Thottal Thodarum

Aug 12, 2009

ஆதியிடம் பின்னூடட டெலி மார்கெட்டிங்.

மூன்று லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர் அன்பும், ஆதரவும் தந்து கொண்டிருக்கும் சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..

ப்ளாக் எழுதறதே பைசாக்கு பெறாத வேலையத்த வேலை, ராத்திரி பகலெல்லாம் லொட்டு, லொட்டுனு அந்த பொட்டிய தட்டிட்டி இருக்கீங்களே. என்னைய கட்டிகிறதுக்கு பதிலா அந்த பொட்டிய கட்டிக்க வேண்டியதுதானேன்னு திட்டு வாங்கிட்டாவது எழுதிட்டிருக்கிறா நிலமையில  ஒரு பின்னூட்டம் வாங்கறதுக்குள்ளே கண்ணு முழி பிதுங்கி போவுது. 

ஆயிரம் தான் நாம பதிவு எழுதினாலும், மார்கெட்டிங்குனு ஒண்ணு இல்லியானா எதுவுமே வேலைக்காவாது. அதனால ஒரு டெலி மார்கெட்டிங் கம்பெனி மூலமா மார்கெட் பண்ணினா என்னான்னு தோணுச்சு.  அதுக்கான முதல் கள பலியா நம்ம அண்ணன் (நான் யூத்தில்ல)  ஆதிக்கு ஒரு ட்ரிங்..ட்ரிங்..

”ஹலோ.?”

“நாங்க கேபிள் சங்கர் ப்ளாக்லேர்ந்து ரீட்டா பேசறேன். நீங்க மிஸ்டர் ஆதிதானே?’

“ஆமாங்க.. தாமிரா என்கிற ஆதிமூல கிருஷணன் நாந்தான்.”

உள்ளேயிருந்து ஆதியின் தங்கமணி “ஆமா இதுல ஒண்ணும் கொறைச்சலில்ல.. கடைக்கு போய் நாலு வெள்ளை பூண்டு வாங்கிட்டு வாங்கன்னா அதுக்கு கிளம்பக்காணும் என்று புலம்ப..

”ஏன் கேபிளுக்கு பதிலா.. நீங்க பேசறீங்க..? அவர் எதாவது படம் பாக்க போய்ட்டாரா. இல்லை யூத்துன்னு சொல்லிட்டு எங்கயாவது சுத்திட்டிருக்காரா?”

“இல்லீங்க.. நான் அவரோட டெலி மார்கெட்டிங்,”

”என்னது டெலி மார்கெட்டிங்கா.. எதுக்கு?” என்று ஆதி அதிர,

”அவரோட கேபிள்சங்கர் ப்ளாகுக்கு.  அவரு பதிவு போட்டவுடனேயே. ஒரு நாளைக்கு ரெண்டு மூணு வாட்டி எங்க டேட்டா பேஸில இருக்கிற பதிவர்கள் நம்பரில் அவரு பதிவு போட்டதை சொல்லி, உங்களை படிக்க சொல்லி, பின்னூட்டம் போட சொல்றதுக்காக போன் பண்ணியிருக்கேன்.’

”அதத்தான் அந்த ஆளு போன்ல, மெயில்ல, எஸ்.எம்.எஸ்லேன்னு உயிர வாங்கிட்டிருகானே இதுல நீ வேறயா..? சரி அதவிடு உங்க வாய்ஸ் சோ..ஸ்வீட் தனிமனம் காட்டில் புல்லாங்குழல் வாசிப்பு போல..” என்று கவிதை சொல்ல ஆரம்பிக்க, அதை பற்றி கவலைபடாத ரீட்டா

“நீங்க அவரு பதிவுக்கு போய் படிச்சிட்டு இது போல கவிதையா பின்னூட்டம் போடலாமே ஆதி..?” கடுப்பாகி போன ஆதி

“ஏம்மா நல்லாருந்தா நாங்களே படிக்க மாட்டமா..?  அந்த ஆளு ஏதோ தெரிஞ்ச மூஞ்சியா போச்சேன்னு அவரோட தொல்லை தாங்க முடியாம ராத்திரி பண்ணெண்டு மணிக்கெல்லாம் உட்கார்ந்து பின்னூட்டம் போட்டுட்டு இருக்கேன். ஏற்கனவே பேங்குகாரங்க போன் தொல்லையே தாங்க முடியலையே.. இதுல இது வேறயா.?”

“நாங்க ஓண்ணும் சும்மா படிச்சு பின்னூட்டம் போட சொல்லல சார்.. ஒரு பின்னூட்டதிற்கு ஒரு பைசா வீதம், மொத்தமா நூறு பின்னூட்டம் வந்ததும், மொத்தமா 100 பைசா கொடுப்போம். இது வந்து :), நைஸ், தூள், பின்னிட்டீங்கன்ற மாதிரியான டெம்ப்ளேட் பின்னூட்டத்துக்கு, ஏதாவது ஒரு நாலு வரியை கட் அண்ட் பேஸ்ட் பண்ணி அதுக்கு பின்னூட்டம் போட்டா அதுக்கு ரெண்டு பைசா.. இல்ல முழு பதிவையுமே பிரிச்சு மேஞ்சி பின்னூட்டம் போட்டா 5 பைசா ஒரு பின்னூட்டத்துக்கு. பாருங்க நீங்க மத்தவஙக் ப்ளாக் படிக்கிற நேரத்துல பல லட்ச ரூபா சம்பாதிக்க வழியிருக்கு.”

“எப்படி ஒவ்வொரு பைசாவா சேர்த்து லட்சரூவா.?” ரைட்டு ”

“அது மட்டுமில்லைங்க. இப்ப நீஙக் ஒரு பின்னூட்டம் போட்டுட்டு.  உங்க ப்ளாகுலேர்ந்து வாரத்துக்கு ஒரு முறை  எங்க ப்ளாகை பத்தி பத்தி எழுதி அங்கேயிருந்து லிங் கொடுத்து எங்க ப்ளாகுக்கு வந்தாங்கண்ணா. முதல் இரண்டு பேர் வந்து பின்னூட்டம் போட்டதும், உங்களுக்கு ஆளுக்கு ரெண்டு பைசா விதம் நாலு பைசா கிடைக்கும், அப்படியே உங்க மூலமா வந்த ரெண்டு பேர் மூலமா நாலு பின்னூட்டம் வ்ந்தா உங்களுக்கு நாலு பைசா கிடைக்கும், அவங்களுக்கு ஆளுக்கு ரெண்டு பைசா. அடுத்து நாலு பேர் எட்டு , பதினாறு, முப்பத்திரெண்டுன்னு  போயிட்டேருக்கும். இதுக்கு பேர் ரெபரல் ஸிஸ்டம். “

“போற போக்க பாத்தா எல்லா ப்ளாகரும் உங்களுக்கு லிங்க் கொடுக்கிற்தான் பதிவா போடணும்னு சொல்றீங்க.   அந்தளு இப்படித்தான் ரெண்டுலட்சம், மூணுலட்சமுணு ஹிட்ஸ் வாங்குறான..? சரிங்க அதுக்கு இப்ப என்ன பண்ணனுமினு  சொல்றீங்க.. சீக்கிரம் சொல்லுங்க   தங்கமணிக்கிட்ட சொல்றேன். பாரு நான் ப்ளாக் எழுதி லட்சம் லட்சமா சம்பாதிக்க போறேன்னு”

“ரொம்ப சிம்பிள் ஜாயின் பீஸா ஒரு 15000 ரூபா கட்டிட்டீங்கன்னா,  உங்க பளாக்கு பத்தியும் இதே போல பேசி மார்கெட்டிங் பண்ணுவோம். அது ஒரு மாசத்திற்கு ஃபிரி.  அடுத்த மாசத்திலேர்ந்து மாசம் 1000 ருவா சரிவீஸ் சார்ஜ். மட்டும்தான். என்ன சார் நீங்க ஜாயின் பண்றீங்களா.? ஓகேன்னு சொன்னீங்கண்ணா எங்க எக்ஸிகியூட்டிவ் சோனாலி உங்கள வந்து பாப்பாங்க”

ஆதி போனை வைத்து விட்டு தலையில் கைவைத்தபடி உட்கார்ந்திருக்க, அதை பார்த்த தங்கமணி, “என்னைக்காவது ஒருநா இந்த பொட்டினால இவருக்கு சித்தப்ரமை பிடிக்க போவுதுன்னு நினைச்சேன். ஆனா இவ்வளவு சீக்கிரமா ஆவும்னு நினைக்கிலியே..?  என்று ஆதியின்  புலம்பங்களை  தங்கமணி  தொடர..

 உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

102 comments:

கே.என்.சிவராமன் said...

3 லட்சம் ஹிட்ஸ், விரைவில் 3 கோடியை தாண்ட வாழ்த்துகள் கேபிள் ஜி :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

பி. கு: எத்தன பைசா இதுக்கு ரீட்டா தருவாங்க :-(

Sukumar said...

எப்பவும் பதிவு போட்ட மறு நிமிஷத்துக்கு மீ தி பார்ஸ்ட்.. நெக்ஸ்ட்னு கமெண்ட் வருமே....
இந்த பதிவு போட்டு 15 நிமிஷம் ஆனாலும் எதுவும் பின்னூட்டம் வரலேனு யோசிக்கிறீங்களா....
எல்லோரும் ரீட்டா போன் பன்னட்டுமுன்னு வெயிட் பண்றோம்....!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கேபிள், கலக்கிட்டீங்க!

☀நான் ஆதவன்☀ said...

ரீட்டா போன் நம்பர் கிடைக்குமா கேபிள் :))

நையாண்டி நைனா said...

அபா"ரம்".
"சூப்"பர்.
அற்பு"தம்".

க.பாலாசி said...

//சரி அதவிடு உங்க வாய்ஸ் சோ..ஸ்வீட் தனிமனம் காட்டில் புல்லாங்குழல் வாசிப்பு போல..” என்று கவிதை சொல்ல ஆரம்பிக்க, அதை பற்றி கவலைபடாத ரீட்டா//

அதனால தான எங்க கேபிள் அண்ணன் அந்தம்மாவை வைச்சிருக்காரு (டெலி மார்க்கெட்டிங்கா தான்)

//எங்க எக்ஸிகியூட்டிவ் சோனாலி உங்கள வந்து பாப்பாங்க”//

அட இது வேறயா. எத்தன. பக்கத்துக்கு ஒன்னா?

//அதை பார்த்த தங்கமணி, “என்னைக்காவது ஒருநா இந்த பொட்டினால இவருக்கு சித்தப்ரமை பிடிக்க போவுதுன்னு நினைச்சேன். ஆனா இவ்வளவு சீக்கிரமா ஆவும்னு நினைக்கிலியே..? என்று ஆதியின் புலம்பங்களை தங்கமணி தொடர..//

இது அங்க நடந்தது மாதிரி தெரியிலையே. உங்க வீட்ல நடந்ததுதான.

ஈரோடு கதிர் said...

//“என்னைக்காவது ஒருநா இந்த பொட்டினால இவருக்கு சித்தப்ரமை பிடிக்க போவுதுன்னு நினைச்சேன். ஆனா இவ்வளவு சீக்கிரமா ஆவும்னு நினைக்கிலியே..? என்று ஆதியின் புலம்பங்களை தங்கமணி தொடர..//

ஹி...ஹி

அண்ணாச்சி அந்த 2 பைசாவ என்னோட அக்கவுண்ட்ல போட்ருங்க

பிரபாகர் said...

அண்ணா,

உங்க மார்க்கெட்டிங் உத்திய தாங்க முடியலண்ணா...

சிஙகப்பூர் ஆளுங்களுக்கு சார்ஜ் எவ்வளோ?

பிரபாகர்.

Thamira said...

ரசித்தேன். அதுவும் கிளைமாக்ஸ் நல்லாருந்தது.

ரொம்ப சிம்பிள் ஜாயின் பீஸா ஒரு 15000 ரூபா கட்டிட்டீங்கன்னா// எதிர்பார்க்காத திருப்பத்தில் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

butterfly Surya said...

1 பைசா
2 பைசா
5 பைசா...

3 லட்சம்
5 லட்சம்
10 லட்சம் (விரைவில்)

உண்மைத்தமிழன் said...

நிசமாவே ஒரு நாளைக்கு எல்லாருக்கும் பைத்தியம்தான் புடிக்கப் போகுது..!

Raj said...

கலக்கல்....!

எனக்கு இந்த பின்னூட்டத்திற்கு எத்தன பைசா கிடைக்கும்....அப்படியே என்னோட ப்ளாக் ஐ ப்ரொமோட் பண்றதுக்கு உங்க கம்பெனியிலருந்து அந்த சோனாலிங்கற எக்சிகியூட்டிவ என்ன வந்து பார்க்க ச்சொல்லுங்க

Thamira said...

நண்பர்களனைவருக்கும் நன்றி. இன்று கேபிள் சங்கரும் என்னை காரெக்டர்ர்ர்ராக்கி ஒரு பதிவு போட்டிருக்கிறார். கோ இன்ஸிடெண்ட்.!

anujanya said...

அட்டகாசம் கேபிள். But you never know. It may become a revenue model (with some modifications) in years to come.

ஆதியைத் தேர்ந்தெடுத்தீர்கள் பாருங்க. அங்க நிக்கறீங்க :)

அனுஜன்யா

பரிசல்காரன் said...

அட்டகாசமான ஐடியா...

ஃபாலோ செய்யலாம் போலிருக்கே...

கார்க்கிபவா said...

ஹிஹிஹிஹி

மணிஜி said...

ரீட்டாவை இன்னுமா விட்டு வச்சிருக்கீங்க...

Truth said...

அப்பாரம்... :-)
நல்லா இருந்திச்சு கேபிள்.

//“ரொம்ப சிம்பிள் ஜாயின் பீஸா ஒரு 15000 ரூபா கட்டிட்டீங்கன்னா,
அமாங்க ரொம்ப சிம்பிள் தான் :)

ஜெட்லி... said...

//ரொம்ப சிம்பிள் ஜாயின் பீஸா ஒரு 15000 ரூபா கட்டிட்டீங்கன்னா, உங்க பளாக்கு பத்தியும் இதே போல பேசி மார்கெட்டிங் பண்ணுவோம்.//

என்னாது இது...

VISA said...

அஞ்சு பைசாக்கு பிரயோஜனம் இல்லாத இந்த பிளாக் எழுதுற வேலையை
நாம விட முடியாம இன்னும் இன்னும் அதுக்கு அடிக்ட் ஆயிட்டு தான் இருக்கோம்.

நீங்க சொல்றது எல்லாமே நிதர்சனம் தான். ஒரு நாளைக்கு எல்லாருக்கும்
பைத்தியம் புடிக்க போகுது.

பதிவு செம காமெடி.

அப்புறம் கேபிள் சார்...அந்Tஹ ரீட்டா....சோனாலி....
இவங்களோட பின் - ஊட்டம் எப்படி இருகுமுன்னு கணிச்சு சொன்னீங்கண்ணா
15000 கட்டுறத பத்தி யோசிப்போம்.

My காமெடி - காம நெடி ஆயிடிச்சு. he he he....

அந்த காலத்துல டீ கடைல உக்காந்து வெட்டியா கதை பேசிகிட்டு உருப்படாம போனாங்க
இபோ பிளாகுல ஹை டெக்கா உருப்படாம போரோம்.


1 paise in my account. kanaku vachukoanga.

Ashok D said...

புதுசா முயற்சி செய்துயிருக்கீங்க. டெலி மா. MLM மாறிடுச்சு. வாழ்த்துக்கள் ஹிட்சுக்குதான்.

Nathanjagk said...

இந்த அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு!

Nathanjagk said...

3 லட்சம் ஹிட்ஸ்..! வாழ்த்துக்கள்!! ​கொசுத்தொல்லை ஜாஸ்தி போலிருக்கு.

அன்பேசிவம் said...

இந்தாம்மா.. ரீட்டா, என் கணக்குல ஒரு 25 பைசாவை சேர்த்துக்கோ. என்ன கேபிள் ஜீ ரைட்டா?

முரளிகண்ணன் said...

கலக்கல் கற்பனை கேபிளாரே

நாஞ்சில் நாதம் said...

கலக்கல்ஜி

Beski said...

கலக்கல் கற்பனை.
(ஆமா... கற்பனைதானே? எதுக்கும் ரீட்டா போன் வருதா பாப்போம்.)

சின்னப் பையன் said...

வாய்ப்பேயில்லாமே சிரிச்சிட்டிருக்கேன்...

சூப்பர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

biskothupayal said...

நான் ஆதி லிங்கிலிருந்து இங்கே வந்தேன் அவருக்கு “இரண்டு பைசா” டிடி அனுப்பிடுங்க... சரியா

அறிவிலி said...

முதல்ல படிக்கும்போது நாங்கூட வேலய வுட்டுட்டு ஊருக்கு வந்து உங்களுக்கு முழு நேரம் பின்னூட்டம் போட்டு லட்சம் லட்சமா சம்பாதிகலாம்னு நெனச்சேன். ஆனா அந்த அந்த 15000 மேட்டர்னால ஜகா வாங்கிட்டேன்.

(இத்தன எழுதியிருக்கேன் ஏதாவது பாத்து போட்டு குடுங்க :)))))

இராகவன் நைஜிரியா said...

கேபிள் டச் அப்படின்னு சொல்லணும். சரியான காமெடி.

// “அது மட்டுமில்லைங்க. இப்ப நீஙக் ஒரு பின்னூட்டம் போட்டுட்டு. உங்க ப்ளாகுலேர்ந்து வாரத்துக்கு ஒரு முறை எங்க ப்ளாகை பத்தி பத்தி எழுதி அங்கேயிருந்து லிங் கொடுத்து எங்க ப்ளாகுக்கு வந்தாங்கண்ணா. முதல் இரண்டு பேர் வந்து பின்னூட்டம் போட்டதும், உங்களுக்கு ஆளுக்கு ரெண்டு பைசா விதம் நாலு பைசா கிடைக்கும், அப்படியே உங்க மூலமா வந்த ரெண்டு பேர் மூலமா நாலு பின்னூட்டம் வ்ந்தா உங்களுக்கு நாலு பைசா கிடைக்கும், அவங்களுக்கு ஆளுக்கு ரெண்டு பைசா. அடுத்து நாலு பேர் எட்டு , பதினாறு, முப்பத்திரெண்டுன்னு போயிட்டேருக்கும். இதுக்கு பேர் ரெபரல் ஸிஸ்டம். //

MLM - Multi Level Marketing மாதிரி..

நான் ஊருக்கு வந்த போது இத சொல்லாம விட்டுடீங்களே...

நித்யன் said...

அற்புதமான கற்பனை மற்றும் வசனங்கள்...

படம் எடுங்க சார் சீக்கிரம...

அன்பு நித்யன்

shortfilmindia.com said...

/3 லட்சம் ஹிட்ஸ், விரைவில் 3 கோடியை தாண்ட வாழ்த்துகள் கேபிள் ஜி :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

பி. கு: எத்தன பைசா இதுக்கு ரீட்டா தருவாங்க :-(
//
'
நன்றி.. பைத்தியக்காரன். 100 பின்னூட்டம் ஆவட்டும் 100 பைசா ரீட்டாகிட்ட கொடுத்து விடறேன்.

Cable சங்கர் said...

/எப்பவும் பதிவு போட்ட மறு நிமிஷத்துக்கு மீ தி பார்ஸ்ட்.. நெக்ஸ்ட்னு கமெண்ட் வருமே....
இந்த பதிவு போட்டு 15 நிமிஷம் ஆனாலும் எதுவும் பின்னூட்டம் வரலேனு யோசிக்கிறீங்களா....
எல்லோரும் ரீட்டா போன் பன்னட்டுமுன்னு வெயிட் பண்றோம்....!!
//

rita மெம்பர் ஆனாத்தான் போன் பண்ணுவா..சுகுமார்

Cable சங்கர் said...

../கேபிள், கலக்கிட்டீங்க!//

ஜ்யோராம் மிக்க நன்றி.. குருஜி

Cable சங்கர் said...

..,ரீட்டா போன் நம்பர் கிடைக்குமா கேபிள் :))
..//

ஒரு பதினைஞ்சு ஆயிரம் என் அக்கவுண்டல டெபாசிட் பண்ணிருஙக் ரீட்டா நம்பர் என்ன சோனாலி நம்பர் கூட தர்றேன்.நான் ஆதவன்.

Cable சங்கர் said...

,அபா"ரம்".
"சூப்"பர்.
அற்பு"தம்"//

நன்றி நைனா..

Cable சங்கர் said...

///அதனால தான எங்க கேபிள் அண்ணன் அந்தம்மாவை வைச்சிருக்காரு (டெலி மார்க்கெட்டிங்கா தான்)//

ஹி..ஹி..

//எங்க எக்ஸிகியூட்டிவ் சோனாலி உங்கள வந்து பாப்பாங்க”//

அட இது வேறயா. எத்தன. பக்கத்துக்கு ஒன்னா?//

:_)

//அதை பார்த்த தங்கமணி, “என்னைக்காவது ஒருநா இந்த பொட்டினால இவருக்கு சித்தப்ரமை பிடிக்க போவுதுன்னு நினைச்சேன். ஆனா இவ்வளவு சீக்கிரமா ஆவும்னு நினைக்கிலியே..? என்று ஆதியின் புலம்பங்களை தங்கமணி தொடர..//

இது அங்க நடந்தது மாதிரி தெரியிலையே. உங்க வீட்ல நடந்ததுதான.
//
நிசமாவே அவரு வீட்டுல நடந்ததுதன் பாலாஜி.

Cable சங்கர் said...

/ஹி...ஹி

அண்ணாச்சி அந்த 2 பைசாவ என்னோட அக்கவுண்ட்ல போட்ருங்க
///

வரவு வச்சாச்சு கதிர்.ஈரோடு

Cable சங்கர் said...

/அண்ணா,

உங்க மார்க்கெட்டிங் உத்திய தாங்க முடியலண்ணா...

சிஙகப்பூர் ஆளுங்களுக்கு சார்ஜ் எவ்வளோ?

பிரபாகர்.
//

என்.ஆர்.ஐயெல்லாம் டாலர்ல கட்டணும் பிரபாகர்

Cable சங்கர் said...

/ரசித்தேன். அதுவும் கிளைமாக்ஸ் நல்லாருந்தது.

ரொம்ப சிம்பிள் ஜாயின் பீஸா ஒரு 15000 ரூபா கட்டிட்டீங்கன்னா// எதிர்பார்க்காத திருப்பத்தில் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
//

நன்றி ஆதி..

Cable சங்கர் said...

/1 பைசா
2 பைசா
5 பைசா...

3 லட்சம்
5 லட்சம்
10 லட்சம் (விரைவில்)
//

வண்ணத்துபூச்சியாரே நீஙக் என்னை விட நல்லா மார்கெட் பண்றீஙக் பேசாம நீஙக் அட்வைசரா வந்திருங்க..

Cable சங்கர் said...

/நிசமாவே ஒரு நாளைக்கு எல்லாருக்கும் பைத்தியம்தான் புடிக்கப் போகுது..!
//

முதல் பேஷண்ட் ரெடிப்பா..

Cable சங்கர் said...

/கலக்கல்....!

எனக்கு இந்த பின்னூட்டத்திற்கு எத்தன பைசா கிடைக்கும்....அப்படியே என்னோட ப்ளாக் ஐ ப்ரொமோட் பண்றதுக்கு உங்க கம்பெனியிலருந்து அந்த சோனாலிங்கற எக்சிகியூட்டிவ என்ன வந்து பார்க்க ச்சொல்லுங்க
//

சோனாலிய பாக்கணுமினா பதினைஞ்சாயிரம் என் அக்கவுண்டல் போட்டுறுங்க. இதுக்கு ஒரு பைசா உஙக் அக்கவுண்டல வந்தாச்சு.

Cable சங்கர் said...

/அட்டகாசம் கேபிள். But you never know. It may become a revenue model (with some modifications) in years to come.

ஆதியைத் தேர்ந்தெடுத்தீர்கள் பாருங்க. அங்க நிக்கறீங்க :)

அனுஜன்யா
//

நன்றி அனுஜன்யா.. நிச்சயமா இது ஒரு மாடியூலாக வர வாய்ப்பிருக்கிறது.. என்றுதான் தோன்றுகிறது.

Cable சங்கர் said...

/அட்டகாசமான ஐடியா...

ஃபாலோ செய்யலாம் போலிருக்கே...
//

நன்றி பரிசல்.. எங்க கம்பெனி திருப்பூர் ப்ராஞ்சை நீங்க பாத்துக்கங்க..

Cable சங்கர் said...

/ஹிஹிஹிஹி
//

:) நன்றி கார்க்கி

Cable சங்கர் said...

/ரீட்டாவை இன்னுமா விட்டு வச்சிருக்கீங்க...
//

நான் ரொமப் நல்லவன் தண்டோரா.. வாயில் விரல வச்சா கூட கடிக்க தெரியாது..:(

Cable சங்கர் said...

/அப்பாரம்... :-)
நல்லா இருந்திச்சு கேபிள்.

//“ரொம்ப சிம்பிள் ஜாயின் பீஸா ஒரு 15000 ரூபா கட்டிட்டீங்கன்னா,
அமாங்க ரொம்ப சிம்பிள் தான் :)
//

நன்றி ட்ருத்..

Cable சங்கர் said...

நன்றி ஜெட்லி..

உங்க கணக்கில சேர்த்தாச்சு. விசா

Cable சங்கர் said...

/புதுசா முயற்சி செய்துயிருக்கீங்க. டெலி மா. MLM மாறிடுச்சு. வாழ்த்துக்கள் ஹிட்சுக்குதான்.
//

நன்றி அசோக்
நன்றி ஜெகந்நாதன்

Cable சங்கர் said...

/இந்தாம்மா.. ரீட்டா, என் கணக்குல ஒரு 25 பைசாவை சேர்த்துக்கோ. என்ன கேபிள் ஜீ ரைட்டா?//

அல்லோவ்.. இது அழுகுணி ஒரு பைசாதான்.. முரளிகுமார் பத்மநாபன்

Cable சங்கர் said...

நன்றி முரளிகண்ணன். க்ரேட் கம்பேக்
நன்றி நாஞ்சில் நாதம்
நன்றி எவனோ ஒருவன்.. வருவா ரீட்டா ஆனா வரமாட்டா

Cable சங்கர் said...

/(இத்தன எழுதியிருக்கேன் ஏதாவது பாத்து போட்டு குடுங்க :)))))
//

ஓகே ரெண்டு பைசா உங்க அக்கவுண்டுல.. சேர்த்தாச்சு அறிவிலி..

Cable சங்கர் said...

/வாய்ப்பேயில்லாமே சிரிச்சிட்டிருக்கேன்...

சூப்பர்//

நன்றி ச்சின்னப்பையன்..

Cable சங்கர் said...

/நான் ஆதி லிங்கிலிருந்து இங்கே வந்தேன் அவருக்கு “இரண்டு பைசா” டிடி அனுப்பிடுங்க... சரியா
//

ஒகே பிஸ்கோத்து.. அனுப்பிறலாம் 100 பைசா ஆனவுடன்

Cable சங்கர் said...

/MLM - Multi Level Marketing மாதிரி..

நான் ஊருக்கு வந்த போது இத சொல்லாம விட்டுடீங்களே...
//

இது மட்டும் நிஜமா இருந்திச்சின்னா அண்ணன் நீஙக் நைஜீரியா போகாம் பின்னூட்டம் போட்டே கோடிஸ்வரர் ஆயிருவீங்க்ன்னுதான்.. ஹி..ஹி..

Cable சங்கர் said...

/அற்புதமான கற்பனை மற்றும் வசனங்கள்...

படம் எடுங்க சார் சீக்கிரம...

அன்பு நித்யன்
//

நன்றி நித்திய குமாரன்..

விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

அத்திரி said...

குசும்பு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு......................

கலக்கல்

அத்திரி said...

குசும்பு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு......................

கலக்கல்

அத்திரி said...

குசும்பு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு......................

கலக்கல்

sriram said...

கலக்கல் யூத்து.
Really out of the box thinking
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பீர் | Peer said...

வித்தியாசமான கற்பனை.. அருமை...

Bala said...

என்ன கொடுமை கேபிள் இது?

(இன்றைய பதிவு வாசிபதர்ட்கு பிகினி ஸ்பெஷல் பில்லா நயந்தாரா மாதிரி படு கவர்ச்சி

Bala said...

இன்றைய பின்னுடன்களே ஒரு முழு பதிவு போல தன் இருகிறது. கலக்குங்கள் கேபிள்

Cable சங்கர் said...

/குசும்பு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு......................

கலக்கல்
//

ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் குசும்பு. எதுக்கு மூணு பின்னூட்டம் போட்டீஙக் அத்திரி

Cable சங்கர் said...

/கலக்கல் யூத்து.
Really out of the box thinking
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//

மிக்க நன்றி ஸ்ரீராம். இப்பவாவது என்னை ஒத்துகிட்டீங்களே..யூத்துன்னு.

Cable சங்கர் said...

/வித்தியாசமான கற்பனை.. அருமை...
//
நன்றி பீர்.. உங்கள் பின்னூட்டத்திற்க்கும், வருகைக்கும்

Cable சங்கர் said...

/என்ன கொடுமை கேபிள் இது?

(இன்றைய பதிவு வாசிபதர்ட்கு பிகினி ஸ்பெஷல் பில்லா நயந்தாரா மாதிரி படு கவர்ச்சி
//

அவ்வளவு கவர்ச்சியாவா இருக்கு..?

Cable சங்கர் said...

/இன்றைய பின்னுடன்களே ஒரு முழு பதிவு போல தன் இருகிறது. கலக்குங்கள் கேபிள்
//

நன்றி பாலா..உங்கள் தொடர் ஆதரவுக்கும், பின்னூட்டத்திற்கும், வருகைக்கும்.

கார்ல்ஸ்பெர்க் said...

ஏன்'ணா, ரீட்டா பார்க்க எப்படி இருக்காங்க? நல்லா இருப்பாங்கன்னா சோனாலி'ய என் ப்ளாக்'கு டெலி-மார்கட்டிங்'கு யூஸ் பண்ணலாம்னு இருக்கேன்..

வால்பையன் said...

//ஏதோ தெரிஞ்ச மூஞ்சியா போச்சேன்னு அவரோட தொல்லை தாங்க முடியாம ராத்திரி பண்ணெண்டு மணிக்கெல்லாம் உட்கார்ந்து பின்னூட்டம் போட்டுட்டு இருக்கேன்.//


இது அவரு சொல்றதா, இல்ல எல்லோருக்கும் நீங்க சொல்றதா!?

வால்பையன் said...

எனக்கு இன்னும் போன் வரவில்லை என்பதை ஞாபகபடுத்தி கொள்கிறேன்!

Cable சங்கர் said...

/எனக்கு இன்னும் போன் வரவில்லை என்பதை ஞாபகபடுத்தி கொள்கிறேன்//

பதினைந்தாயிரம் என் அக்கவுண்டில கட்டியபின் ரீட்டா போன் செய்வாள்..:)

Cable சங்கர் said...

/ஏன்'ணா, ரீட்டா பார்க்க எப்படி இருக்காங்க? நல்லா இருப்பாங்கன்னா சோனாலி'ய என் ப்ளாக்'கு டெலி-மார்கட்டிங்'கு யூஸ் பண்ணலாம்னு இருக்கேன்..
//

ரீட்டாவும்,சோனாலியும் என் இரண்டு கண்கள்.. வரமாட்டாங்க.. கார்ல்ஸ்

இளையராஜா said...

Nice Cable sir....

வால்பையன் said...

//பதினைந்தாயிரம் என் அக்கவுண்டில கட்டியபின் ரீட்டா போன் செய்வாள்..:) //

அவ்வளவு பணம் இருந்தா பத்து ரீட்டா என் மடியில படுத்துகிட்டு என் ”போனை” எடுத்து பேசிகிட்டே இருப்பா!

Beski said...

// வால்பையன் said...
//பதினைந்தாயிரம் என் அக்கவுண்டில கட்டியபின் ரீட்டா போன் செய்வாள்..:) //
அவ்வளவு பணம் இருந்தா பத்து ரீட்டா என் மடியில படுத்துகிட்டு என் ”போனை” எடுத்து பேசிகிட்டே இருப்பா!//
1500 தானா? ரொம்ப சீப்பா இருக்கே தல.

Cable சங்கர் said...

நன்றி இளையராஜா..

Cable சங்கர் said...

/1500 தானா? ரொம்ப சீப்பா இருக்கே தல.
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

Cable சங்கர் said...

போனு பத்திரம் வாலு..:)

வால்பையன் said...

//1500 தானா? ரொம்ப சீப்பா இருக்கே தல. //

குழிகேத்த பணியாரம் கண்டிப்பாக இருக்கும்!

என்ன செய்ய இருக்கும் பொருளாதார நெருக்கடியில் செலவை குறைத்து தான் செய்ய வேண்டியிருக்கு!

Cable சங்கர் said...

/என்ன செய்ய இருக்கும் பொருளாதார நெருக்கடியில் செலவை குறைத்து தான் செய்ய வேண்டியிருக்கு!
//

ரெஷஷன் எங்கெயெல்லாம் பாதிப்பை ஏறபடுத்தியிருக்கு பாருங்க.. மக்களே..

Beski said...

//என்ன செய்ய இருக்கும் பொருளாதார நெருக்கடியில் செலவை குறைத்து தான் செய்ய வேண்டியிருக்கு! //
அமெரிக்காவில் விழுந்த அடி, இங்கு வரை ’ஆட்டம்’ காட்டுதோ?

//குழிகேத்த பணியாரம் கண்டிப்பாக இருக்கும்!//
குழிக்கு ஏற்றவா, அல்லது குழிக்கு ஏத்தவா? இல்ல நான் கண்ட அர்த்தங்களே தப்பா?
(இது ஓவரா இருந்தா கேபிள் அண்ணன் கனெக்‌ஷனை கட் பண்ணவும்)

வால்பையன் said...

//குழிக்கு ஏற்றவா, அல்லது குழிக்கு ஏத்தவா? //

ஏத்தமய்யா ஏத்தம்!
உனக்கு ரொம்ப
ஏத்தமய்யா ஏத்தம்!

Beski said...

//ஏத்தமய்யா ஏத்தம்!
உனக்கு ரொம்ப
ஏத்தமய்யா ஏத்தம்! //

ரைட்டு... புரிஞ்சிக்கிட்டேன்.

Cable சங்கர் said...

/ஏத்தமய்யா ஏத்தம்!
உனக்கு ரொம்ப
ஏத்தமய்யா ஏத்தம்//

rombathaan eeththam

Unknown said...

கேபிள் ஷங்கர் MLM பற்றி பேசியிட்டு இருக்கிறார் ,நாங்க தொழில்ல இறங்கிடோமில்ல .

இந்த லிங்க கிளிக் பண்ணிபாருங்க
http://egoldclick.com/?650421
தெரிஞ்சுக்குவிங்க

அமுதா கிருஷ்ணா said...

”அந்த காலத்துல டீ கடைல உக்காந்து வெட்டியா கதை பேசிகிட்டு உருப்படாம போனாங்க
இபோ பிளாகுல ஹை டெக்கா உருப்படாம போரோம்.” visa sir இதை நான் ஒத்துக்க மாட்டேன். நிறைய நல்ல விஷயங்கள் தெரிந்துக் கொள்ள முடிகிறது இந்த ஃப்ளாக்கர்களால்.

Cable சங்கர் said...

/கேபிள் ஷங்கர் MLM பற்றி பேசியிட்டு இருக்கிறார் ,நாங்க தொழில்ல இறங்கிடோமில்ல .

இந்த லிங்க கிளிக் பண்ணிபாருங்க
http://egoldclick.com/?650421
தெரிஞ்சுக்குவிங்க
//

ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க் நன்றி பிரேமானந்தன்.

Cable சங்கர் said...

/கேபிள் ஷங்கர் MLM பற்றி பேசியிட்டு இருக்கிறார் ,நாங்க தொழில்ல இறங்கிடோமில்ல .

இந்த லிங்க கிளிக் பண்ணிபாருங்க
http://egoldclick.com/?650421
தெரிஞ்சுக்குவிங்க
//

ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க் நன்றி பிரேமானந்தன்.

Cable சங்கர் said...

/”அந்த காலத்துல டீ கடைல உக்காந்து வெட்டியா கதை பேசிகிட்டு உருப்படாம போனாங்க
இபோ பிளாகுல ஹை டெக்கா உருப்படாம போரோம்.” visa sir இதை நான் ஒத்துக்க மாட்டேன். நிறைய நல்ல விஷயங்கள் தெரிந்துக் கொள்ள முடிகிறது இந்த ஃப்ளாக்கர்களால்.
//

நானும் அதை ரிப்பீட்டுகிறேன். அமுதா கிருஷ்ணா.. மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.

மங்களூர் சிவா said...

நானும்தான் ட்யூயல் சிம்கார்ட் மொபைல், வீட்டுல ஒரு லாண்ட் லைன் எல்லாம் வெச்சிருக்கேன் ஹும் ஒருத்தியும் பேசமாட்டிக்கிறாளுங்களே

எங்க லட்சக்கணக்குல சம்பாரிச்சிருவேனோன்னு பொறாமை
:)))))

Cable சங்கர் said...

/நானும்தான் ட்யூயல் சிம்கார்ட் மொபைல், வீட்டுல ஒரு லாண்ட் லைன் எல்லாம் வெச்சிருக்கேன் ஹும் ஒருத்தியும் பேசமாட்டிக்கிறாளுங்களே

எங்க லட்சக்கணக்குல சம்பாரிச்சிருவேனோன்னு பொறாமை
:)))))//

ஒரு பதினஞ்சை நம்ம அக்கவுண்டுல போட்டுட்டீங்கண்ணா.. அடுத்த செகண்டு சோனாலி வந்து நிப்பாங்க சிவா..:)

தராசு said...

கலக்கல் தல.

வரதராஜலு .பூ said...

எப்பிடியெல்லாம் யோசிக்கிறிங்க கேபிள். செம கலக்கல்.

Cable சங்கர் said...

நன்றி தராசண்ணே
நன்றி வரதராஜுலு..

Cable சங்கர் said...

நூறுக்கு நானே..

Cable சங்கர் said...

அட யாருப்பா அது நூறாவது பின்னூட்டம் போட்டது.?

Thamira said...

நம்ப பேர போட்டு எழுதுனதுல.. கடை கல்லா கட்டிருச்சு போல.. (ஹிஹி.. மானங்கப்பலேற்றாம தப்பிச்சுது)

Cable சங்கர் said...

/நம்ப பேர போட்டு எழுதுனதுல.. கடை கல்லா கட்டிருச்சு போல.. (ஹிஹி.. மானங்கப்பலேற்றாம தப்பிச்சுது)
//
என்ன இப்படி சொல்லிபுட்டீங்க நீங்க ஆதி.. நீங்க எவ்வளவு பெரிய பிரபல பதிவரு..? :)