Thottal Thodarum

Sep 5, 2012

Run Baby Run

 தட்டத்தின் மறையத்து, 24 ஃபீமேல் கோட்டயம் போன்ற படங்கள் கொடுத்த நம்பிக்கையில் மீண்டும் தைரியமாய் மோகன்லால் படத்தை பார்க்க போய்விட்டேன். முன் சொன்ன படங்கள் எல்லாம் நவ கேரள இளைஞர்களின் படங்கள். ஆனால் இந்தப் படமோ, பழைய ஜோஷி, ரொம்ப பழைய மோகன்லால், ஆர்.டி.ராஜசேகர் என்று பழகிய டீம். ரிஸ்க் எடுப்பதுதான் நமக்கு ரஸ்க் சாப்பிடுவது போலத்தானே என்ற தைரியத்தில் பார்க்கப் போனவனை அழுந்தப் பிடித்து உட்கார வைத்துவிட்டது இந்த ரன் பேபி ரன்.


வேணு (மோகன்லால்) ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் கேமராமேன். மீடியாவில் இவனுக்கென்று ஒரு தனியிடம் உண்டு.  ரேணு (அமலா பால்) பாரத் விஷன் எனும் சேனலின் எக்ஸிக்யூடிவ் எடிட்டர். எக்ஸ்க்ளூசிவ் செய்திகளுக்காக பரபரப்பவள். புத்திசாலி, தைரியசாலி. வேணுவின் நண்பனான பிஜு மேனன்  சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலையில் ஒரு நியூஸ் டிவி சேனலை நடத்திக் கொண்டிருக்கிறவர். வேணுவுக்கும், ரேணுவுக்கும் ஒரு ப்ளாஷ்பேக் உண்டு. அதில் அவர்கள் காதலர்கள். ஆனால் இப்போது எதிரிகள். இவர்கள் காதலர்களாய் இருந்த காலத்தில் செய்த ஒரு ப்ளாஷ் நியூஸ் கவரேஜால் பாதிக்கப்பட்ட அமைச்சர் மீண்டும் ஒரு ப்ளாஷ் நியூஸ் ஸ்கூப் கொடுத்து இவர்களை ப்ரச்சனையில் மாட்ட வைக்கிறார். எதிரும் புதிருமாய் இருக்கும் வேணுவும், ரேணுவும் சேர்ந்து எப்படி இந்த ப்ரச்சனையிலிருந்து விடுபடுகிறார்கள் என்பதுதான் கதை.
மோகன்லாலை மீண்டும் ஒரு துறுதுறுப்பான பழைய துள்ளலும், எகத்தாளத்தோடும், நறுக்கு தெரித்தார் போன்ற வசனங்களோடும் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது. முகத்தில் வயசான களை பளிச்சென்று தெரிந்தாலும், அமலாபாலுடனான காதல் காட்சிகளில் கண்களில் தெரியும் குறும்பையும், காதலையும் பார்க்கும் போது தான் ஒரு அபாரமான நடிகன் என்பதை மீண்டும் மீண்டும் நிறுபிக்கிறார். 

அமலா பால் துறுதுறுப்பான, பரபரப்பான டிவி நியூஸ் எடிட்டர். அதற்குரிய அத்துனை லட்சணங்களும் கொண்ட ஒரு பெண்ணாய் வளைய வருகிறார். காதல் காட்சிகளில் அநியாயமாய் ரொமான்ஸ் செய்கிறார். மோகன்லாலுக்கும் அவருக்குமான டக் ஆப்  வார் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். என்ன நெருக்கமான காட்சிகளில் ஃபோர் க்ரவுண்டில் நெஞ்சில் பந்தை வைத்து எடுப்பாக காட்டியிருப்பதை தவிர்த்திருக்கலாம். தியேட்டரில் சிரிக்கிறார்கள்.
இன்னொரு இண்ட்ரஸிட்ங்கான கேரக்டர் பிஜு மேனன். நியூஸ் சேனலுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல், அதற்காக இல்லாத தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்து, அதற்கு பாரத் விஷன் பெயரையும், வேணுவின் குரலையும் வைத்து சமாளித்துக் கொண்டிருக்கும் கேரக்டர். சுவாரஸ்யம். 

ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவாம். லெப்ட் ஹாண்டில் செய்திருப்பார் போலிருக்கிறது. நத்திங் ஸ்பெஷல். இசை ரதீஷ் வேகா. பின்னணியிசை எல்லாம் படு சுமார். ஆனால் மோகன்லாலின் குரலில் வரும் “ஆட்டுமணல்” பாடல் மட்டும் சூப்பர் ஹிட். அவரின் குரலில் இருக்கும் குழந்தைத்தனம் க்யூட். 
எழுதியவர் சஷி. இயக்கியவர் ஜோஷி. இன்றைய காலகட்டத்தில் டிவி சேனல்களில் டி.ஆர்பிக்காக நடக்கும் பல கூத்துக்களை நமக்கு ஏற்கனவே பரிச்சயமான  க்ளிஷேவான காட்சிகளோடு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் என்னதான் க்ளீஷேவானானலும், படம் பார்க்கும் நமக்கு கொடுக்க வேண்டிய த்ரில்லை சரியாக கடத்தியிருப்பதில் ஜெயித்திருக்கிறார். டிவி சேனல்காரர்கள் பிரபலங்களை மிரட்டி பணம் பறிப்பது, நியூஸுக்காக எடுக்கப்படும் பிரயத்தனங்கள். போட்டிகள். அதற்குள் உண்டாகும் குழப்பங்கள் எல்லாம் சுவாரஸ்யம் தான். லாஜிக்கலாய் சில பல இடங்களில் கேள்வி கேட்க தோன்றினாலும், சுவாரஸ்யம் குறையாத திரைக்கதை, மோகன்லால், ஆங்காங்கே க்யூட்டாக தெரியும் அமலா பால் என்று கலந்து கட்டி ஒரு டீசெண்ட் த்ரில்லராய் அமைந்திருக்கிறது. என்ன க்ளைமாக்ஸுக்கு மட்டும்  இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம் படு பழசு.
கேபிள் சங்கர்

Post a Comment

6 comments:

செய்தாலி said...

தட்டத்தின் மறையத்து, 24 ஃபீமேல் கோட்டயம்இரண்டும் சமீபத்தில் வந்த நல்ல படங்கள்
அதன் வரிசையில் இதையும் கேள்வி பட்டேன்
உங்கள் திரை விமர்சனம் படத்தை காண ஆவலை தூண்டுகிறது சார்

ஜோஷி சார் நல்ல படங்கள் கொடுத்து ரெம்ப நாள் ஆகிவிட்டது
இதை கண்டீப்பா பார்க்கணும்

யுவகிருஷ்ணா said...

ரிஸ்க் எடுத்து பார்க்கலாம் என்கிறீர்களா தோழர்? ஈவ்னிங் போகலாம்னு ஒரு ப்ளான்...

Ravikumar Tirupur said...

பார்த்துடவேண்டியதுதான்

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

அமலா பால் இருந்தாப் பாத்துட வேண்டியதுதான் .. ப்ரூக் ஃபீல்ட்ஸ் ல என்ன ஷோ டைம் நு பாக்கணும்

saravanan selvam said...

sir, pandhai vaithu edupaga katti irukanga nnu sonneengala...adhu ennadhu

pootham said...

Hi brother, yesterday I watched the movie "Melvilasam" malayalam movie. kindly write your comment on this movie http://en.wikipedia.org/wiki/Melvilasom.