Posts

Showing posts with the label Frech film

The Source -2011 - La Source des femmes

Image
90 லட்சம் ஹிட்ஸுகளை  அளித்து, தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் வாசகர்கள், நண்பர்களுக்கு என் நன்றிகள்- கேபிள் சங்கர் ரொம்ப நாளாக பார்க்க வேண்டுமென்று டவுன்லோட் செய்து பார்க்காமல் இருந்த படம். நேற்றிரவு பார்க்க ஆரம்பித்து, தூக்கமே வரவில்லை. அவ்வளவு அழுத்தமான படம். கதையென்று பார்த்தால் மிக சிம்பிளான கதைதான். வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒர் குக்கிராமத்தில் 15 வருடங்களாய் வறட்சி. நெடும்தூரம் நடந்து சென்று அங்கிருந்து தண்ணீர் கொண்டு வருவது பெண்களின் வேலை. ஆண்கள் வேலைக்கு போகாமல் ஊர் எல்லையில் டீ கடை பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு பஞ்சாயத்து செய்து கொண்டிருப்பவர்கள். ஊருக்கு தண்ணீர் வர வழைப்பதற்காக ஊரில் உள்ள பெண்கள் அனைவரும் செக்ஸ் ஸ்ட்ரைக்கில் ஈடுபடுகிறார்கள். அதாவது தம்தம் கணவர்களுடன் உறவில் ஈடுபடாமல் ஸ்ட்ரைக் செய்கிறார்கள். நடந்தது என்ன என்பது தான் கதை.