Mr.Nookayya

wp-11mrnookayya1366 மோகன்பாபுவின் இரண்டாவது மகனான மனோஜின் படங்கள் கொஞ்சம் ஸ்டைலிஷாக இருக்கும். அந்த வகையில் இந்தப் படமும் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு சென்றேன். ஏமாற்றவில்லை என்றே சொல்ல வேண்டும்.


மனோஜ் ஒரு அனாதை, செல்போன் திருடன். அனு ஒரு பேங்க் மேனேஜர். அவளுக்கு ராஜாவுக்கும் திருமணமான அடுத்த நாள் ராஜா கடத்தப்பட, கடத்தல்காரன் இரண்டு கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறான். வேறு வழியில்லாமல் பேங்க் பணத்தை கையாண்டு வில்லனிடம் கொடுத்து கணவனை மீட்க கிளம்புகிறாள். அதே நேரத்தில் மனோஜின் காதலி சனாகானை திருமணம் செய்து கொள்ள பணம் தேவை. ஒரு சின்ன குழப்பத்தில் அனுவின் பணத்தை மனோஜ் அமுக்க, மனோஜிடமிருந்து பணம் கை மாறிக் கொண்டேயிருக்கிறது. அனுவின் கணவன் பிழைத்தானா? அனுவுக்கு என்ன ஆயிற்று? மனோஜின் காதல் என்னவாயிற்று என்பதை விறுவிறுப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
wp-12mrnookayya1366
மனோஜின் படங்கள் கொஞ்சம் க்ரைம் கலந்த ஸ்டைலிஷான மேக்கிங்குடன் இருக்கும். அதை இந்தப் படத்திலும் பாலோ செய்திருக்கிறார். ஆள் நல்ல பில்டப்பாக இருக்கிறார். இயல்பாக காமெடி வருகிறது. லோக்கல் ஹைதராபாதி ஸ்லாங்கில் அவ்வபோது குரல் மாற்றி பேசும் விதம் இண்ட்ரஸ்டிங். நன்றாக சண்டை போடுகிறார். என்ன டான்ஸ்தான் அவ்வளவாக வர மாட்டேன் என்கிறது. ஆனால் அதற்கு பதிலாய் ச்ண்டைக் காட்சிகளில் காட்டியிருக்கும் வேகம் அபாரம்.

கதாநாயகியாய் சனாகான். கொஞ்சம் நெகட்டிவ் வேடம். சரியாய் பொருந்தியிருக்கிறார். அனுவாக வரும் கீர்த்தி கர்பாண்டா சரியாக சூட் ஆகியிருக்கிறார். வில்லன் அதுதி பிரசாத், ராஜா ஆகியோரும் அவர்களுக்கு கொடுத்த பாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
wp-13mrnookayya1366 பி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுக்க வேண்டிய இம்பாக்டை சரியாய் கொடுத்திருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ஏற்கனவே தமிழில் கேட்ட எவண்டி உன்னைப் பெத்தான் போன்ற பல பாடல்கள் ரிப்பீட். பின்னணியிசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். வர வர யுவனின் இசையில் பழைய பெப் இல்லாமல் இருப்பதை அவர் கவனிக்க வேண்டும்.
wp-14mrnookayya1366
எழுதி இயக்கியவர் அனி. நல்ல விறுவிறுப்பான திரைகதை அமைத்திருக்கிறார். நடு நடுவே வரும் தடைகளாய் கொஞ்சம் காமெடி, மற்றும் லேசான செண்டிமெண்ட் காட்சிகள்தான் சுவாரஸ்யத்தை கெடுக்கிறது. ஒரு பக்கம் ஹீரோ அவருடய காதல். அதனால் ஏற்படும் ப்ரச்சனை. இன்னொரு பக்கம் அனு, அவள் கணவனின் கடத்தல். என்று ரெண்டு ட்ராக்குகளை பயணிக்கும் திரைக்கதையில் செல்போனுக்காக ஹீரோவை துரத்தும் ஒரு வர்ஷனும் சேர இன்னும் சுறுசுறுப்பாகிறது.  ஆங்காங்கே மீறும் லாஜிக்குகளையும், மேற் சொன்ன தடைகளையும் தவிர்த்தால் சுவாரஸ்யமான விறுவிறு க்ரைம் மசாலா திரில்லர் நிச்சயம்.
கேபிள் சங்கர்      

Comments

Sivaraman said…
I have a seen a same story line in a English movie ...
Vignesh said…
what is the english movie name? can u tell?

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.