Posts

Showing posts with the label அட்டக்கத்தி

அட்டக்கத்தி

Image
இன்ஜினியரிங் டிப்ளமோ படிக்கும் காலத்தில் தினமும் பல்லாவரம் வரைக்கும் மின்சார ரயில் பயணம். அங்கிருந்து பம்மல் வரை பஸ் என ஃபீக் அவரில்  பயணம் செய்து படித்த காலத்தில் பஸ்ஸிலிருக்கும் கூட்டமோ, காத்திருப்போ, எதுவுமே பெரிய விஷயமாய் தெரியாது. ஏனென்றால் 7.50க்கு வரும் பவுசியாவுக்காகவோ, 8மணி ஸ்டெல்லாவுக்காகவோ, 8.05க்கு வரும் கருப்பு ஜெயந்திக்காகவோ, முத்தமிழ் நகரில் ப்ராக்டீஸ் செய்யும், இளம் பெண் டாக்டருக்காகவோ, காத்திருந்து அவர்களின் கடைக்கண் பார்வைக்காகவும், லேசான சிரிப்புக்காகவும்,சின்ன ஹாய்க்காகவும் எத்தனை விதமான சில்லு வேலைகளை செய்திருப்போம் என்று இப்போது நினைக்கும் போது சிரிப்பாய் இருக்கிறது. பஸ்களில், ரயிலில் யாராவது புட்போர்ட் அடித்துக் கொண்டோ, ஆதீதமாய் சிரித்துக் கொண்டோ வரும் இளைஞர்களைப் பார்க்கும் போது, உடன் அவர்கள் யாருக்காக இப்படியெல்லாம் செய்து கொண்டு வருகிறார்கள் என்று அவர்களைப் பார்க்கத் தோன்றும். காதல் என்ற ஒன்றை, அந்த வயதில் வருவது இனக்கவர்ச்சி, அது இது என்று என்னதான் உட்டாலக்கடி அடித்தாலும், அந்த ஒரு சிரிப்புக்கும், பார்வைக்கும் இருக்கும் பவரை அனுபவிக்காமல் க்ராஸ் செய்...