Paranormal Activity –2007

paranormal 1

எவ்வளவோ கோரமான பேய் படங்களை பார்த்திருப்பீர்கள், மிரட்டலான கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் நம் வயிற்றை கலக்கிய பேய் படங்களை பார்த்திருப்பீர்கள்.. இது எதுவுமே இல்லாமல் தக்குணியூண்டு பட்ஜெட்டில், மிகப் பெரிய டெக்னாலஜி இல்லாமல் நம்மை சைக்கலாஜிகலாய் கதிகலங்க வைக்கும் படம்.

காதல் ஜோடிகள் ஒரு வீட்டிற்கு வருகிறார்கள், அதில் வரும் கதாநாயகிக்கு ஒர் பிரச்சனை, அவளை ஏதோ ஒன்று தன்னுடய எட்டு வயதிலிருந்து தொடர்வதாக ஒரு உணர்வு என்று சொல்ல, அவளுடய காதலன் அப்படி ஏதாவது வந்தால் தான் தொடர்ந்து தான் வாங்கிய புதிய வீடியோ கேமராவில் படமெடுத்து பார்த்துவிடலாம் என்று சொல்ல, படம் ஆரம்பிக்கிறது.paranormal activity

புதுவீட்டில் குடியேறி தினத்திலிருந்து ஒவ்வொரு நாள் இரவும் அவர்களின் தூக்கத்தை கூட தொடர்ந்து கேமராவால் படமெடுக்கிறான். அடுத்த நாள் அதை போட்டு பார்க்கிறார்கள். முதல் மூன்று நாட்களுக்கு ஒன்றுமில்லை. அதன் பிறகு ஒரு நாள் கதவு மட்டும் ஆட, அதிலிருந்து ஆரம்பிக்கிறது நம்முடய அட்ரிலின் பம்பிங். அவர்கள் தூங்குவதை பார்க்கும் போதெல்லாம், எப்போது எது வருமோ என்று நாடி துடிப்பு எகிற, அடுத்தடுத்ததாய் நிகழ்வுகள் நிகழ, நாம் கால்களை எடுத்து மடித்து வைத்துக் கொண்டு படம் பார்த்துக் கொண்டிருப்போம்.

இதற்கு மேலும் படத்தை பற்றி சொன்னால் அது அவ்வளவாக நன்றாக இருக்காது. தயவு செய்து படம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

படத்தில் மொத்தமே நான்கு நடிகர்கள் தான். அதிலும் மற்ற இரண்டு பேர் முழுசாய் இரண்டு காட்சிகள் மட்டுமே வருகிறார்கள். இரண்டே நடிகர்களை மட்டும் வைத்து கொண்டு ஒன்ணறை மணி நேரம் சில்லிட வைக்கிறார்கள்.

paranormal

மிகப்பெரிய டெக்னாலஜி ஏதுமில்லாமல் ஹாண்டிகேமில் ப்டமாக்கப்பட்ட காட்சிகளையும், அவர்களை படமாக்கிய கேமராவின் காட்சிகளையுமே வைத்து மிரட்டி எடுத்திருக்கிறார் இயக்குனர். வெறும் பிசியில் எடிட் செய்யப்பட்ட படமாம்.

அமெரிக்காவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட SawVI விட இரண்டு வாரங்களாய் முதலிடத்தில் தக்க வைத்து கொண்டு, சுமார் 65 மில்லியன் வசூல் செய்திருக்கிறது இந்த 15,000 டாலர் குட்டி பட்ஜெட் படம்.

இரண்டு வருடங்களாய் ரிலிசே செய்ய முடியாமல், திண்றி, திணறி, ஸ்பீல்பெர்க்கின் ரெக்கமண்டேஷனில் வெளிவந்திருக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸை நாலு நிமிடம் மட்டும் மாற்றி வெளியிட்டிருக்கிறார்கள். படம பார்க்கும் நமமை ஒரு விதமான ஹாண்டட் ஸ்டேஜுக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள்..

Paranormal Activity – Don’t Miss It



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Comments

Unknown said…
நீங்க சொல்லி பாக்கமா விடுவோமா?? பாத்துடுவோம்
யாவரும் நலம் :)
Beski said…
நமக்கு ஒரு காப்பி பார்சல்.
/யாவரும் நலம் :)
//

இல்லேண்ணே.. இது வேற மாதிரி..
உங்கள் விமர்சனம் இன்னும் அட்ரினலை எகிற வைக்கிறது,ஷங்கர்.
எப்போது டி.வி.டி.யைத் தருகிறீர்கள்?
/உங்கள் விமர்சனம் இன்னும் அட்ரினலை எகிற வைக்கிறது,ஷங்கர்.
எப்போது டி.வி.டி.யைத் தருகிறீர்கள்?
//

நாளைக்கே தருகிறேன் சார்.
பாலா said…
டிவிடியில்.. பார்க்கற படமா இது? :) :)

பார்த்துட்டு வந்து.. பாத்ரூம் போனா கூட.. கதவை சாத்த முடியலை! :) :)

இப்ப $86 மில்லியன் சம்பாதிச்சாச்சி சங்கர். இரண்டாம் இடத்தில் இருக்கு! (This is It முதலிடம்).

Saw VI இந்த வாரம் டாப் டென் -ல இருந்தே காணாம போய்டும்.
/டிவிடியில்.. பார்க்கற படமா இது? :) :)

பார்த்துட்டு வந்து.. பாத்ரூம் போனா கூட.. கதவை சாத்த முடியலை! :) :)
//

பாலா.. வேற வழியில்லை.. உடனே பார்த்தாகனுமின்னா டவுன்லோட் தான்.

எனக்கு அவ்வள்வு பயம் இல்லாட்டியும்.. பட்ம் பாக்கும் போது ஏதாவது சத்தம் கேட்டா முதுகுல ஐஸ்..
@ஸ்ரீ
நன்றி

@எவனோ ஒருவன்
நாளைக்கு வாங்கிக்கோ..
அண்ணா எனக்கு DVD இல்லையா ?
/அண்ணா எனக்கு DVD இல்லையா //

உனக்கும் ஒரு காப்பி ....
பாலா said…
படத்தை தியேட்டரில் பார்த்தா.. நிச்சயம் பயம் வந்திருக்கும் சங்கர். அதுவும்.. நான் பார்த்தது.. நல்ல கூட்டத்தோடு.

வீல்.. வீல்-ன்னு பொண்ணுங்க கத்துனா.. நமக்கு இன்னும் பயம் எகிறுது! :)
./படத்தை தியேட்டரில் பார்த்தா.. நிச்சயம் பயம் வந்திருக்கும் சங்கர். அதுவும்.. நான் பார்த்தது.. நல்ல கூட்டத்தோடு.

வீல்.. வீல்-ன்னு பொண்ணுங்க கத்துனா.. நமக்கு இன்னும் பயம் எகிறுது! :)
//

அது என்னவோ நிஜம் தான் பாலா.. தியேட்டர் எபக்ட் தான் பெஸ்ட்.. ஆனா இங்க வர்றதுக்கு ஒரு மாசமாவது ஆகும்னு நினைக்கிறேன்.
மேவி... said…
ANNA, PADAM SATYAM LA RELEASE AGI IRUKKAA
இன்னும் இல்லை டம்பி மேவி.. பதிவர் சந்திப்புக்கு வந்திரு..
நீங்க சொல்லி பாக்கமா விடுவோமா?? DVD இல்லைய...? ஒரு காப்பி.....?
Unknown said…
15000 டாலரா ? கணக்கு பண்ணி பார்த்தல் 15,000 x 47 = 705000 ரூபாய் தான வருது..... இவ்ளோ சின்ன பட்ஜெட்ல குட படம் எடுக்க முடியுமா ... அதுவும்அமெரிக்கால .. அப்போ 5 வருஷத்துக்கு அப்புறம் நானும் இதே போல ஒரு படம் எடுப்பேன்....
Ashok D said…
ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா

(என்ன பின்னூட்டம் போடலாமன்னு தெரியல அதான்.. இப்டி ஹிஹிஹி)
Jana said…
இந்தப்படத்தை பார்த்திருக்கின்றேன். அனைவரும் பார்க்கவேண்டிய படம்.
நல்ல விமர்சனம். நிச்சயம் பார்க்கிறேன்.
நன்பர் சங்கர்க்கு ஒரு வேண்டுகோள்
சமிபத்தில் நான் “ORPHAN" என்ற ஒரு ஆங்கில படம் பார்த்தேன் எனக்கும் உங்கள் போல் விமர்சனம் எழுத வேண்டும் எனக்கு ஆசை. ஆனால் நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்கின்றது. அருமையான் திரில் படம். கிட்ட தட்ட நம்ம பாரதிராஜாவின் “பொம்மலாட்டம்” போல். படம் பார்த்து விட்டு உங்கள் விமர்சனம் பதிவு செய்யவும். நன்றி
ஆஹா! டக்கரான படமா இருக்கும் போல. ஏகப்பட்ட பேய் படம் பார்த்த அமெரிக்ககாரங்களே அலற்றாங்கனா விசயம் இல்லாமலா இருக்கும். நம்ம ஊர்லயும்தான் லோவ் பட்ஜெட் படம் எடுக்கராங்க!!! ஹ்ம்....
தராசு said…
ரைட்டு,

பதிவர் சந்திப்புக்கு வரணும்னு ஆசை. ஆனா என்ன உங்களப் பார்த்து பொறாமைதான் பட முடியும்.
@pithhan
பாத்துருங்க

@பேநாமூடி
அது சரி..அதுக்குள்ள இன்னமும் ஏறி போயிரும் பட்ஜெட்

@அசோக்
:(
@ஜனா
நன்றி

@விக்னேஷ்வரி
பாருஙக்ள்

@சரவணன்
படம் பாதிதான் பார்த்திருக்கிறேன். நிச்சயம் எழுதுகிறேன்

@ரவிகுமார் திருப்பூர்
அவஙக்ளுக்கே ரிலீஸ் செய்ய ரெண்டு வருஷம் ஆயிருக்கு

@தராசு

லீவு போட்டுட்டு ப்ளைட் பிடிச்சி வந்துட்டு அடுத்த ப்ளைட் பிடிச்சி கிளம்பிருங்க..:)
kanagu said…
thala padatha enga patheenga??

net la innum nalla copy kooda varaliye??

naan indha paaka aavala waiting :) Theatre la paatha semaya irukkum nu nenaikeren :)
@kanagu

நான் டோரண்ட்ல தான் டவுன்லோட் பண்ணி பாத்தேன்.. டோரண்டுல நல்ல பிரிண்ட் கிடைக்குது. புது க்ளைமாக்ஸ் மட்டும்தான் தியேட்டர் பிரிண்ட்..
creativemani said…
கேபிள் சார்..
இப்போ தான் ஆன்லைன்'ல படம் பார்த்தேன். கிளைமாக்ஸ் புரியல... அவ ஏன் பாய் பிரெண்ட கொலை பண்றா? என்ன தான் நடக்குது அந்த வீட்ல.. ப்ளீஸ் சொல்லுங்க... தலையே வெடிச்சுடும் போல இருக்கு... :)
Cable thala.. as usual kalakitenga.. naa indha blogs pathi oru sema hype koduthu, ippo en wifeum unga blogoda fan aagita.. yesterday we saw this movie.. not fully.. fast forward panni pathom.. soopera eduthu erukan sir.. thodarga ungaladhu narpani..
unga style disky : andha ponnu thookathulendu endrichu nikkum bodhu.. namkkum nikkudhu sir.. heartu.. :)
vanila said…
கேபிள் ஜீ ..

நேத்து தான் நானும் பாத்தேன். என்னோட friend டவுன்லோட் பண்ணி எடுத்துட்டு வந்தான்... ராத்திரி 12:30 மணிக்கு ஆரம்பிச்சு 2:00 மணிக்கு முடிச்சிட்டு.. வெளிய போயி ஒரு தம்மப்போட்டுட்டு வந்து பாத்தா மணி 3:00.. நம்ம படத்துல டைம் கவனிச்சீங்களா .. எல்லாமே 3:00 மணியிலிருந்து 4:00 மணிக்குளாரதான். கிளிஞ்சிருச்சு போங்க.. காலைல வேலைக்கு ஏழு மணிக்கெல்லாம் வந்துட்டோம்ல.. Good One..

All the Best for your Sat'day Sammelan..
vanila said…
கேபிள் ஜி..

நான் உங்களிடம் இந்த படத்தின் விமர்சனத்தை எதிர்பார்த்தேன்.. ஆனால் நானும் நீங்களும் ஒரே நாளில் இந்த படத்தைப்பார்த்தோம் என்ற அளவில், என்னுடைய கண்ணோட்டத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்..
முதலில் நல்ல ஒரு படைப்பு என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. split personality என்பதை இந்த படைப்பின் மூலம் சொல்ல விழைந்ததற்க்காக ஒரு special shottu, for the director & producer.. இதே split personality பற்றி எடுத்து மிக பிரம்மாண்டமாய் வெற்றி பெற்ற ஒரு "பொழுது போக்கு திரைப்படம்" Lage Raho munna Bhai.. ராஜ்குமார் இராணி அந்த படத்தில், நம்மை சஞ்சய் தத்தின் பார்வையிலேயே நம்மை அழைத்துக்கொண்டு போயிருப்பார்.. காந்தி அவர் கண்ணுக்கு மட்டும் (நமக்கும் தான்) தெரிகிறார்ப்போல் கொண்டு சென்றிருப்பார். கடைசியில் இது ஒரு chemical louccha.. என்று முடித்திருப்பார். நாம் அதிகம் சிந்தித்து கொண்டிருப்பதையோ.. அதிகம் படித்து கொண்டிருப்பதுவோ நம்ம முன்னாள் நடந்து கொண்டிருப்பதாகவே தோன்றும்.. ஒரு உதாரணம், சொல்ல வேண்டும் என்றால்... நாம் எப்பொழுதாவது (நிறைய முறை) ௩ நாட்கள் சிறிதளவும் உறங்காமல் ஏதாவது ப்ராஜெக்ட்' ஒ வேலையோ தொடர்ந்து கொண்டிருப்போமேயானால்... அது நம் கண்ணின் முன்னால் (நாம் செய்யாத போதும்) நடந்து கொண்டிருப்பதாகவே ஒரு illusion ஏற்பட்டுவிடும்.. அதைப்போல் தான்.. இந்த படத்தின் வெற்றி என்னவென்றால்.. ஒரு கேமரா.. அதன் பார்வையில் படம் செல்கின்றது.. கதையின் நாயகி ரூமை விட்டு வெளியே செல்லும் போதும் / ரூமிற்குள் யாரும் இல்லாத போதும் கூட, வெளியில் என்ன நடந்திருக்க கூடும் என்பதை ஒலியின் மூலம் நம் கர்ப்பனைக்கே விட்டு விடுகிறார்.. மற்றும் பயம் கொள்ள (ச்)செய்வதற்காக எந்த ஒரு விசேஷ ஒளியமைப்பும் இல்லை.. என்னை பொருத்த வரை இதுவே படத்தின் முக்கிய வெற்றியாக கருதுகிறேன்.. spielberg support பண்ணினார் என்று கேள்வி ப்பட்டேன்.. இரண்டு வருடமாய் பெட்டியிலேயே இருந்ததாம்..
Direction simply beautifull.. (Steady & standstill cam, :-)). )
இதே ராஜ்குமார் இராணி இப்பொழுது சேத்தன் பகத்தின் (five point someone) நாவலை திரைப்படுத்திக்கொண்டிருக்கிறார்.. அமிர்கான்(!!) மற்றும் மாதவன்(??) நடிப்பில். பார்க்கலாம்.
இவரது இதற்க்கு முந்தைய நாவலை (ஒன் நைட் @ கால் சென்டர்' ஐ ) கேவலப்படுத்தியிருந்தார்கள் இந்தியில்.. இவருடைய எனிதிங் பார்(For) யு மேம்' ம் நல்ல திரைக்கதைத்தளத்திற்கு உகந்தது தான்..

கொத்து போடாலாம், கடைப்பக்கம் வந்து நாள் ஆயிடுச்சேன்னு வரும் போது இதைப் (உங்கள் இந்த பதிவை - குறிப்பாக, நல்ல ஒரு படத்தை, நான் கண்ட அதே நாளில் நீங்களும் கண்டிருக்கிறீர்கள் என்றதாலும், ) பார்த்ததால் வந்த ஆனந்தத்தில் ஒரு நீள் பின்னோட்டம்... Keep Going...
vanila said…
தனியா (பதிவுக்கு சம்பந்தமில்லாத) இரண்டு கேள்விகள், கேபிள் ஜீ ..

லக்கிலுக், அதிஷாவினுடைய active participation பற்றிய கேள்விக்கு "ப்ராப்ஸ்" எதுவும் இல்லை, அவர்களது வேலைப்பளு(லு)வே காரணம் என்று சொல்லியிருந்தீர்கள்.. கேட்கவே நன்றாக இருந்தது.. மகிழ்ச்சி. "உதயசூரியனுக்கும், அந்தணனுக்கும்" என்ன ஆயிற்று.. எங்கே அவர்கள்..?. நம்ம ஊரு மணம் இல்லாம ஒரு மாதிரியா இருக்கு ஜீ..
சின்ன வெங்காயம், உழுந்தம் பருப்பு, தேங்காச்சில்லு, வரமொளகா, பூண்டு, சோம்பு, பட்டயப்போட்டு அம்மியில அரச்ச மசாலவ கொழம்புக்கு உவயோப்படுத்தியிருக்கீங்க தானே.. அது இல்லாம ஒரு மாதிரியா இருக்கத்தான செய்யும் கொழம்பு.

கேள்வி இரண்டு: சமீபத்தில் ஒரு பதிவில் பார்த்தேன், கொங்கு வழக்குக்கென்றே வலைப்பூக்கள் இருக்கின்றனவாம்.. மதுரை வழக்கு மொழிக்கு ஒரு வலைத்தளம் தேவையில்லை தான்.. ஏனென்றால் நாம் எவ்வாறு, தூய தமிர்ச்சொற்(க்)கள் சற்றேர திரிந்து இன்றும் உபயோகிக்கின்றோம் என்று ஒரு தொடர் பதிவு போடலாம்ல ஜீ..
டவுன்லோட் பண்ண முடியாமல் காத்திருக்கிறேன்.

11.11.09 தேதியிட்ட ஆ.வி-ல் இதன் விமர்சனம் வந்துள்ளது
@ஃஅன்புடன் மணிகண்டன்
பேய் படத்தில போய் லாஜிக் கேட்கிறீங்களே தலைவரே..:)
@சாண்டோ மகராஜ்
நன்றி. முழு படத்தையும் பாருங்க ரொம்ப நல்லாருக்கும்

@வனிலா
நலல் வேளை இந்த பின்னூட்டத்தை ராத்திரி பதினோரு மணிக்கு போட்டிருக்கீங்க..

@வனிலா
நான் இந்த படத்தை பதிவு எழுதுவதற்கு ரெண்டு நாள் முன்னாடியே பார்த்துட்டேன்..

@வனிலா
இவர்கள் ரெண்டு பேரும் என் நண்பர்கள் அதனால் அவர்களை பற்றி தெரியும். மற்ற்வர்களை பற்றி அறிமுகம் உண்டே தவிர பெரிதாய் பழக்கம் இல்லை ..
@கி.கி
பார்த்தேன் கி..கி.. டவுன்லோட் டோரண்டில் கொட்டி கிடக்கிறது.
Thamira said…
எனக்கு இதுமாதிரி படங்கள் பிடிக்கும். நீங்கள் பில்ட் அப் பண்ணியிருக்கீங்க என்றால் ட்ரெய்லர் அதை விடவும் பில்டப்பாக இருக்கிறது. கண்டிப்பாக பார்க்க வேண்டும்.