Posts

Showing posts with the label காக்கை

காக்கை

இம்மாதிரி விஷயங்களை யாராவது சொல்லும் போது பெரிசாய் முக்யத்துவம் கொடுத்ததில்லை. மிகைப்படுத்தி சொல்வதாய்தான் தோன்றும் இறந்தவர்களின் மேல் உள்ள பாசத்தின் காரணமாக, அவர்கள் உணர்ச்சி பெருக்கில் சொல்வது என்றுதான் நினைத்திருந்தேன் இரண்டு நாள் முன்பு வரை. அப்பா இறந்து மூன்றாவது நாள் காலையில் காலையில் டிபன் சாப்பிட உட்காரும் முன் என் மனைவி என் அப்பாவுக்காக ஏற்றி வைத்திருந்த விளக்கின் முன் காப்பியும், ஒரு ப்ளேட்டில் தோசையும் வைத்துவிட்டு எனக்கு தோசை வைத்தாள். அப்போது வீட்டின் வாசல் கதவை தடாலென திறந்து கொண்டு, பக்கத்து வீட்டு குழந்தை சுமார் ஒன்னறை வயதிருக்கும், ஓடி வர பின்னாலேயே, அவனுடய அம்மா ஓடிவர,  ஓடிவந்த குழந்தை என்னை பார்த்து மழலையாய் தோசை என்று கை நீட்டி கேட்டது. நான் என் ப்ளேட்டை எடுத்து அப்படியே கொடுத்தேன், அவனின் அம்மா, “அய்யோ வேணாங்க இப்பத்தான் பாலைக் குடிச்சிட்டு கீழே வச்சான்.. என்ன ஆச்சோ தெரியல குடுகுடுன்னு ஓடி வந்திட்டான்” என்றாள். என் மனைவிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, ”பரவாயில்லைங்க அவன் சாப்பிடாட்டி கூட பரவாயில்லை விட்டுட்டு போங்க நான் கொண்டு விடறேன்” என்றதும் மறுப்பேத...