Gajini - Hindi film Review
நாமெல்லாம் ஏற்கனவே தமிழில் பார்த்த படம் தான் என்றாலும் இந்தியில் அதிலும் அமீர்கான் வேறு நடித்திருப்பதால் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம். சென்னையின் எல்லா தியேட்டர்களிலும் ஹவுஸ்புல்.. மும்பையில் மிக்ப் பெரிய செல் கம்பெனியின் முதலாளி சஞ்சய் சிங்கானியாவுக்கு ஷார்ட் டைம் மெமரி லாஸ்.. ஆனால் அவர் ஒவ்வொருவராய் தேடி, தேடி கொல்கிறார். ஏன்..? எதற்காக..? என்று இண்டரஸ்டாக கதை சொல்லியிருக்கிறார்கள். அமீர்கானின் உழைப்பு, அவரின் உடலில் மட்டுமல்ல, நடிப்பிலும் தெரிகிறது. அதிலும் அவரின் குள்ளமான உருவத்தை வைத்து கொண்டு, திரையில் ஆஜானுபாகுவான உடலமைப்பு உள்ளவர்களையெல்லாம் தூக்கி பந்தாடுவதை பார்க்கும் போது, நம்மால் நம்பாமல் இருக்க முடியவில்லை.. அந்த அளவிற்கு அவரின் பாடி லேங்குவேஜ். அதே போல் அவருக்கு மெமரி லாஸின் போது நடக்கும் நடை, பார்வைகள், அடிபட்ட புலியாய் சீறும் சீற்றம், படத்தில் அவருக்கு வசனங்கள் மிக குறைச்சல்.. ஆனால் அவர் பேசும் விஷயங்கள் நிறைய.. அசின் இனிமே இந்தி மார்கெட்டில் பிசின் போல் ஒட்டிக் கொள்வார் என்று நினைக்கிறேன். மீண்டும் தமிழ் கஜினி போலவே இம்ப்ரஸிவான நடிப்பு.. அம்மணி சும்மா பின்னி பெடலெடுத்தி...