Posts

Showing posts with the label தியேட்டர்

தியேடடரிலிருந்து மல்டிப்ளெக்ஸ்-1

Image
திபாவளி,பொங்கல் என்ற பண்டிகை நாட்கள் வந்தால்  பண்டிகையை அடுத்து ஞாபகத்துக்கு வருவது சினிமாதான். அதிலும் முதல் நாள் முதல் காட்சி பார்பது என்றால் அதில் இருக்கும் கிக்கே தனிதான் இளைஞர்களுக்கு எந்த காலத்திலும். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் கூட ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தியேட்டர் ராசியாய் இருந்த காலம் இருக்கிறது. சென்னையில் சித்ரா என்று ஒரு திரையரங்கம் இருந்தது அங்கே வழக்கமாய் எம்.ஜி.ஆர்.படம் ரிலீஸ் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள். அங்கே வெளியிட்டால் நிச்சய வெற்றி என்கிற நம்பிக்கை ரசிகர்களிடையே இருந்தது.  சிவாஜி படங்கள், பிளாசாவிலோ, அல்லது கொஞ்ச காலங்களுக்கு பிறகு சாந்தியிலேயோ வெளியாகும். இப்படி ஒவ்வொரு தியேட்டருக்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. சினிமாவின் மீதுள்ள ஆர்வம் மக்களிடையே அதிகம் ஆக, ஆக, தியேட்டரில் ஆட்கள் உட்கார்ந்து பார்க்கும் இருக்கைகள் அதிகமாகி கொண்டே வர ஆரம்பித்தது. மதுரை தங்கம், திருச்சி, கலையரங்கம் போன்ற அரங்கங்கள் தமிழ்நாட்டிலேயே அதிக இருக்கைகள் கொண்ட திரையரங்குகளாய் இன்று வரை இருக்கிறது.. மதுரை தங்கம் தெற்கு ஆசியாவில் பெரிய தியேட்டராய் இருந்தது. இப்போது ...