கொத்து பரோட்டா -19/05/14 - மினி
கேட்டால் கிடைக்கும் பீனிக்ஸ் மாலில் பைக் பார்க்கிங் செய்பவர்களிடம் ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் வாங்கி கொள்ளையடிக்கிறார்கள் என்று சொல்லி, அதை குறித்து எழுதி வந்தேன். இப்போது அதற்கு அந்த மாலில் தியேட்டர் நடத்தும் சத்யம் சினிமாஸ்காரர்கள் டிஸ்கவுண்ட் கொடுக்க வழி செய்துள்ளனர். இது குறித்து லூக்ஸ் புக்கிங் கவுண்டரில் விசாரிக்கும் படி ட்விட்டரில் சொல்லியிருக்கிறார்கள். நன்றி சத்யம் சினிமாஸ். கேட்டால் கிடைக்கும் என்பது நிருபணமாகிக் கொண்டிருக்கிறது. கேளுங்க.. கேளுங்க. கேட்டுக்கிட்டே இருங்க உங்க உரிமைகளை.. SPI Cinemas @SPIcinemas May 16 Visitors of Luxe can avail discount on two wheeler parking! Approach the counter at the Luxe lobby for more details!! @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@