Thottal Thodarum

Nov 17, 2009

நெகிழ்வின் உச்சத்திலிருந்து….

போன ஜென்மத்தில்  நான் கடும் தவமோ, அல்லது ஏதோ ஒரு பெரிய புண்ணிய காரியமோ செய்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் இப்படியொரு நட்புகள் கிடைத்திருக்குமா.? உன் சந்தோஷம், என் சந்தோஷம் என்பது மட்டுமில்லாமல் உன் துக்கம், என் துக்கம் என  இரண்டு நாட்கள், எடுப்பதிலிருந்து, கரைப்பது வரை  கூடவே இருந்து, என் தந்தையை நல்லபடியாய் வழியனுப்பி வைத்த  பதிவுலக நண்பர்களுக்கு  நான் எப்படி நன்றி கூறுவது என்றே  தெரியவில்லை.  அப்படி நன்றி என்று ஒரு வார்த்தையில் முடிந்துவிடுகிற  விஷயமா அவர்கள் காட்டிய ஆறுதலும், அரவணைப்பும்.?

உலகெங்குமிருந்து தொலைபேசியிலும், எஸ்.எம்.எஸ் மூலமாய்  ஆறுதல் கூறிய முகமறியா நெஞ்சங்களுக்கு என்ன நான் என்ன செய்துவிட்டேன். என் மீது இவ்வளவு அன்பு பாராட்டுவதற்கு? உங்கள் ஆறுதலும், அரவணைப்பும் என்னை மேலும் நெகிழ செய்கிறது. நிச்சயம் என் தந்தை சந்தோஷப்பட்டிருப்பார்,  நிம்மதியாய் இறைவனடி சேர்ந்திருப்பார் என்னை  தனியாய் விட்டு போகவில்லை என்ற  திருப்தியுடன்.  என்ன செல்வது என்று தெரியாத, புரியாத உணர்ச்சி பெருக்கில்,  நெகிழ்ச்சியின் உச்சத்திலிருந்து… கண்ணீருடன்..

கேபிள் சங்கர்


Post a Comment

136 comments:

கோவி.கண்ணன் said...

விரைவில் மன அமைதி பெற வேண்டுகிறேன்

kggouthaman said...

எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரின் ஆன்மா நிச்சயம் சாந்தி பெறும்.
engalblog

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ரிலாக்ஸ் தம்பீ..

எல்லாம் அன்பிற்கே..!

புலவன் புலிகேசி said...

எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்...உங்கள் தந்தை கொடுத்த தைரியத்தை விட்டு விடாதீர்கள்..

பைத்தியக்காரன் said...

ரிலாக்ஸ் கேபிள்... எங்களுக்கு நன்றி சொல்வதன் வழியே அந்நியப்படுத்த வேண்டாம். உங்கள் அப்பா ஒரு நண்பனாக உங்களுடன் பழகியிருக்கிறார். அதேபோல் உங்கள் பிள்ளைகளுடன் பழகுங்கள். அதுவே தந்தைக்கு மரியாதை...

துக்கம் மறையாமல் அவ்வப்போது பொங்கவே செய்யும். அந்த நேரத்தில் நீங்கள் சாய்ந்துக் கொள்ளவும், அழவும் எங்கள் அனைவரது தோள்களும் இருக்கின்றன...

தேவன் மாயம் said...

உலகெங்குமிருந்து தொலைபேசியிலும், எஸ்.எம்.எஸ் மூலமாய் ஆறுதல் கூறிய முகமறியா நெஞ்சங்களுக்கு என்ன நான் என்ன செய்துவிட்டேன். என் மீது இவ்வளவு அன்பு பாராட்டுவதற்கு? உங்கள் ஆறுதலும், அரவணைப்பும் என்னை மேலும் நெகிழ செய்கிறது. நிச்சயம் என் தந்தை சந்தோஷப்பட்டிருப்பார், நிம்மதியாய் இறைவனடி சேர்ந்திருப்பார் என்னை தனியாய் விட்டு போகவில்லை என்ற திருப்தியுடன். என்ன செல்வது என்று தெரியாத, புரியாத உணர்ச்சி பெருக்கில், நெகிழ்ச்சியின் உச்சத்திலிருந்து… கண்ணீருடன்..
///

மன உறுதி பெற வேண்டுகிறேன்!!

jackiesekar said...

துக்கம் மறையாமல் அவ்வப்போது பொங்கவே செய்யும். அந்த நேரத்தில் நீங்கள் சாய்ந்துக் கொள்ளவும், அழவும் எங்கள் அனைவரது தோள்களும் இருக்கின்றன...//

மிக அழாகாக சொன்ன பைத்தியக்கதரன் வரிகளை அப்படியே சொல்கின்றேன்... வேறு என்ன சொல்ல...???

Seemachu said...

பிரிவுத்துயரிலிருந்து நீங்களும், குடும்பத்தாரும் மீண்டு வர உங்கள் தந்தையார் ஆசீர்வதிப்பார். அவர் ஆன்மா சாந்தியடைய எங்கள் பிரார்த்தனைகள்..

அன்புடன்
சீமாச்சு...

தராசு said...

அண்ணே,

//நிச்சயம் என் தந்தை சந்தோஷப்பட்டிருப்பார், நிம்மதியாய் இறைவனடி சேர்ந்திருப்பார்//

நிச்சயம்.

தருமி said...

மனவமைதி விரைவில் வருக.

கே.ஆர்.பி.செந்தில் said...

நம் எல்லோருக்கும் அம்மாவைதான் மிகவும் பிடிக்கும். ஆனால், ஒரு தகப்பனாய் நாம் மாறும்போதுதான் நம் தந்தையின் அருமை நமக்கு தெரியும். ஒரு கிராமத்தானாக எனக்கு என் தந்தையின் அருமை அப்படிதான் புரிந்தது .

அண்ணன் கேபிலாருக்கு உற்ற நண்பனாய் இருந்த அவரின் தந்தையின் பிரிவு மிகவும் துயரமானது,
அண்ணன் மீண்டு வரவேண்டும்.. வருவார்...

முரளிகுமார் பத்மநாபன் said...

//எங்களுக்கு நன்றி சொல்வதன் வழியே அந்நியப்படுத்த வேண்டாம். உங்கள் அப்பா ஒரு நண்பனாக உங்களுடன் பழகியிருக்கிறார். அதேபோல் உங்கள் பிள்ளைகளுடன் பழகுங்கள். அதுவே தந்தைக்கு மரியாதை...

துக்கம் மறையாமல் அவ்வப்போது பொங்கவே செய்யும். அந்த நேரத்தில் நீங்கள் சாய்ந்துக் கொள்ளவும், அழவும் எங்கள் அனைவரது தோள்களும் இருக்கின்றன...//

அண்ணன் பைத்தியகாரன் வார்த்தைகளை அப்படியே திரும்ப சொல்கிறேன்.

தல நல்லா இருங்க. இருப்பிங்க....

தண்டோரா ...... said...

நாங்கள் இருக்கிறோம்...

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

விரைவில் இவ்விழப்பிலிருந்து மீள இறைவனை பிரார்த்திக்கிறேன் !

அது ஒரு கனாக் காலம் said...

எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரின் ஆன்மா நிச்சயம் சாந்தி பெறும்.

ஹாலிவுட் பாலா said...

:) கம் பேக்!!!

☀நான் ஆதவன்☀ said...

அண்ணே ரிலாக்ஸ். பழைய நிலைக்கு திரும்பியதும் பதிவு எழுத வாங்க. ஒன்னும் அவசரம் இல்ல.

thanjai gemini said...

நம் தந்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் சூழ்நிலை அறியாமல் நான் கேட்ட உதவிக்கு உதவிய உங்கள் மனிதாபிமானதிட்கு நன்றி -

எறும்பு said...

அண்ணே நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அத்துயரிலிர்ந்து மீண்டு வர இறைவனை பிராத்திக்கிறேன்...

Sabarinathan Arthanari said...

தாங்களும், குடுபத்தினரும் மன அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்

என். உலகநாதன் said...

நானும் நீங்கள் விரைவில் மன அமைதி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்

Anbu said...

நானும் நீங்கள் விரைவில் மன அமைதி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்...

பித்தன் said...

விரைவில் மன அமைதி பெற வேண்டுகிறேன்

Muthusamy Palaniappan said...

மன உறுதியும் அமைதியும் நிலவ வேண்டுகிறேன்

ஆதிமூலகிருஷ்ணன் said...

விரைவாய் ஆறுதல் பெறுவீர்கள் சங்கர்.!

யோ வொய்ஸ் (யோகா) said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மிக விரைவில் அமைதி கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

biskothupayal said...

அப்பா எங்கேயும் போகலண்ணே அவர் ஒருத்தரோட பாசத்தை எல்லோருக்கும் சமமா எங்க எல்லோருக்கும் பிரிச்சி குடுத்துட்டு போயிருக்கிறார். அண்ணே நாங்க இருக்கிறோம்ண்ணே வார்த்தைகாக இல்ல சத்தியமான உண்மை

SHEN said...

அவரின் ஆன்மா நிச்சயம் சாந்தி பெறும்.

Subankan said...

உங்கள் தந்தையார் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

D.R.Ashok said...

துக்கம் மறையாமல் அவ்வப்போது பொங்கவே செய்யும். அந்த நேரத்தில் நீங்கள் சாய்ந்துக் கொள்ளவும், அழவும் எங்கள் அனைவரது தோள்களும் இருக்கின்றன...

:)

சந்தனமுல்லை said...

பிரிவுத்துயரிலிருந்து நீங்களும், குடும்பத்தாரும் மீண்டு வர எனது பிரார்த்தனைகள்!

ஊடகன் said...

என்றும் உங்களுடன்..........

- ஊடகன்

VISA said...

கேபிள் சார்....
எங்கள் வலை தளத்திலிருந்து உங்கள் வலைத்தளம் எவ்வாறு வேறுபடுகிறது தெரியுமா? நீங்கள் உங்கள் எழுத்தை மட்டும் எங்களோடு பகிர்ந்துகொள்ளவில்லை. எங்களோடு உங்கள் நட்பை பகிர்ந்துகொள்கிறீர்கள். எங்களை அழைத்து பேசவும் உற்சாகப்படுத்தவும் உங்களால் மட்டுமே முடிகிறது. உங்கள் பின்னூட்டங்களில் கூட நட்புக்கான ஒரு அழைப்பு இருக்கிறது. உங்களிடம் கர்வமோ ஆணவமோ உங்கள் எழுத்தில் யாரையும் தூஷிக்கும் வன்மமோ இருந்ததே இல்லை. நட்புக்கரம் நீட்டும் உங்களுக்கு இத்தனை பேர் திரும்ப அன்புக்கரம் நீட்டியிருப்பதில் வியப்பேதும் இல்லை. இத்தனை பேர் உங்களை விடாமல் துரத்த காரணம் உங்கள் தீவிர எழுத்து மட்டுமல்ல. அதையும் தாண்டிய ஒரு ஸ்நேகம். விரைவில் மீண்டு வாருங்கள்.

ramalingam said...

பழைய உற்சாக மனிதராக மீண்டு வாருங்கள்.

பைத்தியக்காரன் said...

//கேபிள் சார்....
எங்கள் வலை தளத்திலிருந்து உங்கள் வலைத்தளம் எவ்வாறு வேறுபடுகிறது தெரியுமா? நீங்கள் உங்கள் எழுத்தை மட்டும் எங்களோடு பகிர்ந்துகொள்ளவில்லை. எங்களோடு உங்கள் நட்பை பகிர்ந்துகொள்கிறீர்கள். எங்களை அழைத்து பேசவும் உற்சாகப்படுத்தவும் உங்களால் மட்டுமே முடிகிறது. உங்கள் பின்னூட்டங்களில் கூட நட்புக்கான ஒரு அழைப்பு இருக்கிறது. உங்களிடம் கர்வமோ ஆணவமோ உங்கள் எழுத்தில் யாரையும் தூஷிக்கும் வன்மமோ இருந்ததே இல்லை. நட்புக்கரம் நீட்டும் உங்களுக்கு இத்தனை பேர் திரும்ப அன்புக்கரம் நீட்டியிருப்பதில் வியப்பேதும் இல்லை. இத்தனை பேர் உங்களை விடாமல் துரத்த காரணம் உங்கள் தீவிர எழுத்து மட்டுமல்ல. அதையும் தாண்டிய ஒரு ஸ்நேகம். விரைவில் மீண்டு வாருங்கள். //

Well said....

பேநா மூடி said...

அண்ணே .. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் ...

சுடுதண்ணி said...

பிரிவுத்துயரிலிருந்து நீங்களும், குடும்பத்தாரும் மீண்டு வர எனது பிரார்த்தனைகள்!

Bala said...

எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரின் ஆன்மா நிச்சயம் சாந்தி பெறும்.

ஆண்மை குறையேல்.... said...

என‌க்கு என்ன‌ சொல்ற‌துனு தெரிய‌ல‌....take care..

Vijayashankar said...

மனம் உறுதி படுத்துங்கள். உங்கள் அப்பா உங்களுக்கு கொடுத்ததை விட, நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கொடுங்கள். வாழையடி வாழை. நானும் நண்பர்கள் மூலம், அக்டோபர் 2007 சமயம் என் தந்தையின் இழப்பை ஈடுகட்டினேன். வேலை செய்த இடத்தில அது கிட்டவில்லை!

நர்சிம் said...

அந்தக் குறும்படம் மேட்டர் என்னய்யா ஆச்சு?

தண்டோரா ...... said...

/அந்தக் குறும்படம் மேட்டர் என்னய்யா ஆச்சு?//

அதானே...நடிப்பை பிழிய காத்துகிட்டிருக்கேன்

க.பாலாசி said...

பதிவுலகம் எப்போதும் உங்களுக்கு துணையிருக்கும்.....

வித்யா said...

துக்கத்திலிருந்து விரைவில் மீண்டு வர கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.

ramtirupur said...

அன்பே சிவம்

♠ ராஜு ♠ said...

என்னாது குறும்படமா..?
பிளீஸ்... நானும்.. நானும்..!

guru said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்....

உங்கள் தந்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்....

வால்பையன் said...

உங்களது குரும்பத்திற்கு எனது இரங்கல்களை பதிவு செய்து கொள்கிறேன்!

Achilles/அக்கிலீஸ் said...

உங்களுக்கும் உங்களது குரும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் உங்கள் குடும்பமும் இந்தத் துயரிலிருந்து விரைவில் மீண்டு வர நான் இறைவனைப் ப்ராத்திக்கின்றேன்.

நையாண்டி நைனா said...

துக்கத்திலிருந்து விரைவில் மீண்டு வர வேண்டிக்கொள்கிறேன்.

ஜெனோவா said...

விரைவில் மன அமைதி பெறுவீர்கள் !

Ravikumar Tirupur said...

மகன் த்ந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை -
என்னோற்றான் கொல் எனும் சொல்

அவர் மனம் நிறைந்திருக்கும்.
அப்பா எஙுகும் சென்று மறைய வில்லை.கண்ணாடி முன் நின்று பாருங்கள். உங்கள் அவயங்களில் எல்லாம் அப்பாவின் பிம்பம் பிரதிபலிக்க வில்லையா.?
ஒவ்வொரு நல்ல தகப்பனைப் பற்றி பேச ஏராளமான விசயம் இருக்கும். உங்களிடம் ஓராயிரம் விசயம் இருக்கும். அவரை பற்றியும் மழைக்கால பச்சையாய் உங்கள் மனதில் நிலைத்திருக்கும் பசுமையான நினைவலைகளில் ஒன்றிரண்டை எழுதுங்களேன்..

Ravikumar Tirupur said...

மகன் த்ந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை -
என்னோற்றான் கொல் எனும் சொல்

அவர் மனம் நிறைந்திருக்கும்.
அப்பா எஙுகும் சென்று மறைய வில்லை.கண்ணாடி முன் நின்று பாருங்கள். உங்கள் அவயங்களில் எல்லாம் அப்பாவின் பிம்பம் பிரதிபலிக்க வில்லையா.?
ஒவ்வொரு நல்ல தகப்பனைப் பற்றி பேச ஏராளமான விசயம் இருக்கும். உங்களிடம் ஓராயிரம் விசயம் இருக்கும். அவரை பற்றியும் மழைக்கால பச்சையாய் உங்கள் மனதில் நிலைத்திருக்கும் பசுமையான நினைவலைகளில் ஒன்றிரண்டை எழுதுங்களேன்..

ராமலக்ஷ்மி said...

தாங்களும் குடும்பத்தினரும் இத்துயரிலிருந்து மீண்டுவரவும், தங்கள் தந்தையின் ஆன்மா சாந்தி அடையவும் என் பிரார்த்தனைகளும்.

சரவணகுமரன் said...

தந்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

விந்தைமனிதன் said...

//இத்தனை பேர் உங்களை விடாமல் துரத்த காரணம் உங்கள் தீவிர எழுத்து மட்டுமல்ல. அதையும் தாண்டிய ஒரு ஸ்நேகம். விரைவில் மீண்டு வாருங்கள். //
வெறும் இரண்டு முறை தொலைபேசிப்பேச்சிலேயே (அதுவும் அதிகபட்சம் முக்கால் அல்லது ஒரு நிமிடம்) உங்கள் அன்பின் ஈரத்தை உணர்ந்தேன். ஒவ்வொருவனுக்கும் அவன் தந்தைதான் முதல் ஆசான் என்பார்கள். அப்படியெனில் அவர் எவ்வளவு அன்புசொரூபியாக இருந்திருப்பார்!
உங்கள் இழப்பின் வலி... மௌனமாய்... மானசீகமாய் உங்கள் கரங்களைக் கோர்த்துக் கொள்வதைத் தவிர இந்த எளியேனால் செய்யக்கூடியதென்ன?

இராகவன் நைஜிரியா said...

துக்கத்தில் இருந்து மீண்டு வர, ஆண்டவனை வேண்டுகின்றேன்.

Mahesh said...

உங்கள் தந்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்....

sowri said...

I pray for the noble soul to rest in peace. It shows he truly lived a wonderful life. I hope you will comeout with more strong will and god will give enough strength.

ஷாகுல் said...

ஆழ்ந்த இரங்கல்கள்! மன அமைதி பெற இறைவனை வேண்டுகின்றேன்!!

அறிவிலி said...

உங்கள் தந்தையின் ஆன்மா சாந்தியடையவும், தங்கள் குடுமபத்தினர் விரைவில் இந்த துயரிலிருந்து மீண்டு வரவும் எல்லாம் வலல இறைவனிடம் ப்ரார்த்திக்கிறேன்

karthic said...

என் அழ்ந்த அனுதாபங்கள் சங்கர்ஜி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தாங்களும் குடும்பத்தினரும் இத்துயரிலிருந்து மீண்டுவரவும், தங்கள் தந்தையின் ஆன்மா சாந்தி அடையவும் என் பிரார்த்தனைகளும்.

ஜெட்லி said...

ஆழ்ந்த இரங்கல்கள் அண்ணே...

Sivakumar K said...

Sorry Sankar .
Come back , plz ...,

AK said...

இத்துயரிலிருந்து மீண்டுவரவும், தங்கள் தந்தையின் ஆன்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறேன்.

pappu said...

im sorry to hear that.
May he rest in peace.

நர்சிம் said...

என் பின்னூட்டத்தின் உள் அர்த்தம் நாம் நேற்று தொலைபேசியில் பேசியது தான் சங்கர்.ஆம்.மீண்டு வாருங்கள்.

ஈரோடு கதிர் said...

உங்கள் தந்தையின் ஆன்மா உங்களை இன்னும் பலப்படுத்தும்...

பூங்குன்றன் வேதநாயகம் said...

பெரும் துக்கம் தான் தோழா.கவலை படாதீர்கள். கடவுள் அருள் புரிவாராக...

K.R.அதியமான் said...

அன்பின் சங்கர்,

மீண்டும் சந்திப்போம்.
மீண்டு வருவீர்கள்.

குசும்பன் said...

மீண்டு வாருங்கள்

கையேடு said...

Get on keep mov(ie)ing.

vellachamy said...

எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரின் ஆன்மா நிச்சயம் சாந்தி பெறும்.Dhaya-singapore

Sure said...

I REPEAT THE WORDS OF VISA. RELAX AND GEAR UP JI

Vidhoosh said...

உங்கள் குடும்பத்தாரும் நீங்களும் இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை இறைவன் அளிக்க வேண்டுகிறேன். இறைவனாகவே மாறி உங்கள் தந்தை இனி எப்போதும் உங்களுடன் இருப்பார்.

-வித்யா

Vidhoosh said...

உங்கள் குடும்பத்தாரும் நீங்களும் இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை இறைவன் அளிக்க வேண்டுகிறேன். இறைவனாகவே மாறி உங்கள் தந்தை இனி எப்போதும் உங்களுடன் இருப்பார்.

-வித்யா

அபுஅஃப்ஸர் said...

மனமே ரிலாக்ஸ்

அண்ணே என் பிரார்த்தனை எப்பவும் உண்டு

KVR said...

சங்கர், நீங்கள் மன அமைதி பெற்று உங்கள் தந்தையின் கனவை நனவாக இந்த அன்பு என்றும் உதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் தந்தையின் ஆன்மா சாந்தி அடையவும், குடும்பத்தார் அனைவரும் மன அமைதி அடையவும் எங்கள் பிரார்த்தனைகள்.

Dubukku said...

அன்பின் சங்கர்,
தந்தையின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். தாங்களும், குடும்பத்தினரும் மன அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.

பா.ராஜாராம் said...

அப்பாவின் இறுதி காரியங்களில் ஒன்று பாக்கி கேபில்ஜி,அது..

"அவர் கனவுகுளை பறிப்பது"

மங்களூர் சிவா said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

மறத்தமிழன் said...

விரைவில் மீண்டு வந்து விடுவீர்கள்.
வரவேண்டும்..

அன்புடன்,
மறத்தமிழன்.

புருனோ Bruno said...

நான் கூற நினைத்ததை சிவராமன் சாரும், விசாவும் கூறிவிட்டார்கள்

பிரபு . எம் said...

அதிகம் உரையாடியதில்லை எனினும் தங்களைத் தொடர்ந்து படித்து வருபவன் என்கிற முறையில் துயரச்செய்தியைக் கேள்வியுற்றபோது மிகவும் வருத்தமுற்றேன்.... என்ன சொல்வதென்று தெரியவில்லை... ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா...
You'll be there in my prayers... Take care...

Mohan Kumar said...

அதி பிரதாபன் மூலம் செய்தி அறிந்தும் "இப்போது தான் தெரியும் எப்படி போவது" என தயக்கத்தில் வாராமல் இருந்து விட்டேன். வருத்தமாக உள்ளது. ஜாக்கி சேகரின் பதிவில் உங்கள் தந்தை பற்றி படிதேன். ஒரு நல்ல தந்தையாக இருந்துள்ளார். தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இரங்கலை தெரிவிக்கிறேன்.

"அன்பு காட்ட நினைக்கும் போது அப்பா இல்லை" என்ற சுஜாதா வரிகள் நினைவுக்கு வருகிறது.

காலமே மருந்து காயங்களுக்கு எல்லாம்

malar said...

மன அமைதி பெற வேண்டுகிறேன்

Kamal said...

கேபிள் சார்,
இப்போதான் எனக்கு விஷயம் தெரிஞ்சுது:(((((((((((((
சீக்கிரம் மீண்டு வாங்க
வேற என்ன சொல்றதுன்னு தெரியல :(
அப்புறமா பேசுறேன்
-கமல்

கலைக்கோவன் said...

தாங்களும், குடும்பத்தினரும் மன அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.

பிரபாகர் said...

பழைய அண்ணாவா சீக்கிரம் வரணும்..

பிரபாகர்.

சித்து said...

தந்தையின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியா இழப்பு, அதுவும் தந்தை நமக்கு நண்பராக இருக்கும்பொழுது அதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. அன்னாரின் மருமகன் அந்தளவுக்கு கதறி அழுகின்றார் என்றால் அவர் எவ்வளவு நல்ல மனிதராக வாழ்ந்துள்ளார் என்பது தெரிகிறது, அப்படியிருக்கையில் அன்னாரின் மகனான உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துக்கமும் இழப்பும் நினைக்க முடியாதது. விரைவில் துயரிலிருந்து மீண்டு கலக்க வாங்க கேபிள்ஜி. நன்றி.

பாலகுமார் said...

இதுவும் கடந்து போகும்.

அன்புடன்-மணிகண்டன் said...

ஹைய்யா... கேபிள் சார் வந்தாச்சு...!!!

இரா.சிவக்குமரன் said...

miles to go!

♠புதுவை சிவா♠ said...

ரிலாக்ஸ் சங்கர்

பழைய நிலைக்கு திரும்பியதும் பதிவு எழுத வாங்க. ஒன்னும் அவசரம் இல்ல.

Jack said...

Cable ji,

Divert your mind to your normal works. work hard to achieve your father's dreams. take care.

ஸ்ரீ said...

கவலைப்படாதீர்கள்.உங்கள் தந்தையின் ஆசி உங்களை வழி நடத்தும்.தைரியம் கொள்ளுங்கள்.

சூரியன் said...

ள் விரைவில் மன அமைதி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்

velji said...

we are all with you and pray for your mental strength.

சூர்யா said...

பிரிவுத்துயரிலிருந்து நீங்களும், குடும்பத்தாரும் மீண்டு வர எனது பிரார்த்தனைகள்!

அரவிந்தன் said...

அன்பின் கேபிள்!!!

தந்தையின் இடத்தை அவ்வள்வு சீக்கிரம் யாராலும் நிரப்ப முடியாது..

விரைவில் இந்த சோகத்திலிருந்து மீண்டு வாருங்கள்.

இனிமேல் உங்கள் சகோதரிக்கு நீங்கள்தான் தந்தை ஸ்தானத்திலிருந்து வழி நடத்த வேண்டும்.

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

ச்சின்னப் பையன் said...

தாங்களும், குடுபத்தினரும் மன அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்

அபுல் பசர் said...

தாங்கள் ஈடு செய்ய முடியாத இழப்பை சந்தித்து இருக்கிறீர்கள்.
தங்களின் துயரத்தில் என்னையும் இணைத்து கொள்கிறேன்.
விரைவில் இந்த சோகத்திலிருந்து மீண்டு வாருங்கள்.
அபுல்பசர்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

விரைவில் மன அமைதி பெற வேண்டுகிறேன்

சங்கர் said...

விரைவில் மீண்டு வர வேண்டுகிறோம்

வண்டிக்காரன் said...

தந்தையாரின் நினைவுகளை பற்றிக்கொண்டு மீண்டு வர வேண்டுகிறேன்.

செ.சரவணக்குமார் said...

கேபிள் அண்ணா..

மன உறுதியுடனும் உங்கள் தந்தையின் அன்பான ஆசிகளுடனும் நிச்சயம் மீண்டு வருவீர்கள்.

வானம்பாடிகள் said...

மகன் தந்தைக்காற்றும் உதவி, அவர் நினைவை மனதில் சுமந்து இருங்கள். பிரிவை அல்ல. கம் பேக் மேன்.

நசரேயன் said...

ஆழ்ந்த இரங்கல் சங்கர்

vanila said...

விரைவில் மன அமைதி பெற வேண்டுகிறேன்

ஷண்முகப்ரியன் said...

இந்தக் கணத்தில்தான் உங்கள் தந்தையின் மரணச் செய்தியை படித்தேன்.
அதிர்ச்சியை இப்படித்தான்,இங்கேதான் என்னால் பகிர முடிகிற்து,ஷங்கர்.

ஆழ்ந்த அரவணைப்புக்கள்.

மரணம் ஒன்று மட்டுமே உண்மை.அதைப் பற்றிப் பேசும் அனைத்து வார்த்தைகளுமே பொய்.

உங்கள் தந்தை வழங்கிச் சென்றிருக்கும் உண்மை உங்கள் வாழ்க்கையை மேலும்,மேலும் உயர்வடையச் செய்யட்டும்.

நான் நாளை உங்களை நேரில் காண்கிறேன்,ஷங்கர்.

kanagu said...

mana amaidhi pera vendugirn anna...

moe said...

ஆழ்ந்த இரங்கல்கள்

ஸ்ரீ.கிருஷ்ணா said...

தங்கள் தந்தையின் ஆன்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறேன்.

க. தங்கமணி பிரபு said...

ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் தந்தையாரின் இழப்பு ஏற்படுத்தும் வலியும் வருத்தமும் உண்டாக்கும் துக்கங்களினின்று நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் விரைவில் மீள என் மனமார்ந்த ஆறுதல்கள்.

பட்டிக்காட்டான்.. said...

//நிச்சயம் என் தந்தை சந்தோஷப்பட்டிருப்பார், நிம்மதியாய் இறைவனடி சேர்ந்திருப்பார்//

ஆம்.. நிச்சயமாக..

மீண்டு வாருங்கள்..

செந்தில் நாதன் said...

அண்ணே .. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்....

Take your time to recover.. மெதுவா மீண்டு வாருங்கள்..நீங்க எப்ப திரும்பி வந்தாலும் துரத்தி துரத்தி உங்கள படிக்க நாங்க எல்லாரும் காத்திருப்போம்...

Kabi said...

Hello Cable Sankar sir, my deep condolence to you and to your family. And I am a new reader to you blog, unfortunately my first comment becomes a condolence message, sorry for that.

I know it'll take time for you to recover, but please come back and keep blogging...

-Kabilan

CHAKKRAWARTHY said...

மிகவும் தாமதமாக தங்களின் தந்தையின் மறைவைக் குறித்து அறிந்தேன்.ஆழ்ந்த அனுதபங்கள்.உறவின் அருமை பிரிவில்.அவரின் பிரிவில் வாடும் அம்மாவிற்க்கும் என் இறங்லைத் தெரிவித்துவிடுங்கள்.

Florajeeva.
http://jeevaflorajeeva.blogspot.com

CHAKKRAWARTHY said...

மிகவும் தாமதமாக தங்களின் தந்தையின் மறைவைக் குறித்து அறிந்தேன்.ஆழ்ந்த அனுதபங்கள்.உறவின் அருமை பிரிவில்.அவரின் பிரிவில் வாடும் அம்மாவிற்க்கும் என் இறங்லைத் தெரிவித்துவிடுங்கள்.

Florajeeva.
http://jeevaflorajeeva.blogspot.com

allinall said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

பாரதி said...

உங்கள் தந்தையார் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

Romeoboy said...

அண்ணே அந்த நேரத்தில் நான் அங்கு இல்லாததை நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு வாரமாக என்னால் பதிவு பக்கமே வரமுடியவில்லை,

ஊருக்கு வந்த பிறகு பதிவுலகு மக்களின் பதிவை படித்து தான் தெரிந்து கொண்டேன்.

உங்களின் இந்த இழப்பு பெரியதுதான், சீக்கிரம் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.

நிலாரசிகன் said...

விரைவில் மன அமைதி பெற வேண்டுகிறேன்

ராஜ நடராஜன் said...

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.எனது அனுதாபங்கள்.

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

நர்சிம் மூலம் புரிந்த உங்கள் லட்சியத்தை அடைந்து உங்கள் தந்தைக்கு அதை காணிக்கை ஆக்குங்கள். அவர் ஆத்மா அன்புக்கு அது ஒன்றே போதும்.

இளவழுதி வீரராசன் said...

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உங்கள் தந்தையார் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

Patta Patti said...

எனது ஆழ்ந்த இரங்கல்கள்...

தங்கள் தந்தையின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

பின்னோக்கி said...

வருத்தங்கள். தாங்கக் கூடிய சக்தி ஆண்டவன் தரவேண்டும்.

K.S.Muthubalakrishnan said...

sir,

உங்கள் தந்தையார் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

kalil said...

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் சங்கர் sir.....
கொஞ்ச நாள் தங்களுடைய blog பக்கம் வர இயலவில்லை ....மன்னிக்கவும் .....

SurveySan said...

sad to hear this.

SurveySan said...

sad to hear this.

R.Mohanbalu said...

இப்போது தான் தெரியும் சங்கர்.
உஙளுக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்ல். விரைவில் மன அமைதி பெற இறையயை வேண்டுகிறேன்.
-மோகன்பாலு

TamilNenjam said...

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் சங்கரநாராயணன் சார்.

உங்கள் வீட்டாரின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்ப வேண்டிக்கொள்கிறேன்.

அமைதியுடன் மீண்டும் பதிவிட்டமைக்கு நன்றி

Rafiq Raja said...

சங்கர், உங்கள் வலைப்பூ பக்கம் நிரம்ப நாட்களாக, சொந்த வேலை நிமித்தம் சரிவர வந்து சேர முடியவில்லை. இப்போது பழைய பதிவுகளை படித்து கொண்டிருந்த போதுதான், இந்த இரங்கல் செய்தி பற்றி அறிந்து கொண்டேன்.

உங்கள் தகப்பனாரின் ஆன்மா சாந்தியடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நினைவுகளில் உங்களிடையே அவர் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது உங்கள் பதிவுகளிலேயே தெரிகிறது.

உங்கள் ஜொலிப்பான பதிவுகளை நீங்கள் திரும்பவும் ஆரம்பித்திருப்பதிலேயே, நீங்கள் உங்கள் தந்தையின் பிரிவை கௌரவபடுத்தி விட்டீர்கள்.. தொடர்ந்த கலைப்பணியில் ஈடுபடுங்கள், தோழரே.