தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் வெற்றியா?
இந்தக் கேள்வியை சினிமா ஆர்வலர்கள் பலர் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஏனென்றால் தயாரிப்பாளர் சங்கம் ஸ்டரைக் அறிவுக்கும் போது, தியேட்டர்காரர்களும் ஸ்ட்ரைக் அறிவித்தார்கள். அவர்களது முக்கிய கோரிக்கை, தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு, மற்றும், ஏற்கனவே ஒப்புக் கொண்ட தியேட்டர் பராமரிப்பு தொகையை உயர்த்தி அரசாணை பெறுவது போன்றவை தான். ஏற்கனவே தியேட்டரை மூடி ஆள் வர காத்திருந்த நாட்கள் பலருக்கு நியாபகம் வந்தது ஒருபுறம் என்றால் மறுபுறம், வரிசையாய் மல்ட்டிப்ளெக்ஸை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் சிட்டி திரையரங்கு உரிமையாளர்கள், தமிழ் படம் இல்லையென்றால் என்ன? இருக்கவே இருக்கு, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில படங்கள் என்ற குஷன் இருக்கும் போது அதை விட மனசில்லை. அதனால் ஸ்ட்ரைக் ஆட்டத்திற்கு வர வில்லை என்று அவர்களது ஸ்டரைக் பிசுபிசுத்துப் போக முக்கிய காரணம். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் மிக வலுவாய் இம்முறை இந்த ஸ்ட்ரைக்கை நடத்தியது. வி.பி.எப் கட்டணத்தை முன்னிருத்தி ஆரம்பிக்கப்பட்டாலும், முறையான கணக்கு வழக்குக்காக, கம்ப்யூட்டரைஸ்ட் டிக்கெட்ங், எல்லாவற்றிலும் வெளிப்படைத் தன்மை என...