கண் முன்னே தந்தூரி அடுப்பில் முழுதாக மசாலாவில் ஊற வைக்கப்பட்ட கோழியை வாட்டிக் கொடுத்தார்கள் அதற்குள் ரோட்டியும் ரெடியாக. மெல்லியதான, இளம் சூட்டோடு வந்த ரோட்டியில் ஒரு பாகத்தை பிய்த்து, அதன் நடுவில் ஒரு சின்ன பீஸ் தந்தூரி சிக்கனை வைத்து சாப்பிட்டுப்பாருங்க அப்புறம் சொல்வீங்க.. நான் அடிக்கடி சொல்வதை. விலையும் ஓரளவுக்கு சீப்பாகவே இருக்கிறது. தந்தூரி முழுசு 180 ரூபாய்க்கும், ரோட்டி 5 ரூபாய் தான். மற்ற அயிட்டங்களை வேறொரு சுவைத்து பார்க்க வேண்டும்.
கேபிள் சங்கர்

Post a Comment

13 comments:

குரங்குபெடல் said...

"அட..அட..அட.. தேவாமிர்தம்தான். டிவைனின் தமிழ் பதம். "அண்ணே கலக்கிட்டிங்க . . .

தமிழ் காமெடி உலகம் said...

எப்போதுமே தமிழ் டிவனின் சுவையை வேறு எதாலும் ஈடு கட்டவே முடியாது....மிக அருமை...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

arul said...

cable anna neenga thaniya hotels patri oru book podalame

Easy (EZ) Editorial Calendar said...

சாப்பாட்டுக்கடை மிகவும் அருமை.பகிர்வுக்கு நன்றி...
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

காவேரிகணேஷ் said...

anna,

land mark at spurtek tank pl?

rajamelaiyur said...

படிச்ச உடன் சாப்பிட தோணுது ....

rajamelaiyur said...

இன்று
விஜய் + அஜித் +தனுஷ் +எம்ஜியார் =???? ( சினிமா .. சினிமா )

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

நாக்கு ஊறுது

மாதேவி said...

ஆகா...

Dino LA said...

அருமை

ராஜன் said...

YES. AS PER ARUL COMMENT U CAN PUBLISH A SEPERATE BOOK FOR FOOD LOVERS. ( WITH HOTEL ADDRESS+ SPECIAL DISH PHOTOS) IT WILL WORK SURE FOR FOOD LOVERS .

Nat Sriram said...

விலை உண்மையில் அநியாயத்துக்கு கம்மியா இருக்கு..(இதை சொன்னா திட்டுவாங்க..)

Anbazhagan Ramalingam said...

oru padathula vadivel kabab iruka nu keparu. adhu yepdi irukum nu romba naala manda kudaichal. thaks mr. cable