Posts

Showing posts with the label கோவா

கொத்து பரோட்டா -2.0-17

கொத்து பரோட்டா -2.0-17 சென்னை டூ கோவா நண்பர்களோடு பயணம். இது வரை ஆயிரம் கிலோ மீட்டர்கள் ஒட்டு மொத்தமாய் பயணித்ததில்லை. முதல் முறை அதுவும் கோவாவிற்கு எனும் போது சுவாரஸ்யம் அதிகமாகவேயிருந்து. அந்த சுவாரஸ்யத்தை சென்னை டூ ஆற்காடு டோல் ரோடு நாசமாக்கியது படு மோசமான ரோடுகள். ஒவ்வொரு டோலிலும் இந்த ரோட்டுக்கெல்லாம் காசு வாங்குறீங்களே இது நியாயமா? என்று கேட்டதற்கு எதிர் முனையிலிருந்து பதிலில்லை. பெரும்பாலும் நார்த் ஈஸ்ட் முகங்கள்.  எல்லா டோல்களிலும் பேடிஎம். டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுகள் வாங்குகிறார்கள். கார்டு பரிவர்தனைக்கு கொஞ்சம் நேரமெடுக்கிறது. ஆற்காடுக்கு பிறகு ரோடு அருமை. அப்படியே பெங்களூர் போகாமல் நைஸ் ரோடுக்கு வழியே போக டோலுக்கு 155 ரூபாய் கொடுத்தோம். பேரே நைஸாக இருக்கிறதே ரோடும் அதே போல என்று எண்ணியது எங்கள் தவறு. பாதி ரோடு கொஞ்சம் ஏறு மாறாகத்தான் இருந்தது. பாதிக்கு பிறகு நிஜமாகவே நைஸ் ரோடு. தும்கூரிலிருந்து ஹூப்ளி வழியாய் போக முடிவெடுத்தது வண்டியை விட்டோம். அட..அட..அட.. அட்டகாசமான வெண்ணை ரோடு. காரோட்டிகளுக்கு உற்சாகத்தை அளிக்கும் சாலை என்றே சொல்ல வேண்டும். ட்ராவலை விரும்புக...

கோவா – திரை விமர்சனம்

Image
சென்னை 28, சரோஜாவின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு டீமிலிருந்து வந்திருக்கும் படம். ஊர்பட்ட கடன் பிரச்சனையில் பஞ்சாயத்துக்களை பார்த்து வெளிவந்திருக்கும் படம். சாதாரணமாகவே ஹாலிடே மூடில் இருக்கும் இவரின் படத்திற்கு வெங்கட் பிரபுவின் ஹாலிடே என்றதும் எதிர்பார்ப்பு அதிகம் ஏற்படுத்தியிருந்த படம். இவர்களும் வழக்கம் போல பழைய தமிழ் சினிமாக்களை கிண்டலடித்தே ஆரம்பிக்கிறார்கள். கிராமத்தில் யாருக்கும் அடங்காமல் ஊர் சுற்றி திரியும் ஜெய், பிரேம்ஜி,வைபவ் மூவரும் பஞ்சாயத்தில் நிற்கும் காட்சியில் தொடங்குகிறது படம். ஏற்கனவே பலராலும் கிழித்து தொங்கவிடப்பட்ட கிராமத்து பஞ்சாயத்து காட்சிகள். பிரேம்ஜி கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட சாமி பையன் என்பதற்கான ப்ளாஷ்பேக் சீன் அட்டகாசம். முக்கியமாய் ஷண்முகசுந்திரத்தின் படு காமெடியான் சீனில் அவரின் சீரியஸ் நடிப்பும், ஒரே நேரத்தில் வாந்தியெடுத்து,குழந்தை பிறப்பது வரை வரும் காட்சி நிஜமாகவே ஒரு எதிர்பார்ப்பை எகிறத்தான் செய்ய வைக்கிறது. அதன் பிறகு வரும் காட்சிகளில் ஏதும் பெரிய ப்ளஸ் இருப்பதாய் தெரியவில்லை. பிரேம்ஜியை சாமி கண்ணை குத்துவதாய் வரும் காட்சியும், அதை ஜெய்...