Thottal Thodarum

Aug 18, 2009

பயோடேட்டா – கேபிள் சங்கர்

sankar

பெயர் : கேபிள் சங்கர்

Original பெயர் :  பி.சங்கர் நாராயண்

வயது :  யூத்துகளின் வயதுதான்.

தொழில் : சுயதொழில், சினிமா

உபதொழில் :  சினிமா

நண்பர்கள் : சினிமா பற்றி பேசும், சிந்திக்கும்,எல்லோரும்

எதிரிகள் :  எனக்கு வாய்ப்பு தராதவர்கள் :)

பிடித்த வேலை : சமீபத்தில் பதிவு எழுதுவது

பிடிக்காத வேலை :  அப்படி ஏதுமில்லை

பிடித்த உணவு : எது எங்கே கிடைத்தாலும் அதில் பெஸ்ட் எதுவோ அது.

பிடிக்காத உணவு :  தெரியல

விரும்புவது : சினிமாவில் வெற்றி பெற்று   ஒரு கார்பரேட் கம்பெனியின் தலைமையாக. வேண்டும்

விரும்பாதது :  யோசிக்கணும்

புரிந்தது :  சினிமாவில் வாய்ப்பு கிடைக்க நிறைய உழைக்கணும்ங்கிறது

புரியாதது : எப்படி சில பேருக்கு வாய்ப்பு கிடைக்குதுன்னு?(இதை காண்டுன்னு கூட சொல்லலாம்)

சமீபத்திய எரிச்சல் :  பொக்கிஷம்

நீண்டகால எரிச்சல் :  நம்ம ஊர் வெயில்தான்

சமீபத்திய சாதனை : மூன்று குறும்படங்கள் இயக்கியது, இரண்டு சீரியலுக்கும், இரண்டு திரைப்படங்களுக்கும் திரைக்கதை வசனம் எழுதியது.  எழுதியது இரண்டு சிறுகதைகள் ஆ.வியில் வந்து நானும் ரவுடியாயிட்டேன் போல எழுத்தாளர் ஆனது.

நீண்டகால சாதனை : சீக்கிரம் படம் எடுத்துவிடுவேன் என்று சொல்லிக் கொண்டு நம்பிக்கையாய் இருப்பது.

*********************************************************உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

95 comments:

வழிப்போக்கன் said...

very funny...
:)))

Thamira said...

பெரிய ஆளுங்களப்பத்திதான் உண்மையை அப்படியே பயோடேட்டாவாக எழுதுவாங்க.. ஹிஹி.. நம்பளும் பெரிய ஆளுதான்னு சொல்றீங்களா.?

Cable சங்கர் said...

/பெரிய ஆளுங்களப்பத்திதான் உண்மையை அப்படியே பயோடேட்டாவாக எழுதுவாங்க.. ஹிஹி.. நம்பளும் பெரிய ஆளுதான்னு சொல்றீங்களா.?
//

பின்ன எப்படி நாம் பெரிய ஆள் ஆவுறது.. எப்படியெல்லாம் மார்கெட்டிங் பண்ண வேண்டியிருக்கு ஸ்..பா.. கண்ணை கட்டுதே..:)

வால்பையன் said...

வாழ்த்துக்கள்!

நீங்க வந்தா தானே நாங்களும் உள்ளே எட்டிபார்க்க முடியும்!

டிஸ்கஷனுக்கு மறக்காம கூப்பிடுங்க!

சின்னப் பையன் said...

வேறே யாராவது கலாய்க்கறதுக்கு முன்னாடி நாமே எழுதிட்டா ??? - அப்படின்ற ஐடியாவிலே எழுதிட்டீங்களா???

:-)))))

Prakash said...

இருபத்து வருடங்களுக்கு முன் நீங்கள் யூத்தா? . :P

கேபிள் , நீங்கள் எந்த சினிமாக்கு திரைக்கதை எழுதியிருக்கிறீர்கள்? / எழுதி கொண்டிருக்கிறீர்களா? ( வாழ்த்துகள்

ஆளவந்தான் said...

SAC -கிட்ட ஒரு கதை சொல்லுங்களேன்.. உங்களுக்கு வாய்ப்பு தரலேன்னாலும்.. உங்க ”கதைக்கு” ஒரு வாய்ப்பை தந்திடுவார் :))))))

வாழ்த்துக்கள் சங்கர் :)

anujanya said...

ஹலோ டைரக்டர் சார்,

பாடலாசிரியர் ஹி ஹி ஹி என்ன மறந்துடாதீங்க. என்னது ஹீரோ சான்ஸா? எனக்கு நடிப்பில் அவ்வளவு விருப்பம் இல்ல; இருந்தாலும் நீங்க கட்டாயப்படுத்துவதால் ....

கலக்கல் பயோ-டேட்டா. ஆனா, நம்ம வேலன் இல்ல ஆதி கிட்ட நீங்க மாட்டி இருக்கணும்.

அனுஜன்யா

அறிவிலி said...

சீக்கிரம் இயக்குனராக ப்ராப்திரஸ்து

Ashok D said...

தலைவரே! எனக்கு வில்லன் வேஷம்தான் வேனும்... ரேப்பிங் சீன் எல்லாம் உண்டுயில்ல?

பிரபாகர் said...

அண்ணா,

எல்லா உண்மையையும் எழுதிட்டு வயசு 25 ங்கறத எழுத மட்டும் ஏன் தயங்கறீங்க? தைரியமா சொல்லுங்க.

//நீண்டகால சாதனை : சீக்கிரம் படம் எடுத்துவிடுவேன் என்று சொல்லிக் கொண்டு நம்பிக்கையாய் இருப்பது.//

கவலையே படாதீர்கள். தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் பின் தர்மம் வெல்லும். அதற்கு வெகு அருகில் வந்து விட்டீர்கள்...

பிரபாகர்.

அகநாழிகை said...

கேபிள்,

//தொழில் : சுயதொழில், சினிமா//

என்னா வில்லத்தனம்...?

பரவாயில்ல... வாழ்த்துக்கள்.


“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

மணிஜி said...

ரீட்டாவை கேட்டதாக சொல்லவும்(கடன்தான்?)

க.பாலாசி said...

//எதிரிகள் : எனக்கு வாய்ப்பு தராதவர்கள் :)//

ஏன்? இப்படில்லாம்..

//வயது : யூத்துகளின் வயதுதான்.//

ஆமாஆமா... சொல்லிகிட்டாங்க...

படித்தேன் ரசித்தேன்.

உண்மைத்தமிழன் said...

[[[வயது : யூத்துகளின் வயதுதான்.]]]

ரீல் விடாமயே இருக்க முடியாதா..? யூத்தாம்ல யூத்து..!?

எம்.எம்.அப்துல்லா said...

//சீக்கிரம் படம் எடுத்துவிடுவேன் என்று சொல்லிக் கொண்டு நம்பிக்கையாய் இருப்பது
//

யோவ் அண்ணே...நீ சீக்கிரம் படம் பண்ணலன்னா என் பேரை மாத்தி வச்சுக்கிறேன்.சவாலாவே சொல்றேன்.

எம்.எம்.அப்துல்லா said...

//சீக்கிரம் படம் எடுத்துவிடுவேன் என்று சொல்லிக் கொண்டு நம்பிக்கையாய் இருப்பது
//

யோவ் அண்ணே...நீ சீக்கிரம் படம் பண்ணலன்னா என் பேரை மாத்தி வச்சுக்கிறேன்.சவாலாவே சொல்றேன்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

சீக்கிரம் படம் பண்ண வாழ்த்துக்கள்.

ஜெட்லி... said...

கூடிய விரைவில் இயக்குனராக வாழ்த்துக்கள் அண்ணே...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

சிநேகா கு நீங்க எஸ்.எம்.எஸ் அனுப்புனது பத்தி சொல்லல

ஸ்ரீ.கிருஷ்ணா said...

சிநேகா கு நீங்க எஸ்.எம்.எஸ் அனுப்புனது பத்தி சொல்லல

sriram said...

இத்த விட்டுட்டியே யூத்து..

சமீபத்திய சாதனை : தன்னை யூத்தாக காமிக்க கடும் முயற்சி செய்வது

சமீபத்திய எரிச்சல் : யாரும் அதை நம்பாதது.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

அக்னி பார்வை said...

///பின்ன எப்படி நாம் பெரிய ஆள் ஆவுறது.. எப்படியெல்லாம் மார்கெட்டிங் பண்ண வேண்டியிருக்கு ஸ்..பா.. கண்ணை கட்டுதே..:)
///

நீங்க சொன்ன சரி தான் தல

ஆளவந்தான் said...

// krishna said...

சிநேகா கு நீங்க எஸ்.எம்.எஸ் அனுப்புனது பத்தி சொல்லல
//


//
sriram said...

இத்த விட்டுட்டியே யூத்து..
சமீபத்திய சாதனை : தன்னை யூத்தாக காமிக்க கடும் முயற்சி செய்வது
//

கார்த்திக் சொன்னது “சமீபத்திய சாதனை”.. ஸ்ரீராம் சொன்னது “ந்நிநீண்ண்ண்ண்ட கால சாதனை”

:)))))))

மேவி... said...

good 1

இராகவன் நைஜிரியா said...

வேற யாராவது எழுதுவதற்கு முன்னாடி நீங்க முந்திகிட்டீங்களா?

எப்படிங்க இதெல்லாம்.

சீக்கிரமா இயக்குனராக எல்லாம் வல்ல ஆண்டவன் அருளுவாராக

இராகவன் நைஜிரியா said...

// தண்டோரா ...... said...

ரீட்டாவை கேட்டதாக சொல்லவும்(கடன்தான்?)
//

ஆமாம் நானும் கேட்டதாகச் சொல்லவும்.

Truth said...

//நீண்டகால சாதனை : சீக்கிரம் படம் எடுத்துவிடுவேன் என்று சொல்லிக் கொண்டு நம்பிக்கையாய் இருப்பது.

கண்டிப்பா முடியும் கேபிள். நீங்களாவது முயற்சி பண்றீங்க. நான் முயற்சி ஏதும் பண்ணாமலேயே இப்படி தான் சொல்லிக்கிட்டு அலையறேன் :)

Subbiah Veerappan said...

நட்சத்திரவாழ்த்துக்கள் சங்கர்!
அடித்து ஆடுங்கள்!கை தட்டி உற்சாகப் படுத்த நாங்கள் இருக்கிறோம்!

☼ வெயிலான் said...

// நீண்டகால எரிச்சல் : நம்ம ஊர் வெயில்தான் //

:)

அப்துல்மாலிக் said...

அண்ணே சுயசரிதம் சூப்பர்

சீக்கிரம் படவாய்ப்பு அமைய வாழ்த்துக்கள்

ILA (a) இளா said...

//விரும்பாதது : யோசிக்கணும்/

யோசிக்கிறதை விரும்பல போலிருக்குங்களே?


வாழ்த்துக்கள்!

butterfly Surya said...

வாழ்த்துகள்.

நட்சத்திர வாரத்தில் இன்னும் பலமாக அடித்து ஆடவும்.. அந்த Game இல்ல...

தண்டோரா ரீட்டாவ விடமாட்டார் போல இருக்கே...

butterfly Surya said...

வாழ்த்துகள்.

நட்சத்திர வாரத்தில் இன்னும் பலமாக அடித்து ஆடவும்.. அந்த Game இல்ல...

தண்டோரா ரீட்டாவ விடமாட்டார் போல இருக்கே...

Anonymous said...

Vaalthukkal thalaivaa

மங்களூர் சிவா said...

/
வயது : யூத்துகளின் வயதுதான்.
/

ரைட்டு
:)))))))))))

Jackiesekar said...

பயோடேட்டா சூப்பர்

Cable சங்கர் said...

/very funny...
:)))//

பின்ன அதுக்குத்தான்ணே போட்டது..

Cable சங்கர் said...

/வாழ்த்துக்கள்!

நீங்க வந்தா தானே நாங்களும் உள்ளே எட்டிபார்க்க முடியும்!

டிஸ்கஷனுக்கு மறக்காம கூப்பிடுங்க//

நன்றி வால்பையன்.. நீங்க இல்லாமயா.. கூப்ட்டாப் போச்சு.

Cable சங்கர் said...

/வேறே யாராவது கலாய்க்கறதுக்கு முன்னாடி நாமே எழுதிட்டா ??? - அப்படின்ற ஐடியாவிலே எழுதிட்டீங்களா???
//

ஹி..ஹி..

Cable சங்கர் said...

//இருபத்து வருடங்களுக்கு முன் நீங்கள் யூத்தா? . :P

கேபிள் , நீங்கள் எந்த சினிமாக்கு திரைக்கதை எழுதியிருக்கிறீர்கள்? / எழுதி கொண்டிருக்கிறீர்களா? ( வாழ்த்துகள்
//

ஆமாம்பிரகாஷ் நீங்கள் சொல்வது சரிதான்.. இருவது வருடங்களுக்கு முன்னால் நான் யூத்த்தான். இப்போ வயசு ரகசியமா வச்சிக்கோங்க.. 25தான்.

Cable சங்கர் said...

/SAC -கிட்ட ஒரு கதை சொல்லுங்களேன்.. உங்களுக்கு வாய்ப்பு தரலேன்னாலும்.. உங்க ”கதைக்கு” ஒரு வாய்ப்பை தந்திடுவார் :))))))

வாழ்த்துக்கள் சங்கர் ://

சொந்த அனுபவம் ஏதாச்சும் இருக்குதா..?:)

Cable சங்கர் said...

/ஹலோ டைரக்டர் சார்,

பாடலாசிரியர் ஹி ஹி ஹி என்ன மறந்துடாதீங்க. என்னது ஹீரோ சான்ஸா? எனக்கு நடிப்பில் அவ்வளவு விருப்பம் இல்ல; இருந்தாலும் நீங்க கட்டாயப்படுத்துவதால் ....

கலக்கல் பயோ-டேட்டா. ஆனா, நம்ம வேலன் இல்ல ஆதி கிட்ட நீங்க மாட்டி இருக்கணும்.

அனுஜன்யா
//

அட என்ன இப்படி சொல்லிட்டீங்க.. சரி விடுங்க..ஹிரோவா நான் சேரனை போட்டுறேன்.

நல்ல வேளை ஆதிகிட்டயும், அண்ணாச்சி கிட்டயும் மாட்டல.. நான் தான் முந்திகிட்டேனே அனுஜன்யா..

Cable சங்கர் said...

/சீக்கிரம் இயக்குனராக ப்ராப்திரஸ்து
//

உங்கள் ஆசீர்வாதம் பலிக்கட்டும்.. நன்றி அறிவிலி.

Cable சங்கர் said...

/தலைவரே! எனக்கு வில்லன் வேஷம்தான் வேனும்... ரேப்பிங் சீன் எல்லாம் உண்டுயில்ல?
//

ஹை.. அதுக்குதான் நாங்க இருக்கோமில்ல. அசோக்.. எங்க கதைக்கு உங்க பின்னூட்டத்தை காணோம்.

Cable சங்கர் said...

/அண்ணா,

எல்லா உண்மையையும் எழுதிட்டு வயசு 25 ங்கறத எழுத மட்டும் ஏன் தயங்கறீங்க? தைரியமா சொல்லுங்க.//

இப்பத்தான் ரகசியத்தை உடைச்சேன்..

//நீண்டகால சாதனை : சீக்கிரம் படம் எடுத்துவிடுவேன் என்று சொல்லிக் கொண்டு நம்பிக்கையாய் இருப்பது.//

கவலையே படாதீர்கள். தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் பின் தர்மம் வெல்லும். அதற்கு வெகு அருகில் வந்து விட்டீர்கள்...

பிரபாகர்.
//

உங்கள் வாழ்த்துக்கு மிக்க் நன்றி..

Cable சங்கர் said...

/கேபிள்,

//தொழில் : சுயதொழில், சினிமா//

என்னா வில்லத்தனம்...?

பரவாயில்ல... வாழ்த்துக்கள்.


“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
//

என்ன அது வில்லத்தனம்.. சுயதொழிலா..?

Cable சங்கர் said...

///எதிரிகள் : எனக்கு வாய்ப்பு தராதவர்கள் :)//

ஏன்? இப்படில்லாம்..

சும்மாத்தான்..

//வயது : யூத்துகளின் வயதுதான்.//

ஆமாஆமா... சொல்லிகிட்டாங்க...

படித்தேன் ரசித்தேன்.
//

உங்களுக்கும் சொல்லித்தான் தெரியணுமா..?

Cable சங்கர் said...

/ரீட்டாவை கேட்டதாக சொல்லவும்(கடன்தான்?)
//

போற போக்க பாத்தா ரீட்டாவுக்கு பேட்டா கொடுக்காம போக மாட்டீங்க போலருக்கே..:(

Cable சங்கர் said...

/[[வயது : யூத்துகளின் வயதுதான்.]]]

ரீல் விடாமயே இருக்க முடியாதா..? யூத்தாம்ல யூத்து..!?
//

உனக்கு ஏன்யா இந்த காண்டு.. நீ என்னதான் இமயமலை மேல நின்னு என்னை யூத் இல்லைன்னு சொன்னாலும்,, என் இனிய தமிழ் வலை மக்கள் நம்ப மாட்டாங்க.. ஏன்னா அவங்க எல்லாம் நல்லவங்க..

Cable சங்கர் said...

/யோவ் அண்ணே...நீ சீக்கிரம் படம் பண்ணலன்னா என் பேரை மாத்தி வச்சுக்கிறேன்.சவாலாவே சொல்றேன்.
//

அண்ணே சவால்லாம் எதுக்குண்ணே.. நீங்க சொன்னதே போதும்..

Cable சங்கர் said...

/சீக்கிரம் படம் பண்ண வாழ்த்துக்கள்//

நன்றி அருப்புகோட்டை பாஸ்கர்.

Cable சங்கர் said...

/கூடிய விரைவில் இயக்குனராக வாழ்த்துக்கள் அண்ணே..//

மிக்க நன்றி ஜெட்லி..

Cable சங்கர் said...

/சிநேகா கு நீங்க எஸ்.எம்.எஸ் அனுப்புனது பத்தி சொல்லல
//

யூத் நாங்க ஆயிரம் வேலை செய்வோம் அதையெல்லாத்தையும் சொல்ல முடியாது கிருஷ்ணா..

Cable சங்கர் said...

/இத்த விட்டுட்டியே யூத்து..

சமீபத்திய சாதனை : தன்னை யூத்தாக காமிக்க கடும் முயற்சி செய்வது

சமீபத்திய எரிச்சல் : யாரும் அதை நம்பாதது.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
ஸ்ரீராம் ராத்திரி நாம பேசினதிலேர்ந்து உஙக்ளுக்கு புரிஞ்சிருக்குமே யூத்தா இலலியான்னு.. ஹைய்யா.. இனிமே ஒத்துகிடுவாரு..:)

Cable சங்கர் said...

/நீங்க சொன்ன சரி தான் தல//

ஓகே ரைட்டு.. அக்னி..

Cable சங்கர் said...

/பயோடேட்டா சூப்பர்

7:44 AM//

நன்றி ஜாக்கி
நன்றி சுப்பையா சார்..
நன்றி டிஆர்தினா
நன்றி மங்களூர் சிவா..
நன்றி அபுஅப்ஸர்
நன்றி இளா
ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும் ,வாழ்த்துக்கும்.

Sanjai Gandhi said...

நட்சத்திர வாழ்த்துகள்.. :)

Cable சங்கர் said...

/வேற யாராவது எழுதுவதற்கு முன்னாடி நீங்க முந்திகிட்டீங்களா?

எப்படிங்க இதெல்லாம்.

சீக்கிரமா இயக்குனராக எல்லாம் வல்ல ஆண்டவன் அருளுவாராக
//

மிக்க நன்றி அண்ணே.. உங்கள் வாழ்த்துக்கு. முதல் கேள்விக்கு ஆமாம்.

அதுசரி.. நீங்களும் ரீட்டாவை விசாரிக்கிறீங்க.. சரி.. அண்ணிகிட்ட ஒரு நடை பேசிரவேண்டியதுதான்.

Cable சங்கர் said...

///நீண்டகால சாதனை : சீக்கிரம் படம் எடுத்துவிடுவேன் என்று சொல்லிக் கொண்டு நம்பிக்கையாய் இருப்பது.

கண்டிப்பா முடியும் கேபிள். நீங்களாவது முயற்சி பண்றீங்க. நான் முயற்சி ஏதும் பண்ணாமலேயே இப்படி தான் சொல்லிக்கிட்டு அலையறேன் :)
//

நீஙக்ளும் முயற்சி செய்யுங்க.. ஜெயிப்போம்.. ட்ரூத்.

Cable சங்கர் said...

நன்றி டம்பிமேவீ.. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்,

கோவி.கண்ணன் said...

கேபிள் சங்கர் மற்றொரு ஷங்கராக வருவார்னு நம்பிக்கை இருக்கு. வாழ்த்துகள் !

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள் தல. எப்படியும் சீக்கிரமா உங்க டைரக்சன்ல ஒரு சிறந்த படத்த பார்த்திடுவோம்.

Prabu M said...

//நண்பர்கள் : சினிமா பற்றி பேசும், சிந்திக்கும்,எல்லோரும்//

அப்போ நிச்சியம் நம்ம நண்பர்கள்தான்!!
என் பதிவுக்கு வந்தமைக்கு மிகவும் நன்றி கேபிள் அண்ணா!!

Cable சங்கர் said...

/கேபிள் சங்கர் மற்றொரு ஷங்கராக வருவார்னு நம்பிக்கை இருக்கு. வாழ்த்துகள் !//
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி கோவி.கண்ணன்.

Cable சங்கர் said...

/நட்சத்திர வாழ்த்துகள்.. :)//

எவ்வள்வு லேட்டா சொல்றீங்க.. :)

Cable சங்கர் said...

/வாழ்த்துக்கள் தல. எப்படியும் சீக்கிரமா உங்க டைரக்சன்ல ஒரு சிறந்த படத்த பார்த்திடுவோம்./

அஹா.. இப்பவே கண்ணக் கட்டுதே.. யோ..

Cable சங்கர் said...

/அப்போ நிச்சியம் நம்ம நண்பர்கள்தான்!!
என் பதிவுக்கு வந்தமைக்கு மிகவும் நன்றி கேபிள் அண்ணா!!
//

எதுக்கு நன்றியெல்லாம் பிரபு.. நாம் பேசுவோம்

Raju said...

\\பிடித்த வேலை : சமீபத்தில் பதிவு எழுதுவது \\

அப்போ, நீங்க Blog ல எழுதலயா..?

\\பிடித்த உணவு : எது எங்கே கிடைத்தாலும் அதில் பெஸ்ட் எதுவோ அது.\\

முடிவா என்ன சொல்றீஙக ஸார்...?

\\பிடிக்காத உணவு : தெரியல\\

இனிமேதான் கண்டுபிடிக்கனுமோ..?

\\நீண்டகால எரிச்சல் : நம்ம ஊர் வெயில்தான்\\

வசந்த பாலன் மேல உங்களுக்கென்ன கோபம், சாரு மேட்டரா..?

:)

வரதராஜலு .பூ said...

//வயது : யூத்துகளின் வயதுதான்.//

இன்னும் பத்து வருஷம் கழிச்சி (19.08.2019-ல)பயோடேடா போட்டாலும் இந்த லைன் மட்டும் மாறகூடாது. சரிங்களா கேபிள் சங்கர். அப்பிடியே மெயின்டெய்ன் பண்ணுங்க.

kavi said...

//எதிரிகள் : எனக்கு வாய்ப்பு தராதவர்கள் :)//

அதில் சேரனுக்குத்தானே முதலிடம் ????????????

Cable சங்கர் said...

/அதில் சேரனுக்குத்தானே முதலிடம் ????????????
//

kavi.. எனக்கும் சேரனுக்கும் எந்தவிதத்திலும் பர்சனல் ப்ரச்சனையில்லை. நீங்கள் நினைப்பதை போல.. புரிந்து கொள்ளுங்கள். அதே போல் நான் அவரிடம் உதவியாளர் ஆக முயற்சி செய்ததும் இல்லை.. என் ஜெனர் வேறு .. ஒகே.. நோ.. ஓன் கற்பனை..:) என் விமர்சனம்தான் ஒன்றும் மட்டும்தான் ப்ரச்சனை என்றால் பரவாயில்ல. பலருடய விமர்சனங்களை என் கருத்தையே வழி மொழிகிறது.. நான் படத்தில் உள்ள பல நல்ல விஷயஙக்ளை பற்றியும் சொல்லியுள்ளேன்.இந்த பின்னூட்டம் கூட நீஙக்ள் பெரிதும் நம்பிய சேரனின் படம் ஃபெயிலியர் ஆனதை ஏற்க மறுக்கிற உங்க்ள் குழந்தை மனசுக்காகத்தான்.

Cable சங்கர் said...

/இன்னும் பத்து வருஷம் கழிச்சி (19.08.2019-ல)பயோடேடா போட்டாலும் இந்த லைன் மட்டும் மாறகூடாது. சரிங்களா கேபிள் சங்கர். அப்பிடியே மெயின்டெய்ன் பண்ணுங்க//

பொறவு நீஙக் இவ்வளவு சொல்லிட்டீங்க செய்யாம இருப்பேனா..வரதராஜூ

Cable சங்கர் said...

kavi,. சேரனை வாய்ப்பு தராதவர்கள் லிஸ்டில் வைக்க அவர் ஒன்றும் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கு தயாரிப்பாள்ர்கள் கிடையாது.. ஐ டோண்ட் ஹாவ் பர்சனல் க்ரட்சஸ்..

Cable சங்கர் said...

/\\பிடித்த வேலை : சமீபத்தில் பதிவு எழுதுவது \\

அப்போ, நீங்க Blog ல எழுதலயா..?//

தமிழ்ல சொல்லனூம்யா.. என்ன தமிழனோ நீ..?

\\பிடித்த உணவு : எது எங்கே கிடைத்தாலும் அதில் பெஸ்ட் எதுவோ அது.\\

முடிவா என்ன சொல்றீஙக ஸார்...?

\\பிடிக்காத உணவு : தெரியல\\

இனிமேதான் கண்டுபிடிக்கனுமோ..?

சாப்டாத்தானே தெரியும்..

\\நீண்டகால எரிச்சல் : நம்ம ஊர் வெயில்தான்\\

வசந்த பாலன் மேல உங்களுக்கென்ன கோபம், சாரு மேட்டரா..?

:)

அட ஆரம்பிச்சிட்டாஙக்பா..

ராஜன் said...

வாழ்த்துக்கள்

Unknown said...

’கேபிள்’- இது நீங்க படிச்சு வாங்குன பட்டமா சார்???

kavi said...

ஐயோ, நான் சும்ம கிண்டலுக்காக கேட்டேன், தப்பா நினைச்சிக்கிட்டீங்களே, ஸார்.

பா.ராஜாராம் said...

வாழ்த்துக்கள் சங்கர்!கலக்கல் பயோ-டேட்டா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vazhthukkal nanbaaaa

Unknown said...

//.. /\\பிடித்த வேலை : சமீபத்தில் பதிவு எழுதுவது \\

அப்போ, நீங்க Blog ல எழுதலயா..?//

தமிழ்ல சொல்லனூம்யா.. என்ன தமிழனோ நீ..? ..//

தமிழ்ல சொன்ன வரிவிலக்கு உண்டுங்களா..??

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//வயது : யூத்துகளின் வயதுதான்.//


எத்தனை யூத்துக்களின் வயது

அத்திரி said...

//வயது : யூத்துகளின் வயதுதான்.//அப்படியா 45ஆ 50ஆ

Ashok D said...

//cable Sankar says ஹை.. அதுக்குதான் நாங்க இருக்கோமில்ல. அசோக்.. எங்க கதைக்கு உங்க பின்னூட்டத்தை காணோம்//


கதைகள் ரெண்டுமே starting செம்ம dry தலைவா..உள்ள போக முடியல ... plz let me give some other attempt.

y u didnt call me ,,, I missed my mobile so that I missed ur no. also? If u r free.. plz call me my new # 9962238002.

நாஞ்சில் நாதம் said...

சீக்கிரம் டையர்டக்கர் (டைரக்டர்)ஆக வாழ்த்துக்கள் . Preview க்கு கூப்பிடுங்க பாஸ்

manjoorraja said...

நட்சத்திர வாழ்த்துகள் யூத்து.

ஹீரோ மாதிரி இருக்கீகளே! நீங்களே ஏன் சேரன் மாதிரி நடிக்க கூடாது (உண்மையாத்தான் கேக்கறேன்.)

Cable சங்கர் said...

/நட்சத்திர வாழ்த்துகள் யூத்து.

ஹீரோ மாதிரி இருக்கீகளே! நீங்களே ஏன் சேரன் மாதிரி நடிக்க கூடாது (உண்மையாத்தான் கேக்கறேன்.)
//

ஏன் இந்த கொலைவெறி..? மஞ்சூர் ராசா..

Cable சங்கர் said...

/சீக்கிரம் டையர்டக்கர் (டைரக்டர்)ஆக வாழ்த்துக்கள் . Preview க்கு கூப்பிடுங்க பாஸ்
//

உங்க வாழ்த்து பலிக்கட்டும்.. நாஞ்சில் நாதம்.

Cable சங்கர் said...

/கதைகள் ரெண்டுமே starting செம்ம dry தலைவா..உள்ள போக முடியல ... plz let me give some other attempt.

y u didnt call me ,,, I missed my mobile so that I missed ur no. also? If u r free.. plz call me my new # 9962238002.//

ஒரு வாட்டி போயிட்டு சொல்லுங்க.. அப்புறம் நான் கூப்பிட்டேன் நீஙக்தான் எடுக்கல..

Cable சங்கர் said...

/அப்படியா 45ஆ 50ஆ
//

யோவ் அத்திரி.. யூத்துன்னா எவ்வளவுனு தெரியாது.. ஷட் அப்.. சைலன்ஸ்..

Cable சங்கர் said...

/’கேபிள்’- இது நீங்க படிச்சு வாங்குன பட்டமா சார்??//

இல்ல கடல்.. செஞ்சு வாங்கின பட்டம்..

Cable சங்கர் said...

நன்றி ராஜன்
நன்றி புருனோ..
உங்கள் வருகைக்கும், பின்னூட்டதிற்கும்

Cable சங்கர் said...

/.வாழ்த்துக்கள் சங்கர்!கலக்கல் பயோ-டேட்டா.

நன்றி ராஜாராம்

நன்றி ரமேஷ் உங்கள் வருகைக்கும், பின்னூட்டதிற்கும்.

வரதராஜலு .பூ said...

//மஞ்சூர் ராசா said...

நட்சத்திர வாழ்த்துகள் யூத்து.

ஹீரோ மாதிரி இருக்கீகளே! நீங்களே ஏன் சேரன் மாதிரி நடிக்க கூடாது (உண்மையாத்தான் கேக்கறேன்.)//


//ஏன் இந்த கொலைவெறி..? மஞ்சூர் ராசா..//

அதானே, அது என்ன சேரன் மாதிரி? உங்க ரேஞ்ச் என்னா?

Sasi said...

for which movie u write story and dialog?