Thottal Thodarum

Sep 14, 2012

Life Is Beautiful

சேகர் கம்மூலாவின் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது முதல் படமான டாலர் ட்ரீம்ஸில் ஆரம்பித்து, ஆனந்த், கோதாவரி, ஹாப்பிடேஸ், லீடர் என்று வரிசைக்கட்டி எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். இவரது படங்கள் எல்லாம் மிக மெல்லிதான நகைச்சுவையுடன், பெரும்பாலும் லைட்டான உணர்வுகளூடே பயணிக்கும் கதைகளாகத்தானிருக்கும். அதில் கொஞ்சம் விலகியது லீடர் திரைப்படம். இவரது ஹாப்பி டேஸை இதுவரை 60க்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன். ஆனால் அதே படத்தை வேறு ஒரு மொந்தையில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை.
அமலா கணவனை இழந்தவர். அவருடய மகன் சீனு, இரண்டு மகள்களை ஹைதராபாத்தில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு அனுப்பி அங்கேயே படிக்க சொல்கிறார். மூவரில் சீனு இன்ஜினியரிங் பைனல், அடுத்த சத்யா டாக்டருக்கு படிக்கவிருப்பவள், கடைக்குட்டி சின்னி. இவர்கள் மூவரும் ஹைதையில் செட்டிலாகிறார்கள்.  இவர்கள் இருக்கும் காலனிக்கும் பக்கத்தில் இருக்கும் பணக்கார காலனிக்கும் எப்போதும் தகராறு. காலனியில் சீனுவின்  முறைப்பெண் பத்மா இருக்க, இருவருக்கும் காதல். சீனு வரும் அதே நாளில் புதியதாய் குடிவரும் லஷ்மி எனும் பெண்ணுக்கும் தெலுங்கான  நாகராஜுக்கும் காதல். கொஞ்சம் இண்டெலெக்‌ஷுவலான பையனான அபி தன்னை விட வயது அதிகமான பெண்ணான சிரேயாவுடனான  காதல் இவர்களின் காதல் எல்லாம் என்னவாயிற்று? அமலா ஏன் இவர்களை ஹைதைக்கு படிக்க அனுப்பினார்? என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
ஆஸ்யூஷுவல் வாய்ஸோவரில் கதை ஆரம்பிக்கிறது. கொஞ்சம் Feminine ஆனா சீனு, க்யூட்டான ஹீரோயின். அதிபுத்திசாலி அபி. படிக்காத ஆனால் மனதில் தங்கமான தெலுங்கானா டயலாக்டில் பேசும் நாகராஜ் என்று டெம்ப்ளேட்டான கேரக்டர்கள்தான் அதை வெளிப்படுத்தும் விதத்தில் சுவாரஸ்யமாய் தந்திருக்கிறார்கள். முக்கியமாய் நாகராஜ், வரலஷ்மி காதல். ஸ்ரேயாசரண், அஞ்சலி ஜாவேரி, மற்றும் ஓரிரு நடிகர்களைத் தவிர எல்லோருமே புதுமுகங்கள். அனைவரும் சிறந்த நடிப்பை கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். ஹீரோ சீனுவை விட, அபி, நாகராஜ், கேரக்டரில் வரும் பையன்கள் நன்றாக செய்திருக்கிறார்கள். பெண்களில் பத்மா, வரலஷ்மி இருவரும் சிறப்பு. அமலா வெகு நாட்களுக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு சில நிமிடங்களும், க்ளைமாக்ஸில் ஒரிரு நிமிடங்கள் மட்டுமே வருகிறார். சொல்லிக் கொள்ளும்படியாக ஏதுமில்லை. அவர் மீண்டும் நடித்திருக்கிறார் என்பதைத் தவிர. ஸ்ரேயா வழக்கம் போல ஸ்மார்ட் அண்ட் க்யூட். அஞ்சலி ஜாவேரி வரும் காட்சிகள் சுவாரஸ்யமாய் இருந்தாலும் அவரது கேரக்டர் ஸ்கெட்சியாய் இருப்பதாய் ஒட்டவில்லை.
மிக்கி ஜே.மேயரின் இசையில் வழக்கம் போல் தனிப்பாடலாய் இல்லாமல் மாண்டேஜுகளில் வருவதால் மென்மையான இசை வருடுகிறது. பின்னணியிசையில் பெரும்பாலான நேரங்களில் ச..ரி..க..ம. ப..த..நி.ச.. சா..நீ.த..ப.. ம.. க..ரி..ச என்றே விதவிதமான ஒலிகளில் வாசிப்பதை தவிர்த்திருக்கலாம்.  விஜய்யின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். கதையில் பெரும்பாலும் மழையும் ஒரு கேரக்டராய் வலம் வருவதால் அந்த மூட் சரியாய் நம்முடன் பயணிக்கும் படியாய் செய்திருக்கிறார். அதே போல் மாண்டேஜ் காட்சிகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். தோட்டா தரணியின் காலனி செட் அழகு.
எழுதி இயக்கியவர் சேகர் கம்மூலா. வழக்கமாய் சின்னச் சின்ன உணர்வுகளின் வெளிப்பாடுகளை அதுவும் இளைஞர்களின் மன ஓட்டங்களை மிக அழகாய் வெளிப்படுத்தும் இயக்குனர்களில் ஒருவர். அதை மீண்டும் நாகராஜ், லஷ்மி இடையே ஆன காட்சிகளில் அழகாய்  வெளிப்படுத்தியுள்ளார். அபி, ஸ்ரேயா சரண் சம்பந்தப்பட்ட விமான காட்சியில் அவ்வளவு களேபரத்திலும் முத்தமிடும் இடம்.  ரெண்டு காலனிக்குமிடையே ஆன ப்ரச்சனைகளுக்கு நடுவே பணக்கார வீட்டு பெண் சீனுவின் மாமா பையன் லவ்வி கல்யாணம் செய்து கொண்டு விடும் இடம். தன் தங்கை அவளுடய பாய் ப்ரெண்டுக்காக தன்னை புறக்கணிக்கிறாள் எனும் போது சீனு அவஸ்தை படும் காட்சி. பாடல்களில் வரும் மாண்டேஜ் சீன்கள், பளிச், பளிச்சென வரும் வசனங்கள், என ஆங்காங்கே தன் முத்திரையை பதித்திருந்தாலும் முதல் பாதியில் எப்போது இடைவேளை வரும் என்று  நெளியும் அளவிற்கு மகா லெந்த். சரி இரண்டாவது பாதியில் சரி செய்துவிடுவார் என்று நினைத்தால் அது மிக ஸ்லோவாக செல்கிறது. எடுத்துக் கொண்ட விஷயங்களை எப்படி ஆரம்பித்தாரோ அதே ஃபேஸில் முடிக்க முடியாமல் தடுமாறியிருக்கிறார்.  பல காட்சிகள் ஹாப்பி டேஸில் பார்த்த காட்சிகளே இருப்பதால் கொஞ்சம் அலுப்பூட்டத்தான் செய்கிறது. பக்கத்து நிலத்தில் உள்ள மரத்தை வைத்து கட்டடம் கட்ட சட்டப்படி தடை வாங்கும் மாமா. அதை உடைக்க, வில்லன்கள் அம்மரத்தை ஆசிட் ஊற்றி சாகடிப்பது எதற்கு? அந்த கதை என்னவானது? இப்படி சில கதைகள் லூப்பில் விட்டிருக்கிறார். எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க போனால் ஒரு முறை பார்க்கலாம். என்னைப் போன்ற கம்மூலாவின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
கேபிள் சங்கர்

Post a Comment

9 comments:

குரங்குபெடல் said...

ஆஸ்யூஷுவல் வாய்ஸோவரில் கதை ஆரம்பிக்கிறது.

கொஞ்சம் Feminine ஆனா சீனு, க்யூட்டான ஹீரோயின்."தெலுங்கு வார்த்தைகளும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம் . . .

Cable சங்கர் said...

உங்களுக்கு தெரியாதுல்ல.. குரங்கு

குரங்குபெடல் said...

Cable சங்கர் said...

உங்களுக்கு தெரியாதுல்ல.. குரங்கு


என்ன அண்ணே . .

இது மட்டும் தெரிஞ்சிடுச்சா என்ன . . ?

Anonymous said...

இந்த மாதத்தில் நீங்கள் எழுதியதிலேயே ஆகச்சிறந்த விமர்சனம். புல்லரிக்க வைத்து விட்டீர்கள். விமர்சனங்களும் ஒட்டுகளும் வந்து குவியப் போகின்றன.

பட்டிகாட்டான் Jey said...

அண்ணா மீரு சினிமாலக்கி ச்சாலபாக விமர்சனம் ராஸ்துன்னாரு.

இக்கட விமர்சன்ம் ச்சேசின ஈசினிமானி("நான் ஈ" படம் காது), தமிழுல டைரக்ட் ச்சேசி சாலஇக்குவக டப்பு சம்பாரிச்சாலனி மீக்கு கோரிக்க பெட்டுத்துனானு.

நமஸ்காரம்.

ஈ கமென்ட் எவரிகன்னா அர்த்தங்காலதன்ட்டே மீரே தமிழுல இக்கட டப்பிங் சேசி செப்பேண்டி பிலீஸ்.

நமஸ்காரம். :-)))

பட்டிகாட்டான் Jey said...

பதிவரானதுக்கு அப்புறம் உங்களுக்கு நான் போட்ட முதல் கமெண்ட் அண்ணே... அதுவும் தெலுங்குல. பாத்து செய்ங்க.

பட்டிகாட்டான் Jey said...

:-)

ஃபேமஸ் பாவா said...

இன்னா நைனா. இன்னும் டபாச்சிக்கின்னு தான் இருக்க போல . சொம்மா சுத்தி சுத்தி குத்திக்கினு, உச்சியில குந்திக்கினு இருக்கியேப்பா .. இத்த பண்றத்துக்கு நம்மாண்ட பீடாக்கடையில் சேர்ந்திக்கின்னா டெய்லி பேட்டா, மூணு வேளை லெக் பீஸ் பிரியாணி போடுறேன்ப்பா .. வயசானாக் காலத்தில இப்புடி பிகரு படத்தலாம் போட்டு ஏம்பா என்னை உசுப்பேத்திற .

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் படம் நல்லா வர என்னுடைய வாழ்த்துக்கள்...

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)