கொத்து பரோட்டா –09/11/09

பதிவர் சந்திப்பு இந்த முறை யாரும் நினையாமலேயே தள்ளி வைக்க பட்டது. வருததமாய்தான் இருந்தது. இரண்டு நாள் தொடர் மழைக்கே சென்னை ரொம்பி போய் மிதக்கிறது. அந்த லட்சணத்தில் இருக்கிறது அரசு. எங்கெங்கு பாரினும் தண்ணீர். அடுத்த பதிவர் சந்திப்பை ரமணன் கிட்ட கேட்டுட்டு வர்ற வாரமோ, அல்லது அடுத்த வாரமோ வச்சிருவோம். பதிவர் சந்திப்பு தள்ளிவைத்த அறிவிப்பை தமிலிஷ் தளம் முகப்பில் போட்டு அறிவித்தமைக்கு நன்றி.. நன்றி.. நன்றி..
########################################################################
சன் டிவியின் டீலா நோடீலா நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்து பத்து நிமிடஙக்ளூக்கு எல்லாம் போரடிக்க ஆரம்பித்துவிட்டது.  ஆவூன்னா மாத்தி, மாத்தி டீலா, நோடீலான்னு சொல்லி சொல்லி நோகடிக்கிறாங்களே தவிர பெரிசா ஒரு த்ரில்லோ, இல்லை ஒரு பெபோ இல்லை. மொக்கையாய்தான் இருக்கிறது.  சரின்னு சேனலை மாத்தி விஜய்க்கு வந்தா. போன வாரம் பாடின அழுத அம்மணி போனவாரம் விட்டதை தொடர்ந்திருந்தாங்க. இதுல பாடினவரு குரல் நல்லாவே இருந்தததாமா.? ப்ரோக்ராமைவிட பக்கத்தில் உட்கார்ந்திருந்த  ஒரு லேடி, நல்ல கலரா, வாட்டசாட்டமா..< முன்பக்கம் இரண்டு சைடிலேயும் முடியவிட்டுட்டுட்டு, எதுவும் பேசாம ஏதோ ரவிவர்மா படத்துக்கு போஸ் கொடுக்கிறா மாதிரி உட்கார்ந்திருந்தாங்களே. ம்ஹும்.. லவ் பண்ணா அந்த மாதிரி ஒருத்தங்களை லவ்.. அவங்களை லவ் பண்ணவன் ரசனைக்காரன்யா. ஆனா காதலுக்கு கண் இல்லைங்கிறாது எவ்வளவு பெரிய உண்மைன்னு நிகழ்ச்சிக்கு வந்த ஆட்களை பார்த்தாலே தெரியுது.

########################################################################
வெவிக்கினிமை???
ரேணிகுண்டா படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த போது.. திடீரென “ஒக்காளி” என்ற வார்த்தை கேட்க நான் தான் ஏதோ தவறாய் கேட்டுவிட்டேனோ என்று மறுபடியும் கேட்க, நன்றாக அதே வார்த்தையை உச்சரித்து ஒரு பாட்டே பாடுகிறார்கள். பாட்டு நல்ல குத்தாய்தான் இருக்கிறது.. நம்ம இயக்குனர்களின் லைவ் வியாதி.. பாட்டளவிலும் வர தொடங்கிவிட்டது.. விரைவில்..  ..த்தா.., ஒங்கொ …ள,.. போன்ற் சென்னை செந்தமிழையையும் எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது.
****************************************************************************************************
வெள்ளியன்று காசி தியேட்டரில் அதே நேரம் அதே இடம் வெளியாகிறது என்று போட்டிருந்தார்கள். தியேட்டருக்கு போனால் ஆதவன் பேனரை திரும்ப கட்டிக் கொண்டிருந்தார்கள். என்னடாவென கேட்டால் படத்தை எடுக்க கூடாது என்று பிரஷராம். ஓப்பனிங்கில் ஆன வசூலுக்கு பிறகு பெரியதாய் ஏதுவும் ஆகவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் ஓட்டச் சொல்லி பிரஷராம். 
***************************************************************************************************
தமிழக ராஜாவுக்கு முன்னாடி இளவரசர்களால் பிரச்சனை இருந்தது. இப்போது அவரது ஆட்சியில் இருக்கும் ராஜாக்களால் பிரச்சனை. ஒருவர் மத்தியில் அலைவரிசை ஒத்து வராததாலும், இன்னொருவர் மாநிலத்தில் அவரின் கைவரிசை பிரச்சனையினாலும் முழி பிதுங்கி வழிகிறார்கள்.  இதில் கைவரிசை ராஜாவுக்கு ஆஜரான வக்கீல் யார் தெரியுமா?  ஜோதி மயமான எதிரி ஆள் தற்போதைய உள்கட்சி. கிளி பறக்குமோ.?

#########################################################################

சாப்பாட்டுக்கடை
சாந்தி தியேட்டருக்கு முன் ஒரு ஈரானி டீ ஸ்டால் இருக்கும், அதில் காலையிலிருந்து, மதியம் வரை சுட சுட பூரி போட்டு கொண்டிருப்பார்கள். கூடவே அதற்கு கிழங்கும், தக்காளி சட்னி போன்ற ஒரு குருமாவும் தருவார்கள்.  பதினைந்து ரூபாய்க்கு நல்ல பெரிய சைஸ் பூரி நாலு,  சாப்பிடும்போது சரவணபவன் பூரி ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை.பூரி,சின்ன சமோசா ஒரு நாலு, ஒரு டீ.. டிவைன். Have A Try.

######################################################################$#
ஸ்பெஷல் குறும்படம்..???

கேரளா எதுக்கெல்லாம் பேமஸுனு எல்லாருக்கும் தெரியும். என்னன்னனு நீங்களே லிஸ்ட் போட்டுக்கங்க.. ஆனா இது ஒரு வித்யாசமான கேரளா ஸ்பெஷல் பாருங்களேன்.


*******************************************************************************************************
ஏ.ஜோக்
ஒரு இளைஞன் ஒரு பார்மஸியில் போய் அங்கேயிருந்த அழகான இளம்பெண்ணிடம் தனக்கு காண்டம் வேண்டும் என்றும், ஆனால் தன்னுடய் சைஸ் எதுவென தெரியவில்லை என்றதும், அந்த அழகிய பெண் உள்ளே அழைத்துப் போய் அவனுடய லுல்லாவை கையில் பிடித்து பார்த்து, சேல்ச்மேனிடம் ஒரு பாக்ஸ் லார்ஜ் சைஸ் காண்டம் என்றாள்,

அடுத்து வந்தவனும் அதே போல் கேட்க, அவளும் அதே போல் ரூமுக்கு போய் பார்த்து, “ஒரு ஸ்மால் சைஸ்” என்றாள்.

அடுத்த ஒரு 16 வயது பையன் வர, அவனுக்கு அதே ப்ரச்சனையாய் இருக்கவே அந்தபெண் அவனையும் ரூமுக்கு அழைத்துப்போக, சிறிது  நேரத்திலேயே சேல்ஸ்மேனை பார்த்து” சீக்கிரம் ஒரு நாப்கின் எடுத்துட்டுவா” என்றாள்.
#######################################################################



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Comments

மணிஜி said…
கமெண்டே காணும்..ஆனா ஒரு மைனஸ் குத்து.காத்துக்கிட்டிருக்காங்க போல..அப்புறம் ராஜா மேட்டர் தூள்..என் ஏரியாவுக்குள்ள அத்து மீறி நுழையற..சாக்குறதை
என்ன சங்கர், அரசியல் கிசு கிசு ஆரம்பிச்சிருக்கீங்க போல இருக்கு நம்ம வலைத்தளத்துல.. இந்த சுவாரஸ்யம் கூட்டும் முயற்சி நல்லா இருக்கு ..

குறும்படம் பாக்குறப்போ எனக்கு வேற மாதி ஏதோ தோணுதே.. :-)
/என் ஏரியாவுக்குள்ள அத்து மீறி நுழையற..சாக்குறதை//

அலோ.. பின்னூட்டம் போட்டுட்டு இன்னொரு மைன்ஸ் ஓட்டு குத்தினது யாருங்க..:)
கேபிள்ஜி,
மிகவும் நன்றாக இருக்கிறது, அருமை, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்...

(25 users online. பொறாமையா இருக்கு..)

2 மைனஸ் ஓட்டு, ஓஹோ அப்படி போகுதா கதை.
அந்த மெடிகல்ஷாப் எந்த ஏரியான்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்
:)))))))))))
//இதில் கைவரிசை ராஜாவுக்கு ஆஜரான வக்கீல் யார் தெரியுமா? ஜோதி மயமான எதிரி ஆள். கிளி பறக்குமோ.?//

வழக்கறிஞர் ஜோதி திமுகவில் இணைந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டவருக்கு கட்சியிலிர்ந்தே ஆளனுப்பியிருக்கிறார்கள் வாதிடுவதற்கு :), அது தான் விசேஷம் :D
மணிஜி said…
/வெள்ளியன்று காசி தியேட்டரில் அதே நேரம் அதே இடம் வெளியாகிறது என்று போட்டிருந்தார்கள். தியேட்டருக்கு போனால் ஆதவன் பேனரை திரும்ப கட்டிக் கொண்டிருந்தார்கள். என்னடாவென கேட்டால் படத்தை எடுக்க கூடாது என்று பிரஷராம். ஓப்பனிங்கில் ஆன வசூலுக்கு பிறகு பெரியதாய் ஏதுவும் ஆகவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் ஓட்டச் சொல்லி பிரஷராம்.//

சீப்பை ஒளிச்சு வச்சா கல்யாணம் நின்னுடும்ன்னு நிணைக்கற ஆளுங்க தலைவரே...

வாழ்த்துக்கள் சாருவை மிஞ்சினதுக்கு(எத்தனை வவுரு எரியுதோ)

அப்புறம் அதென்ன 30,000 ரூபா மேட்டரு?
அந்த லட்சணத்தில் இருக்கிறது அரசு
டீலா நோடீலா
ராஜாக்களால் பிரச்சனை

Ithaipolave pesinaal ungal veettukku seekkiram kundar padai varum cable
///
அந்த லட்சணத்தில் இருக்கிறது அரசு
டீலா நோடீலா
ராஜாக்களால் பிரச்சனை

Ithaipolave pesinaal ungal veettukku seekkiram kundar padai varum cable
///

repeattttttttttttttu
///
ரேணிகுண்டா படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த போது.. திடீரென “ஒக்காளி” என்ற வார்த்தை கேட்க நான் தான் ஏதோ தவறாய் கேட்டுவிட்டேனோ என்று மறுபடியும் கேட்க, நன்றாக அதே வார்த்தையை உச்சரித்து ஒரு பாட்டே பாடுகிறார்கள். பாட்டு நல்ல குத்தாய்தான் இருக்கிறது.. நம்ம இயக்குனர்களின் லைவ் வியாதி.. பாட்டளவிலும் வர தொடங்கிவிட்டது.. விரைவில்.. ..த்தா.., ஒங்கொ …ள,.. போன்ற் சென்னை செந்தமிழையையும் எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது.
//
க்வெண்டின், டிபார்ட்டட் ரேஞ்சுக்கு எல்லாம் தமிழ் சினிமா போgஅப் போகுது பாத்துகிட்டே இருங்க.
ம்ம்ம்ம்.. கலக்குங்க...
த‌ல‌... ந‌ம‌க்கு எதுக்கு த‌ண்டோரா ஏரியா? ந‌ல்லா தானே போய்கிட்டு இருக்கு... ஏற்க‌ன‌வே அவ‌ரு ஹிட்லிஸ்ட் ல‌ இருக்காரு.. நாம‌ ந‌ம்ம‌ தொழில‌ பாப்போம்...
Nat Sriram said…
//விரைவில்.. ..த்தா.., ஒங்கொ …ள,.. போன்ற் சென்னை செந்தமிழையையும் எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது.//

வந்தே விட்டது கேபிள் சார். டிஷ்யூம் படத்தில் "கிட்ட நெருங்கிவாடி" என்ற குத்து பாட்டில் நடுவில் உங்கோம்மா உங்கோய்யா எல்லாம் வந்தாச்சு. விஜய் ஆண்டனியின் நல்ல குத்து இது. இந்த particular வரிகளை பொண்டாட்டி, மாமியார் முன்னாடி கேட்க லஜ்ஜையா இருப்பதுனாலையே இந்த பாட்டை காரில் கேட்க முடிவதில்லை. பார்வர்ட் செய்து விடுவேன்.

டீலா நோடீலா செம மொக்கை. ஒரு வின்னிங் கான்செப்டை எவ்ளோ கெடுக்க முடியுமென்று இவர்களிடம் இருந்து டியுசன் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் இந்த எடிடெட் laughs அசத்த போவது யாரு ஸ்டைலில் போடுவதில் சன் டிவி நிறுத்த வேண்டும். அண்ட், இந்த காம்பியர் பையனும் செம மொக்கை செலக்சன்.

சாப்பாட்டு கடை asusual mouth watering . எங்கருந்து தான் பிடிக்கறின்களோ?
Thamira said…
நேற்றுதான் டீலா நோ டீலா பாத்து கடுப்பானேன்.

அப்புறம் ஏ ஜோக்.. யோவ், எதுனா சொல்லிறப்போறேன். காலையில ஆபீஸ் வந்ததுமே, என்னா மாதிரி விஷயம் காண்ணுல படுது..

குறும்படம் வீட்ல போய்தான் பாக்கணும்.
cable...ennala control panna mudila sirippa...enga irunthu thaan ungalukku intha maathiri videos kidaikkum...yetho yaanai en muthugai mithikkira maathiri irukku
மழை.என்ன சொல்ல?

ஏ ஜோக்- ஓவர்ய்ய்யா.
iniyavan said…
கேபிள்,

குறும்படம் அருமை. எங்கே பிடிச்சீங்க?

டீலா, நோ டீலா நடத்துறவரு அஜித் தம்பி போல இல்லை.
Beski said…
அடுத்து பதிவர் சந்திப்பு எப்போ நடக்குமோ?

டீலா நோ டீலா - ஆரம்பத்துல இருந்து கடசி வரை பாத்தது இதுக்குத்தானா? அவ்வ்வ்வ்வ்வ்வ்....

//ஒரு லேடி, நல்ல கலரா, வாட்டசாட்டமா..< முன்பக்கம் இரண்டு சைடிலேயும் முடியவிட்டுட்டுட்டு, எதுவும் பேசாம ஏதோ ரவிவர்மா படத்துக்கு போஸ் கொடுக்கிறா மாதிரி உட்கார்ந்திருந்தாங்களே//
புரியுது.... அவங்க பேசலன்னாலும் ஏன் அவங்களையே காட்டிட்டு இருந்தாங்கன்னு...

இதென்ன குறும்படமா? இதெல்லாம் வேணாம், வழக்கம்போல ஒரு குறும்படம் போடுங்க.

ஏ ஜோக் பழசு.

கடைசி ரெண்டு ஏரியா தவிற மத்ததெல்லாம் அருமை.
naren said…
I need your help. I have an Idea about internet business as facebook,twitter,youtube.
But, how to register/copyright my idea?
regards,
naren.
naren73in@yahoo.com
Ashok D said…
நன்னா...யிருக்கே பேஷா...
இன்னைக்கு கொத்து சுவையா இருக்கு தல....குறும்படமும் நல்லாருக்கு....
//தமிழ்மணம் பரிந்துரை : 5/8 //

மிக பிரபல பதிவர் ஆயிட்டீங்க கேபிள் அண்ணே... 3 மைனஸ் ஓட்டு வாங்குவது என்பது பெரிய விசயமுங்க. பிரபல பதிவர்கள் அதுவும் மிகப் பெரிய பிரபல பதிவர்கள் மட்டுமே வாங்கக் முடியும். வாழ்த்துகள்.

பதிவர் சந்திப்பு - இதை சாக்கிட்டாவது சென்னையில் மழை பெய்ததே.. அதுக்குவாவது சந்திப்பு வைக்கலாம்.

டீல் / நோ டீல் பல டீவிகளில் வந்ததை காப்பியடிச்சா இப்படித்தான் இருக்குன்.

// ப்ரோக்ராமைவிட பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு லேடி, நல்ல கலரா, வாட்டசாட்டமா. //

தங்கமணி உங்க இடுகை எல்லாம் படிக்கிறது இல்ல என்பதால் இப்படியெல்லாமா ஜொள்ளு விடுவது?

// தமிழக ராஜாவுக்கு முன்னாடி இளவரசர்களால் பிரச்சனை இருந்தது.//

தண்டோரா அவர்கள் சொன்ன மாதிரி, இது உங்க ஏரியா இல்லை போலிருக்கே? நீங்க கோடம்பாக்கம் கிசு கிசு போடுங்க..

குறும்படம் இல்லை குறும்பு படம்.

ஏ ஜோக் ரொம்ப அரத பழசு.
கொத்து பரோட்டா சூப்பர்.. :))
மணிஜி said…
//ஆண்மை குறையேல்.... said...

த‌ல‌... ந‌ம‌க்கு எதுக்கு த‌ண்டோரா ஏரியா? ந‌ல்லா தானே போய்கிட்டு இருக்கு... ஏற்க‌ன‌வே அவ‌ரு ஹிட்லிஸ்ட் ல‌ இருக்காரு.. நாம‌ ந‌ம்ம‌ தொழில‌ பாப்போம்//

அடப்பாவி...ஏன்யா பீதியை கிளப்புறீரு
சுவையாக இருந்தது,ஷங்கர்,வழக்கம் போல.
தராசு said…
அண்ணே,

பதிவர் சந்திப்புக்கு எதிராக நடக்கும் இயற்கையின் சதியை என்னான்னு சொல்றது?????

அந்த செவிக்கினிமை, இதயெல்லாம் ஒரு மேட்டர்னு எடுத்துகிட்டு, இன்னும் எத்தனையோ கேட்க வேண்டியிருக்குது.
\\தண்டோரா ...... said...

அடப்பாவி...ஏன்யா பீதியை கிளப்புறீரு//

நான் ப‌திவ‌ர் ச‌ந்திப்பில் உங்க‌ கிட்ட‌ பேச‌லாம்னு இருந்தேன் த‌ண்டோரா..
நெக்ஸ்ட் மீட் ப‌ண்ணுவோம்...
கொத்து சுவை...

குறும்படம்... ஹ ஹ ஹா
இதுக்குதான் சன் டீவியில எந்த நேரமும் டீலா நோடீலா என எந்த நேரமும் சொல்லிக்கிட்டிருந்தாங்க?
Unknown said…
சாப்பாட்டுக்கடை - ட்ரை பண்ணணும் ஜி.

ஜோக் கொஞ்சம் சூடு குறைவு.

பிகு: உங்க கொத்துபரோட்டாவில் சாப்பாட்டுக்கடையைப் படித்த என் மனைவி என்னிடம் “இவர் சாப்பாட்டுக்கடையைப் பற்றி எழுதுறதுக்காகவே வாராவாரம் ஒரு ரெஸ்ட்டாரண்ட் ட்ரை பண்ணுவாரா?”ன்னு கேக்குறாங்க!
\\வெள்ளியன்று காசி தியேட்டரில் அதே நேரம் அதே இடம் வெளியாகிறது என்று போட்டிருந்தார்கள். தியேட்டருக்கு போனால் ஆதவன் பேனரை திரும்ப கட்டிக் கொண்டிருந்தார்கள். என்னடாவென கேட்டால் படத்தை எடுக்க கூடாது என்று பிரஷராம். ஓப்பனிங்கில் ஆன வசூலுக்கு பிறகு பெரியதாய் ஏதுவும் ஆகவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் ஓட்டச் சொல்லி பிரஷராம்.\\

இதுதான் தமிழகம்
//வெள்ளியன்று காசி தியேட்டரில் அதே நேரம் அதே இடம் வெளியாகிறது என்று போட்டிருந்தார்கள். தியேட்டருக்கு போனால் ஆதவன் பேனரை திரும்ப கட்டிக் கொண்டிருந்தார்கள். என்னடாவென கேட்டால் படத்தை எடுக்க கூடாது என்று பிரஷராம்.//


இப்படியெல்லாம் நடக்கும்னு தெரியாதா அண்ணே.................அரசியல்ல.இதெல்லாம்.....
குறும்படம்.. ரொம்ப ஸ்பெஷல் :D
அதே நேரம் அதே இடம் படத்திருக்கு
ஆதவனே பரவாயில்லை......
நீங்க சொன்ன சாந்தி அருகில் இருக்கும் கடையில் நானும்
ரெகுலர் கஸ்டமர் அண்ணே
தாத்தா என்ன இது..? ஏழு ஓட்டு மைனஸா விழுந்திருக்கு..

நான் ஒண்ணுதான குத்தினேன்.. அது தானா ஏழா மாறிருச்சா..?
Jana said…
அடுத்த பதிவர் சந்திப்பை நாள் தள்ளிப்போகாமல் அடுத்தவாரமே வைக்கவேண்டுகின்றேன். மழை குறைந்ததுபோல இருக்கு...

யானை என்னமா மசாஜ் பண்ணுது பாருங்க!!
@தண்டோரா
சரிண்ணே.. உங்களை கேட்டுட்டே இனிமே எழுதறேன்.:)

@பிரசன்னா
வேறமாதிரி தோணுதா..:((
@அகநாழிகை

நன்றி
மைனஸ் ஓட்டு இன்னைக்கு நிறைய விழும்னு நினைக்கிறேன்.

@மங்களூர் சிவா
எனக்கு தெரிஞ்சா உஙக்ளுக்கு சொல்லாமயா..?

@சுடுதண்ணி..
அந்த விசேஷத்தைதான் சொல்லணுமின்னு நினைச்சேன்..அப்புறம் உங்க பின்னூட்டத்தை பார்த்து எடிட் ப்ணணினேன்.. நன்றின்ணே.. உங்க முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்
@தண்டோரா

நன்றிண்ணே..

சாருவை தாண்டினது பத்தி சொன்னதுக்கு மிக்க நன்றிண்ணே..

@உங்களுக்கு சொலலமயா.. சொல்றேன்.

@முத்துசாமி பழனிய்ப்பன்
அதுக்கெல்லாம் பயந்தா முடியுமா..?

@சுப.தமிழினியன்
எதுக்குன்ணே.. நான் பாத்துக்குறேன்..:)

@
@சுப.தமிழினியன்
எபபடிங்கண்ணே.. ஓத்த, பக்,னுபேசுறாப்புலயா..?

@குறை ஒன்றும் இல்லை
நன்றிண்ணே

2ஆண்மை குறையேல்

சும்மா...தமாஷுக்கு

@நடராஜ்
அடடா.. நான் கவனிக்கவேயில்லையே.. அண்ணே.. நன்றிண்ணே..உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
@ஆதிமூலகிருஷ்ணன்
செம மொக்கைண்ணே..

ஏஜோக்.. எதையாவது கிளப்பி விடுதா..?:)

@முத்துசாமிபழனியப்பன்
நன்றிண்ணே.. உங்க சந்தோஷம் என் சந்தோஷம்

@நர்சிம்

அதுசரி..

அப்படியா..?

@என்.உலகநாதன்
அவரு இருக்கிறதிலேயே செம மொக்கை

@எவனோ ஒருவன்

அநேகமா வர்ற வாரம்..

நன்றி
@ரமேஷ் வைத்யா
ஏண்ணே..

@நரேன்
உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கேன்..

@அசோக்
தாங்க்ஸ்ணா..

@க.பாலாஜி

நன்றி தலைவரே

@இராகவன் நைஜிரியா..

அவங்களோடத்தானே சேர்ந்து பார்த்தேன் ப்ரோக்ராமை..

மைனஸ் ஓட்டுண்ணாலே பிராப்ளம் தானே அண்ணே..

2
@அக்கிலீஸ்
நன்றி

@தண்டோரா...

:)

@ஷண்முகப்பிரியன்

நன்றி சார்.

@தராசு
அதானே..
@ஆண்மை குறையேல்
கண்டிப்பா மீட் பண்ணிருவோம்

@கதிர் ஈரோடு
நன்றி கவிஞரே..

@யோவாய்ஸ்
அது அவஙக் கடமை.

@கேவிஆர்
பண்ணுங்க ஜீ

அப்படியா..
இல்லேண்ணே நான் அப்படியெல்லாம் எழுதறது இல்ல.. அப்பப்ப சாப்பிடற எடத்தை ஞாபக்ம் வச்சிப்பேன்..

@கிறுக்கல் கிறுக்கன்
அதானே..
பாலா said…
பரோட்டா.. பழைய பக்குவத்திற்கு வந்ததுக்கு நன்றி சங்கர்! :)

499,642 - வார்ரே..வா!!!! :) :)

இப்பவே.. அஞ்சு லட்சத்துக்கு வாழ்த்தை சொல்லிக்கிறேன்.
@அத்திரி
அது சரி..

2சம்ராஜ்யப்ரியன்
நன்றி

2ஜெட்லி
அப்படியா.. நல்லாருக்கும் இல்ல..?

@உண்மைதமிழன்
வழக்கமா ஒண்ணு உன்னுதுன்னு தெரியும்.. பின்ன நான் வள்ர்கிறேன் இல்லையா..?

@ஜ்னா..

வர்ற வாரம் வச்சிருவோம்..

அது சரி..
soma said…
//விரைவில்.. ..த்தா.., ஒங்கொ …ள,.. போன்ற் சென்னை செந்தமிழையையும் எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது. //

அந்த ரேஞ்சுல தான் இன்னிக்கு பாட்டு வந்துகிட்டு இருக்கு.
ARV Loshan said…
வழமையான கலக்கல்.. அரசியலும் கேபிளார் மூலமா வந்தாச்சு போல.. ;)
அலெக்சா எகிறி உயருதே.. எதிர்பார்ப்புகளைத் தக்கவைக்க வாழ்த்துக்கள்.. :)
சட்டை முதல் ஷூ வரை அனைத்து பொருட்களுக்கும் அளவு உண்டு, ஆணுரையை தவிர
பாலா said…
ஆணுறைக்கும் சைஸ் உண்டுங்கோவ்!
Unknown said…
லேசா அடிக்கிற அரசியல் வாடைக்கே 7 மைனஸ் வாக்கு.. :-)
Jackiesekar said…
பல அறிய விணயங்களை வெளிப்படுத்தும் ஹாலிவுட் பாலாவுக்கு என் நன்றிகள்..

கேபிள் பதிவு சூப்பர்...

தமிளிஷ்ல 37 ஓட்டு பின்னறப்பா... தொடர்ந்து கலக்குங்க..