Thottal Thodarum

Nov 18, 2009

காக்கை

இம்மாதிரி விஷயங்களை யாராவது சொல்லும் போது பெரிசாய் முக்யத்துவம் கொடுத்ததில்லை. மிகைப்படுத்தி சொல்வதாய்தான் தோன்றும் இறந்தவர்களின் மேல் உள்ள பாசத்தின் காரணமாக, அவர்கள் உணர்ச்சி பெருக்கில் சொல்வது என்றுதான் நினைத்திருந்தேன் இரண்டு நாள் முன்பு வரை. அப்பா இறந்து மூன்றாவது நாள் காலையில் காலையில் டிபன் சாப்பிட உட்காரும் முன் என் மனைவி என் அப்பாவுக்காக ஏற்றி வைத்திருந்த விளக்கின் முன் காப்பியும், ஒரு ப்ளேட்டில் தோசையும் வைத்துவிட்டு எனக்கு தோசை வைத்தாள்.

அப்போது வீட்டின் வாசல் கதவை தடாலென திறந்து கொண்டு, பக்கத்து வீட்டு குழந்தை சுமார் ஒன்னறை வயதிருக்கும், ஓடி வர பின்னாலேயே, அவனுடய அம்மா ஓடிவர,  ஓடிவந்த குழந்தை என்னை பார்த்து மழலையாய் தோசை என்று கை நீட்டி கேட்டது. நான் என் ப்ளேட்டை எடுத்து அப்படியே கொடுத்தேன், அவனின் அம்மா, “அய்யோ வேணாங்க இப்பத்தான் பாலைக் குடிச்சிட்டு கீழே வச்சான்.. என்ன ஆச்சோ தெரியல குடுகுடுன்னு ஓடி வந்திட்டான்” என்றாள்.

என் மனைவிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, ”பரவாயில்லைங்க அவன் சாப்பிடாட்டி கூட பரவாயில்லை விட்டுட்டு போங்க நான் கொண்டு விடறேன்” என்றதும் மறுப்பேதும் பேசாமல் அவர் போய்விட, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, கடந்த ஒரு வருடத்தில் அந்த குழந்தை இதுவரை என் வீட்டினுள் வந்ததேயில்லை.

என் ப்ளேட்டை அவனிடமிருந்து வாங்கி விட்டு இன்னொரு புது ப்ளேட்டில் ஒரு தோசையை போட்டு என் பக்கத்தில் உட்கார சொல்ல, அவன் சைகையால் மாத்தேன் என்றான். சரி என்று அவனுக்கு ஒரு குட்டி சேரும், டேபிளும் வைத்து அதில் உட்காரச் சொன்னால் அதையும் மாட்டேன் என்று சொல்ல, சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டு, ப்ளேட்டை கேட்க, மெல்ல ஒவ்வொரு குட்டி, குட்டி துண்டாய் தோசையை ஆக்கி, சர்கரையில் தோசையை விட சர்கரையாய் சாப்பிட ஆரம்பிக்க, என் மனைவி என் தோளை தொட்டு “உங்க அப்பா சாப்பிட வந்திருக்காரு” என்றாள். நான் அவனை உற்று பார்த்தேன் அவன் மெல்ல தட்டிலிருந்து பார்வையை விலக்கி, நேராய் என்னை பார்த்து சிரித்தான் அழுத்தமான சிரிப்பு, சத்தமில்லாமல், நிச்சயம் இலக்கில்லாத குழந்தை சிரிப்பில்லை.  நடுவில் சாப்பிட முடியாமல் ஏப்பம் விட, மனைவி ப்ளேட்டை வாங்க போன போது தண்ணி கேட்க, கொடுத்தவுடன் தண்ணி ஒரு வாயும், தோசை ஒரு வாயுமாய் சாப்பிட ஆரம்பித்தான்.

எனக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி விர்ரென கரண்ட் போல ஓடியது, திடீரென அங்கிருந்து ஓடி வீட்டின் பால்கனியில் போட்டிருந்த சேரில் போய் உட்கார்ந்தான்.  நான் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, திரும்பவும் அதே போல ஒரு அழுத்தமான பார்வையையும், சிரிப்பையும் சிரித்தான், சிரித்துவிட்டு, ஒன்னறை வயது குழந்தை, கையை சொடக்கு போடுவது போல் கைநீட்டி சொடக்கு போட்டு, என்னை பார்த்து கூப்பிட எனக்கு ஒன்றும் புரியாமல் மெல்ல அவனருகில் சென்று உட்கார்ந்து “என்னடா. என்றேன்.. முகத்தை என் அருகில் வைத்து, வாயை திறந்து, ஏதோ வார்த்தைகளை பேசுவது போல் பேசினான், ஆனால் அது வெறும் அசைவாய் இருந்ததே ஒழிய, சத்தமில்லை, நான் குழப்பமாய் அவனை பார்க்க, திடீரென குழந்தையாய் சிரித்து, வெளிப்பக்கம் கைநீட்டி ‘காக்கா” என்று சொல்ல, அவன் காட்டிய பக்க பார்த்தேன் ஒரு காக்கா மரத்தின் கிளையில் உட்கார்ந்திருக்க, நான் என் மனைவியை பார்த்தேன் மிகவும் எமோஷனலாய் இருந்தாள், மெல்ல சேரிலிருந்து இறங்கியவன் அவள் கையை பிடித்து பாத்ரூமுக்குள் அழைத்து சென்று கையை கழுவிக் கொண்டு வெளியே போனான்.

அவனை கொண்டு விட்டு வந்த என் மனைவி, அழ ஆரம்பிக்க, எனக்குள் உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பு  ஓடியது.  பால்கனியில் உட்கார்ந்து கொண்டுதான் அவர் தினமும் காலையில் பேப்பர் படித்து கொண்டே என்னுடன் பேசுவார். அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டுதான் அவனும் என்னை அழைத்து ஏதோ சொன்னான். இறப்பதற்கு முன் சில மணி நேரங்களுக்கு முன் கூட நான் படம் பண்ண வேண்டும் என்று சில ஆட்களிடம் பேசியிருப்பதாகவும், விரைவில் பெங்களூர் போகவேண்டும் என்று சொல்லி கொண்டிருந்தார்.

அப்பா என்ன சொல்ல விழைந்தாய் அந்த குழந்தையின் மூலம்? நானிருக்கிறேன். உன்னை பார்த்து கொண்டிருக்கிறேன் என்பதை காக்கையின் மூலம் காட்டினாயா.? நீ என்னுடன் பேசியது, சிரித்தது எல்லாம் ஏதோ ஒரு குறியீடோ..? அந்த குழந்தை அதற்கு பிறகு இன்று வரை மீண்டும் வீட்டிற்குள் வரவில்லை. அவன் உட்கார்ந்த சோபாவில் தான் என் அப்பா கடைசியாய் உட்கார்ந்து  உயிர் விட்ட இடம்.

Post a Comment

88 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

Heart Touching incident .........

பிரகாஷ் said...

இத படிக்கும் போது என்னையும் அறியாமல் கண் கலங்கிடுச்சு சார்

Anbu said...

உங்கள் அப்பா என்றும் உங்களுடன் தான் இருப்பார் அண்ணா...

கவலை கொள்ள வேண்டாம்..

வாசு said...

படிக்க மிகவும் நெகிழ்ச்சியாய் இருந்தது. நல்ல பதிவு

Romeoboy said...

அப்பாவின் துயரம் உங்களை ரொம்ப வாட்டுகிறது தல . படிக்கும் போதே தெரிகிறது உங்களின் இழப்பு.

vinthaimanithan said...

நெகிழ்ச்சியாயிருக்கின்றதண்ணா! உடல் சிலிர்க்கிறது

வெற்றி said...

நீங்கள் உணர்ந்த சிலிர்ப்பை பதிவை வாசிக்கும்போது நானும் உணர்ந்தேன்...

ஜெனோவா said...

மனசு ரொம்ப பாரமா இருக்கு சார் .
இந்த மாதிரி விஷயங்களெல்லாம் உண்மை என்றே தோன்றுகிறது ...

விரைவில் மீண்டு ... கண்டிப்பாய் மீண்டு சாதிக்க வாழ்த்துக்கள் .

வாழ்த்துக்கள்

பிரபாகர் said...

அண்ணா,

ஃபோன்ல பேசறேன்... எழுத முடியல.

பிரபாகர்.

நையாண்டி நைனா said...

Your Father is always with you.

ஈரோடு கதிர் said...

சங்கர் நீங்கள் சொன்னதுபோலவே குழந்தையின் செயல் சிலிர்ப்பாகவே இருக்கிறது...

Raju said...

தலைவரே..சீக்கிரமே படம் பண்ணப் போறீஙக்ன்னு நெனைக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

iniyavan said...

தந்தையை இழந்த சோகம் எப்படி இருக்கும் என்பதை நான் நன்கு அறிந்தவன் கேபிள். நான் கடைசியில் என் அப்பாவிடம் விடைப்பெற்று கிளம்பிய அந்த நாள் இன்னும் நினைவிருக்கிறது. அவரை இனி இறந்தவுடன் தான் திரும்ப பார்ப்பேன் என்பது அன்று எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை. அதன் பிறகு கண்ணிருடன் ஒரு மாதம் நான் மலேசியாவில். பின்பு அவர் இறந்த செய்தி கேட்ட பிறகு நான் எப்படி இந்தியா போனேன் என்பதை ஒரு பதிவாக நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். பெற்றோர்களின் இழப்பு என்பது மிகவும் கொடுமைதான். அவர் இறப்புக்குப் பிறகு வாழ்க்கையே அவ்வளவுதான் என நினைத்தேன். அதன் பிறகு நடந்தது என்ன? ஏகப்பட்ட புரோமோஷன், பெண் குழந்தைக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை... இப்படிப் பல நிகழ்வுகள். பகவத் கீதையில் கண்ணன் சொல்வது போல் உடலுக்குத்தான் மறைவே தவிர ஆன்மாவுக்கு அழிவு இல்லை கேபிள்.

அதனால் அதிகம் கலங்க வேண்டாம். நான் போனில் கூறியது போல உங்கள் தந்தையின் மறைவு, அவரைப் பொறுத்த வரை வலியில்லா மரணம். இந்த பூவுலகில் எத்தனைப் பேரால் இப்படி அமைதியாக உயிரைத்துறக்க முடியும்???

அதனால் அவர் கூறியபடி உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பாருங்கள். நல்ல படம் எடுக்க முயற்சி செய்யுங்கள். அவரின் ஆசிர்வாதம் உங்களுக்கு மேல் உலகத்திலிருந்து எப்போதும் இருக்கும்.

மீண்டு வாருங்கள்.

இதுவும் கடந்து போகும்.

இளவட்டம் said...

என்ன சொல்வது என்று தெரியவில்லை.
தைரியமா இருங்க சார்.

தினேஷ் ராம் said...

சிலிர்க்க வைக்கும் அனுபவம்.

அ. நம்பி said...

மறைவது உடல் மட்டும்தான்; உயிர் அன்று.

உயிருக்கு அழிவில்லை.

தந்தையார் உங்களுடன் இருக்கிறார் என்று எண்ணிக்கொள்ளுங்கள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அவர் அன்பும் அரவணைப்பும் வழிகாட்டலும் என்றும் இருக்கும்.

அவரை நினைத்து நினைத்து நீங்கள் துயர் உறுவதைத் திண்ணமாக அவர் விரும்பமாட்டார்.

க.பாலாசி said...

இதை படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது. உங்கள் தந்தையார் உங்களுடனே இருக்கிறார். உங்களுக்கு துணையாக....முயற்சியில் பின்வாங்காதீர்கள்...

Menaga Sathia said...

இத படிக்கும் போது என்னையும் அறியாமல் கண் கலங்கிடுச்சு

vasu balaji said...

சிலிர்க்கும் உணர்வு. எங்களையும் உணர வைத்துவிட்டீர்கள்.

thatscoolsuresh said...

நெகிழ்வான பதிவு சங்கர் சார்.....
எனக்கு கூட இது போல் சமயங்களில் நிகழ்வதுண்டு.....உதாரணம்
சில விரும்பதகாத சங்கடமளிக்கும் சம்பவங்கள் , அவமானங்கள் நேரும் போது

“நம் அம்மையும் அப்பனும் இப்போது இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா ”

என்கிற மாதிரியானா எண்ணங்கள் டிப்ரஸ் செய்யும் .(உள்ளுணர்வாக ) வெளியில் நமக்கே தெரியாது .

அது போன்ற தருணங்களில் ராஜாவின் " சின்னதாயவள்" ம் ,கற்பூர பொம்மை ஒன்று ம் "

எங்காவது ஒலிக்க கேட்கும் …………..

அது ராஜாவே தந்தையும் தாயும் ஆனவராக வந்து ஆறுதல் அளிப்பதாய் நெகிழ செய்யும்.

தேவன் said...

கவலைக்கொள்ள வேண்டாம் நலமே உண்டாகும்.
வாழ்த்துக்கள் !!

T.V.ராதாகிருஷ்ணன் said...

கண் கலங்கிடுச்சு sankar

Ashok D said...

:)

யோ வொய்ஸ் (யோகா) said...

வலி கொடுமையானது

கிருஷ்ண மூர்த்தி S said...

இதுவும் கடந்து போக வேண்டியதே, சங்கர்!

இழப்பு மிகவும் சுமையானதுதான், சோகமானதுதான் என்றாலும், இங்கேயே தேக்கம் அடைவதில்லையே வாழ்க்கை.

இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தந்தையை நீங்கள் அறிந்த ஆத்மா அமைதியாக அடுத்த பயணத்திற்குத் தயாராக ஆண்டவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பது தான். தந்தையோடு நீங்கள் அனுபவித்த நல்ல தருணங்களை ஒவ்வொன்றாக நினைவில் வைத்து நன்றி சொல்லுங்கள். மறுபிறப்பு என்று ஒன்று விதிக்கப்பட்டிருந்தால், அது நல்லவிதமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.

இது மட்டுமே உங்களால் செய்ய முடியும். இதுவும் ஒரு நாள் கடந்து போகும்!

Subankan said...

மனது பாரமாகிவிட்டது அண்ணா படித்தவுடன். உங்கள் அப்பா உங்களுடனேதான் இருக்கிறார்.

சில்க் சதிஷ் said...

உங்கள் அப்பா என்றும் உங்களுடன் தான் இருப்பார் அண்ணா...

கவலை கொள்ள வேண்டாம்

ஸ்ரீ.கிருஷ்ணா said...

dont worry anna .. we are with u ever....

தமிழ் அமுதன் said...

சிலிர்க்கிறது..!

இராகவன் நைஜிரியா said...

கண்கள் கலங்கிடுச்சு. அப்பாவின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு என்று உணர்த்தியிருக்காருங்க.

ஆண்மை குறையேல்.... said...

ட‌ச்சிங் பாஸ்...

இராகவன் நைஜிரியா said...

கண்கள் கலங்கிடுச்சு. அப்பாவின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு என்று உணர்த்தியிருக்காருங்க.

செ.சரவணக்குமார் said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சங்கர் அண்ணா மீண்டு வாருங்கள்.

பிராட்வே பையன் said...

எழுத வார்த்தை இல்லை கேபிள்.
ur Father's Blessings always upon
you

ஹஸன் ராஜா.

மேவி... said...

படிக்கும் பொழுதே உடம்பு எல்லாம் சிலிர்க்குது அண்ணா.... கவலை படாதிங்க உங்க அப்பா உங்களோடு தான் இருப்பார்......

அப்பா ... பல குடும்பங்களில் இன்னும் உணர்ந்து கொள்ள படாதவராக தான் இருக்கிறார்....

வாழ்க்கை முழுவதும் நம்மை மனதில் சுமப்பவர் அவர்

மேவி... said...

நான் விடுதியில் இருக்கும் பொழுது எல்லாம் என் அப்பாவின் குரல் தான் எனக்கு மிக பெரிய பலம்.......

செல்ல நாய்க்குட்டி மனசு said...

உங்கள் தந்தை இருந்து உங்களுக்கு செய்த உதவியை விட, இறந்த பின் தெய்வமாகி கொடுக்கும் அன்பும் ஆதரவும் அதிகமாய் இருக்கும், நம்புங்கள்.விரைவில் உங்கள் கலகலப்பு மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.

ரோஸ்விக் said...

தந்தையை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

உங்கள் அப்பா என்றும் உங்களுடன் தான் இருப்பார் நண்பரே! மீண்டு வாருங்கள்.

முரளிகண்ணன் said...

மிக நெகிழ்ந்தேன். நாங்கள் அனைவரும் உடனிருக்கிறோம். நம்பிக்கையுடன் இருங்கள்.

Ganesan said...

கலங்கியது போதும் சங்கர், உங்களை இப்படி பார்க்கமுடியாது.நீங்கள் இயல்பிற்கு வாருங்கள்.

சரவணகுமரன் said...

:-(

ஜெட்லி... said...

அண்ணே அப்பா எப்போதும் உங்களோடு தான் இருப்பார் உங்கள் அப்பாவின் ஆசியால் கண்டிப்பா நீங்க பெரிய இயக்குனராக வருவீங்க.......,

ஷண்முகப்ரியன் said...

நீங்கள் ஃபோனில் பேசியதைப் பதிவிலும் படித்தேன்,ஷங்கர்.

உயிரோடு இருப்பவர்களுக்குத்தான் மரணம் என்பது முக்கியச் செய்தி.

மரணித்தவர்களின் கடைசிப் பரிசு,அவர்கள் உங்களிடம் விட்டுச் செல்லும் நினைவுகளும் அதனால் உங்கள் வாழ்க்கையில் நிகழப் போகும் விளைவுகளுமே.

நீங்கள் உங்களது தந்தை கடைசியாக விரும்பியதைப் போல இயக்குநர், ஆவதற்கான சகல சாத்தியக் கூறுகளையுமே உங்கள் நினைவுகளில் காண்கிறேன்.

வாழ்க,செழிக்க.

கட்டபொம்மன் said...

இதை படித்ததும் கண்கள் கலங்கி விட்டது .

கவலைப்படாதீங்க ...

Starjan (ஸ்டார்ஜன்) said...

இதை படித்ததும் கண்கள் கலங்கி விட்டது .


உங்கப்பாவின் ஆசிவாதம் என்றும் உங்களுக்கு இருக்கு

கவலைப்படாதீங்க ....

மு.சீனிவாசன் said...

உங்களுக்கும், உங்களின் அப்பாவுக்கும் இடையே இருந்த நட்புடன் கூடிய அன்பை (பாலகுமாரனின் நாவல்களில் காணக்கிடைக்கிற அப்பாக்கள் போல) இந்தப்பதிவு வெளிப்படுத்துகிறது. நீங்கள் விவரித்த சம்பவங்கள் சிலிர்க்க வைக்கின்றன. நம் மீது மிக்க அன்பு கொண்ட நம் முன்னோர்களின் ஆசிதான் நம்மை மேலும் சிறக்க வைக்கிறது. உங்கள் அப்பாவின் ஆசையும் உங்கள் ஆசையும் நிச்சயம் நிறைவேறும். அதற்காக எனது பிரார்த்தனைகள்!

மணிஜி said...

மிக நெகிழ்ந்தேன். நாங்கள் அனைவரும் உடனிருக்கிறோம்.

ரவி said...

சிலிர்ப்பாய் உணர்ந்தேன்..

கார்க்கிபவா said...

அரும்பான ஆசைகள்
அரங்கேற்றம் ஆவதற்குள்
அவசரமாய் புறப்பட்டாய்
அணைந்துவிட்ட மேழுகனோம்
அப்பா நீயோ!!அமரன் ஆனாய் ..

சிரித்து கொண்டும்
சிரிக்க வைத்தும் -நீர்
வாழ்ந்த நாட்கள் எங்கள்
சிந்தை எங்கிலும்
வாழ்வதால் இன்று
தந்தையே நீ தெய்வமானாய்.

என் அப்பாவை நினைத்து எழுதியது.. எப்போதும் இவரும் உடனிருப்பார் தல..

kanagu said...

migavum negizhchiyaaka irukirathu anna..

ungal appa eppothum ungaludane irukkirar...

ப்ரியமுடன் வசந்த் said...

கண் கலங்குது தல...
அட போப்பா...

மயிலாடுதுறை சிவா said...

மனம் மிக பாரமாக இருக்கிறது சங்கர்! உங்கள் தந்தையின் கனவுகளை நீங்கள் நிறைவேற முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு மன அமைதி கிடைக்கும்...

மயிலாடுதுறை சிவா...

பா.ராஜாராம் said...

தாங்க இயலவில்லை கேபில்ஜி..

Unknown said...

பாஸ் , அவரின் ஆசிகள் , எப்பொழுதும் உங்கள் உடனிருக்கும்....

சூர்யா said...

எழுத வார்த்தை இல்லை

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணா உங்க அப்பா இறக்கும்போது நீங்கள் என்னுடன் போனில் பேசிக்கொண்டு இருந்ததும் ஒரு குறியீடுதான். அவர் கனவை நிறைவேற்றும் பொறுப்பை என்னிடம் சாட்டிவிட்டாரோ என்று தோன்றுகின்றது :(

Punnakku Moottai said...

கேபிள்,

என்னால் முழுமையாக படிக்கமுடியவில்லை என்பதே உண்மை.

ஆறுதல் கூறுவது எளிது. அனுபவிப்பது கடிது.

மீண்டு வாருங்கள் விரைவாக, மரணத்தை வெல்ல வழியில்லை. நேற்று இருந்தார். இன்று இல்லை. இதுவே படைப்பின் ரகசியம்.

உடம்பிற்கு தான் அழிவு, உயிருக்கு இல்லை. மீண்டும் வருவார் பிறர் உருவில். மீண்டு வாருங்கள் நீங்கள். கடமை உள்ளது அருகில்.

அப்பா வழி நடத்துவார். துயர் துடையுங்கள்.

பாலா,
நைஜீரியா.
sbala2k1@yahoo.com

நிலாரசிகன் said...

உங்கள் அப்பா என்றும் உங்களுடன் தான் இருப்பார் கேபிள்ஜி..

செந்தில் நாதன் Senthil Nathan said...

எல்லாரும் சொன்னத தான் நானும் சொல்லறேன்.. என்றுமே உங்க அப்பா உங்களோட தான் இருப்பார்..

குடுகுடுப்பை said...

துயரங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

உங்களிடம் இருக்கும் தெளிவு உங்களை வெற்றிப்பாதையில் இட்டுச்செல்லும்.

அன்பேசிவம் said...

தலைவரே! என்ன சொன்னால் தீரும் இந்தச்சோகம்? நான் உன்னுடனே இருக்கிறேன் என்பதை தந்தை குறிப்பால் உணர்த்துவதாகவே உணருங்கள். இனி மெல்ல உங்கள் துயர் நீங்கும். கனவுகள் மெய்படும். விரைவில் மீண்டு முன்நிற்க என் வாழ்த்துக்களுடன், ஆசைகளும்.

ராமலக்ஷ்மி said...

உங்கள் தந்தை உங்களுடனேதான் இருக்கிறார். உங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் உடனிருப்பார்.

தராசு said...

அண்ணே,

அப்பா உங்கள் கூடத்தான் இருப்பார். சீக்கிரம் ஆறுதல் பெற வேண்டுகிறேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கேபிள் சங்கர், மிக உருக்கமாக இருக்கிறது நீங்கள் பார்த்த நிகழ்வு. சில சமயம் நம் அறிவிற்கு அப்பால் பல விசயங்கள் இருப்பது இது போன்ற தருணங்களில் தான் தெரிகிறது.

Unknown said...

நல்ல நெகிழ்ச்சியான நிகழ்வு. நீங்கள் அதை விவரித்த விதம் உங்களுக்குள் இருக்கும் இயக்குநரைக் காட்டுகிறது

☀நான் ஆதவன்☀ said...

படிச்ச பிறகு என்ன சொல்றதுன்னு தெரியல :( டைரக்டர் ஆகுற நாள் ரொம்ப தூரத்துல இல்லை

பித்தன் said...

கண்கள் கலங்கிடுச்சு. அப்பாவின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு என்று உணர்த்தியிருக்காருங்க

Bala said...

கவலைப்பட வேண்டாம். உங்கள் அப்பா என்றும் உங்களுடன் இருப்பர். கவலை வேண்டாம்.

Bala said...

கவலைப்பட வேண்டாம். உங்கள் அப்பா என்றும் உங்களுடன் இருப்பர். கவலை வேண்டாம்.

Bala said...

கவலைப்பட வேண்டாம். உங்கள் அப்பா என்றும் உங்களுடன் இருப்பர். கவலை வேண்டாம்.

CS. Mohan Kumar said...

Very touching and nicely written article. As many have written you need to come out of the mood quickly and become normal.

bandhu said...

I had a similar experience when i lost my father 13 years back. with in 20 days after my father passed away, when I was back in my office, one of the customers entered the office had a striking resemblence of my Dad. I went to him and kind of froze. It was like 'Deer in front of Headlight' reaction. I just could not come out of it and the gentleman left with out speeking (may be with a sly smile. i am probably imagining that)

Unmayileye 'Mei Silirthadhu'

I always feel my Dad is with me all the time and I am sure you will feel exactly the same way!

Thanks for sharing this. Best wishes.

sreeja said...

படிக்கும்பொழுது விழிகளில் வழிந்த நீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

நர்சிம் said...

உணர்ச்சி வசம் ஆனது சங்கர்.

Unknown said...

அகநாழிகையின் இலக்கிய சந்திப்பிற்கு வருவதற்காக நண்பர் அதி பிரதாபனிடம் ஞாயிறு மதியம் தொலை பேசியில் தொடர்பு கொண்டேன். அப்பொழுதுதான் இந்த சம்பவம் எனக்குத் தெரிய வந்தது. வருத்தமாக இருந்தது.

உங்களுக்கு என்னுடைய சமாதானங்கள்...

thanjai gemini said...

......பதிவை படித்து முடித்த போது கண்கள் நனைந்திருந்தது.
கவலை கொள்ள வேண்டாம் அண்ணா.
அப்பா உ(ந)ம்முடன் இருக்கின்றார்.
காலம் தான் ஆறுதல் தரும்.

இரசிகை said...

:(kavalap padaatheenga...

neega paarkkum ovvoru nigazhvilum appa theriyuraanganna..,avunga unga koodave irukkaangannuthaane arththam.so,thairiyamaayirunga!!

பின்னோக்கி said...

சில விஷயங்கள் மனம் சம்பந்தப்பட்டது. அறிவியல் பூர்வமாக ஆராய முடியாதது. நீங்கள் பகிர்ந்து கொண்டது முதல் ரகம். சில உண்மைகளை உணர மட்டுமே முடியும். உணர்ந்திருக்கிறேன்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நண்பரே.. நீண்ட நாள் கழித்து ஒரு பதிவு வலுக்கட்டாயமாக எழுதி இருக்கிரேன்.. படித்து கருத்து சொல்லவும்!!

தோமா said...

இந்த சம்பவம் அப்பா உங்களை கவனித்துகொண்டு இருக்கிறார் என்பதற்கு அடையலாம்.

எனக்குக் இது போல நிகழ்ந்தது என் அப்பா இறந்த சமயத்தில்....

அவருடைய ஆசிர் என்றும் உங்களுக்கு உண்டு.

பாபு said...

கவலை படாதிங்க உங்க அப்பா உங்களோடு தான் இருப்பார்......

ஊடகன் said...

அந்த உணர்வு, பூரிப்பை ஏற்படுத்த கூடிய நிகழ்வு....

Thamira said...

நெகிழ்வான பதிவு சங்கர்.

Nat Sriram said...

சங்கர்..மிக நெகிழ்ச்சியான பதிவு. இன்னதென்று சொல்ல தெரியவில்லை. தங்கள் இழப்பின் ஆழம் மட்டும் கண்டிப்பாக புரிகிறது. அதில் நான் மிகச்சிறிய அளவில் பங்கு கொள்கிறேன்.

Unknown said...

அந்த அதிர்வு எங்கள் உடலிலும் ஏற்பட்ட உணர்வு. உங்கள் தந்தை உங்களது வெற்றிக்கு என்றும் உறுதுணையாக இருப்பார்.

துளசி கோபால் said...

ஸ்வாமிஜி சந்திப்பில் இருந்து வந்து இந்த இடுகையைத் தேடிப் படித்தேன்.

ஹூம்.............

மனசு கலக்கமா இருந்தது.

Anisha Yunus said...

சில சந்தர்ப்பங்களை நாம் வாழ்வில் தவற விடுகிறோம்...இன்னும் சில, நாம் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறோம். அப்படி ஒரு சம்பவம் இது. மனதை தொட்டது. அனாதைகளான, மற்றும் உடலில் ஊனம் உள்ள சிறுவர்களுக்கு உதவி செய்யுங்கள். மனமும், வாழ்வும் புத்துணர்ச்சி பெறும்.

maxo said...

Goose Bump and Emotional Moments - Dad will always be your guiding force. This is just an instance to make you feel his presence.

Be Cheerful that your Dad is always there for you !