Thottal Thodarum

May 26, 2014

கொத்து பரோட்டா -26/05/14 - திரை விமர்சனம், தொட்டால் தொடரும், நடுநிசிக்கதைகள்,

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
தொட்டால் தொடரும் ஆரம்பித்த சமயம். இயக்குனர் பார்த்திபன் அவர்களை சந்திக்க நண்பர் குலசேகரன் கூப்பிட்டிருந்தார். பார்த்த மாத்திரத்தில் மிகவும் பழகியவர் போல பேசினார். நிறைய சினிமா பற்றி பேசினோம். சமீபத்திய படங்கள், அவரின் மலையாள ப்ராஜெக்ட், அவர் எடுக்க போகும் படம் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். போகும் போது அவரின் எண்ணைக் கொடுத்து எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க என்று நம்பர் சொன்னார். நான் என்னுடயதை கொடுத்த போது “அட ஏற்கனவே உங்க நம்பர் என்கிட்ட இருக்கே.. சங்கர் நாராயணன்னு வச்சிருக்கேன். எதுக்கோ உங்களை முன்னாடியே மீட் பண்ணனும்னு நினைச்சிருக்கேன் என்றார். அந்த சந்திப்பிற்கு பிறகு அவரை என் பட பாடல் டீசருக்காகத்தான் அழைத்தேன். படப்பிடிப்பில் இருந்தார். அதனால் ஒரு தேதி சொல்லி, அவரது உதவியாளர் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி, அவரது வேலைகளுக்கு நடுவே எங்கள் டீசர் படப்பிடிப்புக்கும் ஒத்துழைத்தார். ஆனால் அதற்காக அவர் எடுத்த மெனக்கெடல்கள் அபாரம். பெரிதும் நெருக்கமில்லாத எனக்கே இவ்வளவு மெனக்கெடல்கள் என்றால் அவரின் படத்திற்கு எவ்வளவு இருக்கும்?. காலை 9 மணிக்கு ஆரம்பித்த அவரது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தின் ஆடியோ வெளியீடு மதியம் 12 மணிக்குத்தான் முடிந்தது. ஒவ்வொரு நிகழ்விலும் அவரது பங்களிப்பு இல்லாமல் ஏதுவும் நடக்கவில்லை. சுவாரஸ்யமாய் நடந்தது விழா. நான்கு இசையமைப்பாளர்கள், ஒரு பாடலும், ட்ரெயிலரும் வெளியிட்டார்கள். நச்.இவரின் இவ்வளவு மெனக்கெடல்களும் இவருக்கு  மாலையாய் விழ என் நெஞ்சார்ந்த வேண்டுதல்கள். 
@@@@@@@@@@@@@@@@@@@



Manam
காதலும், அன்பும் எத்தனை கிடைத்தாலும் சலிக்காது. அது போலத்தான் காதலை, அன்பை சொல்லும் படங்களும், அதை சரியான விகிதத்தில் கலந்தடித்து கொஞ்சம் பேண்டஸியோடு கொடுத்துவிட்டால் நிச்சயம் நெகிழ்ச்சிக் குழம்பு மனதில் பொங்கி வழியத்தான் செய்கிறது. அதை சரியாய் புரிந்து கொண்டு வித்யாசமான திரைக்கதையமைத்து கலக்கியிருக்கிறார் விக்ரம். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் காஸ்டிங். நாகேஸ்வரராவ், நாகார்ஜுன், நாக சைதன்யா. இவர்கள் காம்பினேஷன் இல்லையென்றால் படத்தின் அடிப்படை சுவாரஸ்யத்திற்கே வேட்டாகியிருக்கும். அதிலும் முதல் பாதி வாவ்..வாவ்.. செம்ம.. இரண்டாம் பாதியில் க்ளைமேக்சில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் செம க்ளாஸிக்கான ஒர் படமாய் அமைந்திருக்கும் என்பது என் எண்ணம்.  கதையென்னவென்று சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் கெட்டு விடும். எனவே டோண்ட் மிஸ் மனம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
தொட்டால் தொடரும் 
ஒரு பக்கம் சிஜி, இன்னொரு பக்கம் டி.ஐ. மற்றொரு பக்கம் டீசர், ட்ரெயிலர் எடிட் வேலையென தீயாய் வேலை ஓடிக் கொண்டிருக்கிறது.  விரைவில் பாடல் டீசர் வெளியீடு உங்கள் பார்வைக்காக
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நடுநிசிக்கதைகள்-8
வழக்கம் போல அசோக்நகர் உதயம் தியேட்டர் அருகே டி.டி செக்கிங். இடது பக்கமாய் ஒர் டிராபிக் ஸார்ஜெண்ட் கையில் மிஷினோடு இருக்க, வண்டியை மறித்துக் கொண்டிருந்தவர் நல்ல கட்டை மீசை, கழுத்து நிறைய செயின், போலீஸ் கட் இல்லாத தலைமுடியோடு, ட்ராபிக் போலீஸ் லத்திப் போன்ற கைப்பிடி லைட்டை காட்டி என் வண்டியை நிறுத்தினார். நான் வாயில் சுவிங்கத்தை மென்று கொண்டிருந்தேன். என் சுவிங்க மெல்லல் அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க கூடும். என் காரின் கதவருகில் வந்து கதவை இறக்கச் சொல்லி, மிக அருகில் முகத்தை என் வாய் அருகில் கொண்டு வந்து “எங்கிருந்து வர்றீங்க?” என்றார். நான் அவர் முகத்தை நேருக்கு நேர் தேவர் மகன் கமல், நாசர் போல பார்த்து “நீங்க யாரு..? போலீஸா? “ என்றேன். அவர் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. எதிர்பக்கம் நின்ற போலீஸ் சார்ஜெண்டைக் காட்டியபடி ஓரமா வண்டிய விடுங்க என்றபடி, சார்.. சார்.. என அந்த போலீஸ் சார்ஜெண்டை அழைத்தார். அவரும் கேஸ் வந்திருச்சு போல என்று பரபரப்பாய் வந்து நின்று ப்ரீத் அனலைசரை எடுத்து கையில் இருந்த ஸ்டாக்களை எடுக்க முயற்சித்த போது, “சார் அங்க வண்டிய மறிக்கிறவரு போலீஸ் மாதிரி இல்லையே.. அவர் எப்படி வண்டிய மறிக்கலாம்? என்றதும் ஸ்ட்ரா எல்லாம் தவறி ரோட்டில் விழுந்தது. இருவரும் ரோட்டில் சிதறிய ஸ்ட்ராக்களை பொறுக்கியெடுத்து அதில் ஒன்றை புதியதாய் எடுத்து துடைத்து, அவரிடம் கொடுத்து, சீக்கிரம் சார்.. நானும் இதுவரைக்கும் இதுல ஊதினதேயில்லை. என்று அவரிடம் கொடுத்து ஸ்ட்ராவை சொருகி, ஊதினேன். க்ரீன். எவ்வளவு வரைக்கும் இருந்தா குடிச்சிட்டு ஓட்டலாம்? என்றேன்.30 சதவிகிதம் என்பவர். சட்டென அதுக்காக குடிச்சிட்டு எல்லாம் ஓட்டக்கூடாது சார். அதே போல லோக்கல் அஸிஸ்டெண்ட் எல்லாம் வச்சிட்டு வண்டிய மறிக்கக்கூடாது என்றதும் அவர் சப் இன்ஸ்பெக்டர் என்றார். சார்.. நானும் பத்திரிக்கைகாரந்தான் யார் போலீஸுன்னு தெரியாமயா கேக்குறேன் தயவு செய்து இதை என்கரேஜ் செய்யாதீங்க.. என்றவுடன். அதான் நான் பக்கத்திலேயே இருக்கேனே?. நீங்க பக்கத்தில இருந்தாலும் அவுட் சோர்ஸ் செய்யுறது சரியில்லைங்க.. என்றவுடன். சட்டென “சரி சார் பார்த்துக்கறேன்” என்றார். ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
  • உங்களைப் பார்த்தால் ஆச்சர்யம் அடங்க மறுக்கிறது. எவ்வளவு மெனக்கெடல்கள் ஒவ்வொன்றுக்கும் அத்தனையும் மாலையாக வாழ்த்துக்கள் பார்த்திபன் சார்#KTVI

    • காதலும், அன்பும், அபரிமிதமான நெகிழ்ச்சியைக் கொடுக்கத்தான் செய்கிறது. கொஞ்சம் கற்பனையாக இருந்தாலும். #Manasu
      • தமிழ் இன துரோகி என்பதால் சினிமாவில் வருவது போல ஊரைவிட்டு ஒதுக்கி வைக்க முடியாது.உறவாடித்தான் பதிலடி கொடுக்க வேண்டும்

        • எத்தனை முறை மறுவாழ்வு மையம் போனாலும் திருத்த முடியாத போதை பழக்கம் பாராட்டு

          • மண்டி போட்டு கும்பிட்டது ஒரு தப்பாய்யா.. ஒருத்தனை பிடிக்கலைன்னா.. என்னவெல்லாம் பேசுறாங்க..
          • @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
“I was sitting on my own in a restaurant, when I saw a beautiful woman at another table. I sent her a bottle of the most expensive wine on the menu. She sent me a note: "I will not touch a drop of this wine unless you can assure me that you have seven inches in your pants." So I wrote back: "Give me the wine. As gorgeous as you are, I'm not cutting off three inches for anyone.” 
கேபிள் சங்கர்

Post a Comment

No comments: