காளிதாஸ்

Drunken_Nights_by_Dan14Lev

காளிதாஸுக்கு போதை ஏறிவிட்டால பாட்டு பின்னியெடுப்பார். டாஸ்மாக் மூடும்வரை அவரை சுற்றி ரசிகர் பட்டாளம் ஏறிக் கொண்டேயிருக்கும். இன்றைக்கும் அப்படித்தான் மனுஷன் ஆரம்பித்துவிட்டார். ‘காயாத கானகத்தே” என்று, சுருதி சுத்தமா ஹைபிட்சில் எடுக்க ஆரம்பித்தார்.

காளிதாஸ் ஒரு ஆர்கெஸ்ட்ரா அமைப்பாளர்.  நானும்  ஒரு ஆர்கெஸ்ட்ரா ‘சங்கமம்’ என்கிற  பெயரில் நடத்துகிறேன்.  இந்த ஆர்கெஸ்ட்ராவின் மொத்த உறுப்பினர்கள்  நானும் என் ஆர்கெஸ்ட்ரா பேனர்  மட்டும்தான்  மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொரு கச்சேரிக்கும் காளிதாஸிடம் சொல்லிவிட்டால் கிடாரிஸ்ட், டிரம்ஸ், கீ போர்டு மேல் சிங்கர், ஃபீமேல் சிங்கர், எல்லாரையும் நம் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் அசெம்பிள் செய்துவிடுவார். கச்சேரியை ஏற்பாடு செய்ததற்கு ஒரு அமெளண்டும், மற்ற ஆட்களிடமிருந்து ஒரு அமெளண்டும்  கட்டிங் போட்டு விடுவார். குறைந்தது ஒரு சின்ன கல்யாண கச்சேரிக்கு அயிரமாவது தேறும்.  வரும் மாதம் திடீரென ஒரு வெளியூர் கச்சேரி அதற்கு ஆள் பிக்ஸ் செய்யணும் அதனால் காளிதாஸை அழைத்து சொல்ல, அவரை  வடபழனி டாஸ்மாக்கிற்கு வர சொல்லியிருந்தேன். அங்கே அவரை கவனித்தால் ரொம்பவும் ஃபீல் பண்ணி, நல்ல சிங்கர்களையும், கீ போர்ட் ஆளையும் தேடிப்பிடித்து சீப்பாய் பேசி முடிப்பார். கொஞம் அமெளண்டை அட்ஜஸ்ட் செய்யலாம். காயத கானகத்தே வை முடித்திருந்தார்.

”அண்ணே.. என்னா வாய்ஸ்ண்ணே.. உங்க முன்னாடி நானெல்லாம் பாடறேன்னு சொல்றதே அதிகபிரசிங்த்தனம். தண்ணியடிச்சு கூட சுருதி சுத்தமா பாடறீங்களே.? என்று அவரை புகழ்ந்தேன். நிஜமாகவே பல சமயம்  அவரது இசை ஞானத்தை கண்டு பிரம்மித்திருக்கிறேன்.

”அடிசாத்தாண்டா சுருதி சுத்தமா வரும். நான் பாக்காத பாடகனாடா..?  ராஸ்கல். அடியை பின்னிவிட்டுருவேன்” மப்பு ஏறிவிட்டால் அன்பு ஜாஸ்தியாகிவிடும்.

“இப்ப பாடறவனெல்லாம் என்னா பாடறான். சேர்ந்தாப்புல இரண்டு நிமிசம். தம் கட்டி ஹம்மிங் மட்டும் பண்ண சொல்லேன், முக்கிற முக்கில வேற ஏதாவது வருமே தவிர ஹம்மிங் வராது.  தோ.. இன்னைக்கு பாடறானே.. பப்பு சர்மா...  ரஹ்மான் கிட்ட அவன எல்லோரும் ஆஹா.. ஓஹோன்னு சொல்றீங்க.. ட்ராக் பாடிகிட்டிருந்தான். தம் அடிச்சி அடிச்சி.. ஹைபிட்சுல பாட முடியாம, இருந்தவனை கூப்ட்டு, புத்தி சொல்லி பாட வச்சேன். இன்னைக்கு அவன் எங்கயோ. நான் எங்கயோ.. டேய்ய்.. நீ என் தம்பிடா. . நீயும் நல்லா வருவே..  இன்னொரு குவாட்டர் சொல்லு..: என்று ஆப்பாயிலை லாவகமாய்  லவுட்டி லபக்கினார்.

அவர் சொன்னது முற்றிலும் உண்மை. அவருக்கு தெரியாத இசையமைப்பாளர் கிடையாது. நான் பல முறை அவருடன் பாடுவதற்காக வாய்ப்பு கேட்டு அலையும் போது பாத்திருக்கிறேன். எவ்வளவு பெரிய இசையமைப்பாளரும் அவருக்கு ஒரு முக்யத்துவம் கொடுத்து பேசுவதை கவனித்திருக்கிறேன்.

“ஏன்ணே.. இவ்ளோ பெரிய மியூசிக் டைரக்டரையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. உங்க குரலுக்கு நீங்களே ஒரு பெரிய பாடகராயிருக்கலாமில்லண்ணே.?”

அண்ணன் விரக்தியாய் சிரித்து “ ஆயிருக்கலாம். ஆனா விதி விடலையே.. இளையராஜாகிட்ட ரொம்ப நாள் அலைஞ்சு ஒரு முறை சான்ஸ் வந்து கூப்டப்ப..  அப்பெல்லாம் செல்லு ஏது. பக்கத்து வீட்டுக்க்காரன் வீட்டு நம்பரைதான் பி.பி நம்பரா கொடுத்திருந்தேன். அவரு பொண்டாட்டிக்கும்  எனக்கும் கொஞ்ச நாளா லைன் ஓடிட்டிருந்த்து, வயசு பாரு..  நான் அப்ப ஏசுதாஸ் கணக்கா தாடியெல்லாம் வச்சு ஒரு மாதிரி நல்லாத்தான் இருப்பேன். விஷயம் அரச புரசலா எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தது. போனை எடுத்தவன் அவ புருஷன். கோவத்துல அவரு வீட்ட காலி பண்ணிட்டாருன்னு சொல்லிட்டான்.  அவன் மட்டும் சொல்லியிருந்தான்னா. இன்னைக்கு நான் எங்கயோ.. என்ன பாட்டு தெரியுமா.?  “சின்ன பொண்ணு சேலை.. செம்பருத்தி போல”  என்று பாட ஆரம்பித்து திடீரென நிறுத்தி, சிரித்து அதுல ஒரு காமெடியென்ன தெரியுமா.  நான் ஓட்டிட்ட்ருந்த பொண்ணு பெரு சின்னப்பொண்ணு. நல்ல கருகருன்னு பாம்பு மாதிரி உடம்பு..  இன்னொரு குவாட்டர் சொல்லேன்.” என்று சொல்லிவிட்டு தனக்குள்ளே சிரித்தார். ஒரு வேளை சின்ன பொண்ணுவை நினைத்திருப்பார் போலும்.

“அண்ணே.. ஏற்கனவே முக்கா அயிருச்சுண்ணே. ஜாஸ்தியாயிருச்சு.”

“அப்ப. வாங்கி தர மாட்டேயில்லை.. நீ என்னடா வாங்கிதர்றது வெண்டர்.. நான் வாங்கறேன்.. டேய்ய்.. தம்பி இங்க வா.. வா.. என்று அவரை கிராஸ் செய்து போன யாரையோ அழைத்து, “ஒரு குவாட்டர் எம்.சி”  என்று பையிலிருந்து நான்கைந்து நூறு ருபாய் நேட்டுக்களை அவரிடம் திணிக்க,

நான் அவரை அனுப்பிவிட்டு காளிதாஸை உட்காரவைத்துவிட்டு போய் வாங்கி வந்தேன். தண்ணி  கலக்காமல் முக்கா கிளாஸுக்கு சரக்கை ஊற்றி ஒரே கல்பாய் குடித்துவிட்டு கிளாஸை வைத்தார். இவரின் திறமைக்கு இவரின் குடிபழக்கம் மட்டுமில்லாவிட்டால் அவருக்கான மரியாதையே தனிதான். என்ன செய்வது சில பேரின் வாழ்க்கையையே பல சமயம் அவர்களின் வீக்னெஸ் புரட்டி போட்டு விடுகிறது. அடுத்த குவாட்டரையும் அடித்து முடித்துவிட்டு, எழுந்து நடக்கக்கூட முடியாத அளவுக்கு குடித்திருந்தார். குழறலாய் ‘ராஜ ராஜ சோழன் நான்” என்று பாடியபடி இருந்தவரை கைத்தாங்கலாய்  வெளியே அழைத்து வந்து  வண்டியில் ஏற்றி விட்டுவிடலாம் என அவரை என் வண்டியில் ஏறச் சொல்லி அவரை அழைத்தேன். நான் சொல்வது காதிலேயே விழவில்லை. பார்கவே பரிதாபமாய் இருந்தது.

“அண்ணே.. கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க.. நாம வாழ்கையில தோத்துட்டோம்னு குடிச்சு குடிச்சு உங்களையே அழிச்சிக்கிறீங்க.. எவ்வளவோ பேருக்கு உங்களால பெரிய வாழ்க்கை கிடைச்சிருக்கு. உங்களுக்கு இல்லாட்டாலும்.. நாளைக்கு உங்க பசங்களுக்கு உங்களுக்கு  கிடைக்காத வாழ்க்கையை கடவுள் கொடுப்பார்ண்ணே..” என்றவுடன் அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து, “அந்த தேவடியாபையன் அதிலேயும் என்னை ஏமாத்திட்டானே” என்று சொல்லியபடி தரையில் புரண்டு அழ ஆரம்பித்தார். அவரை சமாதானபடுத்தி ஆட்டோ பிடித்து வீட்டில் விட்டுவிட்டு
திரும்பும் போது நானும் கடவுளை அவர் திட்டியது போல் திட்ட வேண்டும் என்று தோன்றியது. காளிதாஸின் ஒரே பையன் செவிட்டு ஊமை.



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Comments

பாலா said…
வெல்கம் பேக் சங்கர்..!!

படிச்சிட்டு வர்றேன். :)
பாலா said…
வாவ்......!!

நண்டுக்கு அடுத்து.. இதை பெஸ்ட்ன்னு சொல்லலாமா????
======

அருமை சங்கர்!!
தராசு said…
வெல்கம் பேக் அண்ணே,

உங்க டச்சே தனி தான். முடிவு சூப்பர்.
என்ன தராசண்ணே.. திடீர்னு விஜிபி மாதிரி கோட் சூட் போட்டிருக்கீங்க..? :0)
thatscoolsuresh said…
அப்படியே lively பீல் அண்ணே
கலக்கறீங்க
காளிதாஸ் எங்கள் மனதில் இடம் பிடித்து ...
வெல்கம் பேக் அண்ணே...
Ashok D said…
மறுஒளிபரப்பு என்றாலும் நல்லதொர் பரப்பு. Good morning Ji :)
முடிவில் அவர் கடவுளை திட்டும் வரி realistic ஆக இருந்தது.........கதை அருமை அண்ணே....
//”அடிசாத்தாண்டா சுருதி சுத்தமா வரும். நான் பாக்காத பாடகனாடா..? ராஸ்கல். அடியை பின்னிவிட்டுருவேன்” மப்பு ஏறிவிட்டால் அன்பு ஜாஸ்தியாகிவிடும் //

அட அவரா???

என்னையும் பலமுறை அடியைபின்னிவிட்டு இருக்காரு :)
// Cable Sankar said...
என்ன தராசண்ணே.. திடீர்னு விஜிபி மாதிரி கோட் சூட் போட்டிருக்கீங்க..? :0)


//


தாராசண்ணனுக்கு இதெல்லாம் ஜூஜூபி

:)
கதை அருமை.

//நான் நிறைய பல முறை அவருடன் பாடுவதற்காக வாய்ப்பு கேட்டு அலையும் போது பாத்திருக்கிறேன்//

நிறைய பல முறை??

இது புது எழுத்து நடையா இல்ல எழுத்து பிழையா? :)
நச் முடிவு...... கலக்கல் எழுத்து நடை...
//திரும்பும் போது நானும் கடவுளை அவர் திட்டியது போல் திட்ட வேண்டும் என்று தோன்றியது

//

உங்களுக்கு திட்டணும்போல இருக்கு. ஆனா எனக்கு இப்ப கடவுளை வாழ்த்தணும்போல இருக்கு...தந்தையை இழந்த வலியில் இருந்து இவ்வளவு விரைவில் உங்களை மீட்டதற்காக.
Prabhu said…
மீள்ஸ்?
Prabu M said…
Good to see you back brother...
and is good as usual...
Welcome Back...
Welcome back cable gi
AK said…
welcome back
//ஆட்டோ பிடித்து வீட்டில் விட்டுவிட்டு
திரும்பும் போது நானும் கடவுளை அவர் திட்டியது போல் திட்ட வேண்டும் என்று தோன்றியது. காளிதாஸின் ஒரே பையன் செவிட்டு ஊமை.//

மறு வருகைக்கு நன்றிண்ணே.
கடவுள்னு ஒருத்தன் கெடயாதுன்னே. அப்படி இருந்தான்னா அவனை விட அயோக்கியன் யாரும் இருக்க முடியாது...
Jawahar said…
சுருக்கம்-சுவாரஸ்யம்-இம்பாக்ட்.... ஒரு நல்ல சிறுகதையின் எல்லா குணா நலன்களும் இருக்கு!

http://kgjawarlal.wordpress.com
sreeja said…
welcome back....
மேவி... said…
welcome back அண்ணா.....

கதை அருமை... காளிதாஸ் மாதிரி தான் நானும் ..... நினைச்சத அடைய முடியவில்லையே என்ற வருத்தம் என்னுள் நிறையவே இருக்கிறது ......

என் படிப்பை வைத்து தான் முன்னுக்கு வந்து இருக்கிறேன்....... ஆனால் என் திறமைக்கு இன்னும் வாய்ப்பு வரவில்லை .... இருந்தாலும் நம்பிக்கையுடன் வாழ்கிறேன்
சில நேரங்களில் எனக்கும் கடவுளை திட்ட தோணும் ஆனால் திட்டுவதில்லை,
எல்லாம் அவன் செயல் என்று மனதை தேற்றிக்கொள்வேன்
thanjai gemini said…
ஏஏஏ சி்ங்கம் களம் எறங்கிடுச்சி...
நல்ல எழுத்து நடை.
கத படிச்சதும் தசாவதாரம் கேயாஸ் தியரி ஞாபகம் வந்துச்சி.அவுரு மட்டும் அந்த சின்ன பொண்ணுவை பிக்கப் பண்ணாம இருந்துருந்தா.இந்நேரம் பெரிய ஆளா ஆயிருப்பார் இல்ல....
ராஜன் said…
கதை அருமை...
ம்ம்ம்ம்.. இத‌ தான் வெரிகுட் னான் வெள்ளைக்கார‌ன்...க‌ல‌க்க‌ல் பாஸ்...எப்போ மீட் ப‌ண்ண‌லாம்?
Unknown said…
நல்லா இருக்கு.
anujanya said…
மீள் பதிவான்னு தெரியாது. முதல் முறை படிக்கிறேன். நல்லா இருக்கு சங்கர். கோடம்பாக்கத்தில் இது மாதிரி நிறைய அனுபவங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

Anyways, welcome back.

அனுஜன்யா
vasu balaji said…
கடைசி வரி ஷாக்.
மீளா? ஆனாலும் தூள் தல.
creativemani said…
சங்கர் சார் டச்...
மிக அருமை கேபிள் அண்ணா.
Last line !!!! ?
வெல்கம் பேக் அண்ணே,

"நர்சிம் அண்ணே No ConCall ah?
/
என்ன செய்வது சில பேரின் வாழ்க்கையையே பல சமயம் அவர்களின் வீக்னெஸ் புரட்டி போட்டு விடுகிறது.
/

well said.

welcome back sankar anne
//சில பேரின் வாழ்க்கையையே பல சமயம் அவர்களின் வீக்னெஸ் புரட்டி போட்டு விடுகிறது. //
நிதர்சனமான வார்த்தைகள் , நல்ல இடுகை.
mudivu nalla irukku
Kabi said…
Welcome back Cable Sir...thanks...:o)
இது கதையா இருந்தாலும்,

“அந்த தேவடியாபையன் அதிலேயும் என்னை ஏமாத்திட்டானே”

==> இப்படி திட்டுறதுக்கு அவனுக்கு என்ன யோக்கியதை இருக்கு ?

செல்லாது செல்லாது ...
(நான் கடவுள்..)
தோற்று போன ஒருத்தரோட வலியையும்,விதியையும் ரொம்ப அழுத்தமா பதிவு செஞ்சிருக்கீங்க..
Unknown said…
கலக்கல்..
Thamira said…
நல்லாயிருந்தது கேபிள்.! கிளைமாக்ஸில் உங்கள் சாமர்த்தியம் விளங்கியது.
Unknown said…
repost but again super.
@ஹாலிவுட் பாலா
அப்படியா சொல்றீங்க

@த்ராசு..

நன்றிண்ணே

@குறை ஒன்றும் இல்லை
நன்றி
@சுரேஷ்
மிக்க நன்றி

@அசோக்
கோழி குருடா இருந்தா என்ன? குழம்பு ருசியாருக்கா..?:)

@வெற்றி
நன்றி

@அப்துல்லா/
அவரு யாரைத்தான் அடியை பின்னிவிடல..:)

@
@செந்தில்நாதன்
சரி செஞ்சிட்டேன்

@பித்தன்
நன்றி

@அப்துல்லா.
எல்லாம் அவன் அருளும், உங்களை போன்ற நண்பர்களின் ஆறுதலினால்தான்.. அண்ணே

@நையாண்டி நைனா
வந்திட்டேன்

@கார்க்கி
:)

@பப்பு
யெஸ்
@பிரபு.எம்
நன்றி

@ராதாகிருஷ்ணன்
நன்றி சார்

@முத்துசாமி பழனியப்பன்
நன்றி

@ஏகே
வந்திட்டேன்
@புலவன் புலிகேசி
:)??

@ஜவஹர்
மிக்க நன்றி

@ஸ்ரீஜா
நன்றி

@டம்பிமேவி
மனதை தளர விடாதீர்கள்.. நிச்சயம் உங்களின் திறமை ஒரு நாள் அங்கீகரிக்கப்படும்..

@கிறுக்கல்கிறுக்கன்
வேற வழி

@தஞ்சை ஜெமினி
அட இப்படிக்கூட யோசிக்கலாமா..?

@ராஜன்
நன்றி
@ஆண்மை குறையேல்
எப்ப வேணுமின்னாலும்

@கே.ரவிஷங்கர்
நிஜமாவா.. இருங்க நான் கிள்ளி பாத்துக்கறேன்.. அட ஆமா வலிக்குது..

@அனுஜன்யா
மீள் பதிவுதான். நன்றி தலைவரே

@வானம்பாடிகள்
:)

@நர்சிம்
நன்றி தல

@அன்புடன் மணிகண்டன்
மிக்க நன்றி
@சரவணக்குமார்
நன்றி

@சிவகுமார்
:)??

@சதீஷ்குமார்
நன்றி

@மங்களூர் சிவா
நன்றி

@ஸ்ரீ
நன்றி

@சூரியா

நன்றி

@கபி
நன்றி

@வெட்டிவேலு

மிக நன்றி கடவுளே..

@வண்டிக்காரன்
நன்றி

@பட்டிக்காட்டான்
நன்றி

@ஆதிமூலகிருஷ்ணன்
மிக்க ந்னறி

:)

@சி
மிகக் நன்றி
Purush said…
cable sir, FYI...Listerine(shown in the picture) is a Well known mouth wash liquid, not sarakku.