கேட்டால் கிடைக்கும்
பீனிக்ஸ் மாலில் பைக் பார்க்கிங் செய்பவர்களிடம் ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் வாங்கி கொள்ளையடிக்கிறார்கள் என்று சொல்லி, அதை குறித்து எழுதி வந்தேன். இப்போது அதற்கு அந்த மாலில் தியேட்டர் நடத்தும் சத்யம் சினிமாஸ்காரர்கள் டிஸ்கவுண்ட் கொடுக்க வழி செய்துள்ளனர். இது குறித்து லூக்ஸ் புக்கிங் கவுண்டரில் விசாரிக்கும் படி ட்விட்டரில் சொல்லியிருக்கிறார்கள். நன்றி சத்யம் சினிமாஸ். கேட்டால் கிடைக்கும் என்பது நிருபணமாகிக் கொண்டிருக்கிறது. கேளுங்க.. கேளுங்க. கேட்டுக்கிட்டே இருங்க உங்க உரிமைகளை..
Visitors of Luxe can avail discount on two wheeler parking! Approach the counter at the Luxe lobby for more details!!
@@@@@@@@@@@@@@@@@@@@@
பாராளுமன்ற தேர்தலின் தோல்வியை ஏற்றுக் கொண்டு மு.க.ஸ்டாலின் கட்சிப் பதவிகளிலிருந்து விலகுவதாய் வந்த செய்தியை கேட்டதும் இவர்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று புரியாமல் இருந்தது. இதெல்லாம் ஓல்ட் ஸ்டைல் என்பதையே புரிந்து கொள்ளாதவர்கள் மக்களின் மனநிலையை எப்படி புரிந்து கொள்ளப் போகிறார்கள் என்று யோசனையாய் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை திமுக செய்ய வேண்டியது எல்லாம் கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டர்களை அனுசரித்தும், பணபலம் உள்ளவர்களுக்கும் மட்டுமே வாய்ப்பு என்பதில்லாமல், ராஜா, தயாநிதி மாறன், கனிமொழி, அழகிரி போன்ற் உட்கட்சி அரசியல்களையெல்லாம் களைந்து எடுத்துவிட்டு, செயல்பட்டால் 2016ல் வாய்ப்பிருக்கு இல்லாட்டி.. அம்பூட்டுத்தான்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சென்ற வார கொரிய படங்களின் விமர்சனங்களைப் பார்த்து நிறைய போன்கால்கள். பட வேலைகளுக்கு நடுவே எப்படி படம் பார்க்கிறாய் என்ற ஆச்சர்ய கேள்விகள் தான் அதிகம். தொட்டால் தொடரும் பட வேலைகள் இப்போது பைனல் ஸ்டேஜில் இருப்பதால் கொஞ்சம் நேரம் கிடைக்கிறது. கிடைக்கிற நேரத்தில் அப்டேட் ஆகிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் படங்கள் பார்க்க வேண்டியிருக்கு முடித்துவிட்டு எழுதுகிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வர வர கிரீன் பார்க் ஓட்டல் கல்யாண சத்திரம் போல ஆகிவிட்டது. மாலையில் செம்ம கூட்டம்.. ஏதாச்சும் ஒரு பங்ஷன் நடந்து கொண்டேயிருக்கிறது. இனி ப்ரீயா பேச வேற நல்ல இடத்த பார்க்க வேண்டியதுதான்.
@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
Q: How do you know if you have a high sperm count ?
A: If she has to chew before she can swallow.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
when enquired at luxe counter they told 100rs is normal & there was no discount for that