Thottal Thodarum

Dec 30, 2013

கொத்து பரோட்டா -30/12/13, நடுநிசிக்கதைகள், மதயானைக்கூட்டம், விழா, அடல்ட் கார்னர், கங்காரு

இணைய உலகில் 2006 முதல் இயங்கி வந்தாலும், வலைப்பதிவராய் தீவிரமாய் ஆரம்பித்தது 2008லிருந்துதான். அப்போதிலிருந்து என் வாழ்கையில் நோ லுக்கிங் பேக் என்றே சொல்ல வேண்டும். அதற்கு காரணம் வாசகர்கள், நண்பர்கள், பதிவர்களாகிய நீங்கள். இதில் 2010 ஆண்டு என் வாழ்க்கையில் ஒர் முக்கியமான வருடம் அவ்வருடத்தில் தான் என்னுடய முதல் சிறுகதை தொகுப்பான  லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் வெளியானது. அதன் பிறகு  இந்த நான்கு வருடங்களில் சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, கொத்து பரோட்டா, சினிமா என் சினிமா, தெர்மக்கோல் தேவதைகள்,  கேபிளின் கதை, என அடுத்தடுத்து புத்தகங்கள் வெளியாயின. எல்லா புத்தகங்களுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவு அபாரம். முதல் புத்தகமே போட்ட ஆயிரம் காப்பி விற்பது என்பது கனவான விஷயம். அக்கனவும் பலித்தது. அடுத்த வெளிவந்த சினிமா வியாபாரம் புத்தகம் என் வாழ்க்கையில் இன்னொரு கதவை திறந்துவிட்ட புத்தகம். கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, இரண்டாம் பதிப்பாய் மதி நிலையம் மூலம் வெளிவந்து இன்றும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்ற புத்தகம். இப்படி தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்ற புத்தகங்களில் புதிய வெளியீடாக மதி நிலையம் “சாப்பாட்டுக்கடை” புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்பு கொடுத்த அதே ஆதரவை இப்புத்தகத்திற்கும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு.. உங்கள் முன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Dec 23, 2013

கொத்து பரோட்டா -23/12/13 - சினிமா ஸ்பெஷல்- தலைமுறைகள் - பிரியாணி - என்றென்றும் புன்னகை - Dhoom 3

தலைமுறைகள்
மூத்த கலைஞர் பாலு மகேந்திராவின் புதிய படைப்பு. இது நாள் வரை ஃபிலிமில் படமெடுத்துக் கொண்டிருந்தவர் கால மாற்றத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு டிஜிட்டலில் களமிறங்கியிருக்கிறார். புதிய பரிமாணமாய் நடிப்பு. ஒளிப்பதிவில் தனக்கென ஒரு பாணியை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் புதிய டெக்னாலஜியில் அவனவன் செல் போன் கேமராவில் எல்லாம் படமெடுத்துவிட்டு, அதை சினிமாஸ்கோபாக மாற்றி திரையெங்கும் க்ரெயின்ஸோடு வெளியிடும் வேளையில், இயல்பான வெளிச்சத்தில் சும்மா நச்சென “35 எம்.எம்”மில் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் ப்ரேம்களோடு படமாக்கியிருக்கிறார். இருந்தாலும் வீடியோ ஃபீலை மறைக்க முடியாததன் காரணம் டெக்னாலஜியா? அல்லது படத்தின் கதையா என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இளையராஜா தன் பழைய ஆர்கேவிலிருந்து நாலைந்து விஷயங்களை எடுத்து விட்டிருக்கிறார். இதை ஒரு அழகிய குறும்படமாய் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@

Dec 16, 2013

கொத்து பரோட்டா -16/12/13

தொட்டால் தொடரும்
வெள்ளியன்று இணையத்தில் முதல் முறையாய் “தொட்டால் தொடரும்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைனை அறிமுகப்படுத்தினோம். திரையுலக நண்பர்கள், விமர்சகர்கள, பதிவர்கள், வாசக நண்பர்கள் என அனைவராலும் பெரும் வரவேற்பை பெற்றது. கல்யாண சமையல் சாதம் தயாரிப்பாளர், அருண் வைத்தியநாதன், சி.வி.குமார், ரவீந்தர் சந்திரசேகரர், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்,  அழைத்து பாராட்டி வாழ்த்தினார்கள். எல்லோருக்கும் இப்படத்தின் மீது ஒர் எதிர்பார்ப்பு இருப்பதை நினைத்து ஒர் பக்கம் சந்தோஷமாய் இருந்தாலும், இன்னொரு பக்கம் பொறுப்பு அதிகமாகவது நினைத்து லேசாய் மிக லேசாய் நடுக்கம் வரத்தான் செய்கிறது. எனினும் உங்களின் மேலான ஆதரவில் வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கையோடு உங்களின் பார்வைக்கு.. ஒர் வேண்டுகோள். பதிவுலக நண்பர்கள் அவரவர் வலைப்பூக்களில் “தொட்டால் தொடரும்”  டிசைனை போட்டு உங்கள் ஆதரவை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஃபேஸ்புக், டிவிட்டர் தொடர்புக்கு  https://www.facebook.com/ThottalThodarum , https://twitter.com/thottalthodarum 
@@@@@@@@@@@@@@@@@@@@@@

Dec 9, 2013

கொத்து பரோட்டா - 09/12/13

சாப்பாட்டுக்கடை
சாப்பாட்டுக்கடை புத்தகமாய் வெளிவந்து சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது என்றார் பதிப்பாளர். பா.ராகவன் படித்துவிட்டு இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமோ என்று ட்விட்டரில் பாராட்டி  சொல்லியிருந்தார். புத்தகத்தை ஆன்லைனின் வாங்க விரும்புவோர் இங்கே அழுத்தவும்
@@@@@@@@@@@@@@@@@@@

Dec 3, 2013

நடு நிசிக் கதைகள் - 3

நண்பர் ஒருவரின் பார்ட்டி. போலீஸ் கெடுபிடியினால் எல்லோரும் விரைவாக கிளம்ப, நடந்து செல்லும் தூரத்திலிருந்தவர்களும், வேறொருவரின் வண்டியில் பிரயாணப்பட இருக்கும் ஆட்களைத் தவிர வேறொருவரும் இல்லை. ஒரு விதத்தில் இந்த கெடுபிடி கூட நல்லதே என்று தோன்றியது. நேரம் ஆக ஆக வாதம் விவாதமாகி குடுமிப்பிடி சண்டையாகிப் போகும் நிலைக்கு பல சமயம் இந்த கெடுபிடி புல்ஸ்டாப் போடுகிறது.

Dec 2, 2013

கொத்து பரோட்டா -02/12/13

தொட்டால் தொடரும்
இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது இந்த வருடமும், தொட்டால் தொடரும் படப்பிடிப்பும்.. இரண்டுமே முடியப் போகிறது. இன்னமும் ஒரிரு வாரங்களில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பித்துவிடும். தொடர் படப்பிடிப்பினால் காலையில் ஷுட்டிங்கிற்கு கிளம்பினால் இரவு வீடு மீண்டும் ஷூட் என்ற நிலையில் நேற்று இரவுதான் சென்னையை ஒரு ரவுண்டு அடித்தேன். இந்த இரண்டு மாதங்களில் தி.நகரில் இரண்டு இடங்களில் சரவணா ஸ்டோர்ஸ்காரர்கள் நகைக்கடையும், பர்னீச்சர் கடையும் ஆரம்பித்திருக்கிறார்கள். நல்லா காலியா இருந்த ஜி.என்.செட்டி சாலையையும் ட்ராபிக் ஆக்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த முனையில சரவணா ஸ்டோர்ஸ், இன்னொரு முனையில போத்தீஸ்னு வந்திருச்சு. உஸ்மான் ரோடு பூராவும் கடைகளாகி அங்கேயும் மூச்சு திணறுது. நடுவுல பேட்டாக்காரன் வேற ஒரு கடை போட்டிருக்கான். எகானமி மோசமா இருக்குன்னு சொல்லிட்டிருக்காங்க.. ஆனா வர்ற கடைகளைப் பார்த்தா அப்படித் தெரியலையே..
@@@@@@@@@@@@@@@@@@

Dec 1, 2013

விடியும் முன்

 

ரொம்ப நாளாகிவிட்டது இப்படி ஒர் கிரிப்பிங் திரில்லரைப் பார்த்து.  நான்கு பேர்கள், மூன்று காரணங்கள், இரண்டு பேர், ஒரு நாள் என்ற கேப்ஷனே ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் பிறகு ட்ரைலர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் வெளியாவதற்கு முன்பே பத்திரிக்கையாளர் காட்சி போட்ட தைரியம் வேறு என்னுள் இருந்த ஆர்வத்தை மேலெழுப்ப.. தொட்டால் தொடரும் படப்பிடிப்பு முடிந்தவுடன் நேற்றிரவு கிளம்பிவிட்டேன்.