Thottal Thodarum

Mar 30, 2012

Agent Vinod

14994640_agent-vinoth330x234mar21 ஸ்ரீராம் ராகவனின் படங்கள் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அப்படியொன்றும் பத்து படம் பண்ணிய இயக்குனர் இல்லை. எண்ணி மூன்றே முன்று படங்கள் தான் இயக்கியிருக்கிறார். தன்னுடய முதல் FTIIக்கான டிப்ளமோ படத்திற்கு தேசிய விருது வாங்கியவர். ராமன் ராகவ் எனும் இந்திய சீரியல் கில்லரைப் பற்றிய டாக்குமெண்டரி எடுத்து கவனிக்கப்பட்டவர். ராம்கோபால் வர்மாவின் குழுவில் இரண்டு மூன்று படங்களுக்கு திரைக்கதை செய்தவர். அவரின் தயாரிப்பில் சாய்ப், ஊர்மிளாவை வைத்து ஏக் ஹசீனாதீ எடுத்து வெற்றியை தொட்டவர். அடுத்த வந்த ஜானி கத்தார் படம் பெரிய அளவில் வெற்றியடையாவிட்டாலும், பெரும் பாராட்டைப் பெற்ற படம். இதோ இப்போது ஏஜெண்ட் வினோத்.

Mar 29, 2012

சாப்பாட்டுக்கடை – நியூ உட்லான்ஸ்

woolands பெங்களூரிலிருந்து ஃபேஸ்புக் நண்பர் ஷங்கர் கிருஷ்ணமூர்த்தி வந்திருந்தார். ஒரு படப்பிடிப்பிற்காக வந்திருந்தவர் நியூ உட்லான்ஸில் தங்கியிருக்க, அவரை சந்திக்க ஞாயிறு இரவு ஒன்பது மணிக்கு சென்றிருந்தேன். இனிமையான நண்பர் அவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நிறைய விஷயம் இருக்கிறது. பல் துறையில் பழகி வருபவர். அதில் நடிப்பும் ஒன்று.  நான் சென்றிருந்த போது அவர் டின்னரை முடித்திருந்தார். சிறிது நேரம் பரஸ்பரம் பேசிக் கொண்டிருந்த பிறகு “அடடா.. கிச்சன் க்ளோஸ் பண்ணிருவாங்க.. என்ன சாப்பிடுறீங்க?. இங்க அட்டகாசமான ஒரு அயிட்டம் கிடைக்கும். உங்களுக்கு ஓகேன்னா உடனடியா எடுத்துட்டு வரச் சொல்றேன்” என்றார்.

Mar 28, 2012

Joy”full” சிங்கப்பூர்-2


IMGA0240                                                      சிங்கையின் சுப்ரீம் கோர்ட்
எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த நேரத்தில், எனக்கு மட்டும் ஏன் இம்மாதிரி நடகக் வேண்டும்? என்று என்னையே கேட்டு நொந்து போகும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது? சரியாய் சிங்கப்பூர் சாங்கி ஏர்போர் ட் (பட்ஜெட்) சேருவதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு அந்த சம்பவம் நடந்தது. எப்படி எடுத்து கொள்வது இதை வரவேற்பாகவா? அல்லது அச்சுறுத்தலாகவா? மனம் குழம்பி போனேன்.

Mar 27, 2012

Mr.Nookayya

wp-11mrnookayya1366 மோகன்பாபுவின் இரண்டாவது மகனான மனோஜின் படங்கள் கொஞ்சம் ஸ்டைலிஷாக இருக்கும். அந்த வகையில் இந்தப் படமும் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு சென்றேன். ஏமாற்றவில்லை என்றே சொல்ல வேண்டும்.

Mar 26, 2012

கொத்து பரோட்டா 26/03/12

புதிய தமிழ் படங்களே ரிலீசான நாள் முதல் காத்து வாங்கிக் கொண்டிருக்கும் போது அறுபதுகளில் வந்த கர்ணன் இரண்டாவது வாரம் சாந்தியில் மதியக் காட்சி ஹவுஸ்புல் போர்டு போட்டிருந்தது ஆச்சர்யமளித்தது. தியேட்டர் மேலாளர் தெரியுமென்பதால் குசலம் விசாரித்தேன். சமீப காலத்தில் பெரிய நடிகர்கள் படங்கள் கூட ஹவுஸ்புல் ஆனதில்லை. ஆனால் கர்ணன் இரண்டு வாரமாக ஹவுஸ்புல்லாய் ஓடிக் கொண்டிருக்கிறது என்றார். இந்த போர்டை தொடர்ந்து வாரக்கணக்கில் மாட்டியே பல வருடங்கள் ஆகிவிட்டதாக சொன்னார். பார்க்கிங்கில் இருந்தவர் முகம் முழுக்க பல்லாய் ரொம்ப நாளாச்சு இவ்வளவு வண்டிய ஒட்டுக்கா பார்த்து என்றார். காண்டீன் காரர்களின் முகப் பொலிவை சொல்ல வேண்டியது இல்லை. இப்படி பல பேருக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையை, கொடுத்து சிவந்த கர்ணன் படம் மூலம் நடந்திருப்பது ஒரு சிங்க் என்றுதான் சொல்ல வேண்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@

Mar 24, 2012

ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி

Aayiram Muthangaludan Thenmozhi Movie Stills (9)சில ஆயிரங்கள் செலவில் நடத்தப்படும் நாடகங்களுக்கு ரிகர்சல் பார்க்கும் போது, ஏன் லட்சம் கோடி செலவு செய்யும் சினிமாவிற்கு ரிகர்சல் எடுக்கக் கூடாது என்று கமல்ஹாசன் சொன்னதை வைத்து நடிகர்களுக்கு ரிகர்சல் பார்த்து எடுக்கப்பட்ட படம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். முகமே காட்டாத ஒரு காதல் பாடல் வேறு இருக்கிறது என்றார்கள். சமயங்களில் சில படங்களுக்கு அருமையான டைட்டில் கிடைத்துவிடும்.  அது ஒரு எதிர்பார்ப்பை கொடுத்துவிடும். அப்படி கொடுத்த பெப்பை தக்க வைத்துக் கொள்ளுமா? என்று பார்த்தால் சில படங்கள் தக்க வைத்துக் கொண்டுவிடும். அப்படி இந்த தேன்மொழி தக்க வைத்துக் கொள்வாளா? என்ற கேள்வியோடு படம் பார்க்க ஆரம்பித்தேன்.

Mar 22, 2012

Joyfull சிங்கப்பூர் - 1


IMGA0251ரு பயணம் எனக்கு இவ்வளவு சந்தோஷத்தை, இவ்வளவு நட்பை, இவ்வளவு ஆச்சர்யங்களை, அதிர்ச்சிகளை, கண்ணீரை அளிக்கும் என்று எண்ணவேயில்லை என்பது நிஜம். ஆம் இதை நிஜம் என்று உணர்ந்து முடிப்பதற்குள்ளேயே பயணம் முடிந்து திரும்பிவிட்டேன். புக் கிரிக்கெட்டில் ஓடும் காட்சியை போல் சடசடவென ஓடி மறைந்து விட்டது. அவ்வளவு வேகம்.

Mar 21, 2012

இத்தாலி - டென்மார்க்

இத்தாலியின் மிலன் நகரிலும், டென்மார்க் கோபஹேகன் நகரிலும் வாசகர்கள், நண்பர்கள் யாரேனுமிருந்தால் என் மின்ஞசலில் தொடர்பு கொள்ளவும். நண்பருக்காக..

Mar 20, 2012

Fefsi

தொழிலாளர்கள் ப்ரச்சனை. சம்பள ஏற்றம். தயாரிப்பாளர்களுக்கும் தொழிலாளர்களுக்குமான முட்டல் மோதல் என்று நாளுக்கு நாள் சூடேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் நிஜத்திலேயே இவர்களின் அமைப்பு செய்யும் அராஜகங்கள் மிக அநியாயம். ஒரு படத்தின் பட்ஜெட்டில் தயாரிப்பாளர்களின் தேவைக்கு ஏற்ப ஆட்களை உபயோகித்தால் சுமார் 20-30 சதவிகிதம் செலவு குறையும்.  ஆனால் அதை செய்யவும் விட மாட்டார்கள். அதையெல்லாம் மீறி இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் தான் இப்படி எல்லோரும் முண்டா தட்டி நிற்கக் காரணம். உதாரணமாய் இரண்டு நிகழ்வுகளை இங்கே பகிர்கிறேன்.

Mar 19, 2012

கொத்து பரோட்டா 19/03/12

பெரிய படங்கள் ஏதுமில்லாமல் தியேட்டர்களில் ஈயடிக்கிறது. வெளியாகியிருக்கும் புதிய படங்களும் பெரியதாய் சோபிக்கவில்லை. பரிட்சை நேரம் வேறு அதனால் பெரிய படங்களின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சின்னப் படங்களை பார்ப்பதற்கோ அல்லது அதைப் பற்றி யோசிப்பதற்கோ மக்களுக்கு நேரமில்லை. இல்லை அவர்களது கவனைத்தை இவர்கள் கலைக்கவில்லை. கர்ணன், குடியிருந்த கோயில், வெங்காயம், ஆரண்யகாண்டம் போன்ற படங்களை ரீரிலீஸ் செய்ய முடிவெடுத்து சில படங்கள் வெளியாகியும், இன்னும் சிலது வெளியாகவும் இருக்கிறது. தேவிபாரடைஸில் இந்த வாரம் படமே வெளியிடவில்லை. கேட்டால் டெக்னிக்கல் ப்ரச்சனை என்றார்கள். ஆனால் படம் போடவில்லை என்பதுதான் உண்மை என்று சொல்கிறார்கள். மீண்டும் அமீர் -அதாவது பெப்ஸி- தயாரிப்பாளர்கள் ப்ரச்சனையை கிளப்பியிருக்கிறார்கள். நொந்து போயிருக்கும் தமிழ் சினிமா எழுந்திருப்பது கொஞ்சம் கஷ்டம் தான் போலிருக்கிறது. கிடைக்கிற கேப்பில் அமீர் கொஞ்சம் கதையை ரெடி செய்து ஜெயம் ரவியை ரிலீஸ் செய்யலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Mar 18, 2012

விண்மீன்கள்

vinmeengal-review
மறைந்த பழம்பெரும் இயக்குனர் கே.சங்கரின் பேரன் விக்னேஷ் மேனனின் முதல் படம். பல சிவாஜி, எம்.ஜி.ஆர் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சங்கர் அவர்கள். அவரின் பேரனிடமிருந்து கமர்ஷியலில்லாத வித்யாசமான படம்.

Mar 17, 2012

வெள்ளிக்கிழமை ஓப்பனிங்

ஒவ்வொரு வாரமும் புதுப் படங்கள் வெளியான வண்ணம் இருந்தாலும் ஓப்பனிங் என்று சொல்லப்படும் மக்கள் கூட்டம் மிகச் சிலப்படங்களுக்கே கிடைக்கும் அதுவும் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் படத்திற்கு மட்டுமே.  அப்படி ஓப்பனிங் கிடைக்கக்கூடிய நடிகர்களின் படங்கள்தான் தோற்றாலும் ஜெயித்தாலும் பந்தயம் கட்டி விளையாடக்கூடியவை.

Mar 16, 2012

கழுகு

 Kazhugu_Movie_Stills3d95bf238db89055d62a969a98ad06d9 அலிபாபா, கற்றது களவுக்கு பிறகு கிருஷ்ணா மிகவும் எதிர்பார்த்திருந்த படம்.  சூப்பர் ஸ்டாரின் படப்பெயரை மீட்டெடுத்து வைத்திருக்கிறார்கள்.  மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் பிணங்களை மீட்கும், நான்கு பேரின் வாழ்க்கையை பற்றிய கதை என்பதால் கொஞ்சம் ஆர்வமாய்த்தான் இருந்தது. அந்த ஆர்வத்தை தக்க வைத்ததா என்பதை பார்ப்போம்.

Mar 14, 2012

இன்ஷூரன்ஸ்

United India Insurance Company வண்டி என்கிற ஒன்றை நாம் சொந்தமாக்கிக் கொள்ள ஆரம்பித்ததிலிருந்து இன்ஷூரன்ஸ் நம்முடன் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறது. லைப் இன்ஷூரன்ஸ் எல்லாம் நம் விருப்பத்திற்கும், வசதிக்கும் ஏற்றார் போலத்தான் தெரிந்தெடுக்கிறோமே தவிர, இதற்கு கட்டுவது போல கட்டாயமாக்கபட்டு கட்டுவதில்லை. ஆனால் இப்படி இன்ஷூரன்ஸை செய்யச் சொல்லுவதை பற்றி குறை சொல்ல இந்தக் கட்டுரையல்ல. இன்ஷூரன்ஸ் தெருவில் போகிறவர்களுக்கும் ஓட்டுபவர்களூக்கும் மிக அத்யாவசியமான ஒரு விஷயம். அதை அவர்கள் செய்யும் முறையைப் பற்றியதாகும்.

Mar 13, 2012

சாப்பாட்டுக்கடை – சென்னை ஜூனியர் குப்பண்ணா மெஸ்

2012-03-10 14.00.49 ஒவ்வொரு ஊருக்கு எப்படி ஒரு பெருமை உண்டோ அது போல ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உணவகம் பிரபலமாகவும், பெருமை சேர்ப்பதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட உணவகங்களில் ஈரோட்டுக்கென்றே ஒரு தனிப் பெருமை சேர்த்ததில்  ஜூனியர் குப்பண்ணா மெஸுக்கும் ஒரு பங்கு உண்டு.

Mar 12, 2012

கொத்து பரோட்டா - 12/03/12

சென்ற வாரம் பாண்டியில் கருணாஸ் நடிக்கும் சந்தமாமா படத்தில் பல வருஷங்களுக்கு பிறகு நடிக்கப் போனதால் கொத்து பரோட்டா எழுத முடியவில்லை. அதற்காக தொலைபேசியிலும், மெயிலிலும், டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் துக்கம் விசாரித்தும்,அப்பாடி வரவில்லை என்று சந்தோஷப்பட்டவர்களுக்கும் நன்றி. இதை சொன்னதுக்கு அரைப் பெடல் அடித்துக் கொண்டு யாராவது ஒருவர் ஒயர் பிஞ்சு போச்சு என பின்னூட்டமிடுவார் அவருக்கும் என் நன்றிகள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Mar 10, 2012

Kahaani

14993810_kahaani_330x234_9mar12 ரொம்ப வருஷம் ஆகிவிட்டது இம்மாதிரியான புத்திசாலித்தனமான த்ரில்லரை இந்தியத் திரையில் பார்த்து. சமீபத்தில் பார்த்த திறமையான த்ரில்லர் தமிழில் மெளனகுரு. வித்யாபாலனுக்கு சிறந்த நடிகை பட்டம் பெற்ற நேரத்தில் வந்திருக்கும் படம்.

Mar 7, 2012

சாப்பாட்டுக்கடை – வைரமாளிகை

2012-02-27 22.44.26 ரெண்டு வருடங்களுக்கு முன் மணிஜி, ரமேஷ்வைத்யாவுடன் குற்றாலத்திற்கு போயிருந்த வேளையில் நல்ல சாப்பாட்டுக்கடையை தேடிய போது எல்லோரும் சொன்னது, வைரமாளிகை கடையைப் பற்றித்தான். பரோட்டாவுக்கும், சிக்கனுக்கும் செங்கோட்டை பார்டர் கடைதான் பெஸ்ட் என்று பெயர் இருந்தாலும், திருநெல்வேலியிலேயே அந்த தரத்துக்கு ஒரு பரோட்டா கடை இருக்கிறது என்ற போது டேஸ்ட் செய்யாமல் வருவது சரியில்லை என்று தோன்றியதால் ஒரு விஸிட் அடித்தோம். அவர்கள் அங்கு கொடுத்த பரோட்டாவும், தேங்காய் எண்ணையில் பொறித்த நாட்டுக் கோழியையும் இன்று நினைத்தாலும், எச்சிலூறும் அப்படி ஒரு சுவை. அதன் பிறகு யார் திருநெல்வேலிக்கு போனாலும் திருநெல்வேலிக்காரனுகே அல்வா கடையை சொல்லியது போல, அந்தக்கடையை பற்றிச் சொல்லாமல் விட்டத்தில்லை.

Mar 6, 2012

கர்ணன் சொல்லும் செய்தி

11264334650 என்ன கர்ணனின் செய்தியா? எந்த கர்ணன்? மகாபாரதக் கர்ணனா? இல்லை? ஒளிப்பதிவு மேதை கர்ணனா? அல்லது சமீபத்திய பரபரப்பான நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பழைய கர்ணன் படத்ததைப் பற்றியா? என்று கேட்பீர்கள். இந்த செய்தியை சொல்வது சிவாஜிகணேசனின் கர்ணன் திரைப்படம் தான். ஆம் இது ஒரு முக்கிய செய்தி தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே மிக முக்கியமான செய்தியை சொல்லியிருக்கிறது இப்படம். வருகிற பதினாறாம் தேதி மீண்டும் கர்ணன் வெளியாகவிருக்கிறது

Mar 5, 2012

கொத்து பரோட்டா 05/03/12

என்ன தவம் செய்தேன் இவர்களைப் போன்ற வாசகர்களை பெற? இவ்வளவு பேரு காத்துட்டு இருக்காங்க. இப்போ தான் புரியுது என் கொத்து பரோட்டா புக் எப்படி அவ்வளவு நல்லா வித்துசுன்னு. நாளைக்கு வந்துருவேன்.. அதனால உங்களை விடாது கருப்பு.. ச்சே ... கொத்து பரோட்டா..  From My Samsung Android gallexy pop.

Mar 2, 2012

கொண்டான் கொடுத்தான்

Kondan-Koduthan-movie-stills-images-photos-32
என்னதான் சீரியல் காலமாய் இருந்தால் குடும்ப உறவு, செண்டிமெண்ட் படங்களுக்கு ஒரு மார்கெட் இருக்கத்தான் செய்கிறது. எல்லோரும் அடிதடி, குத்து வெட்டு, காதல் என்றிருந்த காலத்தில் சத்தமில்லாமல் வந்த மாயாண்டி குடும்பத்தார் பிழிய பிழிய செண்டிமெண்டை கொடுத்தாலும், பி, சி செண்டர்களில் நல்ல வசூல் தந்ததால் கொண்டான் கொடுத்தான் சாத்தியமாகியிருக்கிறது.

Mar 1, 2012

சாப்பாட்டுக்கடை – அம்பாள் மெஸ்.

2012-02-25 22.36.57 திருவல்லிக்கேணியில் மெஸ்களுக்கு பஞச்மில்லை. தெருவுக்கும் ரெண்டு மூன்று இருக்குமென்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் எல்லா மெஸ்களும் பிரபலமாக இருப்பதில்லை. தொடர்ந்து இயங்குவதும் இல்லை.  ஆனால் இந்த மெஸ்சைப் பற்றி திருவல்லிக்கேணி நண்பர்களிடம் எப்போது பேசினாலும் சொல்லப்படாமல் இருந்தத்தில்லை.