Posts

Showing posts with the label கோடம்பாக்கம்

சாப்பாட்டுக்கடை

Image
ஒரே இடத்தில் சைவம், அசைவம், இரண்டும் கிடைத்தால், அதுவும்  சுமாரான விலையோடு, நல்ல தரமான ருசியோடு, கிடைத்தால் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும். சென்னை கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் மெயின் ரோடில் இருக்கும் த்ரினேத்ரா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருக்கும் இடத்தில் மூன்று கிஸோக்குகளில் ஸ்பைஸி பாயிண்ட், தோசா பாயிண்ட் என்று  பாஸ்ட் புட் ஜாயிண்டுகளாக ஆரம்பித்திருக்கிறார்கள். ஸ்பைசி பாயிண்டில் பிரியாணி, ப்ரைட் ரைஸ், தந்தூரி, மற்றும் சிக்கன், ஸ்பெஷல் கிரேவிகள் என்று வெஜ் மற்றும் நான் வெஜ் அயிட்டங்கள் உடனடியாய் தயாரிக்கப்பட்டு தரப் படுகிறது. அதே தோசா பாயிண்டில் தோசை, பொடி தோசை, பெசரட்டு தோசை, உப்புமா தோசை, வெங்காய ஊத்தப்பம், அடை அவியல் என்று லிஸ்ட் கட்டியம் கூறுகிறது. பிரியாணி டேஸ்ட் நன்றாக இருக்கிறது. அத்துடன் இங்கு தரப்படும் நான் வகைகள் மிக நன்றாக இருக்கிறது. சைட் டிஷ் வகைகளில் செட்டிநாடு வகைகள் சுவையாக இருக்கிறது. சைனீஸ் பற்றி தெரியவில்லை. தோசை வகைகளில் மூன்று விதமான சட்னியுடன், நல்ல திக்கான சாம்பாருடன் தருகிறார்கள். அடையை அவியலுடன் சாப்பிட்டுப் பாருங்கள் ம்…. டிவைன். அவியல் அவ்வளவு ட...