கார்டூன் மற்றும் அனிமேஷன் படங்களை நான் விரும்பி பார்ப்பேன். Lion King, Finding Nemo,வை எல்லாம் மனப்பாடம் செய்யும் அளவிற்கு பார்த்தவன். அதில் அவர்கள் கதை சொல்லும் முறை எனக்கு ரொம்ப பிடிக்கும். நோகாமல் அட்வைஸ் பண்ணுவார்கள். குழந்தைகளுக்கு புரியும் படி.
சரி படத்துக்கு வருவோம். படம் ஆரம்பித்து பத்து, பதினைந்து நிமிடங்களில் ஒரு சிறுவன், சிறுமி நண்பர்களாகி, வளர்ந்து, திருமணம் முடித்து, வயதாகி, மனைவி இறந்துவிட, என்னடா ஒரே டீவி சீரியல் கதையாய் இருக்கிறதே என்று யோசித்து கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த போது, கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது.
ஒரு பள்ளி சிறுவன் வயதானவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் ஒரு பதக்கம் பெற இவரை அணுக, அதே நேரத்தில் அக்கம் பக்கம் வீடு கட்டுவதால், ஏற்படும் பிரச்சனை, அது மட்டுமில்லாமல் மனைவியின் ஆசையை ஒரு பெரிய பள்ளத்தாக்கு, அதில் மேலிருந்து கொட்டும் அருவி, அதன் முனையில் ஒரு வீடு இருக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற இளமையில் அட்வென்சர் செய்ய விரும்பாத கதாநாயகன், வயதான் காலத்தில் எடுக்க துணிய, தான் செய்யும் தொழிலான பலூன் விற்கும் தொழிலுக்கான ஹீலியம் பலூன்களை ஆயிரக்கணக்கில் கட்டி வேறோடு வீட்டை பறக்கும் விமானம் ஆக்கி பறக்க ஆரம்பிக்கிறார்.
பறக்கும் வீட்டில் அந்த சிறுவனும் வந்து விட, யாருடனும் சேர்ந்து இருக்க விரும்பாத கிழவருடன், சிறுவனும் சேர்ந்து கொள்ள, வழியில் ஒரு வான்கோழியை பையன் பிடித்து போய் அதற்கு சாக்லெட் கொடுத்து பின் தொடர, வான் கோழி போல ஒன்று தன் குஞ்சுகளை தேடி அலைய, அந்த வான் கோழியை பிடித்து கொன்று தன்னுடய மீயூசியத்தில் வைக்க, பேசும் வேட்டை நாய்களை ஏவிவிட்டு அலையும் வில்லன், என்று கதை பின்னி பெடலெடுக்க ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் வில்லனிடமிருந்து கிழவரை, வான் கோழி காப்பாற்ற, பின்பு அது வில்லனிடம் மாட்டிக் கொள்ள, கோழியை காப்பாற்ற தன் மனைவியின் ஆசையை துறந்து வில்லனின் இடத்துக்கு போய் காப்பாற்றுகிறார்.
சிம்பிளான கதைக்கு மிக அருமையான அனிமேஷன், அவ்வளவு தத்ரூபம். அதிலும் அந்த வீட்டை பலூன்களுடன் மேலெழும்பும் காட்சியாகட்டும்ம் வீட்டுடன் கிழவரும், பையனும் காடு மலை என்று ஓட, பின்னால் வெறி நாய்கள் துறத்த, வான் கோழி அவர்களை தன் மேல் வைத்து பறந்து ஒரு பெரிய இடைவெளியை தாண்ட முயல, அதை துரத்தி ஓடும் ஒரு நாய் கோழியின் காலை கவ்வியபடி தொங்கி பள்ளத்தாக்கில் விழ, ஒரு நிமிடம் நாம் அனிமேஷன் படம் பார்க்கிறோமா இல்லை நிஜ படம் பார்க்கிறோமா என்ற சந்தேகம் வந்துவிடும். அவ்வளவு அற்புதமான் அனுபவம்.
Up- எல்லோருக்கும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
for that the old man will reply, It was just a house!
it truly summed up the gest.. realizing what is important in life!
Another ace in pixar's sleeve!
பாலா அண்ணே இதை தான் அனுபவம்னு சொல்றது. என்ன தான் சங்கர் அண்ணனுக்கு சின்ன வயசா இருந்தாலும் தன் அனுபவத்தால கலக்குறாரு பாருங்க.
என்ன நான் சொல்றது?
பாலா அண்ணே இதை தான் அனுபவம்னு சொல்றது. என்ன தான் சங்கர் அண்ணனுக்கு சின்ன வயசா இருந்தாலும் தன் அனுபவத்தால கலக்குறாரு பாருங்க.
என்ன நான் சொல்றது?
பிரபாகர்.
அடுத்து ”Cloudy with a Chance of Meatballs” பாருங்க.. :)
இப்படிக்கு
முற்போக்கு ஹாட்ஸ்பாட் முன்னேற்ற முன்னணி.
இதுக்கும் ஒரு மைனஸ் ஓட்டா? ஜி, ரெகுலரா வாங்கிட்டு இருக்கீங்களே!
//சங்கர் அண்ணனுக்கு சின்ன வயசா இருந்தாலும் தன் அனுபவத்தால கலக்குறாரு பாருங்க.
என்ன நான் சொல்றது?//இதென்னா கலாட்டா
இதுல பாதி உண்மை பாதி..ஹிஹி.
கண்டுபிடிப்போருக்கு தண்டோரா அண்ணன் செலவுல பார்ட்டி உண்டு.
நானும் அவ்வாறுதான் தல..
5 லட்சம் ஹிட்ஸ் வாங்கியதுக்கு வாழ்த்துக்கள் தல
5 லட்சம் ஹிட்ஸ் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..
அப்புறம் அவள் பெயர் தமிழரசி ஆடியோ ரிலீஸ் பாத்தீங்களா? பில்ட்டப் கொஞ்சம் அதிகமா இருக்கே?
sariyaa sonneenga
konja naal munnadi than download pannen.. seekram paakuren.. :)
நான் யூத்தாகியே கொஞ்ச நாள்தான் ஆவுது..
யதில் ஓடிப் போனவர்தான், பிற்காலத்தில் தாத்தா சந்திக்கும் வில்லன் என நினைக்கிறேன். சரியா?
யதில் ஓடிப் போனவர்தான், பிற்காலத்தில் தாத்தா சந்திக்கும் வில்லன் என நினைக்கிறேன். சரியா?
//
illai..சின்ன வயதில் இருக்கும் போது பெரிய அட்வென்சர் செய்யும் ஆளாய் புகழ் பெற்ற தன் மனைவி மிகவும் மதித்தவர்தான் அந்த வில்லன்.
அவ்வளவு நல்லாவா எழுதியிருக்கேன்னு சொல்றீங்க..:)
கொஞ்ச நாளா தமிழ் டிஸ்கவுரி சானல் பட்டய கெளப்புது பாக்கறீங்களா?
ஆமாம் ரவி.. அந்த காட்சி மிக அருமையாய் இருக்கும்
@முத்துகுமார்
அவ்வளவு பிடிச்சிருக்க்க்க்க்க்க்க்காக்க்க்க்கா
@சதீஷ்
மிக்க நன்றி.
என்னய்யா இது பாராட்டுறாங்களா.. கிண்டலடிக்குறாங்களான்னே தெரிய மாட்டேங்குதே..
@ராதாகிருஷ்ணன்
நன்றி சார்
@பிரபாகர்
நிச்சயம் பாருங்க தலைவரே. செய்தி வந்தது வாழ்த்துக்கள்
@சாம்ராஜ்யபிரியன்
ஆமாம் திரைக்கதை நிஜமாகவே நன்றாக இருக்கும்
இல்ல டிவிடிதான்
@விசா
மாத்திடலாம்.. மாத்திடலாம்..
@டம்பிமேவி
என்ன ரைட்டு..?
@
நன்றி..
அதுதெல்லாம் பழ்கிருச்சு
@அசோக்
இதுல தண்டோரா எங்க வந்தாரு..
@பித்தன்
நன்றி
மிக்க நன்றி யோ
@பேநாமூடி
நன்றி
@ஆண்மை குறையேல்
இன்னும் பாக்கல
@ஆதிமூலகிருஷ்ணன்
பார்த்துட்டேன்.. இதையும் பாத்துடுங்க..
ஆமாங்க
@நர்சிம்
நன்றி நர்சிம் பாராட்டுகளுக்கு
@செ.சரவணக்குமார்
நன்றி
@கனகு
நிச்சயம் பாருங்க..
இல்லையே.. என்னை பொறுத்த வரை ஒரு விமர்சனம் மற்றவர்களை பார்க்க தூண்ட வேண்டும் அதற்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு தான் எழுதுவேன்..
உங்கள் பின்னூட்டத்திற்கும், முதல் வருகைக்கும் மிக்க நன்றி
அப்படியெல்லாம் இல்ல ரவி.. அவனுங்களூம் தமிழ்பட ரேஞ்சுக்கெல்லாம் நொந்து நூடூல்ஸ் ஆக்க்கியிருக்கானுங்க.. எல்லாம் நம்ம மன பிராந்தி..:)
டிஸ்கவரி பார்த்தேன்.. சூப்பர்